Add1
logo
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் || கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார் || தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா ||
Logo
ஓம்
ஆத்ம ஞானம் தரும் பகவத் நாமம்!
 ................................................................
மகா புண்ணியம் தரும் மகாளய பட்சம்!
 ................................................................
செப்டம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
ஜீவாத்மாவின் பேராற்றல்!
 ................................................................
செப்டம்பர் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
144 ஆண்டுகளுக்குப்பின் வரும் மகா புஷ்கரம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
வாழ்வளிக்கும் வக்ரகாளி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
01-09-17


மானுடப்பிறவி எடுத்துள்ள நமக்கு இறைவன் காற்றாகவும், கல்லாகவும், கடலாகவும், புனிதத் திருக்குளமாகவும், வானில் நட்சத்திரங்களாகவும் காட்சி தந்து நமது பாவங்கள் அனைத்தையும் போக்குகிறான். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல்மூலமாக நாம் அறிந்தும் அறியாமலும் செய்கின்ற பாவங்கள் கரைந்து புண்ணிய ஆத்மாவாகிறோம்.

இந்தப் பிறவியில் 100 ஆண்டு காலத்தில் மகாமகம், திருக்குட நன்னீராட்டு விழாக்கள், புஷ்கர நீராடல் ஆகிய மாபெரும் விழாக்களில் சிலவற்றையே தரிசித்திட பாக்கியம் கிடைக்கும். அவ்வகையில் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் காவேரி நதியில் மகாபுஷ்கர விழா செப்டம்பர் 12 முதல் 24 வரை நடக்கிறது.புஷ்கரம் என்பது...

நமது பாரத பூமியில் 250-க்கும் மேற்பட்ட நதிகள் ஓடுகின்றன. இருப்பினும் புஷ்கர நீராடல் என்னும் தீர்த்தக் குளியல் நிகழ்ச்சி செய்வதற்கு 12 நதிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. அவற்றுள் காவேரி நதியும் ஒன்று.

புஷ்கரம் என்பது குருபகவானுடைய அருளாசியால் நடப்பது. சிவபெருமான் பக்தர்களுக்குத் தலபுண்ணியம் தருவதில் பங்கு பெறுகிறார். மேலும் பிரம்மா, அஷ்டலட்சுமி தேவிகளும் தொடர்புகொண்டிருப்ப தால், இந்தப் புனித நீராடல் மோட்சத்தையும் லட்சுமி கடாட்சத்தையும் கொடுப்பதாக அமைகிறது.

குரு பகவான் மேஷ ராசியில் இருக்கும் போது கங்கையிலும், ரிஷபத்தில் இருக்கும்போது நர்மதையிலும், மிதுனத்தில் இருக்கிறபோது சரஸ்வதியிலும்,  கடகத்தில் இருக்கும்போது யமுனையிலும், சிம்மத்தில் இருக்கையில் கோதாவரியிலும், கன்னியில் வரும்போது கிருஷ்ணாவிலும், துலாத்திற்கு வரும்சமயம் காவேரியிலும் புஷ்கரம் கொண்டாடப்பட வேண்டும்.

144 ஆண்டுகள் கழித்து தற்போது காவேரி நதியின் ராசியான துலாத்திற்கு குரு பகவான் எழுந்தருளும்போது புஷ்கரம் கொண்டாடப் படுகிறது. இதற்குமுன் 1840-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டதாகக் காலவரலாறு கூறுகிறது.

"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது' என்பது பழமொழி. "ஆயிரம் வருடங்கள் தினமும் கங்கையில் நீராடிய பலனை துலா மாதத்தில் மயிலாடுதுறை காவேரி துலாக்கட்டத்தில் ஒருமுறை நீராடினால் பெற்றுவிடலாம்' என்று துலாக்காவேரி மகாத்மியம் விவரிக்கிறது. கங்கை போன்ற புண்ணிய நதிகள் துலா மாதத்தில் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில்  நீராடிய விவரத்தை மகாத்மியத் துதிகளிலிருந்து அறியலாம்.

காவேரி நதி 66 கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்டிருப்பதாக புராணங்கள் போற்றுகின்றன. குடகுமலையிலிருந்து உருவாகும் காவேரி நதி கர்நாடகா, மைசூர் எல்லையைக் கடந்து தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக வந்து காவிரிப்பூம்பட்டினத்தில் வங்கக்கடலோடு சங்கமம் ஆகிறாள். தொடங்கிய இடத்திலிருந்து 765 கிலோமீட்டர் பயணப்படுகிற தென்னாட்டு கங்கையாம் காவேரிக்கு சிம்சா, ஹேமாவதி, அக்ராவதி, லக்ஷ்மண தீர்த்தம், கபினி, பவானி, லோக பவானி, நொய்யல், அமராவதி என்ற பெயர்களில் கிளை நதிகள் வருகின்றன.

காவேரி நதியைப் பற்றி நம்முடைய தர்மசாஸ்திரம் உயர்வாக இரண்டு மந்திர வாசகங்களால் கூறுவதைக் கண்டால் இதன் ஸ்நான சக்தி- புனித நீராடல் பலன் நமக்குப் புரியும்.

த்ரிராத்ரம் ஜான்ஹவீ தோயே
ஸப்தராத்ரந்து யாமுனே
ஸத்ய: புநாதி காவேரீ பாபம்
ஆமரணாந்திகம்.

இதன் உட்பொருள்: மூன்று நாட்கள் புனித நீராடினால் கங்கை எல்லா பாவங்களையும் அகற்றும். யமுனை நதி ஏழுநாட்களில் பாவங்களைக் களையும். ஆனால் காவேரி நதியில் புனித நீராடிவிட்டால் வாழ்நாள் முழுவதும் செய்த பாவங்களை உடனே அகற்றிவிடுவாள்.பொதுவாகவே காவேரியின் பெருமையை இல்லங்களில் நடக்கும் புண்ணியாக வாசன மந்திரத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

"கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி
தீர்த்தேஸ்மின் சன்னிதிம் குரு.'

இதில் காவேரி நதி இடம் பெற்றுள்ளதால் பாவங்களைப் போக்குவதற்கு சக்தி படைத்த நதிகளுள் காவேரியும் ஒன்று என அறியலாம்.

வள்ளல் வதான்யேஸ்வரர்

காவேரிக்கரையின் வடபாகத்தில் வள்ளலார் கோவில் என்னும் பெயருடன் தட்சிணாமூர்த்தி வடிவான வதான்யேஸ்வர சுவாமி கோவில் கொண்டுள்ளார். மேற்குப் பார்த்த சிவாலயத்தில் அம்பிகை ஞானாம்பாள் என்னும் திருநாமத்துடன் தென்முகம் நோக்கி அருள்புரிகிறாள். சுவாமிக்கு "வழிகாட்டும் வள்ளல்' என்னும் திருப்பெயரும் வழக்கத்தில் உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுடன் காட்சி தர, திருச்சுற்றில் துர்க்கை, பிரம்மா, லிங்கோற்பவர், ஞானகுரு, சனீஸ்வரன், அங்காரகன், சூரியன், சந்திரன், பிரம்மலிங்கம், அகத்தியலிங்கம், வள்ளி, தெய்வனையுடன் முருகப்பெருமான் காட்சி தர, கணேசர், சோமாஸ்கந்த மூர்த்தியும் வீற்றுள்ளனர்.

புஷ்கர நீராடல் விதி

இந்த மகா புஷ்கர விழா எல்லா ராசிக்காரர்களுக்கும் உகந்தது என்றாலும், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்கள் விசேடமான பரிகாரமும்; மேஷம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு குரு மத்திமப் பலன் தருவதால் பொதுவான தான பரிகாரமும் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறது புஷ்கர தாத்பர்ய நூல்.

காகாரோ கலுஷம் ஹந்தி
வேகாரோ வாஞ்சித ப்ரத:
ரீகாரோ மோஷதம் ந்ருணாம்
காவேரீத்ய வதாரய:

வேத வாக்யமான இந்த வரிகளில், "எல்லாவித தோஷங்களும் நீக்கி, விரும்பிய நன்மைகளைக் கிடைக்கச் செய்து, பாவங்கள் அகற்றி மோட்சத்தை அளிக்கக்கூடியது காவேரி நதி ஒன்றே' என்று உறுதியாகக் கூறிடக் காண்கிறோம்.

செப்டம்பர் 12-ஆம் நாள் மடாதிபதிகள், ஆதினங்கள், துறவிகள், ஜீயர்கள், வேத விற்பன்னர்கள், சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள் அனைவரும் வேத வியாசர், காவேரி தேவி படத்துடன் மயிலாடுதுறை துலாக் காவேரியிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு முக்கிய விதிகள் வழியாக நாதஸ்வரம், யானை, குதிரை, காளைகளுடன் பயணித்து, மீண்டும் துலாக்காவேரிக்கு வந்து பூஜைகளைத் தொடங்கி வைப்பார்கள்.

இங்கே ஹோமங்கள், திதி தர்ப்பணப்  பூஜை, நீத்தார்கடன் செய்வதற்கு வேத விற்பன்னர்கள், பட்டர்கள், சிவாச்சார்யார்கள் அவரவர் சம்பிரதாயப்படி செய்திட அமர்ந்திருப்பார் கள். 12 நாட்களிலும் வேத பாராயணம், ருத்ர பாராயணம், திருமுறை முற்றோதல், லலிதா, விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம் நடைபெற்று, காவேரியில் ஹாரத்தி எடுத்தல் நடைபெறும், கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகளும் மனதுக்கு இனிமை சேர்க்கும்.

புஷ்கர நீராடல் விதிப்படி மயூரநாத சுவாமி ஆலயத்திலிருந்து அபயாம்பிகை யுடன் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, வதான்யேஸ்வரர் தேவியுடன் எழுந்தருளி, ரிஷப தீர்த்தத்தில் 12 நாட்களிலும் தீர்த்தம் அருளுவர். அஸ்திரதேவருடன் எழுந்தருளி தீர்த்தம் அருளும் காலமறிந்து புனித நீராடி, தானங்களை சங்கல்பம் செய்து அந்தந்த நாளில் கொடுத்த பிறகு, மயூரநாதர் சந்நிதி, அபயாம்பாள் சந்நிதி, வதான்யேஸ்வரர் வள்ளலார்கோவில் அருகிலுள்ள சுற்றுக் கோவில்களையும் தரிசிக்கவேண்டும்.

பரிமளரங்க தரிசன சேவைமயிலாடுதுறை முனிசிபல் எல்லைக்குள் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருஇந்தளூர் எனும் திவ்ய தேசத்தில் (108 திருப்பதிகளுள் ஒன்று) பரிமள ரங்கநாயகித் தாயாருடன் பரிமள ரங்கநாதர் சேவை சாதிக்கிறார். இந்து புஷ்கரணி வேதசக்கர விமானக் கருவறையோடு விளங்கும் இந்த மூர்த்தி, தலைப்பகுதியில் காவேரித் தாயாரும், கால் பகுதியில் கங்கைத் தாயாரும் அமர்ந்திருக்க, சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

காவேரியும், கடலும் சேருமிடத்தில் ஐப்பசி மாதத்து துலா ஸ்நானம் மிகச்சிறப்பு. கடைமுக ஸ்நானம் முடவன் முழுக்கு மிகச்சிறப்பு.

இந்தியத் திருநாட்டின் பல பாகங்களிலிருந்தும் பரிமள ரங்கநாதரை தரிசிக்க வருவர். திருமங்கை யாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட எம்பெருமானை சேவித்து அருட்பிரசாதங்களைப் பெற்று வர வேண்டும்.

காவேரி புஷ்கர புனித நீராடல் என்பது குடந்தை மகாமகத் திருவிழாவைப்போல மிகவும் ஆன்மிக- இறையாற்றல் நிறைந்த திருவிழாவாக வருகிறது. இந்த புஷ்கர புண்ணிய காலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளும், தேவர்கள், மகரிஷிகளும், தீர்த்தங்களும், நதிகளும் ஒன்று கூடுவதால், புஷ்கர காலத்தில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தங்களில் நீராடிய பலனும் ஒன்றாகக் கிடைக்கும். இந்த தீர்த்தக் கட்டத்தில் அன்னதானம், வஸ்திர தானம், இரண்யதானம் செய்வதால் பன்மடங்கு பிறவிப் பயன் கிட்டும் என்கிறது துலாக்காவிரி மகாத்மியம்.

காசிக்குச் சமமான திருத்தலங்களுள் ஒன்றாக மயிலாடுதுறை விளங்குவதால், வாரணாசியில் உள்ளபடியே துண்டி விநாயகர், பைரவர், காவேரி அருகே காசி விஸ்வநாதர் அருள்கின்றனர்.

தற்போது காவேரியில் போதிய நீர்வரத்து இல்லாததால், 200 மீட்டர் அளவுக்கு தொட்டி போல அமைத்து அதில் நீர்விட்டு துலாக்கட்டத் தில் புஷ்கர நீராடல் விழா நடத்தப் படுகிறது. மகா புஷ்கர விழா நடை பெறும் காலங்களில் மயிலாடு துறை தலத்திற்குப் போகமுடியவில் லையே என்று வருத்தமா? கவலை வேண்டாம். நவம்பர் மாதம் 16-ஆம் தேதி மாயூரம் கடைமுக ஸ்நானம் வரை துலாக்கட்டத்தில் புனித நீராடல் செய்து ஆலய தரிசனம், தானங்கள் செய்து வரலாம்.

புனித நீராடல் பலனை மாணிக்கவாசகப் பெருமான் சிறப்பித்துப் பாடுகிறார்.

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
    தீர்த்தன்நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லாரும்
    காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கழல்கள்
    ஆர்ப்பரவம் செய்ய அனிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகமும் பொய்கை குடைந்துடையன் பொற்பாதம்
    ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோ ரெம்பாவாய்!
நீராடும்போது பாடலாம்.
ஓம் மயூரநாதாய மங்களம்!
பரிமள ரங்கநாதருக்கு ஜெயமங்களம்!


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :