Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
Logo
ஓம்
ஜூன் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
யாதுமாகி நின்றாள்...
 ................................................................
எமனுக்கு உயிர் தந்த எமதண்டீஸ்வரர்!
 ................................................................
காக்கும் கருப்பர்!
 ................................................................
ஜூன் மாத ராசிபலன்கள்
 ................................................................
கந்தன் அருள் பெற்ற காதர் பாய்!
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
பலியிட்ட ஆடுகளை திவ்ய ரூபத்தில் காட்டிய அப்பய்ய தீட்சிதர்
 ................................................................
தேய்நிலவை வளர்நிலவாக்கிய முசிறி ஈசன்!
 ................................................................
தெய்வங்களுக்கு பலி தருவது ஏன்?
 ................................................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
 ................................................................
கருணை வள்ளல் கந்தவேள்!
 ................................................................
01-06-17துரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் சித்ரா பவுர்ணமி நாளில்,  சிவகங்கை மாவட்ட கிராமங்களில் குல தெய்வங்களை வழிபடும்  நடைமுறை இருந்து வருகிறது. அன்றைய தினம், கோவில் திருவிழாக்களும் களை கட்டுகின்றன. 

புரவி எடுப்புத் திருவிழா! 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் ஒரு முதல்நிலை  பேரூராட்சி ஆகும். இங்குள்ள கொத்தரி சோலை வளர்த்த அய்யனார்  கோவிலிலில் புரவி எடுப்புத் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அது என்ன புரவி எடுப்புத் திருவிழா? என்று கேட்டபோது, ""வண்டல் மண், களிமண், மணல், கம்பு பயிரின் உமி போன்ற கலவைகளால் செய்யப்பட்ட புரவி (குதிரை) பொம்மைகளை இந்த சோலையாண்டவர் கோவிலுக்கு மக்கள் எடுத்து வருவார்கள்.  மழை பெய்ய வேண்டும்; விவசாயம் செழிக்க வேண்டும்; ஜாதி, மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றுகூடி நடத்தும் திருவிழா இது. இன்றிரவு பத்து மணிக்கு வள்ளி திருமணம் நாடகம் நடக்கிறது.'' என்றார்கள் பள்ளத்தூர்வாசிகள். அப்போது ஒருவர், ""பள்ளத்தூர் கோடியாந்தோப்பு தெருவிலும்கூட இன்று குல தெய்வ வழிபாடு நடக்கிறது. தலைமுறை தலைமுறையாக அவர்கள் கருப்பரை வணங்கி வருகிறார்கள்'' என்றார். 

பாட்டன், முப்பாட்டன் வரிசையில் நிற்கிறோம்!

பள்ளத்தூர் கோடியான் தோப்பு தெருவில் இருக்கிறது கருப்பர் கோவில். வெட்ட வெளியில் பீடம் ஒன்றில் நிலையாக நிறுவப்பட்டிருந்தது ஒரு வேல்.  அந்த வேலை அலங்கரித்து மாலைகள் அணிவித்திருந்தார்கள். அந்த வேல்தான் கருப்பர். நூற்றுக்கணக்கானோர் அங்கு கூடியிருந்தார்கள். எல்லாரும் பங்காளி களாம். கிடா வெட்டி, சமையலெல்லாம் தயாராக இருந்தது. பூஜை ஒரு பக்கம் நடந்தது. பயபக்தி யுடன் அந்த பீடத்தின் முன் விழுந்து வணங்கினார்
கள் அந்தப் பங்காளிகள். 

வடிவேல் என்ற பெரியவர் நம்மிடம், ""கணக்குன்னு பார்த்தா மொத்தம் 20 பேர்தான் பங்காளிகளா இருக்கோம். ஆனா.. தொட்டுத் தொட்டு சொந்தம்னு பார்த்தா 400 பேர் வரைக்கும் இருக்காங்க. எல்லாரும் சித்ரா பௌர்ணமி நாள்ல குலதெய்வம் கருப்பரை வழிபட வந்திடுவாங்க. குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறந்திடக் கூடாதுன்னு பழமொழியே இருக்கு. அதனால, எந்த ஊருல இருந்தாலும், எந்த நாட்டுல இருந்தாலும் இன்னைக்கு குலதெய்வக் கோயிலுக்கு சாமி கும்பிட வர்றது வழக்கமாயிருச்சு. இது சாதாரண வழிபாடு கிடையாது. எங்க பாட்டன், முப்பாட்டன்னு எங்க முன்னோர்களெல்லாம் வணங்கி வந்த சாமி இது. அந்த வரிசையில் இப்ப நாங்க நிற்கிறோம். இந்த மாதிரி கும்பிடும்போது குலதெய்வத்தோட அருளும், முன்னோர்களின் ஆசியும் ஒருசேரக் கிடைக்குது. அதனால,  எங்களது வாழ்க்கையும் நல்லா இருக்கு. எங்க சந்ததிகளும் நல்லபடியா வாழ்றாங்க'' என்றவர், சற்று தள்ளி நின்ற ஒருவரைக் கைகாட்டி "அவர் பெயர் சேதுராமன். சாமி கும்பிடறதுக்காக சிங்கப்பூர்ல இருந்து வந்திருக்காரு'' என்றார். 

எதைத் தேடுகிறோம்? ஏன் ஓடுகிறோம்?

சேதுராமனிடம் பேசி னோம். ""நாம என்னத்த தேடிக்கிட்டிருக்கோம்னு தெரியல. தேடிக்கிட்டே இருக்கோம். ஓடிக்கிட்டே இருக் கோம். நாடு விட்டு நாடு போயி சம்பாதிச்சிக்கிட்டு இருக்கோம். இதெல்லாம் யாருக்காக? எதுக்காக? சரி யான ஒரு பதிலைச் சொல்ல முடியுமா? இப்ப எங்க குலசாமிகிட்டயும் கேட்டேன். புரிஞ்சு போச்சு. மனித வாழ்க்கை நிலையானது கிடையாது. நாம் சேர்த்து வைக்கும் சொத்துகளும் நிலையில்லாதவைதான். நாம் மட்டும் நல்லா இருந்தா போதுமா? நம்மைச் சுற்றி இருக்கிறவங்களும் நல்லா இருக்கணும். இந்த நல்ல எண்ணத்தோடு என் கோயிலுக்கு வா. எல்லாருக்காகவும் வேண்டிக்கோ. நீயும் நல்லா இருப்ப. எல்லாரும் நல்லா இருப்பாங்க. காசு, பணம் உன்னை சந்தோஷமா வாழ வைக்காது.. நல்ல மனசு ஒண்ணுதான் நிம்மதி தரும்.. ஒருத்தனோட வாழ்க்கையை உயர்த்தும்னு... இங்கே வேலா நின்னுக்கிட்டிருக்காரே எங்க கருப்பர். இதை எனக்கு உணர்த்தி இருக்காரு. கருப்பர் மேல அழுத்தமா நம்பிக்கை வச்சு...  ஆனந்தமா வாழ்ந்துக்கிட்டிருக்கோம்'' என்றவர், மக்கள் எல்லாரும் நல்லா இருக்கணும்னு  காவல் தெய்வமா ஊரையே காத்து நிக்கிறாரு கருப்பர். மக்களை மட்டுமா? அழகர் கோவிலையும் காத்துக்கிட்டு வர்றது கருப்பர்தானே! அழகர் கோவில்ல இருக்கிற கருப்பண்ணசாமி கோவில்ல பிடிமண் எடுத்துட்டு வந்துதான் இங்கே பீடத்தை நிறுவிருக்காங்க எங்க முன்னோர்கள்'' என்றார். கள்ளழகர் கோவிலுக்குக் காவல்!

தமிழ்நாட்டில் உள்ள காவல் தெய்வங்களில் பிரசித்தி பெற்றவராக இருக்கிறார் கருப்பசாமி. கிராம கோவில்கள் பலவற்றிலும் கருப்பசாமி இடம் பெற்றிருக்கிறார். தமிழர்களில் பெரும்பாலோரின் இஷ்ட தெய்வமாக இருக்கிறார் கருப்பசாமி. இவருக்குப் பல பெயர்கள் உண்டு. சங்கிலிலிக் கருப்பன், பதினெட்டாம்படியான், ஒண்டி கருப்பசாமி, கோட்டை வாசல் கருப்பசாமி, அச்சன் கோவில் கருப்பசாமி, மடை கருப்பசாமி, ஆகாச கருப்பு என 108 பெயர்களில் தமிழகத்தில் கருப்பசாமியை வழிபட்டு வருகின்றனர். தங்கள் குழந்தைகளின் பெயர்களைக்கூட கருப்பசாமி, கருப்பாயி என சூட்டி வருகின்றனர்.  கி.பி. 1900 என்ற குறிப்போடு, திருநெல்வேலி மியூசியத்தில் கருப்பண்ணசாமி சிலை ஒன்று இருக்கிறது. நின்ற கோலத்தில் பெரிய தலைப்பாகை, நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறுகையில் கதை, சங்கு, முழங்காலுக்குக் கீழே வருமளவு இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு காணப்படுகிறார் கருப்பசாமி. அவர் மலையாளிகளைப் போல ஒரு பக்கம் சாய்ந்த கொண்டை உடையவராக இருக்கிறார். கருப்பசாமியின் இந்தத் தோற்றமே அவரை ‘மலையாளக் கருப்பு’ என்று அடையாளம் காட்டுகிறது. அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி குறித்த வரலாறும் இதை உறுதிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது.

மன்னராட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் வரலாறு இது...  

அழகர் கோவிலிலில் கள்ளழகரின் அழகைக் கண்டு வியந்த சேர மன்னன், சேர நாடு திரும்பியும் கள்ளழகர் நினைவாகவே இருந்திருக்கிறார். கள்ளழகரை எப்படியாவது சேர நாட்டுக்குக் கொண்டு வந்துவிட வேண்டுமென்று, மலையாளக் கருப்புக் கோவிலுக்குச் சென்று, நிறைவேற்றித் தரும்படி வேண்டியிருக்கிறார். மன்னனின் ஆசையை நிறைவேற்ற, பெருமாளைக் கடத்தும் திட்டத்தோடு, தன் பரிவார தேவதைகளோடு அழகர் மலைக்கு வந்திருக்கிறார்.  கள்ளழகரின் மாயையால், தான் வந்த வேலையையே மறந்து விட்டார் மலையாளக் கருப்பு. பின்னர் அழகர் கோவிலுக்குத் தான் வந்த நோக்கத்தைக் கூறி, கள்ளழகரிடமே "நான் என்ன செய்வது?' என்று கேட்கிறார். கள்ளழகரோ, "நீ எங்கும் திரும்பிப் போக வேண்டாம். இங்கேயே எனக்குக் காவலாக இருந்து விடு. நான் வெளியே செல்லும் நாட்களில் கோவிலை நீ பாதுகாக்க வேண்டும். என்னுடைய கணக்கு வழக்குகளுக்கான பொறுப்பை நீ எடுத்துக் கொள். நீ என்ன தீர்ப்பு சொல்கிறாயோ மக்கள் அதற்குக் கட்டுப்படுவார்கள். உன் முன்னால் ஒருவன் பொய் சத்தியம் செய்ய மாட்டான். உண்மை மட்டுமே உன் முன்னால் நிற்க முடியும். என்னை தரிசிக்க வரும் பக்தர்கள் முதலிலில் உன்னை தரிசித்து விட்டே என்னை தரிசிக்க வருவார்கள்' என்று ஆசி வழங்கியிருக்கிறார்.

அன்றிலிலிருந்து தன்னுடையை பதினெட்டுப் பரிவார தேவதைகளையும் பதினெட்டுப் படிகளாக மாற்றி, அழகர் கோவிலைக் காவல் காக்க ஆரம்பித்திருக்கிறார் மலையாளக் கருப்பு. இதனால், அவருடைய பெயரும் பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி’ என்றாகிப் போனது. 

இடி, மின்னல், கடும் மழை, வெள்ளம், கடும் வெயில் போன்ற இயற்கை சீற்றங் களுக்கு பயந்திருக்கிறான் மனிதன். திருட்டு, வழிப்பறி, கொள்ளை  போன்ற தீயவர்களின் கொடுஞ்செயலுக்கும் அஞ்சி நடுங்கியிருக்கிறான். என்னதான் வீரம் இருந்தாலும், இதனை எதிர்கொள்வதற்கான சக்தி வேண்டும் என்றும், தன்னைக் காத்து அருள வேண்டும் என்றும், அதற்கு நீயே துணை நிற்க வேண்டும் என்றும் ஊருக்கு ஊர் கருப்பர் சிலைகளை நிறுவி வழிபாடு நடத்தி வந்திருக்கிறான்.

அத்தனை பயங்களிலிருந்தும் தன்னை விடுவித்து, காத்தருள்வது கருப்பர் போன்ற தெய்வங்கள்தான் என்று முழுமையாக நம்பி வருகிறான். இந்த நம்பிக்கையோடுதான்,  வாழ்க்கையில் தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், தெய்வத்தை வணங்கி,  துணைக்கு
அழைத்த வண்ணம் இருக்கிறான்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :