Add1
logo
நீட்: சென்னையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் || சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் || பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வாரா பிரதமர் மோடி? || கமுதி பேரையூர் கண்மாய்க்குள் அழிந்து போன சிவன் கோவிலைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு || ரூ.5 லட்சம் மோசடி; கணவன்-மனைவிக்கு மூன்றாண்டு சிறை || தினகரனுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு? || மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ்.: தனியார் கல்லூரி முதல்வர் பணி நீக்கம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் இருபெரும் மாநாடுகள் || நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன் || பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம் || தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு || ஷாப்பிங் மாலில் சசிகலாவை பார்த்தேன்: கர்நாடக காங்கிரஸ் முத்துமாணிக்கம் ||
Logo
பொது அறிவு உலகம்
கல்வி புரட்சியில் சங்கர் IAS அகாடமி
 ................................................................
சித்திரைத் திருநாள் விருதுகள்
 ................................................................
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்...
 ................................................................
செம்மொழி தமிழாய்வு விருதுகள்
 ................................................................
தேசிய எஃகு உருக்கு கொள்கை - 2017
 ................................................................
மலாலா யூசுப்சாய் : ஐ.நா.வின் இளம் அமைதி தூதர்
 ................................................................
நிடி ஆயோக் தொலைநோக்குத் திட்டம்
 ................................................................
01-06-17*    நாடாளுமன்றத்தில் 2017-ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு சட்ட 123-வது திருத்த மசோதா மற்றும் 2017-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையம் திரும்ப பெறும் மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் வழங்கியது. மேலும் தற்போதுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையத்தின் பதவிகள்/அதிகாரிகள் மற்றும் அலுவலக இடம் ஆகியவற்றை உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் தேசிய ஆணையத்திற்கு தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதியையும் மத்திய அமைச்சரவை வழங்கியது.

*    2017-ஆம் ஆண்டு 123-வது அரசியல் அமைப்பு சட்ட திருத்த மசோதா என்ற அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வருவதற்கு ஆனது இந்த அனுமதி இதன்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையம் என்ற பெயரில் சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப்பினருக்கு அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 338பி-யின் ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.

*    அரசியல் சட்ட பிரிவு 366 ன் கீழ் 26சி என்ற புதிய ஷரத்து சேர்க்கப்படும். இதன்படி சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப்பினர் என்பது அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 342 ஏ-யின் படி கருத்தில் கொள்ளப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பொருள்படும்.

கீழ்க்கண்டவற்றுக்கு என மசோதா தாக்கல் செய்யப்படும்

*    1993-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணைய சட்டம் திரும்ப பெறப்படும். இதனுடன் கூட இதற்கு வகை செய்யும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையத்தின் பாதுகாப்பு பிரிவும் திரும்ப பெறப்படும்

*    மத்திய அரசு குறிப்பிடும் தேதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையம் கலைக்கப்படுவதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்படும். இதனையடுத்து மேலே குறிப்பிட்ட சட்டத்தின் 3வது பிரிவு 1-வது துணைப் பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் தேசிய ஆணையம் கலைக்கப்பட்டுவிடும்.

*    தற்போதுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையத்தின் 52 பதவி இடங்களும் அவற்றில் பணியாற்றி வரும் அதிகாரிகளும் 338 பி அரசியல் அமைப்பு சட்டப் பிரிவின் கீழ் அமைய உள்ள உத்தேச பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையத்திற்கு ஒதுக்கப் படுவார்கள்.


*    தற்போதுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணைய அலுவலகம் அமைந்துள்ள புதுதில்லிலி -110 066, பிகாஜி காமா பிளேஸ், டிரைகட்-1 என்ற வளாகம் 338 - பி அரசியல் அமைப்பு சட்டப்பிரிவின் படி அமைக்கப்பட உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையத்திற்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்.

*    மேற்கண்ட முடிவுகள் சமூக மற்றும் கல்வி ரீதிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஒட்டுமொத்த நலனுக்கு உதவியாக அமையும்.

*    அரசியல் அமைப்பு சட்டம் 338-பி பிரிவு சேர்க்கப்பட்டு அதன்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையம் அமைக்கப்படுவதை கருத்தில் கொண்டு சட்டத்தை திரும்பப் பெறும் சட்டம் அவசியமாகிறது.

*    அரசியல் அமைப்பு சட்டத்தின் 338-பி பிரிவின் படி அமைய உள்ள பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் தேசிய ஆணையம் செயல்படுவதில் தொடர்ச்சி நிலை நிலவுவதை இந்த முடிவு உறுதி செய்கிறது..


matrimony
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :