Add1
logo
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி || பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான் || முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி! || ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்) || காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல் || திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு! || வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி || ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு! || திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு || தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல் ||
Logo
இனிய உதயம்
கன்னத்தில் பதிந்த கொடுங்கரம்!
 ................................................................
கவிக்கோ விழாவில் பெருமிதக் குரல்
 ................................................................
அரசியல் வரலாற்றை இலக்கியமாக்கிய ஏடு!
 ................................................................
கவிதையைக் கைவாளாக்கிய கவிஞர்!
 ................................................................
கலைஞரை தலைமுறை மறக்காது!
 ................................................................
அந்தக் கனவு நனவாகும்!
 ................................................................
வீர சந்தானம்: விடுதலையை சுவாசித்த தூரிகை!
 ................................................................
இயக்குநர் அகத்தியன் சிறப்புக் கவிதை!
 ................................................................
கலைஞரின் பத்திரிகை சாதனை!
 ................................................................
01-08-2017ரும் 10-ஆம் தேதி பவளவிழா காண்கிறது முரசொலி.

இதன் மூலம், தனது 75 ஆம் வயதில் அரிமாபோல் அடியெடுத்து வைக்கிறது அந்த நாளேடு.

இந்த நேரத்தில், தமிழர்களின் போர் முரசமாகத் திகழும் முரசொலியை, மட்டற்ற மகிழ்வோடு வாழ்த்துகிறேன்.

முரசொலியைப் பெற்றெடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

அவர் எங்கள் ஜாதிக்காரர். சாதனைகளை நிகழ்த்திய சரித்திர மனிதர்.  

தனக்கு, முத்துமுத்தான பிள்ளைகள் இருந்தும்... நான் பெற்ற முதல் பிள்ளை முரசொலி என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிடுவார் கலைஞர்.

கலைஞரால் அவரது 18-ஆவது வயதில் தொடங்கப்பட்ட இதழ் முரசொலி என்பது, அதற்கு இருக்கும் கூடுதல் சிறப்பாகும்.

உலகிலேயே 18 வயதில் ஒரு பத்திரிகையைத் தொடங்கி, வெற்றிகரமாக இன்றுவரை நடத்திக்கொண்டிருப்பவர் கலைஞர் ஒருவராகத்தான் இருக்கமுடியும்.

* கலைஞரால் உருவாக்கப்பட்ட முரசொலி, கடந்த 75 ஆண்டுகளாக, தமிழர்களின் வாளும் கேடயமுமாக இன்றுவரை களத்தில் நின்றுகொண்டிருக்கிறது.

* அந்த முரசொலி, தி.மு.க. என்கிற கட்சியை, இன்று மாபெரும் ஒரு இயக்கமாக வடிவெடுக்கச் செய்திருக்கிறது.

*  அதுமட்டுமல்லாது; தி.மு.க. என்கிற அந்த மாபெரும் இயக்கத்தை, அது ஆறு முறை ஆட்சி பீடத்திலே ஏற்றி அழகுபார்த்திருக்கிறது.

* தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை அது சமூக நீதிக்கான குரலை சமரசமில்லாமல் எழுப்பிவருகிறது.

*அதுமட்டுமல்லாமல், எண்ணற்ற பேச்சாளர்களையும் எழுத்தாளர்களையும் அது வாஞ்சையோடு வளர்த்தெடுத்திருக்கிறது.  

-இப்படி எண்ணற்ற  சாதனை சரித்திரத்தைப் படைத்த ஒரே திராவிட இயக்க நாளிதழ் முரசொலிதான். அதனாலேயே ஒட்டுமொத்த தமிழர்களும் முரசொலியைப் பாராட்டவேண்டும்.

*முரசொலி, தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடு என்றபோதும், அதை தி.மு.க.வினர் மட்டுமே படிப்பதில்லை. மாற்றுக் கட்சியினரும் ஆர்வமாக வாங்கிப் படிக்கிறார்கள். இளைஞர்களும் மாணவர்களும் தேடிப்பிடித்துப் படிக்கிறார்கள். ஏனெனில் அதன் மகத்துவம் அப்படி.  

* முரசொலியில் கலைஞர் எழுதும் உடன்பிறப்பு கடிதங்கள், பத்திரிகை வரலாற்றில் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்தது.

அறிஞர் அண்ணா, தனது "திராவிட நாடு' இதழில் ’தம்பிக்கு’ என்று கடிதங்களை, அவ்வப்போது  எழுதினார். அவர் தம்பியான கலைஞர், தன் உடன்பிறப்பு கடிதங்களை, தொடர்ந்து எழுதி, அதைக் கடித இலக்கியமாய் ஆக்கியிருக்கிறார்.

கலைஞரின் உடன்பிறப்பு கடிதங்களை ஆய்வுசெய்து பட்டம் பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். கலைஞர் தனது உடன்பிறப்பு கடிதங்களை வெறும் பொழுதுபோக்குக் கடிதங்களாக எழுதவில்லை.

அந்தக் கடிதங்கள் மூலம், தமிழ் இலக்கியங்களை மக்களுக்குச் சுவையாகப் பரிமாறினார் கலைஞர். திராவிட இயக்கக் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் மக்களிடம் அதன் வாயிலாக விளக்கினார்.

அரசியல் விழிப்புணர்வுச் செய்திகளையும் அதிலே பகிர்ந்துகொண்டார். தி.மு.க. மீது எதிர்க்கட்சியினர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அந்தக் கடிதங்கள் மூலமே உரிய பதிலடி விளக்கங்களைக் கொடுத்தார். எதிர்க்கட்சியாக தி.முக. இருக்கும்போதெல்லாம், ஆளுங்கட்சியின் ஊழல்களைச் சுட்டிக்காட்டி, ஆதாரங்களோடு தோலுரிக்கும் திருப்பணிகளையும் இந்தக் கடிதங்கள் மூலமாகவே செய்தார் கலைஞர்.

உலகிலேயே தொடர்ந்து, கடிதங்களைச் சுமந்துவந்த ஒரே பத்திரிகையாகத் திகழ்கிற முரசொலி, இதன் மூலம் ஒரு வசீகர வடிவத்தையும் வந்தடைந்தது.

அதேபோல், கேள்வியும் நானே பதிலும் நானே என்கிற பாணியில், அந்தந்த காலகட்டத்தில் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டிய விசயங்களை, தானே அதற்கேற்ற கேள்வியை உருவாக்கிக்கொண்டு, சொல்லவேண்டிய விசயத்தை பதிலாகக் கொடுத்துவந்தார் கலைஞர். சாவியும் அவரே, பூட்டும் அவரே.  வெறும் கேள்விபதிலாக மட்டுமல்லாமல்,  அந்த பதில்களுக்கு உரிய ஆதாரங்களையும் தேடித் தொகுத்துக் கொடுப்பார் கலைஞர்.

இது வெற்றிபெற்ற இதழ் வடிவமாக அமைந்தது. இந்த வகையிலும் எந்தப் பத்திரிகைக்கும் இல்லாத தனித்துவத்தை முரசொலி பெற்றது.

அதேபோல் மிசா காலத்தில் முரசொலி நிகழ்த்திய சாதனைகள் மிரட்டலானவை. அந்த நெருக்கடி காலத்தில், பத்திரிகைகளின் கைகளும் வாய்களும் அதிகாரவர்க்கத்தால் கட்டப் பட்டன. அப்போது, அரசுக்கு எதிராக முனகக்கூட முடியாத நிலை இருந்தது.

அந்த நேரத்திலும், தான் கட்சியினருக்கு சொல்லவேண்டிய செய்திகளைப் பல்வேறு டெக்னிக்குகள் மூலமாகச் சொல்லி, அந்த வாய்ப்பூட்டுச் சட்டங்களின் கண்களிலும் மண்ணைத்
தூவியவர் கலைஞர்.

அவர் "வளவள வெண்டைக்காய்' என்று தலைப்பிட்டு முரசொலியில் கட்டுரை எழுதுவார். அந்தக் கட்டுரையிலும், வெண்டைக்காயைப் பற்றியே எழுதப்பட்டிருக்கும். ஆனால் அதைப் படிக்கிற கட்சிக்காரர்கள், கலைஞர் சொல்ல நினைக்கும் விசயத்தைப் புரிந்துகொண்டிருப்பார்கள். அப்படியொரு மாயாவி எழுத்து நடையைக் கையில் எடுத்திருந்தார் கலைஞர்.

அதேபோல், மிசாவில் கைதானவர்களின் பெயர்களை வெளியிட முடியாத நிலை அப்போது இருந்தது. அந்த சமயத்தில் அண்ணாவின் பிறந்தநாள் வர, உடனே கலைஞர் அண்ணா நினைவிடத்திற்கு (அஞ்சலிக்கு) வர இயலாதோர் பட்டியல் என்று, கைதானவர்களின் பட்டியலை சூசகமாக வெளியிட்டார். தான் மக்களிடம் கொண்டுசேர்க்கவேண்டிய செய்தியை, இப்படி வெற்றிகரமாகக் கொண்டுபோய்ச் சேர்த்தார் கலைஞர்.  

அந்த நெருக்கடி காலத்தில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தியைப் பார்த்து நாடே மிரண்டுபோயிருந்தது. ஆனால் கலைஞர், ஓவியர் செல்லத்தை அழைத்து இந்திராகாந்தி கொஞ்சம் கொஞ்சமாக சர்வாதிகாரி ஹிட்லராக மாறுவதுபோல் படம் வரையச்சொன்னார். 

மொத்தம் 8  பிரேம் படங்கள் வரையப்பட்டன.

முதல் படத்தில் இருக்கும் இந்திரா, அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஹிட்லரின் சாயலில்  மாறுவார். கடைசியில் 8-ஆம் படத்தில் முழு ஹிட்லராகவே அவர்  மாறிப்போயிருப்பார்.
இப்படி, நெருக்கடி காலத்தில், நெருக்கடி நிலைக்குக் காரணமான பிரதமர் இந்திராகாந்தியையே சர்வாதிகாரியாக சித்தரித்த தைரியமும், அப்போது இந்தியாவில் முரசொலிக்கும் கலைஞருக்கும் மட்டுமே இருந்தது. இதை அமெரிக்க பத்திரிகையான ’நியூஸ் வீக்கே மனம் திறந்து பாராட்டியிருக்கிறது.

பாரதி சொன்னதுபோல், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகொண்ட பத்திரிகையாக, தொடர்ந்து 75 ஆண்டுகளாக வீரநடை போட்டுக்கொண்டிருக்கிறது முரசொலி.

இந்த முரசொலி, கலைஞரின் கனவு.

கலைஞரின் லட்சியம்.

கலைஞரின் ஆன்மா.

கலைஞரின் உயிருக்கு நிகரான இதழ்.

இதன் பவளவிழா ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் மிகச் சிறப்பாக நிகழ இருக்கிறது. முரசொலியின் வெள்ளிவிழா மலரையும் பொன்விழா மலரையும் தன் கரங்களால் வெளியிட்ட கலைஞர், இந்த வைரவிழா மலரையும் தனது திருக்கரங்களால் வெளியிடும் வகையில் அவர் விரைந்து நலம் பெற்று, விழா மேடைக்கு வரவேண்டும்.

அவரை எங்கள் ஜாதிக்காரர் என்ற வாஞ்சையோடு... வாழ்த்துகிறோம். எங்கள் ஜாதி என்றால் வேறொன்றுமில்லை; பத்திரிகையாளர் ஜாதி. அந்த பாசத்தில் தமிழ்ச் சமூகத்திற்கு அரணாகத் திகழும் முரசொலியையும், அதை ஈன்றெடுத்த ஆண் தாயான கலைஞரையும் மகிழ்வோடு வாழ்த்துகிறோம்.

திராவிட இயக்க உணர்வோடும், சமூக நீதிக்கான போராட்ட உணர்வோடும் கலைஞரின் பாதையைப் பின்பற்றி பெருமிதத்தோடு நடையிடுகிறோம்.

மகிழ்வோடு...

நக்கீரன்கோபால்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :