Add1
logo
கெளசல்யா தந்தை சின்னசாமிக்கு தூக்கு தண்டனை! || 98 மீனவர்கள் சாவு? மேலும் 500 பேரின் நிலை என்ன? அன்புமணி கேள்வி || காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்! - ஆதார் உதவியால் சிக்கினர்!! || விஷத்தன்மை உள்ள வின்டர்க்ரீன் ஆயில்! அதிகரிக்கும் தற்கொலைகள்! || குஜராத் தேர்தலில் பாக். எப்படி தலையிட முடியும்? - மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி || சங்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்! || தேசிய அளவிலான கூடைபந்து, கேரம் போட்டிகளில் பள்ளி மாணவர்கள் சாதனை! || ‘அந்த’ விளம்பரங்கள் இனி மிட்-நைட்டில்தான்: தகவல் ஒளிபரப்புத்துறை கெடுபிடி || தலைமைச் செயலகத்தில் களைகட்டும் தேர்தல்! || சேகர் ரெட்டியின் டைரியை வெளியிட்டது தினகரன் குடும்பம்! || இபிஎஸ் - ஒபிஎஸ் கண்ணை குத்தக் காத்திருக்கும் ஜெ.வின் கைரேகை! || ஒக்கி புயலால் 4 மரணங்கள்தான் ஏற்பட்டுள்ளன: ஜெயக்குமார் விளக்கம்! || அரசுக்கு ஜால்ரா போடுபவரே தகவல் ஆணையத் தலைவர்? ||
Logo
இனிய உதயம்
கன்னத்தில் பதிந்த கொடுங்கரம்!
 ................................................................
கவிக்கோ விழாவில் பெருமிதக் குரல்
 ................................................................
அரசியல் வரலாற்றை இலக்கியமாக்கிய ஏடு!
 ................................................................
கவிதையைக் கைவாளாக்கிய கவிஞர்!
 ................................................................
கலைஞரை தலைமுறை மறக்காது!
 ................................................................
அந்தக் கனவு நனவாகும்!
 ................................................................
வீர சந்தானம்: விடுதலையை சுவாசித்த தூரிகை!
 ................................................................
இயக்குநர் அகத்தியன் சிறப்புக் கவிதை!
 ................................................................
கலைஞரின் பத்திரிகை சாதனை!
 ................................................................
01-08-2017லை பேசப்பட வேண்டும். ஓவியம் விவாதிக்கப்பட வேண்டும். ஓவியர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். இன்றைய சமூகத்தில் ஓவியர்களின் பாத்திரம் என்னவென்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

"இதற்கு நம்முடன் வாழ்ந்துகொண்டு படைப்புத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஓவியர்களையும், அவர்கள் பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ள வேண்டியது அவசியம்.'
  என்று நான் 1987-ல் எழுதி 30 ஆண்டுகள் மாயமாய் மறைந்துவிட்டன.

எந்த ஓவியரின் கண்காட்சிக்கு மேற்காட்டி வரிகள் எழுதப்பட்டனவோ அந்த ஓவியரான வீர.சந்தானம் இன்று நம்மிடையே இல்லை. புதர்த் தாடிக்குள் ஒளிந்த புன்னகையோடு தமிழ், தமிழன், தமிழ்ப் பண்பாடு என்று பேசியபடி ஒரு ஓவியராக, ஒரு சினிமா நடிகராக, தமிழ்த்தேசியம் பேசும் மேடைப் பேச்சாளராக தமிழனுக்கு விடுதலை என்பதை சுவாசித்தபடி சலிலிக்காமல் இயங்கி வந்த வீர. சந்தானம் எனும் ஆளுமையை காலம்  களவாடி விட்டது.

 நான் மேற்கண்ட வாசகங்களை எழுதி 30 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் கலை பேசப்பட்டதா? ஓவியங்கள் விவாதிக்கப்பட்டனவா? ஓவியர்கள் அடையாளம் காணப்பட்டார்களா? என்ற வினாக்கள் காற்றில் பறக்கும் இலவம்பஞ்சுபோல் இன்றும் பறந்து கொண்டுதான் உள்ளன.

 1987-ல் சென்னையில் ஓவியர் வீர.சந்தானத்தை அழைத்துக் கொண்டு நண்பர் பொன்னி புக்ஸ் வைகறைவாணன் என் வீட்டுக்கு வந்தார். சந்தானத்தை அப்போதுதான் நான் முதல்முறையாகச் சந்திக்கிறேன்.  ஈழத்தின் அப்போதைய அவலம் குறித்த வீர.சந்தானத்தின் ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்தப் போவதாகவும் அதில் வெளியிடப் போகும் கலை புத்தகத்தில் சந்தானத்தின் ஓவியங்கள் பற்றிய விமர்சனக் கட்டுரை ஒன்றை நான் எழுத வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள். 1970-ல் பச்சையப்பன் கல்லூரி மாணவரான கவிஞர் காசி.ஆனந்தன் ஈழத்தில் கைது செய்யப்பட்டபோது, கவியரசு கண்ணதாசன் தலைமையில் "ஈழம் மீண்டும் எரிகிறது' என்ற பெயரில் டாக்டர். இரா.ஜனார்த்தனம் சென்னை எல்.எல்.ஏ. பில்டிங்கில் நடத்திய கவியரங்கத்தில் முத்துலிலிங்கம், குருவிக்கரம்பை சண்முகம், ப.இராஜேஸ்வரன் ஆகியோருடன் நானும் கவிதை பாடியவன் என்ற வகையில் எழுத உடனே ஒப்புக்கொண்டேன். அப்போது பொன்னி புக்ஸ் வெளியிட்ட கலை புத்தகத்தில் நான் எழுதிய  நீண்ட அறிமுகவுரை ஒன்றின் தொடக்க வார்த்தைகள்தான் மேலே நான் சுட்டிக்காட்டிய எனது வார்த்தைகள்.

தமிழில் அதுவரை அத்தகைய கலை புத்தகம் வெளிவந்தது இல்லை என்றுதான் சொல்ல வெண்டும். ராசாக்கிளி அச்சகத்தார் அவ்வளவு சிறப்பாக அந்த அச்சுப் பணியைச் செய்து இருந்தார்கள். புத்தகத்தில் எனது கட்டுரையுடன் சந்தானத்தின் கருப்பு வெள்ளை ஓவியங்கள் அச்சிடப்பட்டு இருந்தன. அவற்றுக்குப் பொருத்தமான ஈழத்துக் கவிஞர்களின் கவிதை வரிகளை எடுத்துக் கையாண்டு இருந்தனர். அப்படி கையாளப்பட்ட "முகில்களிலின் மீது நெருப்பு தன் சேதியை எழுதியாயிற்று' என்ற ஈழத்துக் கவிஞர் சேரனின் கவிதை வரிகளிலிருந்து எடுக்கப்பட்ட முகில்களின் மீது நெருப்பு என்பதையே கண்காட்சியின் தலைப்பாக ஆக்கியிருந்தார்கள்.

இந்த புத்தக வெளியீடு சென்னை ஜெர்மன் ஹாலிலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வீர.சந்தானம் தனது வழிகாட்டியான சென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் எஸ்.தனபாலை வெளியீட்டு விழா தலைமை ஏற்கச் செய்திருந்தார். அப்போது சந்தானத்துடன் பணியாற்றி வந்த ஓவியர் கே.எம்.ஆதிமூலம் பங்கேற்றார். அப்போதைய மாபெரும் பேச்சாளரான பழ.கருப்பையா பேசினார். நானும் பேசினேன். ஏராளமானவர்கள் பார்வையாளர்களாக வந்திருந்த அந்த விழாதான் ஓவியர் வீர.சந்தானம் என்று ஒருவர் இருக்கிறார் என்று அவரை வெளியுலக வெளிச்சம்பட காண்பித்துக் கொடுத்தது. வீர. சந்தானம் எனும் ஓவியனைப் பற்றிய புரிதலுக்கு அவரைப் பற்றிய கட்டுரை எழுதி முதல் செங்கல் எடுத்துக் கொடுத்தவன் என்ற பெருமை ஒரு கலை விமர்சகனாக நான் செய்த பங்களிப்பு என்றே நான் சொல்லிலிக் கொள்வேன்.

வசதியான மத்திய அரசின் அலுவலகமான நெசவாளர் பணி மையம் என்பதில் துணை இயக்குனர் என்கிற பெரும் பணியில் இருந்தபோதிலும் வீர சந்தானம், "அது வேலை. சம்பளம் கொடுப்பான். அந்த சம்பளத்துக்கு வேலை பார்ப்போம். மற்ற நேரங்களில் சம்பளமில்லாமல் தமிழ் இனத்துக்கு வேலை பார்ப்போம்.' என்று சந்தானம் அடிக்கடி சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அவர் சொன்னபடியே அவர் ஒரு ஓவியனாக எல்லோரையும்போல, கலை கலைக்காக என்று ஒதுங்கிப் போகாமல் சமூக உணர்வுடன் ஈழத்துத் தமிழனின் விடுதலை, சூழலிலியல் சீர்கேடு, அரசியல்வாதிகளின் அதிகார மமதை ஆகியவை குறித்தெல்லாம் ஓவியங்கள் செய்தபடியே இருந்தார்.

வீர.சந்தானம் தனது தொடக்க நாள்களில் (அவர் பெங்களூரில் பணி புரிந்த நாள்களில் ) தாந்திரீக ஓவியங்கள் என்று அறியப்பட்ட பாதி அரூபநிலையில் இருக்கும் ஓவியங்களைச் செய்துகொண்டிருந் தார். அந்த கால கட்டத்தில் மேலை ஓவியங்களைப் போலன்றி  தமக்கென தனித்துவமான இந்திய அடையாளத்தோடு கூடிய ஓர் இந்திய ஓவியத்தை படைக்க வேண்டுமென விரும்பிய இந்திய ஓவியர்கள் இந்து மதத்தின் ஒரு சிந்தனைப் பிரிவாகிய தாந்திரீகத்தின் குறியீடுகளால் தங்கள கித்தான்களை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் ஒருவராகத்தான் சந்தானமும் தாந்திரீக ஓவியங்களைச் சுமார் 5 ஆண்டுகளாகச் செய்துகொண்டிருந்தார். அப்போது அவரது பெயர் வெறும் வி.சந்தானம் என்பதாக இருந்தது. அப்படியானால் சந்தானம் எப்போது ஒரு சமூகக கலைஞனாக மலர்ந்தார்? ஒரு கலை வரலாற்றாசிரியனாக இதற்கான பதிலைத் தேடியெடுக்க வேண்டியது எனது கடமையல்லவா?

சந்தானம் ஒரு முறை ஒரு அரசு பங்களா ஒன்றில் நடந்த ஓவிய பட்டறை ஒன்றில் பங்குகொண்டிருந்தார்.

அப்போது அமைச்சராக இருந்த அரசியல்வாதி ஒருவரின் வருகையினால் அரசு பங்களாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஓவிய நிகழ்வு தடை செய்யப்பட்டது. இதனால் ஆறாச் சினம் கொண்டார் ஓவியர் சந்தானம். இப்போதுதான் சந்தானம் தனது நாற்காலிலி வரிசை எனும் ஓவியங்களைச் செய்யத் தொடங்கினார். அமைச்சரின் மீதிருந்த கோபத்தை அவர் நாற்காலிலிகளின் மீது காட்டினார். நாற்காலிலி சிதிலமடைந்த நிலையில் தாறுமாறாக ஒன்றன் மீது ஒன்று போடப்பட்டது போல தனது ஓவியங்களில் தீட்டிக் காட்டினார். இதே காலகட்டத்தில் வடநாட்டில் விவான் சுந்தரம் எனும் ஓவியர் இதே போன்ற நாற்காலிலி வரிசை ஓவியங்களைத் தீட்டி வந்தார் என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து சந்தானம் "தேசாபிமானி' எனும் மலையாள இதழுக்குக் கொடுத்த நேர்காணலிலில் குறிப்பிடுகிறார். இந்த காலகட்டத்தில்தான் சந்தானம் ஒரு சமூக மனிதனாக மலர்கிறார்.

ஒரு சாதாரண ஓவியராக இருந்த வி.சந்தானம் என்பவர் போர்க்குணம் கொண்ட வீர. சந்தானமாக உருக்கொண்டது ஈழத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டபோதுதான். எனவே சந்தானம் எனும் உப்பிலிலியப்பன் கோயில் சிற்பங்களை ரசித்தபடி வளர்ந்த ஒரு ஓவியன் ஒரு சமூகக் கலைஞனாக மலர்ந்ததும், வாழ்ந்ததும் சரித்திர நிகழ்வுகளின் பதிவுகளாகத் தன் ஓவியங்களை மாற்றியபோதுதான்.

வீர.சந்தானம் சூழலிலியல் சீர்கேடுகள் குறித்த ஓவியங்களைப் பின்னாளில் படைத்தார். இவரது சமூக உணர்வும், விடுதலை வேட்கையும் இவர் திரைத்துறையில் ஒரு நடிகருமாக மலர்வதற்குக் காரணமாக அமைந்தது. பாலுமகேந்திராவின் கவனத்தைக் கவர்ந்த சந்தானத்தின் தோரணையான உடல் மொழி அவரை ஒரு சினிமா நடிகராகவும் உயர்த்தியது.

இவ்வாறு தனக்கென தனித்துவமான ஒரு செய்தியைத் தன் ஓவியப்படைப்புகள் மூலம் சமூக உணர்வுடன் செய்தளித்த வீர.சந்தானம் என்கிற நண்பரை இன்று இழந்து நிற்கிறபோது பொய்யாய்ப், பழங்கதையாய், கனவாய் மெல்லப்போயினவே என்று புலம்புவது தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு.

தமிழகத்தில் ஒவ்வொரு கலைஞன் சாகிறபோதும் அவனுடன் ஒரு கலை வரலாறும் சாகிறது. தமிழன் தன் கலைஞர்களை ஆவணப்படுத்துவதில் மிகவும் பின்தங்கி இருக்கிறான். வீர.சந்தானத்தை இழந்து நிற்கிறோம்.

இனியாவது நம்மிடையே உள்ள மூத்த ஓவியர்களையும், எழுத்தாளர்களையும் ஆவணப்படுத்து வதில் முனைப்பு காட்டுவோம்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :