Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
Logo
இனிய உதயம்
சொல்ல மறக்காத கதை!
 ................................................................
அப்பா!
 ................................................................
பேரழகின் நிரூபணம்!
 ................................................................
அரசியல் ஸ்டண்டுக்கு அவசியமில்லை!
 ................................................................
மார்க்ஸ் என்னும் மானுடன்
 ................................................................
ஆச்சரியத்தின் மறுபெயர் கலைஞர் -கவிப்பேரரசு மு.மேத்தா
 ................................................................
போய் வா நதியலையே!
 ................................................................
தமிழின் அடையாளம் கலைஞர்!
 ................................................................
01-06-2017வி. தஞ்சை. ராமையாதாஸ், பாமர மக்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் பாடல்களை எழுதிக் குவித்தவர்.

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே (மலைக்கள்ளன்), அநியாயம் இந்த ஆட்சியிலே (குலேபகாவலி), மோஹனப் புன்னகை செய்திடும் நிலவே (வணங்காமுடி), நீதானா என்னை நினைத்தது (மாயாபஜார்), கலையே உன் விழிகூட கவி பாடுதே (குண சுந்தரி), வாராயோ வெண்ணிலாவே, ஏனை ஆளும் மேரி மாதா (மிஸ்ஸியம்மா), நாயகமே நபி நாயகமே (குலேபகாவலி), முருகா என்றதும் உருகாதா மனம் (அதிசய திருடன்), வனமேவும் ராஜகுருமாரா (ராஜா தேசிங்கு), ஆண்டவனே இல்லையே-தில்லை தாண்டவனே உன்போல் (ராணி லலிதாங்கி), கற்பகச் சோலையிலே (ஸ்ரீவள்ளி- புதியது) என கவித்துவ பாடல்கள் பல எழுதி இருந்தாலும், ஜாலிலோ ஜிம்கானா (அமர தீபம்), சொக்காப்போட்ட நவாபு (குலேபகாவலி) ஒரு ஜாண் வயிறே இல்லாட்டா, இந்த ஒலகத்தில் ஏது கலாட்டா (சிங்காரி), வாங்க மச்சான் வாங்க (மதுரை வீரன்), புள்ளி வைக்கிறான் பொடியன் சொக்குறான் (உத்தம புத்திரன்), கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்) போன்ற பாடல்களையும் எழுதி சகாப்தம் படைத்தவர் தஞ்சை ராமையாதாஸ். அவர் தாம் என்னுடைய தந்தை.

நான் ஏழு, எட்டு வயது சிறுவனாக இருந்தபொழுது தினமும் ஒரு குறளை சொல்லிக் கொடுத்து மறுநாள் பாராயணமாக ஒப்புவிக்க வேண்டும். அவ்வண்ணம் அனைத்து திருக்குறள்களும் (அப்பொழுது) அத்துப்படி. குறள் பேச்சுப் போட்டியில் அந்நாள் முதல்வர் காமராஜர் கரங்களால் முதல் பரிசு வாங்கி இருக்கிறேன். எம்.ஜி.ஆர் அன்பும் பாராட்டுகளும் கிடைத்தன. என் தந்தையை பற்றி இடைச் செருகலாக சில தகவலும் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளை மானசீக குருவாக ஏற்று ஏகலைவனாக வாழ்ந்தவர் என் தந்தை தஞ்சையார். ஆனால் அவரை வணங்கி வழிபட எவ்வித புகைப்படமோ, உருவமோ இல்லை. அவரின் சீடர்களான டி.கே.எஸ் சகோதரர்களும் சிறுவர்களாக இருந்து வளர்ந்தவர்கள். அவர்களிடமும் இல்லை. அது சமயம், சுவாமிகள் நாடகங்களில் பபூன் வேடம் தரித்த சங்கரய்யர் என்பவர் ஆதரவு வேண்டி தஞ்சையாரிடம் அண்டி வந்தார். அவரை தம் வாழ்நாள் முழுவதும் ஆதரித்தார். அவரிடம் கிடைத்த கடவுளவு புகைப்படத்தை (பாஸ்போர்ட் அளவு) பெரிய அளவில் வரையச் செய்து தம் வீட்டில் அலங்கரித்து பிரபலப்படுத்தினார்.

அதுமட்டுமல்ல சுவாமிகள் சமாதி அடைந்த இடத்தை பாண்டிச்சேரியில் கண்டுபிடித்து மணிமண்டபம் கட்டி வழிபட்டுள்ளார். அந்த ஒரே புகைப்படம்தான் இன்று நடிகர் சங்கம் உள்பட எங்கும் பரவி உள்ளது.

கும்பகோணம் வேணுகோபால் சர்மா தாம் வரைந்த திருவள்ளுவர் படத்திற்கு காப்புரிமை பெற வந்தார். அவருடன் சென்று தஞ்சையாரும் காமராஜர், கக்கன், பக்தவச்சலம், திருமதி. லூர்துமேரி அம்மா ஆகியோரிடம் பேசியும் கேட்டும், காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை. தஞ்சையார் அப்படத்தை தமது இசை நூலில் பதிப்புரை பெற்று 1962-ல்  வெளியிட்டார். பின்னர் கலைஞர் காலத்தில் மூன்று லட்சம் பரிவுதொகை தந்து அந்த திருவள்ளுவர். படத்தை நாட்டுடமை ஆக்கினார்கள் அந்த படம்தான் அரசுப்பேருந்துகள், அலுவலங்களில் அமர்ந்து கொண்டிருக்கும் திருவள்ளுவர்.

டப்பாங்குத்து கவிஞர், கர்வம் பிடித்தவர், விரசமான வார்த்தைகளைப் போட்டு சிகரம் தொட்டவர், அவரது பாடல்கள் நைந்த கந்தல் துணி போன்ற ஏராளமான விமர்சனங்கள் வந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சினிமாவுக்காகவே பாடல்கள் எழுதியவர் எமது தந்தை தஞ்சையார்.

ஒரு சமயம் தஞ்சையார் உடல்நலம் குன்றியிருந்த போது அவரைப் பார்த்து நலம் விசாரிக்க உடுமலை நாராயணகவியும், அவருடன், தம்மை கடுமையாக தாக்கி கட்டுரை எழுதிய நாராயணனும் வந்தனர்.

அவர்களை வரவேற்று உபசரித்த தஞ்சையார் நாராயணனிடம், ""தம்பி என்னை நல்லாத்தான் தட்டி எழுதி இருக்கே. நானும் புலவன் பட்டமும் சரபோஜி மன்னரிடம் கவிதைப் போட்டியில் பரிசும் வாங்கி இருக்கிறேன். ஆனா என்ன செய்யறது? நாலணா கொடுத்து மணலை, குவிச்சி உட்கார்ந்து படம் பாக்குறானே! அவனை குஷிப்படுத்தணும் அதுக்குத்தான் எனக்கு துட்டு கொடுக்கிறான். நான் வேணாமுன்னாலும் அந்த வலையிலே தான் சிக்க வைக்கிறார்கள் என்றார். உடுமலை கவிராயர் கையைப்பிடித்து ""ஐயா, நான் பாட்டு எழுதலே, எம்பாட்டுக்கு எழுதிக்கிட்டு இருக்கேன்'' என்று கூறி தமது ஆவலை அவர்களிடம் கூறினார். அதைக்கேட்டு மகிழ்ந்த கவிராயர் தக்க ஆலோசனைகளைப் பெற்று காரியத்தில் இறங்கும்படி வாழ்த்திவிட்டு சென்றார்.

தஞ்சையார் தம் காலத்தில் குறள்களுக்கு பாட்டு எழுதும் அவாவை நெடுநாட்களாக நினைவில் கொண்டிருந்தார். ஆனால் செயல்படுத்தும் வகை கிஞ்சிற்றும் தெரிந்திருக்கவில்லை கவிராயர் ஊக்கம் கொடுத்த உடன் உற்சாகமானார். இது விஷயமாக அறிவுரைகளை கேட்க பேராசிரியர் மு. வரதராசனார் அவர்களை நாடி தம் எண்ணங்களை கூறினார்.

அவரும் உவகை மேற்கொண்டு, ""தாஸ், இது சினிமா பாட்டு அல்ல. தூய தமிழ்வார்த்தைகள் வேண்டும். பாடல் மட்டுமல்லாது இசை நூலாக இருத்தல் நல்லது'' என்றார்.

அவரது கூற்றை சிரமேற்கொண்டு கோவையிலிருந்து, கிருஷ்ணமூர்த்தி என்ற சங்கீத வித்துவானை வரவழைத்து உணவு, உடை உபசரிப்புடன் தம் இல்லத்தில் தங்க வைத்து அதிகாரத்திற்கு ஒரு திருக்குறள் பல்லவியாக அதற்கு அநுபல்லவி, சரணம் இயற்றினார். சங்கீத வித்துவான் ராகம் தாளஸ்சுரம், சாகித்தியம் அமைக்கலானார். சில பாடல்கள் தயாரானதும் குழுவினருடன்  மு.வ.அவர்களிடம் பாடிக்காண்பிக்க, சிறு திருத்தங்கள் சொன்னால் ஏற்றுக்கொள்வார். இதே சினிமா பாடல்களானால் ஒப்புக்கொள்ளவேமாட்டார். நான் எழுதியது பாட்டு; அதற்கு நீ டியுன் போட்டு ரெக்கார்டிங் செய். சில சில இடங்களில் தந்தனா போட்டு ரொப்பிக்கொ' என்று துரத்தி அனுப்பிவிடுவார்.

இவ்வாறாக மூன்றாண்டுகள் கழிந்தன. சளியும் நீரழிவு நோயும் தஞ்சையாரை நிழல் போல தொடர்ந்தன. மதி மயக்கி அவரது மூளைக்கு வேலை தந்த மதுவை அறவே மறந்தார். இன்ப துன்ப லாகிரி வஸ்துகளை வெறுத்தார். உற்றார் உறவினர் உறவை உதறினார். பெரும் வருவாய் அள்ளித் தந்த திரைப்படத்துறையை ஒதுக்கினார். தம் லட்சியத்தை அடைந்தே தீருவது என்ற வேட்கையுடன் இருந்தார். 1962-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் மு. வ. தலைமையில் தண்டபாணி தேசிகர் முன்னிலையில், இலக்கிய சான்றோர்கள் கலந்து கொள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவரான எம்.ஜி.ஆர். "திருக்குறள் இசை அமுதம்' என்னும் இசை நூலை வெளியிட்டார்.

1914-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05-ஆம் நாள் தஞ்சையில் அவதரித்த என் தந்தை, தஞ்சை ராமையாதாஸ் 1965 ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் நாள், திருவள்ளுவர் தினம் அன்று வேலூர். சி.எம்.சி. மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :