Add1
logo
சென்னை புத்தகத் திருவிழாவில் ‘ராமானுஜர் 1000’ கருத்தரங்கு || ஆடித்தபசுத் திருவிழா கோலாகலக் கொடியேற்றம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || பா.ஜ.கவை சேர்ந்த பெண் சாலைவிபத்தில் பலி,பலர் படுகாயம் || முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் பாரதபிரதமர் (புகைப்படத்தொகுப்பு) || குடும்ப தகராறில் மின்சார டவரில் ஏரி வாலிபர் தற்கொலை முயற்சி;ரயில் சேவை, பல ஊர் மக்கள் பாதிப்பு || மன்னார்குடி டாக்டர் மனைவி கொலையில் இளவரசி உறவினர்களுக்கு 2 நாள் கஸ்டடி! || நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்:பொங்கலூர் பழனிச்சாமி || மு.க.ஸ்டாலின் விடுவிப்பு! || இளைய சமுதாயத்தின் விடி வெள்ளி கலாம்:மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி || நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் வரை திமுக போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கும்:ஸ்டாலின் || சென்னை, திருவள்ளூரில் திமுக மனித சங்கிலி போராட்டம்(படங்கள்) || கிணற்றை மீண்டும் ஊர்மக்களுக்கே எழுதி கொடுக்க ஓபிஸ் சம்மதம்! ||
Logo
பொது அறிவு உலகம்
மகப்பேறு நன்மைத் திட்டம் - 2017
 ................................................................
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளம்
 ................................................................
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் நவீன புரட்சி
 ................................................................
தமிழக அரசின் புதிய திட்டங்கள்
 ................................................................
ஜிஎஸ்எல்வி : இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்
 ................................................................
01-07-17



*    மத்திய அமைச்சரவை, 01.01.2017 முதல் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் மகப்பேறு நன்மைத் திட்டத்திற்கான தனது பின்னேற்பு ஒப்புதலை வழங்கியது.

*    31.12.2016 அன்று பிரதமர் நாட்டு மக்களுக்கான உரையின்போது, மகப்பேறு நன்மைத் திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

*    மகப்பேறு நன்மைத் திட்டத்தின் கீழ், ஊதிய இழப்பீட்டை ஈடுசெய்யும் வகையில் கருவுற்ற பெண்களுக்கு ரொக்க ஊக்கத் தொகை அளிக்கப்படும். இதனால் பெண்கள் பிரவசத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் போதிய அளவு ஓய்வு எடுக்க இயலுவதோடு, முறையான ஊட்டச்சத்து கிடைக்காமல் மறுக்கப்படுவதையும் தடுக்கிறது.

*    01.01.2017 முதல் 31.03.2020 வரையிலான காலத்திற்கான இத்திட்டத்தின் தொகை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்குத் தொகையுடன் சேர்த்து ரூ.12,661 கோடி ஆகும்.  01.01.2017 முதல் 31.03.2020 வரையிலான காலத்திற்கான மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.7,932 கோடி ஆகும்.

திட்டத்தின் நோக்கம்

1)   உயிருள்ள முதல் குழந்தையின் பிரசவத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் பெண்கள் போதிய அளவு ஓய்வு எடுப்பதற்கு எதுவாக ஊதிய இழப்பீட்டில் பகுதியை ஈடு செய்யும் வண்ணம் ரொக்க ஊக்கத் தொகையை இழப்பீட்டுத் தொகையாக அளித்தல்.

2)    இந்த ரொக்க ஊக்கத்தொகையானது, கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் (பி.டபிள்யு.&எல்.எம்.)  உடல்நலன் முன்னேற்றமடைய வைக்க உதவுவதுடன், ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவுகளான ஊட்டச்சத்து குறைப்பு, வீண்செய்தல் மற்றும் பிற தொடர்புயை பிரச்சினைகளை குறைக்கும்.

இலக்கு குழு

*    தற்சமயம், மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங் களில் நிரந்தரமாக பணியாற்றும் கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் (பி.டபிள்யு.&எல்.எம்.) அல்லது பிற சட்டத்தின் மூலம் இதே மாதிரியான பயன்களை பெறுவோரை தவிர்த்து, அனைத்து கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள். உயிருள்ள முதல் குழந்தையின் கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு (பி.டபிள்யு.&எல்.எம்.)  மூன்று தவணையாக ரூ.5,000/- பயன் வழங்க முடிவு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. எஞ்சிய ரொக்க ஊக்கத்தொகை, பிரசவத்திற்கு பின்பாக தற்போதுள்ள திட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளின்படி மகப்பேறு நன்மை  வழங்கப்படும். இதன் மூலம் கருவுற்ற பெண் ஒருவர் ரூ. 6,000/- பெறுவார்.

    நிபந்தனைகள் மற்றும் தவணைகள்

தகுதியுடைய கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், ரொக்கப் பயனான ரூ.5,000/-ஐ மூன்று தவணைகளில் இத்திட்டம் தாய்மார்களின் பாதுகாப்பான பிரசவத்திற்கும், உயிருள்ள முதல் குழந்தை தடுப்பூசி பெறுவதற்கு உதவுவதை உறுதி செய்கிறது. கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான இந்த மேம்படுத்தப்பட்ட உடல்நல கவனிப்பு, தாயும், சேயும் சிறந்த உடல்நிலை தகுதியை பெற முன்னெடுத்து செல்லும்.


 பெரிய தேசியக்கொடி கம்பம்

    இந்தியாவின் இரண்டாவது பெரிய தேசியக்கொடி கம்பம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.


matrimony
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :