Add1
logo
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் || கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார் || தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா ||
Logo
இனிய உதயம்
காலை நிலாவும் மாலைச் சூரியனும்...
 ................................................................
காதல் அடைவது உயிரியற்கை!
 ................................................................
போட்டியில் வென்ற மாணவர் வைரமுத்து!
 ................................................................
பெரியாரும் பெண் விடுதலையும்
 ................................................................
சொல்ல மறக்காத கதை
 ................................................................
கவிக்கோ வீட்டில் புதையல்!
 ................................................................
கிராமத்துக் கவிதைக்காரர்...
 ................................................................
கவிதைகள்
 ................................................................
வேடிக்கை பார்க்கிறோம்!
 ................................................................
01-09-2017பெரும்புலவர் கபிலரை புலனழுக்கற்ற அந்தணர் என்று சான்றோர் போற்றுவர். கலித்தொகையில் குறிஞ்சிக் கலியை இயற்றியவர் அந்தக் கபிலர்.

அவர் கலித்தொகைப் பாடல் ஒன்றில் கிழப்பார்ப்பான் ஆடிய கூத்தை விவரிக்கிறார்.

அந்தணர் என்பதும் பார்ப்பனர் என்பதும் ஒன்றே என நினைத்துப் பார்ப்பனரை அந்தணர் என்று இந்நாளில் சிலர் கூறுகின்றனர். அவ்வாறு கூறுவது தவறு.

இதனைத் திருவள்ளுவர் அழகாக வகைப்படுத்துகிறார்.

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்நீத்தார் பெருமை அதிகாரத்தில் இக்குறள் இடம்பெறுகிறது.

"எல்லா உயிர்களிடத்தும் கருணை உடையவராக நடந்துகொள்வதால், அந்தணர் என்போர் பற்றினை விடுத்த துறவியர் ஆவர்.' இதுவே அதன் பொருள்.

இங்கே, திருவள்ளுவர் "அந்தணர்' என்று, எல்லா உயிர்களிடமும் அருள்  தன்மையோடு ஒழுகும் சான்றோரைக் குறிப்பிடுகிறார். ஆகவே, அந்தணர் என்பது பண்பினால் அமையும் பெயரே அன்றிப்
பிறப்பினால் தரப்படும் பெயர் அன்று.

"பார்ப்பான்' என்ற சொல்லைத் திருவள்ளுவர் காட்டி, ஒரு செய்தி தருகிறார்.

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் இக்குறள் இடம்பெறுகிறது.

வேதங்களை ஓதுவதும் ஓதுவிப்பதும் பார்ப்பான் தொழில். ஒருகால் வேதத்தை மறந்துவிட்டாலும் மீண்டும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், பிறப்புக்கேற்ற ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத்தவறினால் கேடுவரும்.

இதுவே அக்குறள் தரும் கருத்தாகும்.

இந்த இரு குறள்களிலும் அந்தணர்க்கும் பார்ப்பனருக்கும் வேறுபாடு என்ன என்பதைக் காட்டுகிறார்.

தன்மையைக் குறிப்பது "அந்தணர்'. பிறப்பைக் குறிப்பது "பார்ப்பனர்'.

குறிஞ்சிக் கலியில் கபிலர் என்ற அந்தணர், ஒரு பார்ப்பான் ஆடிய கருங்கூத்தினைக் காட்டுகிறார்.

இன்புறு காதலும் அன்புறு காதலும்
காதல் அடைதல் உயிரியற்கை - அது
கட்டில் அகப்படும் தன்மையதோ?

என்பார் பாவேந்தர்.

உயிருக்குக் காதல் செய்வது இயல்பானது. மனிதன் தோன்றிய நாள்முதல் எப்படி பசி இயற்கையோ,

அப்படி காதலும் இயற்கை.

அன்றும் மனிதர்கள் காதலித்தார்கள். இன்றும் காதலிக்கிறார்கள். தமிழர்களின் அகவாழ்வில் காதல் முதலிடம் பிடித்தது. கூடவே வீரமும் வரிசை பிடித்தது.

காதல் என்றாலே, இடையூறு வந்து இடையிடும். அவற்றைக் கடந்து கைப்பிடித்து வாழ்வதே இல்லறமாம் நல்லறம்.

தலைவன் தலைவியைக் காணத் துடிப்பான்.

கண்டபின், இசைவினைப் பெறத் தவிப்பான்.

ஒருவழியாக இசைவு பெறுவான்.

பெற்றபின், அவளே எல்லாம் என நடிப்பான்.

கெஞ்சிக் கூத்தாடி இன்பத்தேனைக் குடிப்பான்.

தேன் குடித்தானபின், முன்னிருந்த வேகமும் தாகமும் இருக்காது. வருவது சிறிது சிறிதாகக் குறையும்.

அப்போதுதான் பெண்மை விழிப்புறும்.

தலைவனைத் தெளிவுறுத்தி, "இனியும் தாமதிக்காமல் திருமணம் புரிந்து, முறையான இல்லறம் துவங்க முயல்க' என்று தோழிமூலம் அறிவுறுத்துவாள்.

இன்புறு காதலை இடைநிறுத்தி, அன்புறு இல்லறம் கண்டு, நீங்கா இன்ப வெள்ளத்தில் திளைக்கச் செய்வதே நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறவே, தலைவனைத் திருமணம் புரிந்து வாழுமாறு வேண்டுவாள் தோழி. வேண்டுதலையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூறுவது, நாகரிகமான நன்முறையாகும்.

அதற்குப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. தாயார் உன் காதலியாம் தலைவியை வெளியில் விடாமல் வீட்டிலேயே வைத்துச் சிறைப்படுத்துகிறாள் என்பாள். நீ வரும் வழியில் உள்ள ஆபத்துகளை எண்ணித் தலைவி அஞ்சுகிறாள் என்பாள். ஊரார் அலர்தூற்றுகிறார்கள் என்று அச்சுறுத்துவாள். மகட்பேசி வேற்றார் வருகிறார்கள் என்பாள். தலைவியின் தமையன்மார்கள் கொடுமையானவர்கள் என்று கூறி பயமுறுத்துவாள்.

எல்லாமே விரைந்து வந்து திருமணம் செய்துகொள் என நெறிப்படுத்துவதற்காகவே ஆகும்.

ஆண், பெண்ணின்பம் கிடைப்பதே போதும் என்று எண்ணி இருப்பான். திருமணம் பற்றிக் கவலைப்படாமல் இருப்பான்.

பெண், பாதிக்கப்படுவது தானல்லவா என்பதை எண்ணிக் கவனமாக இருப்பாள். விரைந்து திருமண ஏற்பாட்டைச் செய்யுமாறு வற்புறுத்துவாள்.

சில நேரங்களில் பொய்யாகவே ஏதோ நடந்ததாகக் கூறுவாள். அவ்வாறு கூறுகிற ஒரு நிகழ்ச்சியைத்தான் கபிலர் இங்கே காட்டுகிறார்.

நள்ளிரவில் நடந்த நல்லதோர் கூத்துதலைவன் வழக்கம்போல் இரவில் வந்து கொல்லைப்புறத்தில் நிற்கிறான். அப்போது தலைவி தோழியிடம் கூறுவதுபோலப் பேசுகிறாள், தலைவன் செவியில் விழுகின்ற வகையில்.

தோழி! நேற்று நள்ளிரவு தலைவனை எதிர்நோக்கித் தனிமையில் நின்றேன் அல்லவா?

அப்போது நடந்த ஒரு நிகழ்வுச்சியைக் கேள்.

நகைப்பிற்கிடமான நிகழ்ச்சி அது. நான் போர்வை போர்த்தியபடி முகத்தை மறைத்தவாறு இருட்டில் நின்றேன்.

நம் தெருவில் எப்போதும் சுற்றிவரும், முடப் பார்ப்பான் வந்தான். அவனோ மொட்டைத் தலையும் குட்ட நோயினால் கையும் காலும் குறைந்தும் நிற்பவன்.

அந்தக் கிழமுடப் பார்ப்பான் எப்போதும் நம் தெருவில் சுற்றிக்கொண்டிருப்பவன்.

அவனிடம் கவனமாய் இருக்குமாறு நீயே பல முறை சொல்லியிருக்கிறாய்.

அவன் என்னைக் கண்டதும், என்னை விட்டுப் போக மனம் இல்லாமல், வைக்கோலை விட்டு நகராத, பல்லில் லாத கிழட்டுப் பசுவைப் போன்று, நின்றுகொண்டே இருந்தான்.

"மக்கள் நடமாட்டமில்லாத இவ்விடத்தில் இவ்விருளில் தனியாக நிற்கும் நீ யார்?' என்று என்னிடம் கேட்டான். நான் பதில் பேசாமல் இருக்கவே.

"வெற்றிலை வேண்டுமா?' என்று கேட்டவாறே பையைத் திறந்து "எடுத்துக்கொள்' என்றான்.

அப்போதும், நான் ஏதும் பேசவில்லை.

அவனும் விடாமல், எதையோ பேசினான் அவன் என்னையும் ஓர் பிசாசு என்றே நினைத்துவிட்டான்.

""சிறு பெண்ணே இன்று நீ என்னிடம் அகப்பட்டுக் கொண்டாய். நான்  இவ்வூரில் உள்ள ஆண் பிசாசு, நீயோ பெண்பிசாசு. வா சேர்ந்திருப்போம். மறுப்பாயானால், இங்கே நீ பலி பெற முடியாமல் தடுப்பேன்.''

இவ்வாறு அவன் பேசியதைக் கேட்டதும். சரி, பார்ப்பான் என்னைக் கண்டு அஞ்சிவிட்டான் என்று முடிவுகட்டி, தந்திரமாக அவன் முகத்தில் ஒருகை மண்ணை வாரி இறைத்தேன்.

அவ்வளவுதான். அவன் ஓவென்று அலறத் தொடங்கினான்; ஓட்டம் பிடித்தான்.

தனித்துச் செல்லும் பெண்களிடம் தகாத முறையில் நடக்கும் வழக்கமுடைய அந்தப் பார்ப்பான் இப்படி ஒரு கருங்கூத்தை நடத்திவிட்டான். இன்று ஊரே சிரிக்கிறது.

அதனால், பார் தோழி! தலைவனைக் காணமுடியாமல் போய்விட்டது.

புலியைப் பிடிக்க விரித்திருந்த வலையில் நரி அகப்பட்டதுபோல் ஆயிற்று! 

கலித்தொகையில் குறிஞ்சிக்கலியில் 29 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது இப்பாடல். இதனை இயற்றியவர் கபிலர்.

இப்பாடல், ஒரு வேடிக்கையான நள்ளிரவில் நடைபெற்ற கூத்தினைக் காட்டுகிறது.

இப்படி ஒரு நாடகம் நடந்ததா என்றால், நடக்கவில்லை. பின் ஏன் கூறப்படுகிறது?

முன்னரே குறிப்பிட்டது போல, இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாகவும், அதனால் ஊரே அமர்க்களப்பட்டதாகவும், அதனால் இனி, தலைவனைத் தலைவி சந்திக்க இயலாது என்பதாகவும், தலைவன் காதில் கேட்கும்படியாக தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

ஆகவே, இனி களவியல் இயலாது போயிற்று. கற்பியல் தொடர்ந்தாக வேண்டும்.

திருமண ஏற்பாட்டினை மேற்கொள்க என்று தலைவனை நெறிப்படுத்தும் வேலை நடைபெறுகிறது. அதுதான் இப்பாடல். கபிலரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது பாடல்.

பெண்மை விழிப்புடன் இருந்தாகவேண்டிய இன்றியமையாமையை இதன் மூலம் அறிகிறோம்.

இன்றைய பெண்கள், இவ்வாறான அகத்துறைப் பாடல்களைப் பயின்று அதில் தோய்ந்து உணர்ந்து ஒழுக வேண்டும். கல்வி கற்பதற்காகவும் பணியாற்றுவதற்காகவும் இன்று பெண்கள் ஆண்களோடு இணைந்து பழகவேண்டிய நிலை உள்ளது.

நட்பு உண்டாகலாம். காதலாகப் பரிமாணம் கொள்ளலாம். இவை இயற்கையாக நடைபெறக் கூடியவையே.

ஆண்மை அலட்சியமாக இருக்கலாம். பெண்மை அவ்வாறு இருக்க முடியாது.

உடற்கூற்றின்படியும் சமுதாயப் பார்வையின்படியும் பெண்ணுக்கு மட்டுமே மாற்றமும் அவமானமும் ஏற்படும்.

பெண்கள் கவனமாக இருக்கவும் இல்லற மாண்பைக் காக்கவும் கடமைப்பட்டவர்கள்.

பெண்மையைப் போற்றிவாழ ஆண்கள் கடமைப்பட்டவர்கள்.
பாடல்...
திருந்திழாய் கேளாய் நம் ஊர்க்கெலாம் சாலும்
பெருநகை அல்கல் நிகழ்ந்தது ஒரு நிலையே
மன்பதை எல்லாம் மடிந்த இருங் கங்குல்
அந்துகில் போர்வை அணிபெறத் தைஇ நம்
இன்சாயல் மார்பன் குறிநின்றேன் யானாகத்

தீரத் தறைந்த தலையும் தன் கம்பலும்
காரக் குறைந்து கறைப்பட்டு வந்து நம்
சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானைத்
தோழி! நீ போற்றுதி' என்றி அவன் ஆங்கே
பாராக் குறழாப் பணியாப் பொழுதன்றி
"யார் இவண் நின்றீர்' எனக்கூறிப் பையென

வைகாண் முதுபகட்டிற் பக்கத்தில் போகாது
"தையால் தம்பலம் தின்றியோத' என்றுதன்
பக்கு அழித்துக் "கொண்டீ' எனத் தரலும் யாதொன்றும்
வாய்வாளேன் நிற்பக் கடிதகன்று கைமாறிக்
"கைப்படுக்கப் பட்டாய் சிறுமி! நீ; மற்றுயான்
ஏனைப் பிசாசு; அருள்; என்னை நலிதரின்
இவ்வூர்ப் பலிநீ பெறாமல் கொள்வேன்' எனப்
பலவும் தாங்காது வாய்பாடி நிற்ப

முதுபார்ப்பான் அஞ்சினனாதல் அறிந்துயான்
எஞ்சாது ஒருகை மணல் கொண்டு மேல்தூவக் கண்டே
கடிதரற்றிப் பூசல் தொடங்கினன்; ஆங்கே
ஒடுங்கா வயத்தின் கொடுங்கேழுக் கடுங்கண்
இரும்புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர்
ஏதில் குறுநரி பட்டற்றால்; காதலன்
காட்சி அழுங்க நம்மூர்க்கெலா அம்
ஆகுலம் ஆகி விளைந்ததை; என்றும்தன்
வாழ்க்கை அதுவாக் கொண்ட முதுபார்ப்பான்
வீழ்க்கைப் பெருங்கருங் கூத்து

கபிலர் - குறிஞ்சிக்கலி 29


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :