Add1
logo
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் || கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார் || தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா ||
Logo
ஓம்
ஆத்ம ஞானம் தரும் பகவத் நாமம்!
 ................................................................
மகா புண்ணியம் தரும் மகாளய பட்சம்!
 ................................................................
செப்டம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
ஜீவாத்மாவின் பேராற்றல்!
 ................................................................
செப்டம்பர் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
144 ஆண்டுகளுக்குப்பின் வரும் மகா புஷ்கரம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
வாழ்வளிக்கும் வக்ரகாளி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
01-09-17
னித உடலில் உயிர் வேறு, உடல் வேறு என்று பிரித்துக்காட்டியவர்கள் நம் முன்னோர்கள். அறிவியல் வளர்ச்சியே இல்லாத அந்த காலகட்டத்தில் சித்தர்கள் "நவகண்ட யோகம்' என்ற ஒருவகையான யோகத்தைச் செய்தனர்.

உடலை ஒன்பது பாகமாகப் பிரித்து ஒன்பது இடங்களில் போட்டுவிடுவார்கள். உயிர்மட்டும் ரகசியமாக ஓரிடத்தில் தியானம் செய்துகொண்டிருக்கும். தேவைப்படும்பொழுது உடனடியாக உயிர் உடலில் இணைந்துவிடும். இப்படி அளப்பரிய அதிசயங்களைச் செய்தனர்.

ஒன்பது கிரகங்களின் மின்காந்த அலைகளினால் பலப்பல உயிரினங்கள் உலகில் தோன்றுகின்றன. கருப்பையில் கட்டப்பட்டு ஜனிப்பவையான மனிதன், மிருகம் போன்ற பிறவிகள் "சராயுஜம்' எனவும், முட்டையிலிருந்து ஜனிப்பவையான பறவை இனங்கள் போன்றவை "அண்டஜம்' எனவும், வியர்வையிலிருந்து ஜனிப்பவையான பேன் இனங்கள் போன்றவை "ஸ்வேதஜம்' எனவும், விதையிலிருந்து ஜனிப்பவையான மரம், செடி, கொடி போன்றவை "உத்பிஜம்' எனவும் அழைக்கின்றோம். இந்த நான்கு விதங்களில் உயிரினங்கள் தோன்றினாலும், அவற்றுள் மனித உயிரினத்தின் தோற்றமே மிகச்சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

ஒன்பது கிரகங்களிலிருந்து வரும் மின்காந்த அலைகளில் உயிர் உருவாக மிக முக்கிய பங்கு வகிப்பவை குரு, சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களின் அலைகளேயாகும். உயிரானது எவ்வாறிருக்கும் என்பதனை 3,000 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த திருமூலர் தனது திருமந்திரத்தில், "உயிர் என்பது பசுவின் ஒரு முடியை 100 பங்காக்கி, அந்த 100 பங்கில் ஒன்றை எடுத்து அதனை 1,000 பங்காக்கி, அதில் ஒரு பங்குதான் உயிரின் உருவம்' என்று விளக்கியுள்ளார்.

இவ்வுலகில் பிறக்கும் மனித உயிருக்கு ஜாதகம் எழுதும்பொழுது, பிறக்கும் நேரத்தில் சந்திரன் இருக்கும் வீடு உடலாகவும், சூரியன் இருக்கும் லக்னம் உயிராகவும் கணக்கிடப்படுகிறது. லக்னத்திற்கு 1, 5, 9; 4, 7, 10 ஆகிய இடங்களிலுள்ள கோள்களின் மின்காந்த அலைகள், அந்த மனித உடலுக்குத் தேவையான அளவு இணைந்திருக்கும். 3, 6, 8, 12 ஆகிய இடங்களிலுள்ள கோள்களின் மின்காந்த அலைகள் அந்த மனித உடலுடன் குறைந்த அளவே இணைந்திருக்கும்.

இவ்வாறு தோன்றும் மனித உடலில், சந்திரனின் மின்காந்த அலைகளானது மனதை வழிநடத்துகிறது. சனி, குரு, செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களின் மின்காந்த அலைகள் அதிக அளவில் இணைந்திருக்குமேயானால் அவர்கள் அதிக உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுக்கிரன், புதன் கிரக மின்காந்த அலைகள் உடலில் அதிக அளவில் இணைந்திருப்பவர்கள் நடுத்தர உயரத்தில் இருப்பார்கள். குறைந்த உயரமுடையவர்கள் சந்திரன் போன்ற கிரக மின்காந்த அலைகளைப் பெற்றவர்களாக இருப்பர்.

சந்திரன், சுக்கிரனின் மின்காந்த ஆற்றலினாலேயே மிக அழகானத் தோற்றம் கொண்ட உடல் கிடைக்கிறது. ராகு- கேது மின்காந்த ஆற்றல் இணைப்புப் பெற்றவர்கள் அழகற்றுக் காணப்படுவர்.

இவை மட்டுமின்றி, உடலில் ஏற்படும் நோய்களுக்கும் ஒன்பது கிரக மின்காந்த அலைகளின் அளவே காரணமாக அமைகிறது. ஒரு உயிர் பிறக்கும்பொழுது, அந்த உடலில் ஒன்பது கிரகங்களின் மின்காந்த அலைகளின் அளவு குறையும்பொழுது அதற்குத் தகுந்தாற்போல் நோய்கள் தோன்று கின்றன. சூரியனின் மின்காந்த அலைகள் குறைந்திருந்தால் கண் நோய், தலைவலி மற்றும் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தோன்றுகின்றன. சந்திரனின் மின்காந்த அலைகள் குறைந்திருந்தால் அல்சர், மூலம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் தோன்றும். செவ்வாயின் மின் காந்த அலைகள் குறைந்திருந்தால் பிளவைக் கட்டிகள், மாதவிடாய் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் தோன்றும். புதனின் அலைகள் குறைவுப் பட்டால் வாதம் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தோன்றும். சுக்கிரனின் சக்தி குறைந்திருந்தால் பாலுணர்வு உறுப்புகளில் நோய்கள் உண்டாகும்.

குருவின் மின்காந்த அலைகளின் சக்தி குறைந்திருந்தால் கல்லீரல், கணையம், மண்ணீரல், மூளை போன்ற உறுப்புகளில் நோய்கள் தோன்றும். சனி கிரகத்தின் அலைகள் குறைந்திருந்தால் எலும்புகள், பற்கள், மூட்டுக்கள் போன்ற பகுதிகளுடன் சம்பந்தப்பட்ட நோய்களையும், உடல்வலி போன்றவற்றையும் ஏற்படுத்தும். ராகு கிரகத்தின் மின்காந்த சக்தி குறைந்திருந்தால் தோல் நோய்களான அலர்ஜி, தொழுநோய், புற்றுநோய் போன்றவற்றை உண்டாக்கும். கேதுவின் சக்தி குறைந்திருந்தால் உடலின் ஒட்டுமொத்த அசைவினையும் நிறுத்தக்கூடிய "கோமா' நிலைக்குக் கொண்டுசெல்லும் நோய்களை உருவாக்கும். சனி, செவ்வாயின் மின்காந்த அலைகளின் தொடர்பு ஏற்பட்டிருந்தால் ஆஸ்துமா, சளி சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்.

உயிர் பிறக்கும் சமயத்தில் மின்காந்த அலைகளின் சக்தியானது குறைந்து கிடைக்கப் பெற்றிருந்தாலோ அல்லது அவை மனித உடலில் பல்வேறு நோய்களை உண்டாக்கினாலோ அவற்றிலிருந்து காத்துக்கொள்ள- சாதாரண மனிதனாகப் பிறந்து பிரபஞ்சத்தில் ஆழ்மனதின் அற்புத ஆற்றல்களின்மூலம் சித்தர் நிலையை அடைந்த பதினெட்டு சித்தர்களும் பல்வேறு வழிமுறைகளைச் சொல்லியுள்ளனர்.

உயிரானது ஓர் உடலிலிருந்து அடுத்த மனித உடலுக்குச் சென்றவுடன், அந்த உடலில் முன்னோர்களின் வினைப்பதிவுகளைக் கொண்டே அவர்தம் வாழ்வில் இயக்கம் நடைபெறும். ஒவ்வொரு உடலிலும் அவரவர் முன்னோர்களின் பதிவுகள் காணப்படும். அதேபோன்று உயிரில் நிலைத்துள்ள வினைப்பதிவுகளுடன் முன்னோர்களின் வினைப் பதிவுகளுக்குத் தக்கவாறு அவர்தம் வாழ்வில் நன்மை- தீமை ஏற்படும். சித்தர்கள் முன்னோர்களின் வினைப்பதிவுகளில் உள்ள தீமைகளை, பரமாத்மாவைத் தொடர்புகொண்டு, தொடர்ச்சியாக பரம்பொருளை வணங்குவதன்மூலம் அழித்தனர்.

ஒரு கோவிலிலுள்ள கருங்கல் சிலையானது மந்திர ஒலி அலைகளை உள்வாங்கி உயிரோட்டத்துடன் காணப்படுவதால், அது மனித உடலிலுள்ள தீவினைப்பதிவுகளை அழிக்கத் தொடங்கிவிடும். முறையாக ஆலய வழிபாடு செய்வதன்மூலமும், சூட்சுமம் உணர்ந்து சில ஆலயங்களுக்குச் செல்வதன் மூலமும் உடலின் தீவினைப்பதிவுகளை அழிக்கலாம்.

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஆலயமாக பழனி முருகன் கோவில் இடம்பெறுவதற்குக் காரணம், சித்தர்களுள் முக்கியமானவரான போகரின் ஜீவசமாதி பழனி மலைமீது அமைந்ததேயாகும். அதன் சூட்சும சக்தியாக போகர் உள்ளார். அதைப்போன்றே திருவண்ணா மலை, ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீரங்கம், திருச்செந்தூர் போன்ற ஆலயங்களில் சித்தர்களின் ஜீவசமாதி இருப்பதனால் இவை ஆற்றல் நிறைந்த ஆலயங்களாக விளங்குகின்றன. மேலும் இவ்வாலயங்களில் சித்தர்கள் மூலவரை நோக்கி தியான நிஷ்டையில் அமர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பழனி மலைக்கோவிலை எடுத்துக் கொண்டால், அங்கு பல்வேறு ரகசியங்களும் அற்புதங்களும் நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்நாட்டின் சூட்சும சக்தி நிறைந்த ஆலயம் அது. குறிப்பாக அங்கு வஸ்திர தானம் செய்தால் 100 மடங்கு பலன் உடனடியாகத் தெரியும். முருகன் வீற்றிருக்கும்  இந்த மலையை ஏன் போகர் விரும்பினார் என்றால், முருகனின் தீவிர பக்தர் போகர். மேலும் பழனிமலையில் காந்த சக்தி அளவுக்கு அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் அங்கு சென்றுவரும் பக்தர்களின் உடலில் காந்த சக்தி இணையும். இதன் காரணமாக உடலில் பல்வேறு நல்ல மாறுதல்கள்  நடைபெறுகின்றன. பழனியில் முருக தரிசனம் செய்துவிட்டு அன்னதானம் செய்வது அளப்பரிய பலன்களை வழங்கும். இதற்கு அந்த காந்தசக்தி கொண்ட மலையே காரணமாகும். அண்டத்திலிருந்து வரக்கூடிய காஸ்மிக் துகள்களின் பதிவுகள் இங்கு நிறைந்துள்ளன. இதனாலேயே பழனிமலையிலிருக்கும் முருகனை வழிபடும்போது உயிர் வலிமைபெறுகிறது. அங்கு இன்றும் சூட்சும சக்தியாக போகர் உலவி வருகிறார்.

ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்தை எடுத்துக்கொண்டால், அங்கு படுத்த நிலையில் மகாவிஷ்ணு பேராற்றல் நிறைந்த மூலவராக உள்ளார். அங்கு மகான் ஸ்ரீராமானுஜர் ஜீவசமாதியாக உள்ளார். அவரது ஆற்றல் அங்கு வரும் மக்களுக்கு பெரும்பலனை வழங்குகிறது. அண்ட சக்திகளை ஆலயத்தில் சேமித்து வைக்கும் நுட்பமான அமைப்புடன், சுக்கிர கிரகத்தின் மின்சக்தியைப் பெற்றுத்தரக்கூடிய சக்கரங்கள் இங்கு மறைபொருளாக வைக்கப் பட்டுள்ளன. இங்குவரும் மக்கள் உடல்குறைபாடுடையவர்களுக்கு  அன்னதானம் மற்றும் ஆடை தானம் செய்தால் மிகுந்த பலன்களைப் பெறமுடியும். மதுரை மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னர்கள் விரும்பி வழிபட்ட தெய்வமாகும். இது புதன் கிரக மின்சக்தி நிறைந்த ஆலயம். அதனாலேயே பாண்டியர்கள் தனது கொடியில் மீன் சின்னத்தை வைத்தனர். ஏனெனில் மீனானது புதன் கிரக மின்சக்தியைத் தன்னுள் அதிகமாகக் கொண்டு வாழும் உயிரினமாகும். தமிழ்நாட்டில் ஆண்டுமுழுவதும் திருவிழாக்கள் கொண்டாடப்படும் ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. இங்கு சுந்தரர் என்ற சித்தர் ஜீவசமாதியாக உள்ளார். இன்றும் இவர் சூட்சுமமாக சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் வணங்கி வருகிறார். இதனால் இங்கு வரக்கூடிய மக்களின் உயிர் சக்தி வலிமையுடையதாக மாறும். அதன் மூலம் மனித உயிர் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கிடைக்கிறது. இங்கு வரும் மக்கள் பாசிப்பயறு தானமாகக் கொடுத்தால் பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்; உடனடியாகவும் கிடைக்கும். இப்படியாக நம் மக்கள் எல்லா நன்மைகளும் பெற சித்தர்கள் ஜீவசமாதியாகவுள்ள ஆலயங்கள் துணைபுரிகின்றன. இத்தகைய ஆலயங்களுக்கு மனித உயிர் சென்றுவந்தால் நிச்சயம் ஆரோக்கியம் நிலைநிறுத்தப்பட்டு, உடலில் ஏற்படும் நோய்கள் அறவே குறைந்துவிடும். இப்படி உயிரின் ஆற்றலைக்கொண்டு பல்வேறு அதிசயங்களை சித்தர்கள் செய்துள்ளனர். எனவே பழனிமலைமீது உள்ள போகரை நினைத்து முருகனை வணங்கும்பொழுது ஆரோக்கிய வாழ்வும், மகிழ்ச்சியும் கிடைக்கும். மேலும், நமது ஆலயங்களின் கட்டமைப்பு அங்கு சென்றுவரக்கூடிய மனித உடலுக்கு விண் சக்தியை எளிதில் கிடைக்கச் செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயம் முழுவதும் சிறந்த மின்காந்த அலைகள் பரவிக் காணப்படுவதால், அங்கு செல்லும் உயிர் வலிமைபெற வாய்ப்பு ஏற்படுகிறது. உயிரின் வலிமையை உணர்வால் உணர்ந்து, நல்ல எண்ணங்களின்மூலம் அறவே ஆசைகளைத் துறந்து, எந்த உயிர் பரமாத்மாவுடன் தொடர்புகொள்ளத் தொடங்குகிறதோ அந்த உயிரே சித்தர் நிலையை அடையும். இதுவே ஜீவாத்மாவின் உயர்ந்த நிலையாகும்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :