Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
Logo
ஓம்
ஜூன் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
யாதுமாகி நின்றாள்...
 ................................................................
எமனுக்கு உயிர் தந்த எமதண்டீஸ்வரர்!
 ................................................................
காக்கும் கருப்பர்!
 ................................................................
ஜூன் மாத ராசிபலன்கள்
 ................................................................
கந்தன் அருள் பெற்ற காதர் பாய்!
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
பலியிட்ட ஆடுகளை திவ்ய ரூபத்தில் காட்டிய அப்பய்ய தீட்சிதர்
 ................................................................
தேய்நிலவை வளர்நிலவாக்கிய முசிறி ஈசன்!
 ................................................................
தெய்வங்களுக்கு பலி தருவது ஏன்?
 ................................................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
 ................................................................
கருணை வள்ளல் கந்தவேள்!
 ................................................................
01-06-17எஸ்.பி. சேகர்

மிருகண்டு முனிவர்- மருத்வதி தம்பதியினருக்கு நீண்டகாலம் மழலை பாக்கியம் இல்லாமல் போகவே, ஈசனை நோக்கித் தவமிருந்தனர். தவத்திற்கு மகிழ்ந்து அவர்கள்முன் தோன்றிய ஈசனார், ""இப்பிறவியில் உங்களுக்கு மக்கட்பேறு கிடையாது. என்றாலும் அளிக்கிறேன்! நீண்ட ஆயுளுடன்கூடிய அறிவற்ற பிள்ளை வேண்டுமா? அழகும் அறிவும் ஒழுக்கமும் நற்பண்புகளும் நிரம்பிய- பதினாறு வயது மட்டுமே ஆயுள் கொண்ட பிள்ளை வேண்டுமா?'' என்று வினவினார்.

ரிஷி தம்பதியினர் 16 வயது ஆயுள் கொண்ட பிள்ளையே வேண்டுமென்று கூறவும், பரமனும் அவ்வாறே வரமளித்தார். ஈசன் அருளால் மருத்வதி அழகான ஆண் மகவை ஈன்றெடுத்தாள். அதற்கு "மார்க்கண்டேயன்' எனப் பெயரிட்டு அன்போடு வளர்த்துவந்தனர். மார்க்கண்டே யன் சிறுவயது முதலே அறிவும் பண்பும் கொண்டு சிவபக்தியிலும் சிறந்து விளங்கினான். அவனுக்கு 16 வயது நெருங்கும்போது பெற்றோர் கவலையில் ஆழ்ந்தனர்.

பெற்றோரின் முக வாட்டத்தைக் கண்ட மார்க்கண்டேயன் அதற்கான காரணத்தைக் கேட்க, அவர்கள் சொல்லத் தயங்கினர்.

அவன் வற்புறுத்திக் கேட்கவே வேறு வழியின்றி விவரத்தைக் கூறினர்.

அதைக்கேட்டுக் கவலைப் படாத மார்க்கண்டேயன் பெற்றோருக்கு ஆறுதல் கூறி சிவவழிபாடு செய்துவந்தான். இந்நிலையில் அவனது ஆயுள் முடியும் நாளில் அவனது உயிரைப் பறிக்க எமதர்மராஜா வந்தார். இளைஞன்மீது பாசக்கயிற்றை வீசினார்.

சிவ வழிபாடு செய்துகொண்டிருந்த  மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை இறுக அணைத்துக்கொள்ள, எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தையும் சேர்த்திழுத்தது.

அப்போது கடுஞ்சினத்துடன் லிங்கத்தைப் பிளந்துகொண்டு வெளிப்பட்ட சிவன், எமனை இடதுகாலால் உதைத்து இளைஞனைக் காப்பாற்றினார். பின் மார்க்கண்டேயனை "என்றும் சிரஞ்சீவியாய் இருப்பாய்' என்று கூறி அருள்புரிந்தார்.

உதைபட்டு நிலைதடுமாறி விழுந்த எமன், மூர்ச்சையடைந்து உயிர்விட்டான். இதனால் அழிவுத்தொழில் பாதிக்கப்பட்டு, அக்கிரமங்கள் தலைதூக்கின. ஆயுள் முடிந்தவர்களை ஆட்கொள்ள ஆளில்லாமல் போயிற்று. இந்நிலையகற்ற பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலான தேவர்களும் முனிவர்களும் ஈசனிடம் சரணடைந்தனர்.அவர்களின் வேண்டுதலை ஏற்று, ஈசன் சித்திரை மாதம், மக நட்சத்திரத்தன்று எமனை உயிர்ப்பித்தார். மீண்டும் உயிர்பெற்ற எமதர்மராஜாவுக்கு நிம்மதியில்லை. சிவலிங்கத்தின்மீது பாசக்கயிறு வீசி இழுத்தது மனதை வதைத்தது அதைப்போக்கிட எமன் பல கோவில்களுக்கும் சென்று ஈசனை வழிபட்டு வந்தார். இறுதியில் அர்க்காமூர் என்னும் ஆலகிராமத்தை அடைந்தார். அங்கு சிவனைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். எமதர்மனின் தவத்திற்கு மனமிரங்கி காட்சியளித்த ஈசனார், ""எமதர்மனே! கவலை வேண்டாம். இவ்விடத்தில் கங்காதேவியை வரவழைத்து தீர்த்தம் ஏற்படுத்துகிறேன். அதில் ஐந்துமுறை நீராடி சிவபூஜைசெய்து, ஆயுள் விருத்தி ஹோமம்செய்து வழிபடு. தோஷங்கள் அகலும்'' என்றுகூறி மறைந்தார். ஈசன் கூறியபடியே செய்து எமதர்மராஜா தோஷம் நீங்கி நிம்மதியடைந்தார்.

அந்த இடத்தில் மன்னர்கள் காலத்தில் கோவில் அமைக்கப்பட்டது. எமனுக்கு பாவ விமோசனம் அளித்ததால் இங்குள்ள இறைவன் எமதண்டீசுவரர் என அழைக்கப்படுகிறார். இறைவி திரிபுரசுந்தரி என்னும் திருநாமத்துடன் விளங்குகிறாள்.

செவ்வக வடிவில் இங்கு மூலவராக ஈசன் எழுந்தருளியிருப்பது அபூர்வமானதாகக் கருதப்படுகிறது.

இத்தலத்திற்கு திருமால் ருத்திராட்ச மாலையணிந்து, நெற்றியில் விபூதி பூசி ஸ்ரீதேவி- பூதேவியுடன் வந்து முதல் அடியாராக வழிபட்டுள்ளார். அதனை நினைவுகூரும்விதமாக இங்கு புடைப்புச் சிற்பம் ஒன்றுள்ளது.

சண்டிகேசுவரர் கையில் தண்டத்துடன் சிவனடியார்போலவே புடைப்புச் சிற்பத்தில் வீற்றிருக்கிறார்.

ஈசனே சகலமுமாக இருப்பதால்- இக்கோவிலில் வழிபாடு செய்தால் கால தோஷம் உள்பட அனைத்து தோஷமும் நீங்கிவிடும் என்பதால் இங்கு நவகிரக சந்நிதி இல்லை.

தென்மேற்கு மூலையில் சித்தர் ஜீவசமாதி ஒன்றுள்ளது.

பிரதோஷ வழிபாடு இங்கு சிறப்புமிக்கது. இங்கு நந்தி பகவான் சுவாசிக்கும் சத்தம் கேட்பதாக நம்பிக்கை நிலவுகிறது. இவ்வாலயத்திலுள்ள விநாயகர் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு முந்தையவர் என்கின்றனர். காஞ்சி மகாபெரியவர் இங்கு வந்து தரிசனம் செய்துள்ளார்.

இவ்வாலய அம்பாள் ஞாயிற்றுக்கிழமை குழந்தை முகம் கொண்டும், திங்கள், வெள்ளிக்கிழமைகளில் புன்சிரிப்புடனும், செவ்வாய், புதன்கிழமைகளில் கோப முகத்துடனும், வியாழன், சனிக்கிழமைகளில் யோக, தியான நிலையிலும் காட்சிதருவது சிறப்பு. ஏழு வாரங்கள் அவரவர் ராசிக்கேற்ற வண்ணத்துணிகளில் நெய்தீபமேற்றி, அம்பாளை வணங்கினால் வேண்டும் வரம் கிட்டும் என்பது ஐதீகம்.

""எமதர்மராஜாவை ஈசன் உயிர்ப்பித்த சித்திரை மாதம் மக நட்சத்திர நாள் இங்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மாத சிவராத்திரி, மகாசிவராத்திரி, மகாப்பிரதோஷ நாள்களில் இங்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. முறையே 60, 70, 80, 90 வயதைக் கடந்தவர்கள் இங்கு வந்து சஷ்டியப்தப்பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், ஹோமங்கள் செய்து செல்வவளம் உள்பட சகல வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ்ந்துவருகின்றனர்'' என்கிறார்கள் இவ்வூரைச் சேர்ந்த பேராசிரியர் சுந்தரமூர்த்தி, ஏழுமலை, சேட்டு, பாபு, சக்திவேல், சுந்தர் ஆகியோர்.

திங்களன்று இவ்வாலய இறைவனை அர்ச்சனைசெய்து வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்குகிறது; மகப்பேறு உண்டாகிறது; கல்வியில் அதிக மதிப் பெண்கள் கிட்டுகிறது என்கிறார்கள்.

விஜயேந்திர சோழ மன்னனால் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கட்டப் பட்டதாகக் கூறப்படும்- எமபயம் போக்கும் திருத்தலமான இக்கோவில் தற்போது சிதிலமடைந்துள்ளது. இதனை செப்பனிட்டு புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முழுவீச்சில் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இப்பணியில் பக்தர்களும் பங்கேற்று உதவலாம்.

தொடர்புக்கு: செல்: 96296 28900, 97870 83707.
இருப்பிடம்: சென்னை- திருச்சி

தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம்- விழுப்புரம் இடையில் உள்ளது கூட்டேரிப்பட்டு. இங்கிருந்து மேற்கே சுமார்  ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவில் உள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :