Add1
logo
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் || கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார் || தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா ||
Logo
இனிய உதயம்
காலை நிலாவும் மாலைச் சூரியனும்...
 ................................................................
காதல் அடைவது உயிரியற்கை!
 ................................................................
போட்டியில் வென்ற மாணவர் வைரமுத்து!
 ................................................................
பெரியாரும் பெண் விடுதலையும்
 ................................................................
சொல்ல மறக்காத கதை
 ................................................................
கவிக்கோ வீட்டில் புதையல்!
 ................................................................
கிராமத்துக் கவிதைக்காரர்...
 ................................................................
கவிதைகள்
 ................................................................
வேடிக்கை பார்க்கிறோம்!
 ................................................................
01-09-2017ங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமை வில்லாத நாடு

என்பது வள்ளுவப் பேராசானின் வாக்கு. 

நல்ல அரசு அமையாத நாட்டில், எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமல் போகும் என்பது இதன் பொருள்.

இயற்கை வளம், கனிம வளம், மனித வளம் என எல்லா வளமும் இருந்தும், தகுதியற்ற ஆட்சியாளர்களால் நாம் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.

நம் தமிழகம் எங்கே போய்க்கொண்டிருகிறது?

இந்தியம் எத்தகைய அரசியல் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கிறது என்று யோசித்தால், வருத்தமும் வேதனையும் உண்டாகிறது. இங்கே எல்லாப் பக்கமும் நம்மைச் சுற்றிக் குழப்பமும் குளறுபடியும் வட்டமடிக்கின்றன. எல்லாவற்றையும் நாம் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இங்கிருக்கும் எடப்பாடி அரசு, பலமில்லாமல் ஊசலாடுகிறது. ஆனால் அதிகாரத்தில் இருக்கும் முதல்வரும் அமைச்சர்களும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஏனென்றால், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு என்று ஒன்று வந்தால், அப்போது கையிலிலிருக்கும் டெக்னிக் மூலம் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அது என்ன டெக்னிக் என்று வனத்துறை மந்திரி திண்டுக்கல் சீனிவாசனே பகிரங்க மாகச் சொல்கிறார்."ஆட்சிக்கு எதிராக வரிந்துகட்டும் தினகரன் தரப்பை எப்படி சமாளிப்பீர்கள்?' என்று அவரிடம் பத்திரிகை யாளர்கள் கேட்டபோது, "இதுகூடத் தெரியாத சின்னப்பிள்ளையா இருக்கீங்களே? எங்களிடம் 115 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இன்னும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள்தான் தேவை. எதுவோ, பாதாளம் வரைக்கும் பாயும் என்பார்களே... அது உங்களுக்குத் தெரியாதா? எங்கிருந்தாலும் அவர்கள் வரமாட்டார்களா?' என்று தெனாவெட்டாகவே சொல்லிலியிருக்கிறார்.

பணத்தை வைத்து எம்.எல்.ஏ.க்களை இழுப்போம் என்று ஒரு மந்திரியே கூச்சநாச்சமில்லாமல் சொல்கிறார் என்றால்... எவ்வளவு பெரிய ஜனநாயக கேவலம்? 

ஒரு ஜனநாயக நாட்டில் இப்படிப் பேசக்கூடிய தைரியம் ஒரு மந்திரிக்கே வருகிறது என்றால்... இங்கே என்ன நடக்கிறது?

ஏற்கெனவே கூவத்தூரில் இதே பாதாளம் வரை பாயும் டெக்னிக்கை வைத்துத்தானே எம்.எல்.ஏ.க்களை வாங்கி, எடப்பாடி தலைமையிலான ஆட்சியைக்  காப்பாற்றிக்கொண்டார்கள். அந்த தைரியம்தான் இப்போது இப்படி பேசவைக்கிறது.

அவர்களின் தவறை இங்கிருக்கும் அரசியல் அமைப்புச் சட்டம் அன்று வேடிக்கை பார்த்ததால், இன்றும் அதே டெக்னிக்கைக் கையில் எடுப்போம் என்று அவர் சொல்கிறார். மந்திரியின் இந்த வாக்குமூலம் தமிழகத்தையே வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது. எனினும் இதை எல்லாம் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

எடப்பாடி தரப்பு இப்படி ஒரு பக்கம் தைரியமாக குதிரை பேரத்துக்கு ரெடியாக, இன்னொரு பக்கம் தினகரன் தரப்பு தங்களிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை கூவத்தூர் பாணியில், புதுவை ரெசார்ட்டுக்கும் ஓட்டலுக்குமாக கடத்திக்கொண்டு போய் வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டிவருகிறது. அங்கு நடக்கும் அவலம், நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் ஜட்டியோடு உல்லாசமாய்க் குளிப்பதும் ஸீ-ஸா விளையாட்டு விளையாடுவதும், பாறாங்கல்லைத் தூக்கிவைத்து வாக்கிங் போவதும். சே... காறித் துப்பலாம் போலிருக்கிறது.

மக்கள் பிரதிநிதிகளை சிறைப்பிடிக்கலாமா? என்று சட்டத்துறை கூட கேள்வி எழுப்பவில்லை. அதேசமயம், ஜெ. உயிரோடு இருந்தவரை எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு இருந்தவர்களுக்கு இப்போது வீரம் பீறிட்டுக்கொண்டு வருகிறது. அது கமல நடிகராகட்டும்... கோமானாகட்டும்... அன்பான மணிகளாகட்டும்... எல்லோரும் இப்போதுதான் விமர்சனத்துக்கு வாய் திறக்கிறார்கள். எனினும் எவரும் அநீதிக்கு எதிராகப் போராட முன்வரவில்லை. இந்தக் கொடுமையையும் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற சிறைக் கைதியான சசிகலாவின் வழிகாட்டுதலிலின்படி செயல்படுவதாக, வெட்கமில்லாமல் அறிவிக்கிறது தினகரன் அணி.  இன்னொரு பக்கம், சின்னம்மா, கண்ணம்மா என்று முன்பு அவரது காலடியிலேயே கிடந்த எடப்பாடியும், பதவி போனதால் தன்மானப் போராளியான(?) ஓ.பி.எஸ்.சும், இப்போது கைகோத்துக்கொண்டு, தங்கள் மாஜி சின்னம்மாவை அரசியலிலில் இருந்தே ஓரம்கட்டுவோம் என்கிறார்கள்.

இதே ஓ.பி.எஸ்.தான், எடப்பாடி தலைமையிலான ஆட்சி ஊழல் ஆட்சி என்றார். அப்படிச் சொன்னவர், அடுத்த இரண்டாம் வாரம் அதே ஊழல் ஆட்சியில் துணை முதல்வர் நாற்காலிலியைக் கேட்டு வாங்கி, அதில் கூச்சமில்லாமல் உட்கார்ந்துவிட்டார். இது என்ன மாதிரியான அரசியல் என்று தெரியவில்லை.

இந்த ஓ.பி.எஸ்., எடப்பாடிக்கு எதிராக நின்றபோது, ஜெ. மரணத்தை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று முழக்கமிட்டார்.

அவர் பொறுப்பு முதல்வராக இருந்தபோது இந்த புத்தி எங்கே போனது என்று தெரியவில்லை. உடனே, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் தானாக வந்து, "நாங்கள் விசாரணைக்கு தயார்'என்றார் அப்பல்லோ ரெட்டி. அந்த மருத்துவமனைத் தரப்பு, ஜெ. சிகிச்சை தொடர்பான புகைப்படமோ, வீடியோக் காட்சிகளோ இல்லை என்று  இன்னும் சொல்லிலிக்கொண்டிருக்க, இதற்குமாறாக, திவாகரனின் மகனான ஜெய் ஆனந்த், "எங்களிடம் ஜெ. சிகிச்சை தொடர்பான புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் இருக்கின்றன' என்று பகிரங்கமாகச் சொல்கிறார்.

வீடியோ ஆதாரம் இருந்தால் அதை எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று  மத்திய- மாநில அரசுகளோ, காவல்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளோ இதுவரை ஜெய் ஆனந்த்திடம் கேட்கவில்லை. அவர்களுக்கு அவ்வளவு பொறுப்புணர்வு. இந்தக் கூத்தடிப்புகளையும் நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இப்போதும்கூட ஜெ.வின் செயல்பாடுகளை  நாம்  நியாயப் படுத்தவில்லை.  இருந்தபோதும் அவர் மரணமடைந்தபோது, அது குறித்த அய்யப்பாடுகளைத் தொடர்ந்து நக்கீரன் மூலம் எழுப்பி வந்தோம். அவரது உடலிலில் ஒரு பகுதி இல்லாமல் இருந்ததை, குறிப்பாகக் கால் பகுதி அவர் உடலிலிலிருந்து அகற்றப்பட்டிருந்ததை ஆதாரப்பூர்வமாக, படங்களோடு நம் நக்கீரன் பகிரங்கப்படுத்தியது. அப்போதுகூட ஜெ.வின் விசுவாசிகளாகக் காட்டிக்கொண்ட எவரும் ஜெ.வுக்காகப் பதறவில்லை. பதறாதது மட்டுமல்லாமல், அதை சட்டைகூடப் பண்ணவில்லை. 

இதுமட்டுமா? முதல்வராக இருந்த ஜெ. அப்பல்லோவில் அட்மிட் செய்யப்பட்டு அங்கேயே 75 நாட்கள் வைக்கப்பட்டு, அங்கிருந்து சடலமாகத்தான் வெளியே அனுப்பப்பட்டார். இதுகுறித்து அரசு, உரிய விளக்கம் சொல்லிலியிருக்கவேண்டும். குறிப்பாக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர், பொதுத்துறைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் போன்றவர்கள் தகுந்த விளக்கத்தைத்  தந்திருக்க வேண்டும். கொடுத்தார்களா? வாயைத் திறந்தார்களா? இல்லையே. ஆனால் இப்போது ஒரு சின்னப் பையன், சிகிச்சை தொடர்பான ஆதாரப் படங்கள் எங்களிடம் இருக்கிறது என்று சொல்லிலிக்கொண்டிருக்கிறார்.

ஜெ. மரணத்தின் மர்ம முடிச்சு யார் கையில் என்பது கேள்விக் குறி. இதில் மரணத்தின் உண்மையைக் கண்டுபிடிக்க கமிஷன் அமைக்கிறதாம் எடப்பாடி அரசு.

இந்த எடப்பாடி அரசு எப்படிப்பட்ட அரசாக இருக்கிறது? வக்கற்ற     அரசாகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லிலியிடம் அடகு வைக்கும்  அரசாகவும்தான் இது இருக்கிறது. அது நம் சாபக்கேடு.

அண்மையில், நீட் என்ற பெயரில் மத்திய அரசு  நடத்திய அடாவடியை,  மான ரோசம் இல்லாமல் இங்குள்ள அடிமை அரசு  வேடிக்கை பார்த்தது.

இட ஒதுக்கீட்டைத் தகர்த்து,  மருத்துவம் படிக்க நினைத்த மாணவர் களின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது மத்திய அரசு. 

ஆண்டாண்டு காலமாய்ப் போராடியும் மனுதர்மத்தை உடைத்தெறிந்தும், நாம் பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமையை, இப்போது மத்தியில் இருக்கும் மதவாத பா.ஜ.க. அரசு, காலிலில்போட்டு நசுக்குகிறது. ஏழை, நடுத்தர வர்க்க மக்களும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் மருத்துவப்  படிப்பையே எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்குப் பெருங்கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே மத்திய மந்திரி நிர்மலா சீதாராம், ஒரு ஆண்டு காலத்திற்கு நீட்டில் இருந்து  தமிழகத்திற்கு விலக்களிப்போம் என்றார். ஆனால் அனுமதி தராமல் நம்மை நம்ப வைத்துக் கழுத்தை அறுத்துவிட்டார். 50 எம்.பி.க்களை வைத்திருந்தும், இதைத் தட்டிக் கேட்கக்கூடிய தெம்போ தைரியமோ இங்கிருக்கும் அடிமைகளுக்கு இல்லை. இவர்கள் மத்திய மதவாத அரசுக்கு தோதாகத் தங்கள் முதுகெலும்பையே  ரப்பராக்கிக் கொண்டு, வளைந்து நெளிகிறார்கள்.

அதனால்தான் மெஜாரிட்டி இல்லாத நிலையிலும் இவர்களை ஆளவிட்டும், ஆடவிட்டும் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறது டெல்லிலி.

இந்தக் கூத்துக்களையும் நாம் வேடிக்கைதான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இவ்வளவு அநீதிகள் நடக்கும்போதும், இதையெல்லாம் தமிழின உணர்வாளர்கள் என்று சொல்லிலிக்கொள்வோர் தட்டிக்கேட்கிறார்களா என்றால், இல்லை. அவர்கள், ஜெ. காலத்திலேயே இன உணர்வையும் ஈழ விவகாரத்தையும் அவர் காலடியில் கொண்டுபோய் பக்குவமாக வைத்துவிட்டார்கள். அதனால்தான் தனி ஈழம் போய் ராஜீவ் வழக்கில் அடைபட்டிருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று எழுந்த தமிழகத்தின் கோரிக்கைக் குரலை, அவர்கள் இப்போது, பரோல் என்ற அளவிற்கு  சுருக்கிவிட்டார்கள்.

பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்ததையே தமிழீழம் கிடைத்ததைப்போல் கொண்டாடி மகிழ்கிறார்கள். இது திசைதிருப்பும் நாடகம் என்று தெரிந்தும் அவர்கள் வாய்திறக்கத் தயாரில்லை. காரணம் அவர்களுக்கு ஒரே எதிரி கலைஞர் மட்டும்தான். அவரை எதிர்ப்பதற்காக யார் காலிலிலும் விழுவார்கள். எதையும் பேசுவார்கள். இவர்களையும்கூட  நாம் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

இங்கு நடக்கும் கோமாளிக் கூத்துக்களையும், பதவிக்காக நடக்கும் கேவலமான குதிரை பேரங்களையும், டெல்லிலிக்கு அடிமையாகிவிட்ட மாநில அரசின் கையாலாகாத்தனங்களையும், தமிழக அரசியலிலில் மூக்கு நீட்டி, மத்திய அரசு செய்து வரும் அளவு கடந்த அத்துமீறல்களையும் நாம் வெறுமனே வேடிக்கை பார்க்கவேண்டிய  நிலையில் இருக்கிறோம்.  நம்மால் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும். ஏனெனில், வாக்குச் சாவடியில் கொஞ்ச நேரம் நாம் நிதானிக்கத் தயங்கியதன் விளைவைத்தான் அனுபவிக்கிறோம்.

இதற்காக நாம் வெட்கித் தலைகுனியத்தான் வேண்டும்.

ஆதங்கத்துடன்...

நக்கீரன் கோபால்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :