Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
Logo
இனிய உதயம்
சொல்ல மறக்காத கதை!
 ................................................................
அப்பா!
 ................................................................
பேரழகின் நிரூபணம்!
 ................................................................
அரசியல் ஸ்டண்டுக்கு அவசியமில்லை!
 ................................................................
மார்க்ஸ் என்னும் மானுடன்
 ................................................................
ஆச்சரியத்தின் மறுபெயர் கலைஞர் -கவிப்பேரரசு மு.மேத்தா
 ................................................................
போய் வா நதியலையே!
 ................................................................
தமிழின் அடையாளம் கலைஞர்!
 ................................................................
01-06-2017
 நா.கா.வுடனான கல்விச் சாலை நினைவுகளில் இரு நிகழ்வுகள் முக்கியமானவை. 

நா.காமராசன், கா. காளிமுத்து, இன்குலாப், நான் - என நால்வரும் அமர்ந்து உரையாடிய தியாகராசர் கல்லூரிப் புல்வெளிகள் கவிதைகளால் நனைந்திருக்கின்றன. மாலைப் பொழுதுகளும், நிலா இரவுகளும் கவித்துவப் பரிமாறலால் இன்னும் ஈரப்பதமாகி இருந்தன.

நண்பர்கள் மூவரும் கல்லூரி விடுதியில் வாசம்.  நான் மதுரையிலுள்ள   எனது சித்தப்பா வீட்டில், மாடியறையில் தங்கியிருந்தேன். சில நாட்கள் சில நேரங்களில் நா.கா.  என்னுடன் இரவில் தங்கியிருப்பார்.

 ஒரு நாள் வைகை ஆறு முழுதும் நடையில் அளந்துவிட்டு, திரும்புகையில் நா.கா. "கவிதை எழுதும் உணர்வே ஏற்படமாட்டேனென்கிறதே' என்றார் மனக்கிலேசத்துடன். சொன்னது யார்? வற்றாத ஜீவநதி! அப்போதைய என் அறையில் உட்கார நாற்காலிலியோ, எழுத ஒரு மேசையோ,  குறைந்தபட்சம் மடியில் வைத்துக்கொள்ள ஒரு பலகையோ கூட இல்லாத நிலை; அறைக்குப் போனதும் தரையில் அமர்ந்து அந்த ஜீவநதி ஓடத் தொடங்கிவிட்டது. “தீராநதி பெருக்கெடுக்கிறது; அணை போடாதீர்’’ என வெளியில் காவலிலிருந்தேன்.

  1967-ல் அண்ணா ஆட்சி அமைந்திட்ட சில மாதங்கள்:

“"நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக ஆக ஆசை. மாணவர்கள் எல்லோரும் இணைந்துபோய் கேட்டுப் பார்ப்போமா?'’என்றார்.

"எதற்கு' என்று அண்ணா கேட்பார்’’

"உலகெலாம் நம் தமிழைக் கொண்டு செல்ல' என்று சொல்வோம்’’

பேச்சுவாக்கில் ஒரு நாள் தனது  கனவைப் பகிர்ந்துகொண்ட நா.காமராசன் இன்றில்லை -   அவர்   கனவும் இல்லை.

மதுரைத் தியாகராசர் கல்லூரி  விடுதியிலிருந்த நண்பர் ஐ. ஜெயராமனின் அறையில் 1965 சனவரி 25-ல் இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி  மாணவர்களின் ஆலோசிப்பு நடந்தது. அனைத்துக் கல்லூரிகளும் அவரவர் இடத்திலிலிருந்து  புறப்பட்டு மதுரைநகரின் நடுவாய் அமைந்த திலகர் திடலுக்கு வந்துசேருவது, பிறகு  அங்கிருந்து மாசி வீதிகள் வழியாய்ப் பேரணி சென்று தீர்மானம் நிறைவேற்றுவது எனத் திட்டமிட்டோம். 

இந்தியே ஆட்சி மொழி என்று அறிவிக்கும் சட்டப்பிரிவை நண்பர்கள் காமராசன், காளிமுத்து எரிப்பதென முடிவுசெய்யப்பட்டது. நா.காமராசன்-முதுகலை முதலாண்டு: கா.காளிமுத்து இளங்கலை இரண்டாமாண்டு.  நா.காமராசன் எனக்கு ஒரு வகுப்பு மேலே. காளிமுத்து எனக்கு ஒரு வகுப்பு கீழே.அப்போது இன்குலாப் காளிமுத்துவின் வகுப்புத் தோழர்.

என்னுடன் இளங்கலை அறிவியல் இறுதியாண்டு பயிலும் ஹசன் முகமதுவுக்கு ஊர் மானாமதுரை அருகிலிருக்கும் இடைக் காட்டூர்.  சட்டத்தை எரிக்கும் நண்பர்களை அக்காரியம் நிறைவேற்றுமுன் கைது செய்யப்படாலிமலிருக்க  ஒரு தலைமறைவு வாழ்க்கைக்கு தயார்படுத்தினோம்.   நண்பர் ஹசன் தன்னுடைய ஊரில் தனது வீட்டில் அந்த ஏற்பாட்டைச் செய்துகொடுத்தார். எங்களில் சிலரைத் தவிர அந்த இடம் வேறு யாருக்கும் தெரியாது. சனவரி 25-
அன்று தியாகராசர் கல்லூரி மாணவர்கள் ராஜாஜி திடலைச் சென்றடைந்தோம். நாங்கள் சென்று சேரவும் சட்டத்தை எரிக்கும் மாணவப் போராளிகள் திடலை வந்தடையவும் சரியாக இருந்தது; மாணவர்கள் சுற்றி பாதுகாப்புடன் வர, காமராசனும் காளிமுத்துவும் திடல் மேடையில் ஏறி சட்டப் பிரிவுக்குத் தீயிட்டார்கள்.

அவர்கள் கைதாகி காவல் வாகனத்தில் ஏற்றப்பட்டு ’விளக்குத்தூண் காவல்நிலையத்திற்கு’கொண்டு செல்லப்பட்டபின், வடக்குமாசி வீதியில் மாணவர் ஊர்வலம் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை பாதி  கடந்திருந்த நிலையில் உள்ளிருந்த இளைஞர் காங்கிரஸார் மாணவர்களை அரிவாளால் வெட்டினார்கள். காங்கிரஸ்காரர்கள் மாணவர்களை வெட்டிவிட்டார்கள் என்ற சேதி எட்டியதும் தமிழ்நாடெங்கும் மாணவர் போராட்டம் எல்லா இடங்களிலும் வெடித்தது. 

சட்ட எரிப்புச் செய்த மாணவர் இருவரும், அதன்பின் தங்களின் எதிர்காலம் இருண்டு போகும்: கல்வியைத்  தொடர இயலாது என்பதை அறிவார்கள். தமிழக மாணவ சமுதாயத்தின் எதிர்காலம் பாதுகாப்பாய் இருக்கும் என்ற அர்ப்பணிப்பு உணர்வே தம் வாழ்வைப் பலிலியிடுதலை மூலப்பொருளாக்கிற்று. நா.கா. ஒரு புத்தார்வமுள்ள சோதனைக் கவிஞராக உருவெடுத்துக் கொண்டிருந்தார். கவிதை எழுதுவதின் வழியாக பேரும் புகழும் எய்தியிருக்க முடியும். லட்சியத்தின் பெயரால் தன் மாணவ வாழ்வைக் களப்பலியாக்கிடத் துணிந்தார்.

அவர் நடத்திய சிற்றிதழின் பெயர் “"சோதனை'. தமிழ்க் கவிதையுலகிற்கான அனைத்துச் சாதனைகளையும் தான் செய்து முடித்துவிட்டதாக அவரைப் பேசச் செய்தது- அவர் செய்து பார்த்த கவிதைத் துறை சோதனைகளே! இல்லையாயின்  அவரைப் போல் "நான் மரணத்தைப் பற்றிச் சிந்திக்கிறேன்' என்ற கவிதையை முதுகலை படித்துக் கொண்டிருக்கையிலேயே எழுத யாரால் இயலும்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :