Add1
logo
பேருந்து கட்டண உயர்வால் தமிழகத்தில் அசாதாரணமான சூழல்: மு.க.ஸ்டாலின் || மூன்றாவது வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார் லாலு! || பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் இல்லம் முற்றுகை! || கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு || தவறுகளைப் புரியவைக்க தகுதியான யாருமே கோலியுடன் இல்லை! - சேவாக் கருத்து || தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்; காஞ்சி சங்கரமடம் விளக்கம் || கேரள அரசின் உத்தரவை மீறி தேசியக்கொடியை ஏற்ற இருக்கும் மோகன் பாகவத்! || சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்! கி.வீரமணி கண்டனம்! || பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்! || மோடிக்கு ரத்தக் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுமி! || நித்தியானந்தா, எச்.ராஜா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்! || முதன்முறையாக பதிவு திருமணம் செய்துகொண்ட திருநங்கை! || இடைத்தேர்தலை சந்திக்க தயார்! தங்கதமிழச்செல்வன் ஆவேச பேச்சு!! ||
Logo
ஓம்
ஆத்ம ஞானம் தரும் பகவத் நாமம்!
 ................................................................
மகா புண்ணியம் தரும் மகாளய பட்சம்!
 ................................................................
செப்டம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
ஜீவாத்மாவின் பேராற்றல்!
 ................................................................
செப்டம்பர் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
144 ஆண்டுகளுக்குப்பின் வரும் மகா புஷ்கரம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
வாழ்வளிக்கும் வக்ரகாளி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
01-09-17
ண்டலமுற்றும் மெங்கையால் மறைத்திடுவோம்
வானத்தையும் வில்லாக வளைத்திடுவோம்
தொண்டருக்குச் சூனியம் சொல்லிக்காட்டுவோம்
தோன்றலுக்கு முன்புநீ நின்றாடுபாம்பே.
(சித்தர் வல்லபம்)

இதுவரை நாம் அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்களைப் பற்றி ஏராளமான கதைகளைப் படித்தும், கேட்டும் வருகின்றோம்.

அவை உண்மைதானா? சித்தர்களின் காலம் எது?

"பாரப்பா கிரேதாயில் ரொம்ப ஆட்டம்
பண்பாக ஆடினார் சித்தரெல்லாம்
தேரப்பா திரேதாயில் அட்டமாசித்தும்
வேடிக்கை வினோதங்கள் செய்துவந்தார்
சீரப்பா துவாரபரையி லனேகசித்தி
செய்தவர்கள் நல்லதொரு பேறுபெற்றார்
காரப்பா கலியுகந்தான் போகுமட்டும்
கண்மூடி குண்டலினி யோகங் கண்டார்.'

இந்த பூமியில் உயிர்கள் தோன்றிய காலத்தை இதுவரை யாரும் சரியாகக் கணக்கீடு செய்து கூறவில்லை என்பதே உண்மை. ஆனால் வேதம், புராணம், ஜோதிட நூல்களில் காலத்தை கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று ஒவ்வொரு யுகத்திற்கும் சில லட்சம் ஆண்டுகளைக் கணக்கீடு செய்து கூறியுள்ளார்கள். அகத்தியர் முதலான சைவத்தமிழ்ச் சித்தர்கள், இந்த நான்கு யுகங்களிலும் வாழ்ந்து, இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட கருவூர் சித்தர் பாடல்மூலம் தெளிவாக அறியமுடிகிறது.

முதல் யுகமான கிரேதாயுக காலத்தில் பதினெட்டு சித்தர்கள் மக்களுக்கு நல்ல பண்புகளையும், ஒழுக்கமான குணங்களையும், தன்னையறியும் அறிவையும், உயர்வான ஞானம், செல்வம் அடையும் அறிவையும், புத்தி சார்ந்த வாழ்க்கை வழிமுறைகளையும், பகுத்தறிவையும் போதித்து, அதன்படி நடைமுறையில் வாழச் செய்தனர்.

இரண்டாவது யுகமான திரேதாயுகத்தில் தங்களின் வாசியோக சக்தியினால், தங்களின் மூச்சுக்காற்றின் நிலையை அறிந்து, சித்தமாகிய மனதை அடக்கி தங்கள் விருப்பம்போல் செயல்படவைத்து, குண்டலினி யோகம் செய்து அதன்மூலம் அட்டமாதி, அணிமாதி சித்திகளை அடைந்து, பஞ்சபூதங்களின் தன்மைகளை அறிந்து, உயிர் சக்தியான காற்று, நீர், நெருப்பு ஆகியவற்றைத் தங்களின் உடலிலிருந்து வெளியேறாமல் அடக்கி உடம்பின் உள்ளே நிலைநிறுத்தி, இந்த பூமியில் பிறந்த மனிதன் இறக்க வேண்டும் என்ற இயற்கையின் நியதியைத் தடுத்து, மரணமில்லா பெருவாழ்வு பெற்று, கிரேதாயுகம் முதல் இன்றுவரை வாழ்கிறார்கள். மனித சரீரம் வலிமைபெற யோகாசன உடற்பயிற்சிகளையும், சரீர நோய் தீர சித்த வைத்தியம், வாழ்வில் உண்டாகும் குறை தீர்ந்து வளம்பெற வாசியோக முறைகளையும், பாமர மனிதனும் சகல சித்திகளை அடைய அட்டமாதி, அணிமாதி சித்திகளை அடையும் குண்டலினி யோக முறைகளையும் தமிழ் மக்களுக்கு போதித்தனர்.

மூன்றாவது யுகமான துவாபரயுகத்தில் சித்தர்கள் மக்களுக்கு தங்களின் சக்தியால் அநேக நன்மைகளைச் செய்து, அவர்கள் வாழ்வில் உண்டான அனைத்து குறைகளையும் தீர்த்து, துன்பம், துயரம் தாக்காமல் காப்பாற்றிவந்தனர்.

முதல் யுகமான கிரேதாயுகத் தொடக்கத்தில்தான் கடவுள் மனிதன் முதலான ஜீவராசி களையும் மரம், செடி, தாவரங்களையும் படைத்தார் என்றும்; இந்த முதல் யுக காலத்தில்தான் மகாவிஷ்ணு ராமருக்கு முந்தைய அவதாரங்களான மச்ச அவதாரம் முதல் வாமன அவதாரம் வரை எடுத்து அசுரர்களை அழித்தார் என்றும் புராண, இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவதான திரேதாயுகத்தில்தான் இராமாயணக் கதை நடந்ததாகவும், காவிய நாயகன் இராமன் வாழ்ந்த காலம் என்றும் இராமாயண காவியம் கூறுகின்றது.

மூன்றாவது துவாபரயுகம் மகாபாரதம் நடந்த காலம்- பாண்டவர்கள், கௌரவர்கள், கிருஷ்ணர் வாழ்ந்த காலம் என்று கூறப்படுகின்றது.

நான்காவதான கலியுகம் தற்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலமாகும். இந்த கலியுகத்தில் அகத்தியர் முதலான சைவத்தமிழ்ச் சித்தர்கள் பதினெட்டுபேரும் மக்களைவிட்டு விலகிச்சென்று, மறைவாக இருந்து, குண்டலினி யோகம், வாசியோகம் செய்து கொண்டுள்ளார்கள் எனவும் பாடல்மூலம் அறியமுடிகிறது.

கருவூர் சித்தரின் இந்த பாடல்மூலம் ராம, கிருஷ்ண அவதாரங்களுக்கு முன்பே பதினெட்டு சித்தர்களும் ஞானம், அறிவு, அளப்பரிய ஆற்றல்கொண்டு வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறியமுடிகின்றது.

அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் யுகங்களுக்குமுன்பே இந்த பூமியில் எங்கே வாழ்ந்தார்கள்? இமயமலையிலா கயிலையிலா என்றால், இல்லை என்றே கருவூர் சித்தர் கூறுகிறார். தென்தமிழ்நாட்டில் தாமிரபரணி நதி தீரத்தில் அகத்தியர் முதலான சித்தர்களும், சைவக்கொள்கையுடைய தமிழ் பேசும் மக்களும் வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது. சைவம், சைவர் நாகரிகம், சைவ தர்மம், சைவ மார்க்கம், சைவ சித்தாந்தம் எனக் கூறப்படும் தமிழர் நாகரிகத்தைக் கடைப்பிடித்து தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை அறியமுடிகிறது. தமிழன், தமிழ்மொழி, தமிழனின் வாழ்வியல் நாகரிக முறைதான் உலகின் முதல் நாகரிகம் என்பதையும் அறியமுடிகிறது.

இந்த பூமியில் யுக காலங்களுக்கும் முன்தோன்றிய மூத்த குடிமக்கள் தமிழ் பேசும் தென்னாடுடைய சைவர்கள் என அழைக்கப்பட்ட தமிழர்கள்தான்; இந்த உலகில் மனிதன் பேசிய முதல் மொழி தமிழ்மொழிதான் என்று அறியமுடிகின்றது. தமிழ்மொழி தோன்றி இரண்டு யுகங்களுக்குப் பின்பே மற்ற மொழிகள் எல்லாம் தோன்றின. இதற்குரிய ஆதாரங்களை வரும் தொடர்களில் அறிவோம்.

வளம் தரும் வாசியோகம்

ஒன்றை நாம் கற்றுக்கொள்ளும்போது, நாம் அதனைத் தெளிவாக அறிந்துகொண்டு, அதனால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்குமென்பதைப் புரிந்துகொண்டு

அதன்பின் அந்த காரியத்தில் ஈடுபடவேண்டும். ஒரு தொழிலைப் பற்றிய கல்வி கற்றாலும், அந்த கல்வி, தொழில் நம்மை வாழ்வில் உயர்த்துமா? செல்வ நிலையை அடையச் செய்யுமா என்று அறிந்து, அதன்பின் அதில் ஈடுபடவேண்டும். இதுவே சித்தர்கள் கூறிய சித்தாந்த போதனையாகும். பிறர் சொல்வதையெல்லாம் நம்பி செயல்படுவது ஞானம், சுயபுத்தி இல்லாதவர் செயலாகும்.

வாசியோகம் பற்றிய அடிப்படையான விளக்கங்களைதான் இப்போது எழுதிவருகிறேன். வாசியோக செயல்முறைகள், குண்டலினி யோக செயல்முறைகள் என அனைத்தையும் வரும் தொடர்களில் விரிவாக எழுதுகிறேன்.

ஒவ்வொரு மனிதனும் அவரவர் சுவாச மூச்சுக்காற்றின் நிலையை அறிந்து செயல்பட்டால் முற்பிறவிகளில் செய்த பாவ- சாப- தோஷ கர்மவினைப் பதிவுகளால் இப்பிறவியில் அடையும் துன்பங்களைத் தடுத்துக் கொள்ளலாம் என குரு காகபுசுண்டர் ரிஷி கூறுவதை அறிவோம்.

"சாட்சாதி பிரம்மத்தால் பூர்வ கன்மம்
    தத்வாதி வாசனைகள் தாமேபோகும்
சூட்சாதி பிராந்தியெனும் மாயசக்தி
    தொடராமற் போக்குவதே சூட்சுமவாசி.'

சைவத் தமிழ்ச் சித்தர்கள் தங்கள் பாடல்களில் ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு பெயரால் குறிப்பிட்டுள்ளார்கள். காற்று, வாசி, குதிரை, பாம்பு, கால், கலை, உயிர், மூச்சு, கடவுள் என பல பெயர்களில் கூறியுள்ளார்கள். காற்றின் இந்த பெயர்களை வாசகர்கள் அறிந்துகொள்ள வேண்டியது
அவசியம்.

எவன் ஒருவன் தன் சுவாசக்காற்றின் போக்கை ஆராய்ந்து, கவனமாக இருந்து அறியத் தொடங்கிவிட்டானோ, அவன் தன்னையறியத் தொடங்கிவிட்டான். அவனுக்கு தான் செய்யும் செயல்களில் கவனமாக செயல்பட்டு வெற்றியை அடையவேண்டும் என்னும் வேகம், விழிப்புணர்வு வந்துவிட்டது. அவன் தோல்வியோ, நஷ்டமோ
அடையமாட்டான்; தொட்டதெல்லாம் வெற்றியாகும் என்கிறார்கள் சித்தர்கள்.

ஒருவன் எப்போது வாசி பார்க்கவேண்டும்?

"உண்ணும்போது வாசி பாரு, உறங்கும்போது வாசிபாரு, போகத்தில் வாசி பாரு, புலமையில் வாசி பாரு, நடக்கிலும் வாசி பாரு, முடக்கிலும் வாசி பாரு, முனிசுழி வாசி பாரு, பொருளடைய வாசி பாரு, புகழடைய வாசி பாரு, அரசனிடம் வாசி பாரு, போரிலும் வாசி பாரு' என மனிதன் காலை எழுந்தவுடன், இரவு படுக்கைக்குச் செல்லும்வரை செய்யும் ஒவ்வொரு செயலிலும் சுவாசக்காற்றின் நிலையறிந்து செய்யவேண்டும்.

ஒரு மனிதன் சுவாசிக்கும்போது, இந்த பிரபஞ்ச வெளியில் இருந்து நம் உடம்பினுள்ளே மூச்சுக்காற்று செல்லும் நிலையை "பூரகம்' என்று கூறுவார்கள். மூச்சுக்காற்றினை உள்ளே சிறிது நேரம் அடக்கிவைத்துக் கட்டி நிறுத்துவதை "கும்பகம்' என்பார்கள். அதன்பின் வெளியில் விடுவதை "இரேசகம்' எனக் கூறுவார்கள். இதை முறையாகச் செய்வதை மூச்சுப்பயிற்சி, நாடி சுத்தி, சுவாசப் பயிற்சி, பிரணாயாமம் என்று கூறுவார்கள். மூச்சுக்காற்றினை உள்ளே இழுக்க, அடக்கி நிறுத்த, வெளியில் விட ஒரு கால அளவுண்டு. இதனைப் பற்றிய விவரங்களை பின்னர் அறிவோம்.

"போம் வாயு சிவம்; உள்ளே புகுதற் சக்தி.'
"ஏற்கையிலே மேல் நோக்குங் காலை கேளாய்
    என் மகனே சக்தியென்றதற் குப்பேரு
கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா
    கண்டுபார் சிவமென்று கருதலாச்சு.'

என்கிறார் காகபுசுண்டர் ரிஷி.

ஒரு மனிதனின் மூக்கின் இடப்பக்க துவாரத்தில் மூச்சுக்காற்று உள் சென்று வருவது "சக்தி' என்னும் பெண் நிலை காற்றாகும். அதாவது இடப்பக்க மூக்கு துவாரத்தில் மட்டும் சுவாசம் நடைபெறும்போது, இந்த மனித உடம்பிற்குத் தேவையான உயிர்சக்தியை உள்ளே கொண்டுவந்து சேர்க்கும் காற்று என்பதை அறிந்துகொள்ளுங்கள். இந்த இடப்புற சுவாசக் காற்றினை ஏன் சக்தியாகிய பெண்ணிற்கு ஒப்புமைப்படுத்தி சித்தர்கள் கூறினார்கள் என்றால், மனித வாழ்வில் சரீர சக்தியையும், செயல்களில் வெற்றியையும், செல்வ உயர்வையும், கர்ப்பத்தில் கருவை வளர்த்து வம்சவிருத்தியையும் தருவது பெண் சக்திதான். ஒரு பெண் நினைத்தால் மட்டுமே அந்த குடும்பத்தின் உயர்வு, தாழ்வு, மதிப்பு, கௌரவக் குறைவினை உண்டாக்க முடியும். இந்த பூமியில் ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி என அனைத்தும் பெண்தான் என்பதை இயற்கையே தீர்மானித்து வைத்துள்ளது. எனவேதான் சித்தர்கள் உயிர்சக்திக் காற்றினை பெண் காற்று என்று கூறினார்கள். இந்த பூமியில் ஒரு குழந்தை பிறந்தவுடன் முதல் சுவாசம் இடப்பக்கம்தான். உயிர் நம் உள்ளேவருவது இடப்பக்கம்தான்.

மூக்கின் வலப்பக்க துவாரத்தில் மட்டும் உள்சென்று வெளிவரும் காற்றை சிவம், சிவகலை, ஆண் காற்று என்று சித்தர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஆண்சக்திக் காற்று மனித உடம்பினுள்ளே சென்று வெளிவரும்போது, நமது உடம்பினுள்ளே இருக்கும் சரீர சக்தி, புத்தி சக்தி ஆகியவற்றை வெளியில் கொண்டுவந்து செயல்களைச் செய்ய வைத்துவிடுகின்றது. இதனைதான் "சக்தி இல்லையேல் சிவம் இல்லை' என்று கூறப்படுகின்றது. பெண்சக்திக் காற்று சரீரத்திற்கு வலிமையைத் தரவில்லை என்றால், சிவம் என்னும் ஆண் சக்தி செயல் படாத சவமாகிவிடும்.

அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்களும் தங்கள் உடம்பினுள்ளே காற்று ரூபமாய்வரும் பெண் சக்தியை வெளியில் விடாமல் வாசி யோகம், குண்டலினி யோகம்மூலம் அடக்கி, அந்த சக்தியைக்கொண்டு அனைத்து சித்திகளையும் அடைந்தார்கள். இந்த இடப்புற மூக்கு துவாரத்தில் வரும் சக்திக் காற்றினை சித்தர்கள் "வாலை சக்தி' எனவும், "வாலை மனோன்மணி' எனவும் கூறியுள்ளார்கள். சித்தர்கள் குண்டலினி யோக நிலையிலிருந்து, பிரபஞ்ச வெளியிலிருந்து கிடைக்கும் சக்தியைத் தன்னுள் சேமித்து, புத்தியைப் பிரகாசமாக்கிக்கொள்ளும் செயலையே "வாலை பூசை' என்று கூறினார்கள்.

வாலை பூசை, வாலை மனோன்மணி பூசை என்பது குண்டலினி யோகச் செயல்தான். வெளியில் இருந்துவரும் சக்திக் காற்றானது மூக்கின் இடப்பக்கம், வலப்பக்கம், சுழுமுனை என மூன்று ஆதார நிலைகளிலும் மாறி மாறி நடந்துகொண்டிருக்கும். சக்தி, சிவ, ஆண், பெண்ணாகி அந்த சுவாசமே வாசியாகும். இதுபோன்று ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறோம். இந்த சுவாச நிலையால்தான் மனம் இயங்குகின்றது. சுவாசம் எங்குள்ளதோ அங்குதான் மனம் இயங்கும். சுவாசம் இல்லையென்றால் மனம் இயங்காது. மனிதன் தன் அலைபாயும் மனதைக் கட்ட, சுவாசக் காற்றைக்கட்ட அறிந்துகொள்ளவேண்டும்.

வாசக அன்பர்களே, இந்த பூமியில் தன் வம்சத்தை அறிந்துகொண்டவன் தன் வாழ்க்கையில் உயர்வான்; வாசியோக நிலையில் வாலையின் அருள் பெற்றவன் வானில் உலாவருவான்.

சித்தரைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.

போன நாள் வீணாய்ப்போனால்
புதிய நாள் கெட விடாமல்
ஞான நாள் இதுதான் என்று
நாடெங்கும் சித்தர் போற்றி!

(மேலும் சித்தம் தெளிவோம்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :