Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
Logo
இனிய உதயம்
சொல்ல மறக்காத கதை!
 ................................................................
அப்பா!
 ................................................................
பேரழகின் நிரூபணம்!
 ................................................................
அரசியல் ஸ்டண்டுக்கு அவசியமில்லை!
 ................................................................
மார்க்ஸ் என்னும் மானுடன்
 ................................................................
ஆச்சரியத்தின் மறுபெயர் கலைஞர் -கவிப்பேரரசு மு.மேத்தா
 ................................................................
போய் வா நதியலையே!
 ................................................................
தமிழின் அடையாளம் கலைஞர்!
 ................................................................
01-06-2017மிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுக்கொடுத்த முத்தமிழறிஞர் கலைஞர்,  94-ல் அடியெடுத்து வைக்கிறார். கலைஞரைத் தவிர இப்படியோர் மகுடத்தை தமிழுக்குச் சூட்ட எவராலும் இயலாது. கலைஞர் என்றால் தமிழ்; தமிழ் என்றால் கலைஞர்.

அறிஞர் அண்ணாவின் அமைச்சரவை யில் கலைஞர், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது ஒருமுறை மலேசியா சென்று திரும்பிய கலைஞர், விமான நிலையத்தில் சோதனைக்காகக்  காத்திருந்தார். அவரை நெருங்கிய  சுங்க அதிகாரி,  "மலேசியா போய்வந்திருக்கும் உங்களிடம், எப்படியும் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும். அதையெல்லாம் நீங்களாக எடுத்துக் கொடுத்து விட்டால் உங்களுக்கு நல்லது' என்றார் அரசியல் காழ்ப்போடு. கலைஞர் தங்க நகைகளை வாரிக்கொண்டு வந்திருப்பார் என்பது அவரது அனுமானம்.
கலைஞரோ, ‘"உண்மைதான். மிகவும் விலைமதிப்பற்ற ஒன்று  என்னிடம் இருக்கிறது’ என்றார்.  உடனே ஆர்வமான அந்த அதிகாரி', "என்ன அது? அது என்ன?' என்று கேட்க, ‘"தமிழ்... என் ஊனோடும் உயிரோடும் கலந்திருக்கும் தமிழ்'’என்றார் கலைஞர் அழுத்தமாக. இதைக்கேட்ட அந்த அதிகாரி வெட்கித் தலைகுனிந்தார்.

இப்படி தமிழையே ஊனாகவும்  உயிராகவும் கொண்ட கலைஞர், அதையே தனது வாழ்வாகவும் வளமாகவும் ஆக்கிக்கொண்டார்.
கலைஞர் முதல்வராக இருந்தபோது,  தமிழுக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்ததோடு, செம்மொழி மாநாட்டையும் பிரம்மாண்டமாகக் கோவையில் நடத்தினார். 

அதற்கான  ஒருங்கிணைப்புக் குழுவில், அரசியல் சார்பில்லாமல், அனைத்துத் துறையினரையும் பங்கேற்கச்செய்தார். மக்கள் தொடர்புக் குழு உறுப்பினராக, பத்திரிகையாளரான நானும் அந்தக் குழுவில் சேர்க்கப்பட்டிருந்தேன்.

மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்,  தலைமைச் செயலகத்தில் நடந்தது. நான், கலாநிதி மாறன், என். ராம், ரமேஷ் பிரபா, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆலோசித்தோம். அப்போது கலாநிதி மாறன் ‘செம்மொழி மாநாட்டுக்காக  ஏ.ஆர். ரஹ்மானை வைத்து, ஒரு பாடலை உருவாக்கலாம் என்றார். கலைஞரையே பாடலை எழுதச் செய்யலாமென்று நாங்கள் முடிவு செய்தோம். எல்லாருமாக தலைமைச் செயலகத்தில் கலைஞரைச் சந்தித்தோம். பாடல் எழுதும்படிக் கேட்டோம். உற்சாகமாக ஒப்புக்கொண்டார்.

இலக்கியங்களிலிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வைர வரிகளை உருவி, அதில் தனது கந்தர்வத் தமிழைக் குழைத்து,  அவர் எழுதிய காவியப் பாடல்தான்...

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி
ஓதி வளரும் உயிரான உலக மொழி
நம் மொழி நம் மொழி- அதுவே
செம்மொழி செம்மொழி- நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!’

 இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் கூட்டிய இசை, காற்றில் தேன் நதியைப் பாயவைத்தது. இந்தப் பாடலைக் கேட்டு, கலைஞர் சிலிர்த்துப் போய்விட்டார்.

உலகத் தரத்திற்கு அமைக்கப் பட்ட இசை என்பதால், அது தமிழின் புகழை எட்டுத் திக்கிலும் இனிப்பாய் மிதக்கவைத்தது.

தமிழுக்கு இருக்கும் செம்மொழித் தகுதி குறித்தும், அந்தத் தகுதியை அடைய நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்தும் அந்த நேரத்தில் கலைஞர் 7 உடன்பிறப்புக் கடிதங்களை முரசொலிலியில் எழுதினார். அந்த கடித இலக்கியத்தை மக்களிடம் கொண்டு செல்லவேண்டுமென்று முடிவெடுத்து, அதை "செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்' என்ற தலைப்பில் சிறு நூலாக்கி, ஒரு லட்சம் பிரதிகள் அச்சடித்து, அதை மக்களிடம் எடுத்துச் சென்றது நக்கீரன். இதை புத்தகமாய் ஆக்குவதற்குமுன்,  அதை தன்னிடம் அனுப்பச் செய்து, புரூஃப் பார்த்து,  தன் கைப்பட திருத்தமும் செய்தார் கலைஞர். ஒரு சின்ன விஷயத்தில்கூட கலைஞர் இப்படி கவனம் செலுத்துவதைக் கண்டு திகைத்துப் போயிருக்கிறேன். தனது தமிழில் எந்தத் தவறும் நேர்ந்துவிடக்கூடாது என்று நினைக்கிறவர் கலைஞர். 

இவையெல்லாம் கலைஞரது அப்பழுக்கற்ற தமிழ் உணர்வுக்கான அடையாளம்.

கலைஞரின் தமிழ்த் தொண்டுக்கு, அவர் நடத்திய  செம்மொழி மாநாடு மகத்தான அடையாளம் என்பதைப்போல், அவரது  ஆட்சிக் காலங்களில் அவரால் உருவாக்கப்பட்ட  தமிழ்ப் பண்பாட்டு அடையாளச் சின்னங்கள், காலத்தை வென்று காவியம் பாடிக் கொண்டிருக்கின்றன.

உதாரணமாக, கடலில் மூழ்கிய காப்பிய நகரமான பூம்புகார் நகரையே, கலைநயத்தோடு எழுப்பிக் காட்டியவர் கலைஞர்.  கலைநயம் மிளிர, திருவாரூர் தேர் வடிவில் வள்ளுவர் கோட்டத்தை வடித்துக் காட்டியவர் அவர்.  வீரத்தின் விளைநிலமான வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அழகிய  கோட்டை, குமரிமுனையில் 133 அடி உயரத்தில் வானளாவிய வள்ளுவர் சிலை என எழுப்பிய கலைஞர்,  ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான பேரறிஞர் அண்ணா நூலகம், செம்மொழிப் பூங்கா, புதிய தலைமைச் செயலகம் என பலவற்றையும் உருவாக்கி, தனது தமிழ்ப்பற்றையும் பண்பாட்டு ஆர்வத்தையும் நிலைநாட்டியிருக்கிறார்.

காலநதி ஓடிக்கொண்டே இருந்தாலும், அது கலைஞரின் சாதனைகளையும், அவரது தமிழையும் உச்சரித்தபடியே ஓடிக்கொண்டிருக்கும்.

தமிழகத்திற்கும் தமிழர் களுக்கும் கிடைத்திருக்கும், தமிழ்க்கொடைதான் கலைஞர்.

அவரை வாழ்த்தி வணங்கு கிறேன்.

பெருமித உணர்வோடு

நக்கீரன்கோபால்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : roger Date & Time : 6/28/2017 10:38:34 AM
-----------------------------------------------------------------------------------------------------
தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுக்கொடுத்த முத்தமிழறிஞர் கலைஞர், 94-ல் அடியெடுத்து வைக்கிறார். கலைஞரைத் தவிர இப்படியோர் மகுடத்தை தமிழுக்குச் சூட்ட எவராலும் இயலாது. கலைஞர் என்றால் தமிழ்; தமிழ் என்றால் கலைஞர்,தற்போதைய சூழ்நிலையில் அரசியல் தலைவர் ஒருவரை தங்களுடைய கதா நாயகனாக, தலைவனாக, தமிழ் தேசியவாதியாக, பேச்சாளராக, எழுத்தாள ராக ,போராளியாக, அண்ணனாக ,ஆசிரியராக , தத்துவஞானியாக, புரட்சியாளராக, அறிஞராக, கவிஞராக, தளபதியாக, தாய்சிறுத்தையாக தியாகியாக,சாணக்கியனாக, பிதா மகனாக, இனக்காவலராக,எழுச்சித் தமிழராக உச்சியில் வைத்து கொண்டாடும் கூட்டம் உண்டென்றால் அது எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என உறுதிபட சொல்ல முடியும்,,,,,,,,,,,,,,,US தமிழர்
-----------------------------------------------------------------------------------------------------