Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
Logo
இனிய உதயம்
சொல்ல மறக்காத கதை!
 ................................................................
அப்பா!
 ................................................................
பேரழகின் நிரூபணம்!
 ................................................................
அரசியல் ஸ்டண்டுக்கு அவசியமில்லை!
 ................................................................
மார்க்ஸ் என்னும் மானுடன்
 ................................................................
ஆச்சரியத்தின் மறுபெயர் கலைஞர் -கவிப்பேரரசு மு.மேத்தா
 ................................................................
போய் வா நதியலையே!
 ................................................................
தமிழின் அடையாளம் கலைஞர்!
 ................................................................
01-06-2017ணைகள் வீசப்படும் போதெல்லாம் அதைக் கையில் பிடித்து புல்லாங்குழலாய் வாசித்து, பூமியை மயக்கும் நல்லாற்றல்; கலைஞரின் சொல்லாற்றல்.

அவர் வாய்திறந்து பேசும்போதெல்லாம் வார்த்தைகளுக்கு வசந்தகாலம் வந்துவிடுகிறது.

தலைவர் கலைஞரின் தலைமையில் கவியரங்கம்.  நான் கவிபாடத் தொடங்குகிறேன். ஆரம்பத்திலேயே அவையினருக்கு அதிர்ச்சி கொடுக்கிறேன்.

’கலைஞர் இரு நாக்கால் பேசுகிறவர்’ என்று ஆரம்பிக்கிறேன்.

கோலாகலமாக, கொண்டாட்டமாக இருந்த அவை, கொந்தளிப்பாக வும் குமுறலாகவும் கோபமாகவும் மாறிவிடுகிறது.

தொடர்கிறேன்...

கலைஞர் இரு நாக்கால் பேசுகிறவர்

ஒரு நா-
செந்தமிழ் பேசும் செந்நா
இன்னொரு நா-
பைந்தமிழ் எழுதும் பேனா
எப்போதும் கலைஞர்
இரு நாக்கால் பேசுகிறவர்’

-அவ்வளவுதான். ஆவேசமாக இருந்த கூட்டம் ஆனந்தமாகிவிடுகி றது. ஆரவாரம் செய்கிறது.

உடனே கலைஞர் எழுகிறார்.

மேத்தா சொல்வது உண்மை அல்ல.

எனக்கு இரண்டு நா அல்ல; மூன்று நா. மூன்றாவது நா... என்னோடு எப்போதும் இருக்கும் அண்ணா’
என்னுடைய வித்தையைத் தன்னுடைய ஆனந்தத் தமிழால் அடித்து வீழ்த்துகிறார் கலைஞர். அவையோரின் ஒட்டுமொத்த வாக்குகளையும் அறுவடை செய்துகொண்டு போய்விடுகிறார்.

இது நடந்து 30 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம்.இன்னொரு இனிக்கும்  சம்பவம்.

தலைவர் கலைஞர் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரும் நானும் பேசுகிறோம். 

நான் பேசும்போது, ஒரு விதவையின் துயரத்தை பாலசந்தர் எப்படி சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார் என்பதைப் பாராட்டிவிட்டு, ஒரு இளம்கவிஞர் விதவையின் துயரத்தை எவ்வாறு கவிதையாக்குகிறார் என்று விளக்குகிறேன்.

விதவையே-
நீ எத்தனை பரிதாபத்திற்குரியவள்
உன்னைப் பற்றி எழுதுகிற
எழுத்தில் கூட
பொட்டு வைக்க முடியவில்லையே’
-என்றது அந்த இளைஞரின் கவிதை.

கூட்டம் கைதட்டுகிறது. அந்த இளைஞனின் கவிதைக்கு ஓட்டுப் போடுகிறது.

கடைசியாய்ப் பேச வருகிறார் தலைவர் கலைஞர். இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில், எவரும் நிகழ்த்தாத சாதனையாக- சட்டமன்ற உறுப்பினராய், எதிர்க்கட்சித் தலைவராய், முதலமைச்சராய், எதிர்க் கட்சித் தலைவராய்,   60 ஆண்டுகள் தமிழகத்தில் வெற்றித் திருமகனாய் வீர உலா வந்தவர் அவர். வைர விழாக் காணும் வரலாற்று நாயகர்.

எத்தனை கேள்விகளைக் கேட்டிருப்பார். எத்தனை பேரைத் தன் புதுமையான பதில்களால் புரட்டிப் போட்டிருப்பார்.

எந்தத் தேர்தலிலும் தோல்வியே அறியாத வெற்றித் திருமகனாம் விஜயாலசோழர், அந்த மாமன்றத்தை அன்று தன் மணித்தமிழால் மயங்கவைக்கிறார்.

’விதவை என்று எழுதும் எழுத்தில்  பொட்டு வைக்க முடியவில்லையே’ என்று ஏங்கும் ஒரு இளைஞரின் ஏக்கமும்,  அதற்காக வரிந்துகட்டிக் கொண்டு வழக்காடும் மேத்தாவின் வாதமும் நியாயமானதுதான்.

ஆனால்,- ‘விதவை’ என்று எழுதும்போது ஏன் பொட்டு வைக்க முடியவில்லை என்பதை மேத்தா எண்ணிப் பார்க்கவேண்டும். விதவை என்ற சொல், தமிழ்ச்சொல் அல்ல; வடசொல்லி. அதனால்தான் பூவையின் முகத்தில் பொட்டு வைக்க முடியவில்லை.

விதவை என்பதை சரியான தமிழ்ச் சொல்லால்  சொல்லிலிப் பாருங்கள்.

இரண்டு இடத்தில் பொட்டுவைக்க லாம்’  என்று கூட்டத்தைப் பார்த்து குறுநகை செய்கிறார்.

கூட்டத்தின்  மூலைகளில் இருந்து மக்கள் குரல் கேட்கிறது ‘கைம்பெண் ’ ‘கைம்பெண் ‘ என்று.

தலைவர் தனித்துவமான விளக்கம் கொடுக்கிறார். ஆம், பொட்டுக்கு மேல் பொட்டு வைத்துப் பார்க்கும் இனம்தான் பூந்தமிழினம். இருக்கும் பொட்டை அழித்துப்பார்க்கும் இனமல்ல எமது இனம்’என்று முழங்குகிறார் தலைவர். அவை ஆரவாரித்து மயங்குகிறது.

வார்த்தைப் பயன்பாட்டைக்கூட வாழ்க்கைப் பண்பாட்டோடு ஒப்பிட்டு, தமிழினத்தை உயிர்த்தெழ வைத்த  உன்னதத் தலைவர் அவர்.

தன்னை நோக்கி வீசப்பட்ட எந்தக் கேள்விக்கும் தயங்காமல் பதில் சொல்லிலி, கேட்பவரைக் கிறுகிறுக்க வைத்திடும்  தலைவர் கலைஞர்,  ஒரே  ஒரு கேள்விக்கு மட்டும் இதுவரை, தானாக எந்த பதிலையும்  சொன்னதில்லை.

‘கலைஞரைத் தொடர்ந்து தமிழினத்தை தன் தோள்களில் சுமந்து செல்லப்போகிறவர் யார்?’-என்ற கேள்விக்கு மட்டும் கலைஞர் தானாக எந்த பதிலையும் சொல்லவில்லை.

 ஏனென்றால், அது தமிழர்களும் தமிழ்நாடும் சொல்லவேண்டிய பதில் என்று அவர் நினைத்திருக்கலாம்.

ஆனாலும் சொல்லாமலே, தலைவர் சொன்ன பதில்தான், தளபதியை செயல் தலைவராக்கிச் சிறப்பித்திருக்கிறது என்று தமிழும் சொல்கிறது. தமிழ்நாடும் சொல்கிறது. தமிழர்களும் சொல்கிறார்கள். 

94 ஆம் அகவையின் தொடக்கத்தில் நடைபோடும், தலைவர் கலைஞர், மன நலமும், உடல் நலமும், தமிழ் பலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார் என்று வையத்துத் தமிழர்கள் சார்பாக  வாழ்த்தி மகிழ்கிறேன்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :