Add1
logo
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் || கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார் || தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா ||
Logo
பொது அறிவு உலகம்
உலகை வியக்க வைத்த உசேன் போல்ட்- கோவி. லெனின்
 ................................................................
சுகாதாரத் துறையில் புதிய மாற்றங்கள்
 ................................................................
பிரதமரின் சுதந்திர தின உரை
 ................................................................
வெள்ளையனே வெளியேறு இயக்கம் 75
 ................................................................
குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரை
 ................................................................
01-09-17


- கோவி. லெனின்

    விவசாயம், மீன்பிடித்தல், சுற்றுலா இவற்றை மையமாகக் கொண்டது ஜமைக்காவின் பொருளாதாரம். வளர்ச்சி  குறைவான அந்த நாட்டிலிருந்து உலகமே வியந்து பார்க்கக்கூடிய தடகள விளையாட்டு வீரராக உயர்ந்தார் உசேன் போல்ட்.

    ஜமைக்காவின் டிரிலானி சபையிலுள்ள ஷெர்வூட் கான்டென்ட் எனும் சிறு நகரத்தில், 21 ஆகஸ்ட் 1986 அன்று, வெல்லெஸ்லீ மற்றும் ஜெனிஃபர் போல்டிற்குப் பிறந்த. உசேனிற்கு சடிக்கியும் ஷெரீனும் சகோதர-சகோதரி. பெற்றோர் மளிகை கடை நடத்தினர்.  கிரிக்கெட் போட்டிகளில் முதல் உலகக் கோப்பையை வென்ற மேற்கு  இந்தியத் தீவுக் கூட்டங்களில் ஜமைக்காவும் அடக்கம். அதனால், போல்ட் தனது சகோதரருடன் கிரிக்கெட்,  கால்பந்து போன்ற விளையாட்டு களில் ஆர்வம் காட்டினார். விளையாட்டைத் தவிர வேறெதுவும் சிந்திக்காத அந்த  வயதில், தெருக்கள்தான் உசேன் போல்டுக்கு மைதானங்களாயின.

    விளையாட்டுப் பையனாகத்தான் போல்ட் இருந்தாரே தவிர, விளையாட்டுக்கானப் பையனாக அவரை மாற்றுவது பெரும் போராட்டமாக இருந்தது. போட்டிகளுக்கானப் பயிற்சிகளுக்குத் தயாராக வேண்டும் என்றால் உசேன் போல்ட்டுக்குத் தயக்கம். எங்காவது ஓடிப் போய்விடுவார். தேடிப் பிடித்து அழைத்து வருவது வழக்கம்.

ஆனாலும் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் முதல் பலரும் உசேன் போல்ட்டின் ஓட்டத் திறனைக் கண்டு அதனை  மேம்படுத்த பயிற்சி அளித்தனர்.    2001 கரிஃப்டா விளையாட்டுகளில் ஜமைக்கா சார்பில் முதல் முறையாகப் போட்டியிட்ட போது 400 மீ ஓட்டத்தில்  48.28 நொடிகளில் ஓடி வெள்ளி பதக்கம் வென்றார். அதே போட்டியின் 200 மீ பந்தயத்திலும் 21.81 நொடிகளில் ஓடி  வெள்ளி பதக்கத்தை வென்றார்.

    அங்கேரியின் டெப்கிரீன் நகரில் நடைபெற்ற 2001 உலக இளையோர் தடகளப் போட்டிதான் உசேன் போல்ட்டை உலக அரங்கில் அடையாளம் காட்டியது.

அதன் 200 மீ பந்தயத்தில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறியபோதும்,  21.73 நொடிகளில் அந்தத் தூரத்தைக் கடந்தது அவரளவில் சிறந்த ஓட்டமாக  அமைந்தது. அப்போதும் அவர்  முழுமையான விளையாட்டு வீரனாகவில்லை.

    ஒருமுறை, கரிஃப்டா விளையாட்டு களுக்கான 200 மீ தேர்வு போட்டிக்குப் பயிற்சி செய்ய வேண்டிய நேரத்தில்  வண்டியின் பின்புறம் ஒளிந்து கொண்டதற்குக் காவலரின் பிடியில் சிக்குமளவிற்கு அவரின் குறும்புத்தனம்  தொடர்ந்தது.

    இந்நிலையில், அவரது சொந்த ஊரான கிங்ஸ்டனில் நடைபெற்ற 2002 உலக இளையோர் தடகளப் போட்டிகள்  உசேன் போல்ட்டுக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. பதினைந்து வயது நிரம்பிய நிலையில் போல்ட்டின் உயரம் 6 அடி 5  அங்குலமாக இருந்ததால், மற்ற வீரர்களைவிட அவரால் ஓட்டப்பந்தய தூரத்தைக் கடப்பது எளிதாக  இருந்தது. ஆனாலும், இன்னும் மாறாத குறும்புத்தனமும் சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்ற  பதற்றமும் சேர்ந்ததால், ஓடுவதற்கான காலணிகளை மாற்றி அணிந்திருந்தார் போல்ட். அந்த நிலையிலேயே அவர்  ஓடியதை சொந்த ஊர் மக்கள் வேடிக்கைப் பார்த்தனர்.

    2003-ஆம் ஆண்டு உசேன் போல்ட்டுக்கு வெற்றிகரமானதாக அமைந்தது.  கரிஃப்டா விளையாட்டுகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று,  வேட்டையைத் தொடர்ந்தார், 2004-இல் பெர்முடாவில் நடைபெற்ற கரிஃப்டா  விளையாட்டுகளில் பங்கேற்கத் தொடங்கியபோது,  புதிய பயிற்சியாளரான ஃபிட்ஸ் கோல்மேன் கிடைத்தார். துரோணாச்சாரியார்களுக்கு அர்ஜூனர்களும், அர்ஜூனர்களுக்கு துரோணாச்சாரியார்களும் காலம் காலமாக  அவசியப்படுகிறார்கள். புதிய பயிற்சியாளரின் வழிகாட்டுதலால். உசேன் போல்ட் தொழில் முறை வீரராக  உருவெடுத்தார்.

    தடகளப் போட்டியில் பங்கேற்கும் வீரர் களின் இருபெரும் லட்சியங்களில் ஒன்று உலக சாம்பியன்ஷிப்,  மற்றொன்று, ஒலிம்பிக் தங்கம். 2004 ஏதென்சு ஒலிம்பிக்கில் முதன்முறையாகப் பங்கேற்ற உசேன் போல்ட்டுக்கு  காலில் ஏற்பட்டிருந்த காயத் தால் ஓட்டம் தடுமாறியது. 200 மீ பந்தயத்தில் ஏமாற்றமளிக்கும் விதத்தில் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

    வெற்றி என்பது முயற்சிக்குக் கிடைக்கும் பரிசு. அந்தப் பரிசு கிடைக்காவிட்டாலும் முயற்சியைத் தொடர்பவரே திறமைசாலி. உங்களுக்கான நல்ல நாட்கள் மற்றும் மோசமான நாட்கள் ஆகிய இரண்டுமே இருக்கவேண்டும் என்று உசேன் போல்ட்  சொல்வார். ஏதென்சு ஒலிம்பிக் அவருக்கு மோசமான நாட்களானாலும், வல்லரசான  அமெரிக்கா, ஜமைக்கா வீரர் உசேன் போல்ட்டின் திறமையை உணர்ந்திருந்தது.

    அமெரிக்கக் கல்லூரிகள் பல, போல்ட்டிற்கு தடகளக் கல்வி ஊக்கத்தொகை வழங்க முன் வந்தன, விளையாட்டுப்  போட்டிகளில் குறிப்பாகத் தடகளப் போட்டிகளில் கறுப்பின வீரர்களாலேயே பெருமை கொள்ளும் நாடு, அமெரிக்கா. 

தன் சொந்த நாட்டில் வீரர்கள் இல்லையென்றால், வேறு நாடுகளில் உள்ள வெற்றி கரமான வீரர்களுக்குக்  குடியுரிமைப் பரிசு எனும் விலை கொடுத்து தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும். டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் ஐரோப்பிய வெள்ளை வீரர்களே அமெரிக்க குடியுரிமைப் பெற்ற வரலாறுகள் உண்டு. தடகளப் போட்டிக்காக உசேன்  போல்ட்டுக்கு அமெரிக்கா தூண்டில் போட்டது. சிக்கவில்லை போல்ட். தாய்நாட்டில் இருப்பதே தனக்கு நிறைவு  எனக் கூறி அவற்றை நிராகரித்தார். தாய்நாட்டில் உள்ள ஜமைக்கா தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தின் வசதிகளைத் தன் தொழில் முறை பயிற்சிக் களமாகப் பயன்படுத்தினார்.

    பொதுவாக, 200 மீட்டர் ஓட்டப்பந்தயங் களிலேயே அவருக்குப் பயிற்சிகள் கிடைத்தன. எனினும், 100 மீட்டரில்  வெற்றிபெறுவதே சிறந்த தடகள வீரராக அறிய உதவும். போல்ட்டின் பயிற்சியாளர்கள் அவர் சற்று நிதானமாக ஓடுவதற்குரிய பயிற்சிகளை மேற்கொள்வதே சிறந்தது எனக் கருதி, 200 மீட்டர் பந்தயத்திற்குரிய பயிற்சிகளை   அதிகம் அளித்தனர்.

    2005-ஆம் ஆண்டு புதிய பயிற்சியாளர் கிளென் மில்ஸ் வாய்த்தார். தடகளம் குறித்த புதிய தொழில்முறை அணுகுமுறையுடன் பயிற்சி துவங்கியது 2007 ஒசாக்கா உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கிடைத்த வெள்ளிப் பதக்கம், போல்ட்டின் ஓட்டப் பந்தய வேட்கையைக் கூட்டியது. புதிய  தொழில்நுட்ப அணுகுமுறையைப்  மேம்படுத்தியது.  போல்ட் 100 மீ பந்தயங்களில் தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டிருந்தார்;

    2008 பெய்ஜிங் ஒலிம்பிக் ஒரு மகத்தான விளையாட்டு வீரரை உலகத்திற்குக் காட்டியது. ஒலிம்பிக்கின் 100 மீ பந்தயத்தின்  இறுதி போட்டியில் 9.69 நொடிகளில்  வெற்றியை எட்டி புதிய சாதனை படைத்தார். அதே ஒலிம்பிக் போட்டியில் 200 மீ பந்தயத்தில் 19.30 நொடிகளில் ஓடி புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார்.

அத்துடன்  முடியவில்லை. 4 பு 100 தொடரோட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற ஜமைக்கா அணியில் மூன்றாம் பகுதியினை போல்ட் ஓடி, தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் உசேன் போல்ட்டின் புகழ் மட்டுமல்ல, ஜமைக்கா நாட்டின் புகழும் பரவியது.

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2009-ஆம் ஆண்டு ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்தது. அதில் 100  மீட்டரை 9.58 நொடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார் உசேன் போல்ட். இது குறித்து 9.58 என்ற தன் சுயசரிதை நூலில், ""இறுதிக்கோட்டை அடைய வெகுதூரம் முன்பே நான் வேகத்தைக் குறைக்கத்  தொடங்கிவிட்டேன்; சிறிதளவுகூட களைப்படையவில்லை. அப்போதிருந்த நிலையில், மீண்டுமொரு முறைகூட  போட்டியைத் தொடங்கி முடித்திருக்க முடியும்'' என்று தன்னம்பிக்கையுடன் குறிப்பிடுகிறார் உசேன் போல்ட். 

    2012-இல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கிலும் 100 மீட்டர், 200 மீட்டர், தொடர் ஓட்டம்  ஆகியவற்றில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்ற உசேன் போல்ட், 2016-ஆம் ஆண்டு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கிலும் அதே  போட்டிகளில் மூன்று தங்கம் வென்று, ஒட்டுமொத்த உலகத்தின கவனத்தை ஈர்க்கும் சாதனையைப் படைத்தார். அமெரிக்கா தடகள வீரர் கார்ல் லூயிசுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டரில் அடுத்தடுத்து இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்றவர்கள் கிடையாது என்ற நிலையை மாற்றி, மூன்று முறை தங்கம் வென்றார் போல்ட்.

    அவருக்கு முன்பாக ஜமைக்கா தடகள வீரர்கள் கடும் பயிற்சியும் உழைப்பும் மேற்கொண்டு பல பதக்கங்களை வென்றபோதும், ஊக்க (போதை) மருந்து உட்கொண்டதாக, பரிசோதனைகளில் சிக்கி பதக்கத்தை  இழந்திருக்கிறார்கள். ஆனால், உசேன் போல்ட் அத்தகைய பழக்கம் இல்லாமல் பதக்கங்களைக் குவித்த  காரணத் தால், அவர் வழியில் ஜமைக்கா வீரர்கள் உருவாகத் தொடங்கினர். ஒரு தனி மனிதனின் வெற்றியும்  ஒழுக்கமும், புதிய அலையாக  பல வீரர்களை அந்த நாட்டில் உருவாக்கியது.

    சென்ற மாதம் லண்டனில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியுடன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற நினைத்தார் உசேன் போல்ட். அதனால் அந்தப் போட்டிக்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். ஆனால்,  லண்டனில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கெல்வின் வெற்றிபெற, உசேன் போல்ட்  மூன்றாவது இடத்தையே பெறமுடிந்தது. அவரது ரசிகர்கள் கலங்கி நின்ற வேளையில், முதலிடம் பிடித்த கெல்வின் முழங்காலிட்டு உசேன் போல்ட்டுக்கு வெற்றிவணக்கம் செலுத்தியதைக் கண்டு உலகம் வியந்தது.

    சாதனை மனிதரான உசேன் போல்ட், களத்தை இழந்தபோதும் வீரராகவேஉயர்ந்து நின்றார். ""என்னைவிட சிறப்பாக தொடங்கு பவர்கள் இருக்கிறார்கள் ஆனால், நான் வலிமையாக நிறைவு செய்பவன்'' என்ற உசேன்  போல்ட்டின் வார்த்தைகள் ஒவ்வொரு  விளையாட்டு வீரரும் நெஞ்சில் பதிய வேண்டியவை.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :