Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
Logo
இனிய உதயம்
சொல்ல மறக்காத கதை!
 ................................................................
அப்பா!
 ................................................................
பேரழகின் நிரூபணம்!
 ................................................................
அரசியல் ஸ்டண்டுக்கு அவசியமில்லை!
 ................................................................
மார்க்ஸ் என்னும் மானுடன்
 ................................................................
ஆச்சரியத்தின் மறுபெயர் கலைஞர் -கவிப்பேரரசு மு.மேத்தா
 ................................................................
போய் வா நதியலையே!
 ................................................................
தமிழின் அடையாளம் கலைஞர்!
 ................................................................
01-06-2017"உரத்த சிந்தனை'யும் திருவண்ணா மலையில் உள்ள சில இலக்கிய அமைப்பு களும் ஒன்றுசேர்ந்து அழைத்ததால்... திருவண்ணாமலையில் மூன்றுநாட்கள் தொடர்ந்து சுற்றிவரும் சூழல் ஏற்பட்டது.

திருச்சி தொழுதூரில் நண்பர் சரவணன் சித்ராபௌர்ணமி அன்று நிகழ்ச்சி ஒன்றுக்காக அழைத்ததால் சென்றுவிட்டு அப்படியே நான் மட்டும் திருவண்ணாமலை வந்திறங்கினேன். அங்கு
ஏற்கனவே திட்டமிட்டபடி இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அவர்களையும் என் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார், "உரத்த சிந்தனை' உதயம்ராம்.

"உதயம் ராம்' தொலைபேசித்துறையில் பணிபுரிபவர் என்றாலும்... கையெழுத்துப் பத்திரிகை காலத்திலிருந்தே இலக்கியத்தை நேசிப்பவர். நான் எழுதிய கவிதைகளை "மௌனம் ரவி' மூலமாகப் பெற்று பிரசுரித்தவர்.

"உரத்த சிந்தனை' மூலம் வாசகர்களை யெல்லாம் எழுத்தாளர்களாக ஆக்கி வருபவர். திருவாளர்கள் விசு, சோ போன்றவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து இயக்கியவர்.

"உரத்த சிந்தனை'யின் ஆஸ்தான பேச்சாளர்களில் ஒருவராய் என்னையும் இடைவெளி விடாது அழைத்து ஹைதராபாத், சென்னை, திருச்சி, கோவை, திருவண்ணாமலை, தேனி என பயணம் செய்ய வைத்து பக்கத்தில் இருந்து உபசரித்து

உற்சாகப்படுத்தி நட்பையும் மனிதநேயத்தையும் சமூகநலப் பணிகளையும் போற்றி வருபவர்.

"வாழும் வலம்புரிஜான்', "இரண்டாம் வேடந்தாங்கல்' என்று உதயம் ராம் அவர்களை அழைத்தால் அது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

நிர்வாகத் திறமையும் முன்கூட்டிய திட்டமிடலும் அவருக்கு கூடுதல் பலம்.

திருவண்ணாமலையில் இம்முறை இந்தப் பயணத்திலும்  வெகுநேர்த்தியாகத் அவர் திட்ட மிட்டபடி... நான் புத்தக வெளியீடு, உரை, இலக்கியச் சந்திப்பு, விருந்து என எல்லாவற்றையும் எதிர்கொள்ளத் தயாராகத்தான் போய் அங்கு இறங்கினேன். திருவண்ணாமலையின் விழாவேந்தர்கள் என்றால் இரண்டுபேரைக் குறிப்பிடலாம். நந்தினி பதிப்பகம் ஷண்முகம் அவர்களும்... மரக்கன்றுகள் நடுதலில் சாதனை படைத்துவரும் இந்திரராஜன் அவர்களும்.அந்த இருவரும் எதிர்கொள்ள எஸ்.பி.முத்துராமன் அவர்கள் உண்மையான உளமார்ந்த வார்த்தை
களோடு என்னை வரவேற்று நலம் விசாரிக்க 70-களின் இறுதியை நினைத்தேன்.

எஸ்.எஸ்.கே. ஃபிலிம்ஸ்  என்று ஒரு படத்தயாரிப்பு நிறுவனம் அப்போது சென்னை தி.நகர் சோமசுந்தரம் மைதானம் அருகில் இருந்தது. மகேந்திரன் அவர்களிடம் நான் உதவியாளனாகச் சேர்ந்தபோது எங்களுக்கான அலுவலகம் அந்த இடம்தான். மிதிவண்டி, இரண்டு சக்கர வாகனங்கள் எதுவும் என்னிடம் இல்லாத காலம். கோடம்பாக்கத்திலிருந்து நடந்தே நான் அங்கு செல்வேன்.

"ஏணிப்படிகள்', "காளி' போன்ற படங்களுக்கு வசனத்தை நகல் எடுக்கும் உதவியாளராக நான் வேலை செய்துகொண்டிருந்தபோது... எஸ்.எஸ்.கே.

ஃபிலிம்ஸ் "ரிஷிமூலம்' என்ற படத்தை தொடங்கினார்கள். நான் உதவியாளனாகப் பணியாற்றிய அந்தப் படத்தின் வாயிலாக இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் அவர்களையும் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களையும் கவிஞர் கண்ணதாசன் அவர்களையும் அடிக்கடி சந்திக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

நான் வயதில் மிகவும் சிறியவன். திரைப்படத்துறையில் எந்த முன்அனுபவமும் அப்போது இல்லாதவன்...என்றாலும் எஸ்.பி.எம். என்னை ""கண்ணன் சார்'' என்றுதான் ஒவ்வொருமுறையும் அழைத்தது மிகவும் வியப்பாக இருந்தது.

எஸ்.பி.எம். இயக்கிய வெற்றிப்படமான "புவனா ஒரு கேள்விக்குறி' போன்ற படங்களை நான் படிக்கிறபோது ஹாஸ்டல் சுவர் ஏறிக்குதித்துப் போய்ப் பார்த்திருக்கிறேன்.

"சுடரும் சூறாவளியும்' என்ற திரைப்படம் என் இனிய இயக்குநர் எழுத்தாளர் குகநாதன் அவர்கள் எழுதித் தயாரித்து எஸ்.பி.எம். இயக்குநராக அடையாளம் பதித்த ஒரு திரைக்காவியம். திரையில் நான் பார்த்த கவிதை அது.

கறுப்பு-வெள்ளை திரைப்பட யுகத்திலும் கால்பதித்து வேரூன்றி... வண்ணப்பட யுகத்தில் ரஜினி, கமல் என பலநூறு நாள் படங்களை வாரி வழங்கிய எஸ்.பி.எம். இன்றைக்கும் எளிமைக்கு எடுத்துக்காட்டு.

படங்களை இயக்கிக்கொண்டிருந்த அன்றைக்கும் அப்படித்தான்... தயாரிப்பாளர்களை அச்சுறுத்தாத சிறிய சம்பளத்தை இயக்குவதற்காகப் பெற்றுக்கொண்டு, முன்கூட்டியே திட்டமிட்டபடி திட்டமிட்ட காலத்திற் குள் வீண்விரயங்கள் ஏதுமின்றி குறிப்பிட்ட நாளில் வெளியிடுவதற்காக இரவுபகலாக உழைத்து திரைப்படங் களை உருவாக்கித் தந்தவர் எஸ்.பி.எம்.
விநியோகஸ்தர்களோ தயாரிப்பாளர் களோ அவரை ஒருநாளும் குற்றம்சொல்ல இடம் தரவில்லை.

புதிதாக திரைத்துறைக்கு வந்திருக்கும் ஒருவன் என்ற ஏளனம், அலட்சியம், பாரபட்சம் எதுவுமின்றி என்னை அவர் அப்போதே "சார்' போட்டு அழைத்ததும்....அவர் உணவு உண்ணும்போது சரிசமமாக என்னையும் எதிரே அமரவைத்து உபசரித்ததும்... "ரிஷிமூலம்' படம் அரங்குகளில் காட்சியாக்கப்பட்டபோது எழுத்தாளர்களுக்கு அவர் தந்த மரியாதையும் இன்னும் என் கண்முன் நிற்கிறது.

 கவியரசர் கண்ணதாசன் அலுவலகம் வந்த பத்து நிமிடத்திற்குள் பாடலை எழுதிக் கொடுத்துவிட்டுப் போன அதிசயத்தை அங்குதான் அந்தப் படத்தில்தான் முதன்முதலாகக் கண்டேன்.

"ஏணிப்படிகள்' படத்தில் நான் முதன்முதலாக பணியாற்றி அந்தப் படம் வெற்றிபெற்றாலும் யாரும் அதற்காக விழா எடுக்கவில்லை. "ரிஷிமூலம்' நூறுநாள் கண்டது. அதற்காக வெற்றிவிழா நடக்கப்போகிறது என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ந்தேன். கேடயம்... ஷீல்டு... நினைவுப்பரிசு என்று பல திரையுலகத்தினர் வீடுகளில் பத்திரிகையாளனாய் இருந்தபோது பலவகையான பளிச்சிடும் ஷீல்டு களைப் பார்த்து வியந்திருக்கிறேன். நமக்கும் ஒரு ஷீல்டு ஒருநாள் கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறேன். "ரிஷிமூலம்' வெற்றிவிழா நெடுநாள் கனவை நிறைவேற்றப் போகிறது என்ற நிம்மதி ஏற்பட்டது. நண்பர்களுக்கெல்லாம் ரிஷிமூலம் விழா பற்றி தகவல் கொடுத்தேன். ஏதோ... தேசியவிருதை பெறப்போவதைப்போல் ஒரு உற்சாகம். மகிழ்ச்சி. நாட்காட்டியில் அந்த தேதி தாளுக்கே வண்ணம் தீட்டி காத்திருந்தேன். "ரிஷிமூலம்' படத்தின் தயாரிப்பாளரும் மிகமிக நல்ல பண்பாளர். அருப்புக்கோட்டை அவரது ஊர். எஸ்.எஸ். கருப்பசாமி என்னை வாங்க, போங்க என்று மிகவும் மரியாதையாக அழைத்து எப்போதும் உபசரிப்பார்.

பேசிய தொகையை காலதாமதமின்றி வேலை செய்கிறவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்பதில் மிகமிக கவனமாக இருப்பார். அவரோடு இணையாக அமரவைத்து உணவோடு பழம், பால் கொடுக்க வைத்து எப்போதும் புன்சிரிப்போடு வழியனுப்புவார் எஸ்.எஸ்.கே.

அதனால் "ரிஷிமூலம்' படத்தின் ஷீல்டு மிகவும் பெரிதாக... கனமாக கலைநயத்துடன் அதிக பொருட்செலவுடன் உருவாக்கப்படும் என்று எதிர்பார்த்தேன்.

"ரிஷிமூலம்' படத்தின் வெற்றிவிழா நாளும் வந்தது.  வீட்டில் ஷீல்டு வந்தால் அதை வைப்பதற்கான இடத்தினை அண்ணனுடன் கலந்து ஆலோசித்தேன். அவர் உடனே ரேடியோ வைத்திருந்த இடத்தை எல்லாம் மாற்றியமைத்து தூசிதட்டி சுத்தமாக்கி ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கி எவ்வளவு பெரிய ஷீல்டானாலும் அவ்விடத்தில் வைக்கலாம் என்ற நிலையை உருவாக்கி ஓர் அழகிய சால்வையை கீழே மடித்து வைத்து மெத்தைபோல் மேடையையும் அமைத்துவிட்டார். அலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு போட்டுவிட்டு அவசரம் அவசரமாக வந்து தயாரானார் அவர். நண்பர்களுக்கெல்லாம் இடம் சொல்லி வரவழைத்துவிட்டு உறவினர்களோடு விழா நடக்கும் இடத்தை அடைந்து முடிந்தவரை முன் வரிசை தேடி அமர்ந் தோம்.

 நண்பர்கள்... சென்னையில் இருக்கும் இலக்கிய வட்டம் பத்திரிகை தொடர்பான நண்பர் கள்,  உறவுகள் என நல்ல கூட்டம். சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, படத்தின் இயக்குநர் எஸ்.பி.எம்., கதை, திரைக்கதை, வசனம் எழுதிய என் இயக்குநர் மகேந்திரன் என முதல்நிலையில் பணிபுரிந்தவர்களுக்கு அழகான கலைநயம் மிக்க மிகப்பெரிய ஷீல்டுகள் வழங்குவதைப் பார்த்துப் பார்த்து... நாம் வீட்டில் ஒதுக்கி வைத்திருக்கும் இடம் போதாதோ என்ற கவலையும் குழப்பமும் வந்துவிட்டது. வீட்டில் மாற்று இடமாக எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற பரிசீலனையும் மேலோங்கியது.

என் பெயரை அறிவிக்கும் நேரத்திற்காக என் உடன் வந்தவர்கள் காத்திருந்தார்கள். அந்த நேரமும் வந்தது. அறிவித்தவுடன் ஆரவாரமான கையொலிகளை உடன்வந்தவர்கள் உரக்க எழுப்பினார்கள். கம்பீரமாக வரிசையில் இருந்து எழுந்து மேடை நோக்கிச் செல்லும்போது பல ஆண்டுகளின் கனவு
இன்று பலித்தது என்று இறைவனுக்கு நன்றி சொன்னேன். முகமெல்லாம் சிரிப்பு... பூரிப்பு... கைதட்டல் ஓயவில்லை. கைகளை நீட்டிக்கொண்டே மேடைமீது சென்றேன். புகைப்படம் எடுப்பவரிடம் தனியாக முன்னரே பணம் கொடுத்திருந்தேன். அடுத்தநாளே அவர் பிரிண்ட்  போட்டுத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அவரை மட்டும் மேடை மீதிருந்தே ஓரக்கண்ணால் நோட்டம் விட்டேன். அவர் தயாராய் காத்திருப்பது தெரிந்தது.  திருப்தியுடன் சிறப்பு விருந்தினரின் அருகில் சென்று கைகளை நீட்டிக் கொண்டே புகைப்பட "போஸ்' கொடுத்தபடி அரங் கைப் பார்த்தேன்.

மெய்சிலிர்க்க மேனி எங்கும் உற்சாக நதி ஓட கண்களில்... ஒரு கர்வம் பொங்க... மகுடம் சூட்டப்போகும் மன்னனைப்போல் மேடையில் நின்றபோது... கைத்தட்டல் கனக்க என் கையில் அந்தப் பரிசு வைக்கப்பட்டது. அவையில் அமர்ந்திருந்த என் உறவினர்கள் நண்பர்களின் முகத்தில் சட்டென்று ஒரு மாறுதல். அதேசமயம் நானும் கேடயத்தைப் பார்க்கத் திரும்பினேன். மனம் சுக்குநூறாக வெடித்தது. பழைய படங்களில் பார்த்த தூள்தூளாக வெடித்துச் சிதறும் காட்சிகள் மீண்டும் ஓர்முறை அரங்கேறி ஓய்ந்தன. கையில் ஷீல்டு இல்லை. சிறிய எவர்சில்வர் குடம் ஒன்று காட்சியளித்தது. அதற்குள் அடுத்தவரின் பெயரை அறிவித்துவிட்டார்கள். சோகத்தைச் சுமந்தவாறே மேடையில் ஓரத்திற்கு வந்தபோது  எஸ்.எஸ்.கே. அலுவலக நிர்வாகி மாணிக்கம் நின்று கொண்டிருந்தார். அவரிடம் மெதுவாக ரகசியமாக வருத்தத்தை வெளிக்காட்டாமல் கேட்டேன். ""எங்களுக்கெல்லாம் ஷீல்டு இல்லையா?'' (அப்போது பரிசு வாங்கிக்கொண்டு மேடையிலிருந்து திரும்பியவர் கையிலும் குடம்தான் இருந்தது)

மாணிக்கம் சொன்னார். ""உதவியாளர் களுக்கெல்லாம் அலாரம் டைம்பீஸ், குடம், டிஃபன் பாக்ஸ் இப்படித்தான் குடுப்போம். இது காஸ்ட்லி குடம் சார். ஆட்டிப் பாருங்களேன்... சத்தம் வரும்'' என்று கூறி அந்தக் குடத்தை ஆட்டி வேறு காட்டினார்.

அமைதியாய் மேடையை விட்டு இறங்கி வீடுசெல்லத் தயாரானேன்.

இந்தக் குடத்திற்காக ஆட்டோ பிடித்துச் செல்ல வேண்டாம், பஸ்ஸிலேயே போகலாம் என்று தோன்றியது. புகைப்படக்காரர் நன்றாக எடுத்திருக்கி றேன், நாளை கிடைக்கும் என்று கை ஜாடை வேறு செய்து வழியனுப்பினார். நாளை கிடைத்தால் என்ன கிடைக்காமல் போனால் என்ன? குடம் வாங்குவது பெரிய விஷயமா? வீட்டிற்கு வந்ததும் ஷீல்டிற்காக ஒதுக்கி வைத்த இடம் என்னைப் பார்த்து கிண்டல், கேலி செய்வதாக உணர்ந்தேன்.

இன்று வீடெங்கும் சபாக்களின் கேடயங்கள் வெள்ளிப் பரிசுகள், ஷீல்டுகள், வெற்றிவிழா வெள்ளி விழா நூறுநாள் நினைவுப் பரிசுகள்... அடுக்கடுக்காய் ஒன்றன் பின் ஒன்றாய் வைக்க இடமில்லை. ஆனால் "ரிஷிமூலம்' தந்த அதிர்ச்சி பேரதிர்ச்சி.

இனி, இதையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது என்று வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தபோது உதவி இயக்குநராக வேலை செய்த முதல்படம் "உதிரிப்பூக்கள்'. இந்தப் படத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன், நான் எழுதிய ஐயப்பனின் பாசுரங்கள் பதினெட்டை அழகான புத்தகமாக என் வேண்டுகோளுக்கிணங்க செலவு செய்து அச்சிட்டு என் கையில் கொடுத்து விட்டார்.  நல்ல சந்தத்தில் உருவான விருத்தங்களே அச்சுவடிவில் கண்டதே அப்போதுள்ள மகிழ்ச்சி. இயக்குநர் மகேந்திரன் அந்தப் புத்தகத்திற்கான வாழ்த்துரையில்...

""இயக்குநர் என்ற முறையில் கண்ணன் என்னிடம் உதவியாளராக இருக்கிறார். ஆனால் கவிஞர் என்ற முறையில் கண்ணனிடம் பல உதவியாளர்கள் இருந்து எழுதக் கற்றுக்கொள்ளலாம்.'

இப்படியெல்லாம் கிடைத்த உற்சாகம், முதன்முதலாக உதவி இயக்குநர் என்ற டைட்டில் கார்டு. கோவையில் மழையில் நனைந்தபடி கல்லூரி ஆயிருர் நண்பன் ஆறுபாண்டியன் கூட்டத்தோடு ராயல் தியேட்டரில் "உதிரிப்பூக்கள்' பார்த்து விசிலடித்து கைத்தட்டி ஆரவாரித்த ஆனந்தம்...

இவையெல்லாம் ஒருங்கிணைய "உதிரிப்பூக்கள்' வெள்ளிவிழா கொண்டாட்டம் நெருங்கியது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டிருந்ததேன். அமரர் வீணை வித்தகர் திரைப்பட இயக்குநர் எஸ்.பாலசந்தர் சிறப்பு விருந்தினராக வந்து வாழ்த்துரைப்பதற்கு முன் ஷீல்டுகளை வழங்கிக்கொண்டிருந்தார். காரிலிருந்து சில ஸ்பெஷல் ஷீல்டுகள் அப்போதுதான் இறக்கிவைக்கப்பட்டன. என் கவனமெல்லாம் விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற ஒரே முனைப் பில் இருந்தது. அழைக்கப்பட்டவர்கள் பட்டியலில் உதவி இயக்குநர் வரிசை வந்தது. என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள்.

அலாரம் டைம்பீஸா, குடமா, இல்லை டிபன்பாக்ஸா எதுவாயிருந்தாலும் சரி என்று வீணை எஸ்.பாலசந்தர் அருகில்சென்று கைகளை நீட்டினேன். மாபெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. என் கைகளில் முதன்மையான எல்லோருக்கும் வழங்கப்பட்டதைப்போல் கனத்த அழகான உயரமான வடிவில் அமைந்த "ஷீல்டு' என் பெயரிடப்பட்டு காட்சியளித்தது. என் பெயர் பாத்திரங்களில் பொறிப்பதைப் போல் சிற்றுளியால் புள்ளி புள்ளியாய் எழுதப்பட்டிருந்தது. எங்கள் இயக்குநர் உதவி இயக்குநர் களுக்கும் ஷீல்டு கொடுக்க வேண்டும் என்று இறுதிவரை தயாரிப்பாளரோடு தர்க்கம் செய்து பெற்றுத் தந்த முதல் கௌரவம் அது... இன்றும் வீட்டின் வரவேற்பறையில் கம்பீரமாய் காட்சி தருகிறது .

ஷீல்டுகொடுத்ததும் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் வீணை எஸ்.பாலசந்தர்.

என்ன கேள்வி?

(இன்னும் இருக்கிறது)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :