Add1
logo
மத்திய அரசு மாநில அரசு காலில் மண்டியிட்டு கிடக்கிறது- நெடுவாசலில் நூதன போராட்டம் || உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி || சேற்றில் சிக்கி 12 வயது சிறுவன் பலி! || ஜூலை 17ல் தொடங்குகிறது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் || சுயம்பீஸ்வரர் ஆலயத்தில் விலை உயர்ந்த மரகத லிங்கம் சிலை திருட்டு! (படம்) || இந்தியில் கடவுச்சீட்டு வழங்கினால், தமிழிலும் வழங்க வேண்டும்: ராமதாஸ் || கையடக்க செயற்கைகோள் உருவாக்கிய ரிபாத் ஷாரூக் ரூ.10 லட்சம் பரிசு || உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிகள் 6 மாத காலத்துக்கு நீட்டிப்பு! || மாநிலப்பாட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ் || நாகா்கோவிலில் ஊா்காவல் படையினர் விளையாட்டு போட்டிகள் தொடக்கம்! (படங்கள்) || தம்பிதுரை சுயநலத்திற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்: முருகுமாறன் எம்.எல்.ஏ., பேட்டி || தம்பிதுரையின் பேட்டிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது: அதிமுக எம்.பிகள் பேட்டி || உருண்டு, புரண்டு மனு அளிக்கும் போராட்டம்: தீபா ஆதரவாளர்கள் கைது! (படங்கள்) ||
Logo
பொது அறிவு உலகம்
கல்வி புரட்சியில் சங்கர் IAS அகாடமி
 ................................................................
சித்திரைத் திருநாள் விருதுகள்
 ................................................................
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்...
 ................................................................
செம்மொழி தமிழாய்வு விருதுகள்
 ................................................................
தேசிய எஃகு உருக்கு கொள்கை - 2017
 ................................................................
மலாலா யூசுப்சாய் : ஐ.நா.வின் இளம் அமைதி தூதர்
 ................................................................
நிடி ஆயோக் தொலைநோக்குத் திட்டம்
 ................................................................
01-06-17*    மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், தமிழின் தொன்மை, தனித்தன்மை, தமிழின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு திட்டங்களை தீட்டிச் செயல்படுத்தி வருகிறது.

*   பழந்தமிழ் நூல்களை வெளியிடுவது, அவற்றை ஆங்கிலத்திலும், பிற இந்திய மொழிகளிலும், அயல்நாட்டு மொழி களிலும் மொழிபெயர்த்து வெளியிடுவது, நிதி வழங்குவது, தமிழாய்வில் நிலைத்த பணிபுரியும் நிறுவனங்களுக்கு ஆய்வுத் திட்டங்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

*    செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆற்றியோருக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. பண்டைக்காலம் தொடங்கி கி.பி. 600 வரையிலான தமிழியல் சார்ந்த இலக்கியம், இலக்கணம், மொழியியல், மொழிபெயர்ப்பு, வரலாறு, நுண்கலைகள், கட்டிடவியல், தொல்பொரு ளியல், நாணயவியல், கல்வெட்டியல், சுவடியல், பண்பாடு முதலிய துறைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வு நிகழ்த்தியோர் விருது பெறத் தகுதி உடையவர் ஆவர்.

*   தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞருக்கு ஆண்டுதோறும் நினைவுப் பரிசும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய தொல்காப்பியர் விருது வழங்கப் படுகிறது.

*    தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள அயல்நாடு வாழ் இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும், பிற நாட்டுத் தமிழறிஞர் ஒருவருக்கும் நினைவுப் பரிசும், ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய குறள்பீடம் விருது வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தமிழியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள 30-40 வயதுக்கு உட்பட்ட இளம் அறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மதிப்புச் சான்றிதழும், நினைவுப் பரிசும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய இளம் அறிஞருக்கான விருதும் (5 பேருக்கு) வழங்கப்படுகிறது.

*    தற்போது 2013-14, 2014-15, 2015-16 ஆகிய 3 ஆண்டுகளுக்கான தொல்காப்பியர் விருது, இளம் அறிஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

 2013-2014 தொல்காப்பியர் விருது


*    சோ.ந. கந்தசாமி

இளம் அறிஞர் விருது

    1. உல. பாலசுப்பிரமணியன்
    2. கலை. செழியன்
    3. சோ. ராஜலட்சுமி
    4. த. மகாலெட்சுமி
    5. சௌ. பா. சாலாவாணிஸ்ரீ

2014-2015 தொல்காப்பியர் விருது

*    அ. தட்சிணாமூர்த்தி

இளம் அறிஞர் விருது

    1. அ. சதீஷ்
    2. ஜெ. முத்துச்செல்வன்
    3. ப. திருஞானசம்பந்தம்
    4. மா. வசந்தகுமாரி
    5. கோ. சதீஷ்

2015-2016 தொல்காப்பியர் விருது


*   இரா. கலைக்கோவன்

இளம் அறிஞர் விருது

    1. மு. வனிதா
    2. வெ. பிரகாஷ்
    3. ஸ்ரீ பிரேம்குமார்
    4. க. பாலாஜி
    5. மு. முனீஸ் மூர்த்தி

*    டெல்லிலியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த மாதம் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவரால் மேற்கண்ட விருதுகள் வழங்கப்பட்டன.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :