Add1
logo
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் || கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார் || தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா ||
Logo
ஓம்
ஆத்ம ஞானம் தரும் பகவத் நாமம்!
 ................................................................
மகா புண்ணியம் தரும் மகாளய பட்சம்!
 ................................................................
செப்டம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
ஜீவாத்மாவின் பேராற்றல்!
 ................................................................
செப்டம்பர் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
144 ஆண்டுகளுக்குப்பின் வரும் மகா புஷ்கரம்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
வாழ்வளிக்கும் வக்ரகாளி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
01-09-17
பேராயிரம் கொண்ட பெருமான், நீராய் நெருப்பாய் நிலமாய் காற்றாய் ஆகாயமாகி நின்ற மூவருள் முதல்வனுமாகிய சிவபெருமானுக்கு ஆயிரமாயிரம் கோவில்கள் உள்ளன. அவற்றுள் அடியார்கள் தேடிச்சென்று பாடிப் பரவசமடைந்த கோவில்கள் பல. அவற்றில் திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பாடப்பட்ட கோவில் திருவக்கரை. 274 தேவாரத் திருத்தலங்களுள் தொண்டை நாட்டின் 30-ஆவது  தலமாகவும் விளங்குகிறது.

வராக நதி என்றழைக்கப் படும் சங்கராபரணி நதியின் வடகரையில் உள்ளது இக்கோவில். வக்ராசுரன் என்ற அரக்கன் சிவபெருமானைத் தனது கண்டத்தில் (தொண்டை) வைத்து கடும் தவம் செய்தான். அரக்கனின் தவவலிமை கண்டு மனமிரங்கிய சிவன் அவனுக்குக் காட்சி கொடுத்தார்.

அப்போது அரக்கன் இறைவனிடம் யார் கையாலும் சாகாத வரம் கேட்க, சிவனும் அப்படியே வழங்கினார். தனக்கு இறப்பே இல்லை என்ற மமதை தலைக்கேற மக்களையும் தேவாதிதேவர்களையும் துன்புறுத்தினான். அரக்கனின் கொடுமைகளைத் தாங்கமுடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அரக்கனின் வக்ரத்தை முடிவுக்குக் கொண்டுவர மகாவிஷ்ணுவிடம் வேண்டுகோள் வைத்தனர்.

சிவனின் உத்தரவுப்படி மகாவிஷ்ணு வக்ராசுரனுடன் போரிட்டு, தனது சக்கரத்தைப் பிரயோகித்து அவனை அழித்தார்.

அதன்பிறகு வக்ராசுரனின் தங்கையான துன்முகி என்ற அரக்கி, அண்ணனைக் கொன்ற கோபத்தினாலும் தனது வக்ரபுத்தியாலும் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்தாள். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதிதேவியிடம் "துன்முகியை வதம்செய்ய உன்னால் மட்டுமே முடியும்; சென்று வெற்றியோடு வா' என்று உத்தரவிட்டார். அதன்படி காளியாக உருவெடுத்து உக்ரத் தோடு சென்று துன்முகியை வதம் செய்ய முனையும்போது அரக்கி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். சாஸ்திர முறைப்படி கர்ப்பிணியையோ, சிசுவையோ வதம் செய்யக்கூடாது என்பதால், காளி உருவத்திலிருந்த உமாதேவியார் துன்முகியின் வயிற்றைக் கிழித்து சிசுவை எடுத்து தன் வலது காதில் குண்டலமாக அணிந்துகொண்டு அரக்கியை வதம் செய்தாள். அதே இடத்தில் வக்ரகாளி அம்மனாக அமர்ந்துவிட்டாள்.

அதனால் அவள் பெயராலேயே இத்தலம் திருவக்கரை என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள வக்ரகாளியின் உருவத்தைப் பார்ப்பவர்கள் மெய்சிலிர்த்துப் போவார்கள். உலகத்தைக் காக்கும் தாய் இங்கே மண்டையோட்டுக் கிரீடம் சூடி இடப்புறமாகச் சாய்ந்தபடி அமர்ந்து அருளாட்சி செய்கிறாள்.இக்கோவிலில் உள்ள நான்கு துவாரபாலிகைகள் காளியின் கருணையினால் ஆட்கொள்ளப் பட்டவர்கள். ஆம்; அவர்கள் நால்வரும் இடையர் குலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்கள் குலத்தொழிலாகிய பசுக்களை வளர்த்து, அதன்மூலம் கிடைக்கும் பால், தயிர், வெண்ணெய் ஆகிய வற்றை கூடையில் சுமந்து ஊர் ஊராய்ச் சென்று விற்று வருவார்கள். பாலில் அதிக அளவு தண்ணீர் கலந்து மக்களை ஏமாற்றியதோடு, அப்பகுதி அரசனின் அரண்மனைக்கும் பால் விற்பனை செய்தனர். அதிலும் தண்ணீர் கலப்படம். விஷயம் மன்னனிடம் சென்றது. மன்னன் விசாரணை செய்து உண்மையை அறிந்து கோபமுற்றான். அந்த நால்வரையும் மொட்டையடித்துத் தலையைத் துண்டித்துவிடுமாறு தீர்ப்பளித்தான்.

அதன்படி தண்டனை அடையும் நேரத்தில் அந்த நான்குப் பெண்களும் வக்ரகாளியை நோக்கி கண்ணீர்விட்டுக் கதறியழுதனர். பெண்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தி வருந்தியதைக்கண்ட காளி அவர்கள்முன் தோன்றி, அவர்களை மன்னித்து தன்னிடமே துவாரபாலிகைகளாக வைத்துக் கொண்டாள். "தவறை உணர்ந்து தன்னிடம் தஞ்சமென்று வருபவர்களை அரவணைத்து அருளும் காளியின் கருணையே கருணை' என்கிறார்கள் ஊர்ப்பெரியவர்கள்.

""இக்கோவிலின் உள்ளே புகுந்தவுடன் வக்ரகாளி சந்நிதியை வலப்புறமாக ஐந்து முறையும், இடப்புறமாக நான்கு முறையும் வலம்வந்து தொழவேண்டும் என்பது நடை முறை. காளி சந்நிதியில் இருந்து மூலவர் சந்திர மௌலீஸ்வரரை வணங்கச் செல்லும் போது, நந்தியெம் பெருமான், கொடிமரம், ராஜகோபுரம் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இல்லாமல், ஒன்றைவிட்டு ஒன்றுவிலகி அமைந்திருக்கும். காரணம் வக்ரா சுரனை வதம் செய்ததால் இக்கோவில் தெய்வங்கள் எல்லாம் வக்ர நிலை யிலேயே உள்ளனர். மூலவர் சிவலிங்கத் திருமேனியில் மூன்று பக்கமும் உருவம் உண்டு. சிவன் நேர்முகமாகவும், பிரம்மா தென்பக்கமும், மகாவிஷ்ணு வடப்புறமும் உள்ளனர். இதுபோன்ற வடிவமைப்பு வேறெங்கும் இல்லாதது'' என்கிறார்கள்.

மூலவருக்கு வலப்புறம் குண்டலினி முனிவரின் ஜீவசமாதி உள்ளது. மூலவருக்கு வடமேற்கில் வக்ராசுரனை பிரயோகச் சக்கரத்தால் வதம்செய்த பெருமாள் வரதராஜப்பெருமாளாக நின்ற கோலத்தில் தனிச் சந்நிதியில் காட்சியளிக்கிறார். வதம்செய்ய தனித்து வந்ததால் இக்கோவிலில் மகாலட்சுமி இல்லை.

வக்ராசுரன் பூஜை செய்த லிங்கமும் உள்ளது. இதற்கு வக்ரலிங்கம் என்று பெயர். இந்த லிங்கம் கோடைக்காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும். மழைக்காலங்களில் லிங்கத்தின் மேனியில் முத்து
முத்தான நீர்த்துளிகள் காணப்படுகின்றன. இச்சந்நிதியில் உள்ள சகஸ்ரலிங்க மேனியில் 1008 லிங்கங்கள் உள்ளன.

""பொதுவாக நவகிரக சந்நிதியில் சனி பகவானின் வாகனமான காகம் வலப்புறமாகவே அமர்ந்திருக்கும். ஆனால், இக்கோவிலில் இடப்புறத்தில் அமர்ந்துள்ளது. இது வக்ரத்தோற்றம்'' என்கிறார் 80 வயது மூத்த அர்ச்சகர் பத்மநாபன் மற்றும் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யும் நாராயண பட்டாச்சாரியார்.

மூலவர் சந்திரமௌலீஸ் வரரின் தேவியான உமா மகேஸ்வரி இங்கு வடிவுடையம்மன் என அழைக் கப்படுகிறாள். தனிச்சந்நிதியில் தெற்கு நோக்கி உள்ளாள்.

""பொதுவாக ராகு- கேது இரண்டிற்கும் அதிதேவதை காளி. எனவே ராகு- கேது பரிகாரத் தலமாகவும் உள்ளது. பிரார்த்தனைத் தலமாகவும் விளங்கி வருகிறது. வக்ரமான கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வக்ர தோற்றத்துடன் உள்ள தெய்வங்களை வணங்கி வலம்வந்தால் தோஷ நிவர்த்தி கிடைக்கும். அதோடு திருமணமாகாத ஆண்- பெண்ணுக்கு விரைவில் திருமணம் கூடும். மகப்பேறு இல்லாத தம்பதிகள் இங்குள்ள துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் பூஜை செய்தால் கைமேல் பலன் கிட்டும். வக்ரகாளிக்கு பௌர்ணமிதோறும் இரவு 12 மணியளவில் நடைபெறும் ஜோதி தரிசனத்தில் கலந்து கொண்டு வழிபட்டால் எண்ணியவை அனைத்தும் நடக்கும். மாதந்தவறாமல் பௌர்ணமிப் பூஜையில் கலந்துகொண்டால் கைமேல் பலன்'' என்கிறார் மூத்த அர்ச்சகர் சேகர் குருக்கள்.

ஆதித்ய சோழ மன்னனால் கட்டப்பட்ட 2,000 ஆண்டுகள் பழமையான கோவில். தினசரி காலை 6.00 மணிமுதல் இரவு 8.30 மணிவரை ஆலயம் திறந் திருக்கும்.

பழமையும் பெருமையும் வாய்ந்த திருவக்கரை திருத்தலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய ஊர்களிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :