Add1
logo
மத்திய அரசு மாநில அரசு காலில் மண்டியிட்டு கிடக்கிறது- நெடுவாசலில் நூதன போராட்டம் || உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி || சேற்றில் சிக்கி 12 வயது சிறுவன் பலி! || ஜூலை 17ல் தொடங்குகிறது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் || சுயம்பீஸ்வரர் ஆலயத்தில் விலை உயர்ந்த மரகத லிங்கம் சிலை திருட்டு! (படம்) || இந்தியில் கடவுச்சீட்டு வழங்கினால், தமிழிலும் வழங்க வேண்டும்: ராமதாஸ் || கையடக்க செயற்கைகோள் உருவாக்கிய ரிபாத் ஷாரூக் ரூ.10 லட்சம் பரிசு || உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிகள் 6 மாத காலத்துக்கு நீட்டிப்பு! || மாநிலப்பாட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ் || நாகா்கோவிலில் ஊா்காவல் படையினர் விளையாட்டு போட்டிகள் தொடக்கம்! (படங்கள்) || தம்பிதுரை சுயநலத்திற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்: முருகுமாறன் எம்.எல்.ஏ., பேட்டி || தம்பிதுரையின் பேட்டிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது: அதிமுக எம்.பிகள் பேட்டி || உருண்டு, புரண்டு மனு அளிக்கும் போராட்டம்: தீபா ஆதரவாளர்கள் கைது! (படங்கள்) ||
Logo
பொது அறிவு உலகம்
கல்வி புரட்சியில் சங்கர் IAS அகாடமி
 ................................................................
சித்திரைத் திருநாள் விருதுகள்
 ................................................................
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்...
 ................................................................
செம்மொழி தமிழாய்வு விருதுகள்
 ................................................................
தேசிய எஃகு உருக்கு கொள்கை - 2017
 ................................................................
மலாலா யூசுப்சாய் : ஐ.நா.வின் இளம் அமைதி தூதர்
 ................................................................
நிடி ஆயோக் தொலைநோக்குத் திட்டம்
 ................................................................
01-06-17லாலா யூசுப்சாய் பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மின்கோரா எனும் நகரை சேர்ந்த ஒரு மாணவி. இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பள்ளி செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். தாலிபான் தீவிரவாதிகள் மலாலாவை கண்மூடித்தனமாக சுட்டனர். அவளது வயிற்றிலும் தலையிலும் குண்டுகள் துளைத்தன. இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று உயிர் பிழைத்தார்.

பி.பி.சியின் உருது வலைப்பதிவு


2009-ஆம் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு மூலம் தானும் தனது ஊரும் பாகிஸ்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.  தாலிபான் தீவிரவாதிகளின் கொடுமைகள் குறித்து துணிச்சலாக எழுதினார். பெண் கல்விக்காகவும், குழந்தைகள் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். மலாலாவை பாராட்டி பாகிஸ்தான் அரசு தேசிய அமைதி விருது வழங்கியது.

அமைதிக்கான நோபல் பரிசு


2014-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்


மலாலா தினம் அனுசரிப்பு


மலாலா தனது 16-வது(2013-ஆம் ஆண்டு  ஜூலை 12) பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள்  சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் ""மலாலா தினம்"" என்று குறிப்பிட்டனர். இதுவே தாம் தாக்குதலுக்கு உள்ளான பிறகு அவர் அளித்த முதல் பேட்டி ஆகும்.

பாகிஸ்தானில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தம் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பினால் மாதம் இரண்டு டாலர்கள் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்ற ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பார்க்கும்போது படிக்க வேண்டிய வயதில் பள்ளிக்கூடம் செல்லாமல் இருக்கும் மூன்று கோடிக்கும் அதிகமான பெண் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்புவதற்கான செயல் நாளாக சனிக்கிழமையை அறிவித்த ஐ.நா. சபை, அதற்கு மலாலா தினம் என்று பெயர் சூட்டியுள்ளது.

இத்திட்டத்தின் வழியாக அடுத்த நான்கு ஆண்டுகளில் சுமார் முப்பது லட்சம் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இளம் அமைதி தூதர்

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான இளம் தூதராக மலாலா யூசுப்சாய் பொறுப்பேற்றார். அவர் பெண் கல்விக்காக பாடுபட போவதாக தெரிவித்துள்ளார். பெண் கல்விக்கான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரை ஐ.நா.வின் அமைதிக்கான இளம் தூதராக நியமிப்பதாக பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் அண்மையில் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஐ.நா.வுக்கான அமைதிதூதராக மலாலா பொறுப்பேற்றார்.

அப்போது அவர் ""பெண் குழந்தைகள் முன்னேற தந்தை, சகோதரர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஸ்வாட் பள்ளத்தாக்கில் என்னைப் போலவே எண்ணற்ற பெண்களும், சிறுமிகளும் உள்ளனர். அவர்களும் சமூகத்தில் துணிச் சலாக பேச ஆர்வமுடன் உள்ளனர். ஆனால் அவர்களது தந்தைகள் , சகோதரர்கள் அதற்கு அனுமதிப்பதில்லை. எனது குடும்பத்தினர் என்னை தடுக்கவில்லை. பேசச் சொல்லி ஊக்கம் அளித்தனர். அது தான் அனைத்து பெண்களுக்கும் தற்போதைய தேவை. பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கும் சகோதரர்களும், தந்தைகளும் தான் தேவை.

அவர்கள் பெண்களின் இறகுகளை வெட்டாமல் அவர்கள் முன்னேறி செல்ல அனுமதிக்க வேண்டும். தாலிபான் பயங்கர வாதிகள் என்னை கொல்ல முயன்றனர்.

அதன் மூலம் பெண் கல்வி உரிமையை நசுக்க முயன்றனர். இது எனக்கு இரண்டாவது வாழ்க்கை. பெண் கல்விதான் இந்த வாழ்க்கைக்கான நோக்கம். அதற்காக நான் தொடர்ந்து உழைப்பேன்'' என பேசினார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், ""எனக்கு இந்த நாள் மிகவும் உணர்ச்சிகரமானது. உலகில் முக்கிய நிகழ்வுகள் நடப்பதற்கு காரணமான சின்னமாக மலாலா இருக்கிறார். இந்த நிகழ்வு பெண்கள் அனைவருக்கும் கல்விக்கானது. ' என்றார். நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர் (டைட்டானிக் புகழ்) லியோனார்டோ டி கேப்ரியோ பருவ மாற்றத்துக்கான தூதராகவும், நடிகர் சார்லி தியோரன் எச்.ஐ.வி., மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான தூதராகவும், நடிகர் மைக்கேல் டக்ளஸ் ஆயுதப் பரவலுக்கு எதிரான தூதராகவும் பொறுப்பேற்றனர்.


இதுவரை மலாலா பெற்ற விருதுகள்


சக்காரோவ் விருது


*    மனித உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களுக்கு "சக்காரோவ்' என்ற உயர்ந்த விருதை ஐரோப்பிய பார்லிமெண்ட் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 2013-ஆம் ஆண்டிற்கான இவ்விருது பெண் கல்விக்காக குரல் கொடுத்த தலிபான்களால் தாக்கப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு வழங்கப் பட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் விருது


*    பெண் கல்வி முன்னேற்றத்திற்காக பிரச்சாரம் செய்து வரும் பாகிஸ்தான் இளம் பெண் மலாலா யூசுப் சாயிக்கு 2013- ஆம் ஆண்டுக் கான ஐ.நா. மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டது. இவ்விருது, 5 ஆண்டு களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் உள்ளிட்டோர் ஐ.நா. மனித உரிமைகள் விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மலாலா விருது


*   உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 15 வயது மாணவி ரசியா சுல்தானுக்கு, பெண் குழந்தை கல்விக்காக ஐ.நா. அறிவித்துள்ள முதல் மலாலா விருது வழங்கப்பட்டுள்ளது. 48 பெண் குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :