Add1
logo
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி || பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான் || முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி! || ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்) || காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல் || திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு! || வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி || ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு! || திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு || தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல் ||
Logo
இனிய உதயம்
கன்னத்தில் பதிந்த கொடுங்கரம்!
 ................................................................
கவிக்கோ விழாவில் பெருமிதக் குரல்
 ................................................................
அரசியல் வரலாற்றை இலக்கியமாக்கிய ஏடு!
 ................................................................
கவிதையைக் கைவாளாக்கிய கவிஞர்!
 ................................................................
கலைஞரை தலைமுறை மறக்காது!
 ................................................................
அந்தக் கனவு நனவாகும்!
 ................................................................
வீர சந்தானம்: விடுதலையை சுவாசித்த தூரிகை!
 ................................................................
இயக்குநர் அகத்தியன் சிறப்புக் கவிதை!
 ................................................................
கலைஞரின் பத்திரிகை சாதனை!
 ................................................................
01-08-2017ரு காலத்தில் நைல் நதியை எகிப்தின் துயரம் என்பார்கள். மஞ்சள் நதியை சீனாவின் துயரம் என்றழைப்பார்கள். ஆனால் காவிரி, வைகை, பாலாறு, தமிழ் கண்ட வைகை, தாமிரபரணி நதிகள் வற்றி வறண்ட துயரங்களைவிட தமிழகத்தின் மூலை முடுக்கு சந்துபொந்தெல்லாம் பொங்கிப் பிரவகித்த "டாஸ்மாக்' நதியே தமிழர்களைப் பாதித்த மானுடக் கொடுந்துயர். இக்கொடுந்துயரிற்கு எதிராகத்தான் தமிழச்சிகள் வீறுகொண்டு எழுந்துள்ளனர்.

1921-ஆம் ஆண்டு. காந்தியிடம் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டபொழுது, ""அது என் கையில் இல்லை. ஈரோட்டில் இருக்கும் நாகம்மாள், கண்ணம்மாள் எனும் இரண்டு பெண்களின் கையில்தான் உள்ளது'' என்றாராம். டாஸ்மாக்கிற்கு எதிரான தமிழச்சிகளின் போராட்டத்தில், விடுதலைப்  போராட்டத்தில் களமாடிய வீரத் தமிழச்சிகளின் வரலாறு திரும்பியிருப்பதாகவே பார்க்கிறேன்.

கள்ளுக்கடை மறியல் போராட்டம்  குறித்த மேலும் ஒரு வரலாற்றுக் குறிப்பு என் நினைவிற்கு வருகிறது.

கள்ளிறக்கும் சாதியில்  பிறந்து, கள்ளிறக்குவதையே குலத்தொழிலாகக் கொண்ட, கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதால் சொந்த சாதியினராலேயே அச்சுறுத்தலுக்கும் அவமதிப்பிற்கும் உள்ளாக்கப்பட்ட ம.பொ.சி. தன்னுடைய போராட்ட அனுபவங்களை நினைவுகூரும்பொழுது தனது தந்தையின் குடிப்பழக்கம் குறித்தும் உருக்கமாகப் பதிவுசெய்வார்.

""நான் அன்றும் இன்றும் பரிபூரண மதுவிலக்கில் மிகுந்த ஆர்வம்காட்டி வருவதற்கு என் தந்தையாரும் முக்கியக் காரணம். அவர் குடிபோதையில் இருக்கும்போதெல்லாம் என் அன்னையாரை அடித்துத் துன்புறுத்தியதை நேரில் கண்டிருக்கிறேன். பல நேரங்களில் என் அன்னையாருக்கு இரத்தக் காயங்கள்கூட ஏற்பட்டதுண்டு. அப்போதெல்லாம் நான் வாய்விட்டுக் கதறி அழுதிருக்கிறேன். என் தந்தை தங்கமானவர்தான். தன் மனைவியாரிடம் மிகுந்த அன்புடையவர்தான். ஆனாலும் குடிபோதையில் அறிவிழந்த நேரங்களில் கல்வியறிவும் கற்பு நெறியுமுடைய தன் மனைவியை உதைபந்தாக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தில் குடியிருப்போரோடும் சுற்றத்தாரோடும் சண்டைக்குப் போவார். குடிபோதையில்லாத நேரங்களில் குழந்தையைப்போல் நடந்துகொள்வார். அவர் மூலம்தான் குடிப்பழக்கத்தின் கொடுமையை உணர்ந்தேன். என் அன்னையாரைப்போல் எத்தனையோ தாய்மார்கள் படும் கொடுமையை உணர்ந்தேன். அதனால்தான் இக்கொடுமை மானுட சமூகத்தைவிட்டே ஒழிக்கப்பட வேண்டுமென்று உறுதிகொண்டேன். கள்ளிறக்குவதைக் குலத் தொழிலாகக்  கொண்ட என் குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றபோதினும்,  சுற்றத்தார், சாதியார் வாழ்விழந்து வருந்துவர் என்பதறிந்தும் நான் பொருட்படுத்தவில்லை. குடிப்பழக்கம் எனும் கொடுமையிலிருந்து தமிழர் சமுதாயத்தை விடுவிக்க ஒரு சாதியினர் ஒட்டுமொத்தமாக அழிந்தால்கூடப் பரவாயில்லை என்றுகூடக்  கருதினேன். பூரண மதுவிலக்கால்  இந்த தலைமுறையைச் சேர்ந்த என் சுய சாதியினர் தொழிலிழந்தாலும் பசி பட்டினியால் துன்புற்றாலும் அடுத்தடுத்து வரும் தலைமுறையரேனும் கல்வி கற்று,  நாகரிகமான வேறு தொழில்களில் ஈடுபட்டு முன்னேற்றமடைவார்கள் எனும் நம்பிக்கை எனக்கிருந்தது. அந்த நம்பிக்கையில்தான் போராடினேன்'' என்பார்.

ம.பொ.சி. போராடியது 20-ஆம் நூற்றாண்டில்.  அன்றைய நாட்களில் குடிப்பழக்கம் ஏற்படுத்திய கொடுமைகளை வாய்விட்டுக் கூறிவிட்டார். ஆனால் இது 21-ஆம் நூற்றாண்டு. இன்றைய நாட்களில் மதுவினால் ஏற்படும் கொடூரங்களை, துன்பங்களை, துயரங்களை, கண்ணீர்க்  கதைகளை ம.பொ.சியாகவே இருந்தாலும் அவர்  சொல்லின் செல்வராகவே இருந்தாலும்கூட அவரால் வாய்விட்டுச் சொல்லிவிட முடியுமா..? அப்படி வெட்கத்தைவிட்டு வெளியில் சொல்லும்படியான கொடுமைகளா அவை..?

சமீபத்தில் ஒருநாள் காலை பத்தரை மணியிருக்கும். என் வீட்டிற்கு நான்கைந்து வீடுகள் தள்ளியிருக்கும் வீட்டில் திடீரென்று அழுகுரல்.

ஓடிச்சென்று பார்த்தால் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார் அந்த வீட்டுக்காரர். வயதோ முப்பத்தைந்துதான். ஒருமணி நேரத்திற்கு முன்புதான் நிலைகொள்ளாத போதையில் தள்ளாடியபடி எங்கள் வீட்டினைக் கடந்துசென்றார். மனைவியை அடித்துத் துன்புறுத்துவதென்பது அவரின் அன்றாடவழக்கங்களில் ஒன்று. பொறுக்க முடியாததொரு சூழலில் அவரின் மனைவி தனது இரண்டு குழந்தை களையும் அழைத்துக்கொண்டு தன் தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார். தன் மனைவிக்கு அலைபேசியில் பேசிக்கொண்டே  தான் தூக்கிடுவதை ஸ்ண்க்ங்ர் ஸ்ரீஹப்ப்-ல் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டே தூக்கிடுகிறார். பதறிய அவர் மனைவி நண்பர்களை அழைத்துத் தகவல் சொல்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. முப்பது வயதிற்குள் அப்பெண் கணவனை இழந்தவராகிவிட்டார். பத்துவயதைக்கூடத் தாண்டியிராத அக்குழந்தைகள் தந்தையை இழந்தவராகிவிட்டார்கள்.

மதுப்பழக்கமும் இலவச இணைப்பாகத் தொற்றிக்கொண்ட சூதாட்டத்தையும் தவிர வேறொரு காரணமும் இல்லை.

இப்படி எத்தனையெத்தனை உண்மைச் சாட்சியங்கள்?

எத்தனை பெண்கள் தங்கள் உறவுகளைப் பறிகொடுத்திருப்பார்கள்?

எத்தனை குடும்பங்களின்,  குழந்தைகளின் கனவுகள் சிதறடிக்கப்பட்டிருக்கும்?

பொதுவெளியில் குடிகாரர்களால் எத்தனையெத்தனை அவமானங்களுக்கும் குறுகல்களுக்கும் பெண்களும் குழந்தைகளும் உள்ளாகியிருப்பார்கள்?

இந்த வலிதானே  வீறுகொண்டு எழவைத்து இன்று களமாடிவருகிறது..!

தமிழர்கள் (தமிழச்சிகளையும் தமிழர்கள் எனும் பொதுப் பெயரில் அழைக்கலாம்தானே?) டாஸ்மாக்கிற்கு எதிராக மட்டும் போராடவில்லை. துளித்துளியாக உறிஞ்சப்பட்டுக்கொண்டிருக்கும் தங்களின் தந்தைகளின், மகன்களின், கணவர்களின், உடன்பிறந்தார்களின், பேரப்பிள்ளைகளின் உயிரைக் காக்கவே போராடுகின்றனர். சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தங்களின் வாழ்வைக் காக்கப் போராடுகின்றனர்.

தங்களின் கண்களில் எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச ஈரத்தையேனும் தக்க வைத்து மானமுள்ளதொரு வாழ்வை வாழப் போராடுகின்றனர்.

வட்டிக் கடனுக்கும்  வாரக்கடனுக்கும் வாக்கப்பட்டுவிட்ட தங்களது வாழ்வை மீட்டெடுக்க ஒரேயொரு வாய்ப்பேனும் கிட்டிவிடாதா எனும் ஏக்கத்தில் போராடுகின்றனர்.

புட்டியில் பாலிற்குப் பதிலாக நிரப்பப்பட்ட மதுவைக் குடிக்க  விதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகப் போராடுகின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக இழப்பதற்கு இனி எதுவுமில்லை எனும் விளிம்பில் நின்றுகொண்டு செய் அல்லது செத்துமடி எனும் நிலையில் போராடுகின்றனர்.

யாராலும் மறுக்க முடியாத உண்மைகளின் பக்கம் நின்று, யாராலும் துடைத்தழிக்க இயலாத  கண்ணீரின் பக்கம் நின்று, யாராலும் ஆற்றுப்படுத்த இயலாத் துயரத்தின் பக்கம்நின்று போராடுகின்றனர். அதனால்தான் அது வீரியத்தின் உச்சமாய், வியந்து பார்க்க வைத்திருக்கிறது. ஆளும் வர்க்கத்தைக் கொஞ்சமேனும் வியர்க்க வைத்திருக்கிறது.

அரசியல் பிழைத்தவர்களுக்கு  எதிராய் அறமாகவும்  கூற்றாகவும் நிற்கிறது.

அதிகாரத்திற்கு எதிரான போர்  எத்துணை நியாயமாயினும் ஆளும் வர்க்கத்தின் கொடுங்கரங்கள் அமைதியுற்றிருந்ததாய் எந்த வரலாற்றிலும் நாம் படித்ததில்லை.

திருப்பூரில் போராடிய என் தாயின் (அவரை என் தாயென்றே நானழைக்கிறேன்) கன்னத்தில் அக்கொடுங்கரம் பதிந்தது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்ட ஆயிரமாயிரம் கன்னங்கள் களமாடத் துணிந்தன. ஒவ்வொரு கடையின் முன்பு திரண்ட அக்கன்னங்களின் எழுச்சியில் சிதறியவை கண்ணாடிக் குவளைகள் மட்டுந்தானா?

காபந்து அரசின் கையறு நிலையோ ...

அரசியல் காய்நகர்த்தல்களின் அடுத்தகட்ட நகர்வோ.. காலச்சூழலின் கபட நாடகமோ...

எது எப்படியாயினும் நமக்கு சிறு வெற்றி கிட்டியிருக்கிறது. இது நமது வெற்றி. நாம் இதைக் கொண்டாடித்தான் ஆக வேண்டும். கொண்டாடுவோம்.

ஆனால் இது தற்காலிக வெற்றிதான். இதை நிரந்தரமாக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதையே சிந்திக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இது தன்னெழுச்சிகளின் காலம்.  பெண்களையும் குழந்தை களையும் கூட அரசியல்மயப்படுத்திய கூடங்குளம்போராட்டம், தன் கருவிலிருக்கும் குழந்தைகூடதமிழினத்திற்காய்ப் போராடும் என்ற தை எழுச்சி, நெடுவாசல் போராட்டங்கள், விவசாயிகளின் போராட்டங்கள், இன்று டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம் இவையாவும் கட்சிகள் நேரடியாகப் பங்கேற்காத, மக்கள் திரளால் முன்னெடுக்கப் பட்டு கவனத்தை ஈர்த்த போராட்டங்கள்.

மைய, மாநில அரசுகளின் கொள்கை முடிவுகள், ஒப்பந்தங்கள், அறிவிப்புகளுக்கு எதிரான போராட்டங்கள், கல்விக் கொள்கை,  பொருளாதாரக்  கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள், மாநில  உரிமை சார்ந்த போராட்டங்கள்  ஒருபுறம்.

இவைதவிர ஒவ்வொரு ஊரிலும் குடிநீருக்காகவோ, மருத்துவ வசதிக்காகவோ ஏதேனும் ஒரு கோரிக்கை சார்ந்த  போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு பகுதியளவிலும், மாநில அளவிலும் போராட்டங்களின் களமாக மாறிவிட்ட தமிழகம், இந்தியாவிலேயே மிக அதிகமான போராட்டங்களை முன்னெடுத்த மாநிலமாகத் திகழ்கிறது.

இப்போராட்டங்களை பல்வேறு கோணங்களில்  ஆய்வுக்குட்படுத்த முடியும் என்றாலும் இதில் பெண்களால் முன்னெடுக்கப்பட்ட அல்லது பெண்கள் பெருவாரியாகக் கலந்துகொண்ட போராட்டங்
களிலிருந்து நான் பின்வரும் முடிவுக்கு வருகிறேன். அதாவது அடிப்படை வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்கள், வாழ்வாதாரங்களைப் பாதிப்பவற்றிற்கு எதிரான போராட்டங்கள் என்றால் பெண்கள் தங்கள் பங்களிப்பை மிகக் காத்திரமாகப் பதிவுசெய்கின்றனர்.

ஆனால் அதிகாரத்திற்கான போராட்டங்களில்  பெண்கள் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை.
உத்திரப்பிரதேசத்தில் பூந்தேல்கண்ட் எனும் சிற்றூரில் ரோஸ் சேலை இயக்கம் என்றொரு பெண்கள் இயக்கம் (ஏன்ப்ஹக்ஷண் ஞ்ஹய்ஞ், தர்ள்ங் ள்ஹழ்ண் ம்ர்ஸ்ங்ம்ங்ய்ற்)  செயல்படுகிறது.
குடித்துவிட்டு மனைவியை அடித்துத் துன்புறுத்தும் கணவர்களுக்கு எதிராக, வரதட்சணைக் கொடுமை களுக்கு எதிராக, அரசுத் துறைகளின்  லஞ்ச லாவண்யங் களுக்கு  எதிராகத் தொடர்ந்து போராடி பல்வேறு வெற்றிகளைச் சாதித்து வருகிறது.

பிரச்சனைகளுக்கு எதிராகக் கூட்டம் கூட்டமாகப் பெண்களை ஒருங்கிணைக்கிறது அவ்வமைப்பு. 18 வயது முதல் 60 வயது வரையுள்ள இலட்சக்கணக்கான பெண்கள் அவ்வமைப்பில்  உறுப்பினர்களாக உள்ளனர். கல்வி, பொருளாதாரத்தில் மட்டுமின்றி சாதியிலும் மிகவும் பின்தங்கிய பெண்கள் ரோஸ் நிறச் சேலையணிந்து கையில் கம்புடன் நூற்றுக்கணக்கில் முழக்கமிட்டு வரும்பொழுது அதிகார வர்க்கம் கொஞ்சம் ஆடித்தான் போகிறது.

குலாபி கேங் சார்பாகப் பஞ்சாயத்து தேர்தலில் முதன்முதலாகப் போட்டியிட்ட 23 பேரில் 21 பேர் வெற்றிபெற்றுள்ளனர் .தேர்தல் நேரத்தில்கூட அரசியல்வாதிகள் எட்டிப்பார்க்காத ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் தோன்றிய இவ்வமைப்பு இன்று உலக அளவில் வளர்ந்துள்ளது.

  உத்திரப்பிரதேசப் பெண்களோடு ஒப்பிடுகை யில் தமிழகப் பெண்களின் பிரச்சினைகள் வேறு பட்டவைதான். ஆனாலும் இப்படிப்பட்ட ஏஹய்ஞ்-கள் நமக்குத் தேவைப்படவே செய்கின்றன.

இனிவரும் காலங்கள் போராட்டங்களின் காலம்தான் எனில்..

அம்மணமாக்கி  அலையவிடுபவர்களை ஆட்சியில் அமர்த்திப் போராடுவதைவிட, அடிப்படை வாழ் வாதாரத்திற்கான போராட்டங்களை அதிகாரத்திற்கான போராட்டங்களாக  மாற்றுவோம். குறிப்பாகப் பெண்கள் அதைத் தொடங்குவோம். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :