Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
Logo
இனிய உதயம்
சொல்ல மறக்காத கதை!
 ................................................................
அப்பா!
 ................................................................
பேரழகின் நிரூபணம்!
 ................................................................
அரசியல் ஸ்டண்டுக்கு அவசியமில்லை!
 ................................................................
மார்க்ஸ் என்னும் மானுடன்
 ................................................................
ஆச்சரியத்தின் மறுபெயர் கலைஞர் -கவிப்பேரரசு மு.மேத்தா
 ................................................................
போய் வா நதியலையே!
 ................................................................
தமிழின் அடையாளம் கலைஞர்!
 ................................................................
01-06-2017

கவிக்கோ நூல் வெளியீட்டு விழா தொடர்ச்சி-விக்கோ அப்துல் ரகுமான் "ஜூனியர் விகடன்' இதழில் தொடராக எழுதிய இலக்கியக் கட்டுரைகளின் செறிவான பெருந்தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது, உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்' எனும் இந்நூல். மிகவும் நேர்த்தியாக இந்நூலை வெளியிட்டிருப்பதன் வாயிலாக நேஷனல் பப்ளிஷர்ஸ் நிறுவனம் ஆகச் சிறந்தவோர் இலக்கியக் கடமையை ஆற்றியிருக்கிறது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள 86 கட்டுரைகளும் தமிழ் இலக்கிய உலகின் வாசகர்களுக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயமானவை,

பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் நினைவுகளில் ஆழப் பதிந்திருப்பவை. இக்கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்த காலத்தில் வாரந்தோறும் தமிழ் இலக்கிய உலகில் ஒரு பரவச அலை பரவியது. பல்லாயிரக்கணக்கான வாசகர்களும், பல நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களும் அக்கட்டுரைகளின் வாயிலாக உன்னதப்படுத்தப்பட்டார்கள். அவர்களது சிந்தனை நிலையில் இருந்து பல படிகள் உயர்த்தப்பட்டார்கள்.

"பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்' எனும் பாடல் வரியைப் போல, பத்திரிகைகளிலே வருகின்ற தொடர்கள் பலவிதம். அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் இக்கட்டுரைகள், விதங்களில் ஒன்றாக வெளிவராமல், வீரியம் மிக்க வித்தைகளாக, விளைச்சலைக் குவிக்கின்ற விதைகளாக வெளிவந்தன. இப்போது படிக்கும்போதும் வித்தைகளாகவும் விதைகளாவுமே சுடர்கின்றன. இதுவே இக்கட்டுரைகளின் ஈடு இணையற்ற தனித்தன்மையாகும்.

கவிக்கோ அப்துல் ரகுமான் இக்கட்டுரைகளின் வாயிலாக பல சாதனைகளை ஏக காலத்தில் சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறார்.

முதல் சாதனை, ஒரு வெகுஜன இதழில் பெருமளவு எழுதினாலும், கடுகளவு கூட தன்னை இழக்காமல் எழுதியது. இரண்டாம் சாதனை, வாசகர்கள் எனப்படுவோர் வெறும் நுனிப்புல் மேய்கிறவர்கள் என்கிற கருத்தைத் தகர்த்து தவிடு பொடியாக்கி, வாசகர்கள் எனப்படுவோர், நுட்பங்களில் ஆழ்ந்தும் பயணிக்கக் கூடியவர்கள் என்பதை நிரூபணம் செய்தது. மூன்றாம் சாதனை, அதுவரை அவ்வளவாக எவரும் அறிந்திராத இந்தியப் படைப்பாளிகளையும், தத்துவ ஞானிகளையும் எல்லோரும் அறியும் வண்ணம் எடுத்துக்காட்டியது. நான்காம் சாதனை, அச்சு ஊடக உலகிற்கும், இலக்கியவாதிகளுக்கும், வாசகர்களுக்கும் ஒரு புதிய பாதையை, பார்வையை முன்மாதிரியாகத் தோற்றுவித்தது.

இந்த நான்கு சாதனைகளைத் தாண்டியும் பல்வேறு வகையான கிளைச் சாதனைகளால் முழுமை பெற்றிருக்கிறது. இத்தொகுப்பும் இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளும் கவிக்கோவால் தொடங்கப்பட்ட இத்தகைய கட்டுரைக் கலாச்சார முன்னெடுப்பை அவரைத் தொடர்ந்து யாரும் கையிலெடுக்கவில்லை. அத்தகைய இலக்கியப் பணிக்கு அச்சு ஊடகங்கள் முன்வரவில்லையா அல்லது அப்படி எழுதுவோர் யாருமில்லையா என்பது ஆராயப்பட வேண்டிய ஓர் அவசியம்.

இன்றைய அச்சு ஊடகங்களில் பல்வேறு வகையான கட்டுரைத் தொடர்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு வகையான தொடரும் அதனதன் கோணத்தில் தேவையானவையே. என்றாலும் கூட அத்தகைய தொடர்கள் படிப்போரை எந்த அளவுக்கு மடைமாற்றம் செய்கின்றன என்பது கேள்விக்குறிதான். நிரப்பி வைப்பதும், நிறைவாகச் செய்வதும் வேறு வேறானவை என்கிற உண்மை. போதிய அளவுக்கு இன்னமும் புரிந்து கொள்ளப்படவில்லை. இக்கட்டுரைத் தொகுப்பில் கவிக்கோ நிறைய கட்டுரைகளை முன் வைத்திருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையையும் மிக மிகக் குறைவாக முன்வைத்திருக்கிறார்.

""எனது காலத்தில் எனது தாய்மொழி இலக்கியத்தின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டிருக்கும் பெருமிதம் மிக்க ஒரு படைப்புக் கலைஞனை நெஞ்சு நிரம்பிய கர்வத்தோடு காணுகின்றேன்.

மேற்கும் கிழக்குமாய் வடக்கும் தெற்குமாய் விரிந்து கிடக்கும் விண்வெளியைப் பார்க்கிறேன். கிழக்குத் திசைக்குப் பொட்டு வைத்து மேற்குத் திசைக்குப் பூக்கோலமிடுகிற ரகுமானின் எழுதுகோலையும் பார்க்கிறேன்.

மானுடக் கலைநயங்களின் தொகுப்பான இவரை நினைக்க நினைக்க ""என்னால் வர்ணிக்க முடியாது போ போ'' என்று பாரதி சொன்னதை எண்ணுகிறேன்.

வரம்பில்லாது பெருகும் அழகின் ஒவ்வொரு திவலையிலும் முகம் பார்க்கும் அருமை நண்பர் ரகுமானுக்கு வந்தனங்கள் செய்கிறேன்'' என்று இந்நூலின் அணிந்துரையில் கவிஞர் சிற்பி பதிவுசெய்திருப்பதை இக்கட்டுரைகளின் பின்புலத்தோடு படிக்க நேரும்போது பரவசமாகத்தான் இருக்கிறது. பொதுவாக வாசகர்கள் ஒரு நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரையின் வழியாகவே நூலுக்குள் நுழைவார்கள். இந்த நூலைப் பொறுத்தவரை முதலில் நூலுக்குள் நுழைந்து அதன் பிறகே அணிந்துரைக்குத் திரும்ப வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் அப்படித்தான் செய்தேன். அப்படிச் செய்யும்போது எழுதப்பட்டுவிட்ட அணிந்துரையைத் தாண்டி தங்களது மனங்களுக்குள்ளும் ஓர் அழகான அணிந்துரையை எழுதிப் பதிவு செய்துகொள்ள வாசகர்களால் முடியும்.

இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளைப் போகிற போக்கில் வேகமாகப் படித்துக்கொண்டே, கடந்து போய்விட முடியாது. இக்கட்டுரைகளின் வரிகள் நம்மை நிறுத்தி நிறுத்தி அழைத்துச் செல்கின்றன. ஏதோவொரு வகையில் மானுட வாழ்வியலை முன்வைக்கின்ற இவற்றின் அழகியல் ஆழம் அத்தகையது. இக்கட்டுரைகளின் வரிகளை ஆங்காங்கே மேற்கோள் காட்டிச் சிலாகித்து எழுதுவதை நான் தவிர்க்க விரும்புகிறேன். ஏனெனில் அப்படி மேற்கோள் காட்டப்படுகின்ற வரிகள் ரத்தமும் சதையுமாக அதற்குரிய கட்டுரைகளில் இருந்து துண்டிக்கப்படுவதும்கூட ஒருவகை வன்முறையாக இருக்குமென்று நான் அஞ்சுகிறேன். இக்கட்டுரைத் தொகுப்பை அப்படியே முழுமையாக பரிந்துரைக்க வேண்டுமே தவிர அவற்றின் வரிகளைப் பிடுங்கி மேலே வைப்பது அறியாமை கலந்த அதிகப்பிரசங்கித்தனமாகும்.

நானறிந்தவரை இக்கட்டுரைகள், பொதுவெளியில் மிகவும் அதிகமான இலக்கியச் சுவைஞர்களால் வரவேற்கப்பட்டவையாகும். இலக்கியம் என்பது அரிதானதல்ல, அனைவருக்குமானது என்பதை இக்கட்டுரைகள் உறுதி செய்துள்ளன. இதுபோன்ற கட்டுரைகளை நன்றாகவும், படிக்கிற மாதிரியும் எழுதுகிறவர்கள் நம்மில் நிறைய இருக்கிறார்கள். ஆனால் கவிக்கோவின் இக்கட்டுரைகள் நன்றாக இருக்கிறது என்பதைக் காட்டிலும் பல மடங்கு உயரமானவை, படிப்போரை தரப்படுத்தி, தகுதிப்படுத்தி, உன்னதப்படுத்தக்கூடியவை. அனுபவங்கள் என்ற பெயரிலும், வரலாறு எனும் பெயரிலும், ஏதோவொரு தலைப்பில் அச்சு ஊடகங்களில் வாரந்தோறும் சில எழுத்தாளர்களால் எழுதப்பட்டு வருகின்ற கட்டுரைத் தொடர்களை நிறைய வாசகர்கள் படிக்கிறார்கள். ஆனால் அவற்றால் சிந்தனையளவில் தெளிவடைகின்றனரா என்பது கேள்விக்குறிதான்.

கவிக்கோவின் இக்கட்டுரைகள், இலக்கியத்தின் வாயிலாக வாழ்வின் வண்ணங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இலக்கியம் என்பது வாழ்க்கையுடன் இரத்தமும் சதையுமாக இரண்டறக் கலந்திருக்க வேண்டிய ஒன்று என்பதைப் பேரழகாக நிரூபணம் செய்கின்றன.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :