Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
Logo
பொது அறிவு உலகம்
கல்வி புரட்சியில் சங்கர் IAS அகாடமி
 ................................................................
சித்திரைத் திருநாள் விருதுகள்
 ................................................................
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்...
 ................................................................
செம்மொழி தமிழாய்வு விருதுகள்
 ................................................................
தேசிய எஃகு உருக்கு கொள்கை - 2017
 ................................................................
மலாலா யூசுப்சாய் : ஐ.நா.வின் இளம் அமைதி தூதர்
 ................................................................
நிடி ஆயோக் தொலைநோக்குத் திட்டம்
 ................................................................
01-06-17
*    குடியரசுத் தலைவர் மாளிகையில் நிடி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. பாஜக ஆட்சி நடக்காத மாநிலங்களின் முதல் அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், கர்நாடக முதல்வர் சித்தாராமையா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். நிடி ஆயோக் திட்டத்தின் முக்கிய விவரம் வருமாறு:

*    அடுத்த 15 ஆண்டுகளில் (2032) இந்தியர்கள் அனைவருக்கும் வீடு, வாகனம், ஏசி வசதி அளிப்பது. இது தொடர்பான தொலைநோக்கு    திட்டத்தை அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பாக நிடி ஆயோக் திகழும்.

*    அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் சாலை வசதி, ரயில் போக்குவரத்து, நீர் வழி இணைப்பு மற்றும் விமான போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் பசுமையான இந்தியாவை உருவாக்குவது.

*    இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சுத்தமான காற்று மற்றும் ஆரோக்கியமான குடிநீர் வசதியை உறுதிப் படுத்துவதற்கான செயல் திட்டம்.

*   தனிநபர் ஆண்டு வருமானம் தற்போது ரூ.1.06 லட்சமாக உள்ளது. இதை மூன்று மடங்காக அதாவது 2032-இல் தனிநபர் வருமானம் ரூ. 3.14 லட்சமாக உயரும்.

*    நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தித் திறன் தற்போது ரூ.137 லட்சம் கோடியாக உள்ளது. இது 2032-இல் ரூ. 469 லட்சம் கோடியாக உயரும்.

*    மத்திய, மாநில அரசுகளின் செலவுத் தொகை இப்போது ரூ.38 லட்சம் கோடியாக உள்ளது. இது 2031-32-ஆம் ஆண்டில் ரூ. 130 லட்சம் கோடியாக உயரும்.

*    15 ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், 7 ஆண்டுகளுக்கான அடிப்படையிலான திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது. 2017-18-ஆம் நிதி ஆண்டிலிலிருந்து 2031-32 வரை செயல்படுத்த வேண்டியவை எவை எனவும் அது பட்டியலிலிட்டுள்ளது.

*    முதல் கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கான செயல்திட்டங்கள் 2017, 2018, 2019 வரை செயல்படுத்த வேண்டியவை குறித்த விவரத்தை நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பார்வைக்கு நிடி ஆயோக் சுற்றுக்கு விட்டுள்ளது. இந்த செயல்திட்டம் விரைவில் இறுதி செய்யப்படும்.

*    பிரதமர் நரேந்திர மோடியின் முக்கியமான தொலைநோக்கு திட்டமான ""வைப்ரன்ட் இந்தியா 2032'' என்ற இலக்கை எட்டுவதற் கான செயல்திட்ட அறிக்கையாக இருக்கும்.

*    இந்தியாவை வளம்மிக்க, ஆரோக்கியமான, பாதுகாப்பான, லஞ்ச, ஊழல் இல்லாத, எரிசக்தி அதிகம் கிடைக்கும் நாடாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறைந்ததாக, சர்வதேச அளவில் வலிலிமை மிக்க நாடாக உருவாக்க வேண்டும்.

*    பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்கு மாநிலங்கள் உள்கட்டமைப்பு திட்டங் களில் அதிக முதலீடு செய்து, திட்டங்களை வேகப்படுத்த வேண்டும்.

*    நிடி ஆயோக் நீண்ட கால (15 ஆண்டுகள்), நடுத்தர கால (7 ஆண்டுகள்) மற்றும் குறுகிய கால (3 ஆண்டுகள்) இலக்கு நோக்கி திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்து மாநிலங் களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

*    இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி கூறியதாவது: அனைத்து மாநிலங் களும் சிறப்பாக செயல்படும்போதுதான் புதிய இந்தியாவுக்கான திட்டங்கள் நிறை வேறும். சர்வதேச அளவில் நடக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியாவை தயார்படுத்துவதற்காக இங்கே நாம் கூடி இருக்கிறோம். 2022-ஆம் ஆண்டு இந்தியா வின் 75-வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம். அப்போது இந்தியா எப்படி இருக்கும் வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.

*    இந்தியாவை மாற்றும் முயற்சியில் நிடி ஆயோக் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு, தனியார் துறை மற்றும் மக்கள் அனைவரும் சேர்ந்து இதற்காக உழைக்க வேண்டும். நிடி ஆயோக் ஆலோசனைகள் மட்டுமே வழங்கும். அதனுடைய பலம் அதுதான். நிர்வாக மற்றும் நிதி கட்டுப்பாடுகள் நிடி ஆயோக் வசம் இருக்காது.

*    துறை வல்லுநர்கள் உதவியுடன் ஆலோசனைகளை வழங்கும் அமைப்பாக நிடி ஆயோக் இருக்கும். மாநில அரசுகள் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும்
அனுமதிக்காக நிடி ஆயோக் அனுமதியை பெற தேவையில்லை என்றார்.

*    மேலும், மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி கூடுதலாகவும், மத்திய அரசு திட்டங் களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைவாகவும் இருக்கிறது. இந்த நிலையில் மாநில அரசுகள் கட்டுமான திட்டங்களுக்கு செலவு செய்ய வேண்டும். உள்கட்டமைப்பு சரியாக இல்லாததால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. சாலைகள், துறைமுகங்கள், மின்நிலையங்கள் மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை கட்டுமான திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டால் வளர்ச்சி உயரும்.

*    முன்பு பிப்ரவரி மாத கடைசியில் பட்ஜெட் அறிவிக்கப்படும். அதனால் மே மாதத்தில் தான் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கும். இப்போது பட்ஜெட் முன்பாக அறிவிக்கப்பட்டதால் திட்டங்களுக்கு தேவையான நிதி முன்பாகவே கிடைக்கும்.

*    ரங்கராஜன் கமிட்டி பரிந்துரையின் பேரில் திட்டம் மற்றும் திட்டமில்லா செலவுகள் நீக்கப்பட்டன. தற்போது மேம்பாடு மற்றும் நலத்திட்டங்கள் ஒரு பிரிவாகவும் நிர்வாக மற்றும் இதர செலவுகள் மறு பிரிவாகவும் இருக்கின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

-------------------------

நிடி குழு: ஆலோசனைக் குழுவாக செயல்படும். சிந்தனைக் கருவூலமாக அமையும் என்றாலும் நிதி ஒதுக்குவதற்கான அதிகாரம் நிதியமைச்சகத்துக்கே உண்டு.

திட்டக் குழு: அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் நிதி ஒதுக்கும்அதிகாரத்தைக் கொண்டிருந்தது.

முழுநேர உறுப்பினர்கள்:

நிடி குழு: திட்டக் குழுவைவிட குறைவான எண்ணிக்கையிலான முழுநேர உறுப்பினர்கள்.

திட்டக் குழு: கடைசி திட்டக் குழுவில் எட்டு முழுநேர உறுப்பினர்கள் இருந்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :