Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
Logo
ஓம்
ஜூன் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
யாதுமாகி நின்றாள்...
 ................................................................
எமனுக்கு உயிர் தந்த எமதண்டீஸ்வரர்!
 ................................................................
காக்கும் கருப்பர்!
 ................................................................
ஜூன் மாத ராசிபலன்கள்
 ................................................................
கந்தன் அருள் பெற்ற காதர் பாய்!
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
பலியிட்ட ஆடுகளை திவ்ய ரூபத்தில் காட்டிய அப்பய்ய தீட்சிதர்
 ................................................................
தேய்நிலவை வளர்நிலவாக்கிய முசிறி ஈசன்!
 ................................................................
தெய்வங்களுக்கு பலி தருவது ஏன்?
 ................................................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
 ................................................................
கருணை வள்ளல் கந்தவேள்!
 ................................................................
01-06-17மேஷம்

இந்த மாதம் பெரியவர்களையும் முக்கியமான ஆன்மிகவாதிகளையும் சந்தித்து வாழ்த்துப் பெறும் காலம். அதனால் அட்டமச்சனியின் தாக்கம் குறையும். சிலருக்கு இடப்பெயர்ச்சி, தொழில் மாற்றம், உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகளும் நடக்கும். வரவு பெருகும். அதனால் பழைய கடன்களை நிவர்த்தி செய்யலாம். ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்புக்கு இடம் ஏற்படாது என்றாலும், சின்னச்சின்ன பிரச்சினைகள் வந்து விலகலாம். முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் அனுகூலமும் உண்டாகும். குழந்தைகளுக்காக படிப்பு அல்லது சுபகாரியங்களுக்காக சுபச்செலவு செய்யலாம். வாசுதேவநல்லூர் அருகில் தாருகாபுரம் மத்தியஸ்த நாதர் கோவிலில் உள்ள நவகிரக தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

ரிஷபம்


இந்த மாதம் தேக ஆரோக் கியத்தில் தெளிவான நிலை உருவாகும். முழுமையான சுகம் தெரியும். இதுவரை நீங்கள் எடுத்துக்கொண்ட வைத்திய சிகிச்சை பலன் தரும். தொழில்துறையில் அரசாங்க சட்ட திட்டங்கள் உங்களுக்கு எதிராகப் பாய்ந்தாலும், அதை சந்திக்கவேண்டிய விதத்தில் சந்தித்து சாதகமாக்கிக்கொள்ளலாம். குடும்பத்தில் பிள்ளைகளின் ஆர்வம், அக்கறைக்குத் தகுந்த மாதிரி நடைமுறை சீர்திருத்தங்களைச் செய்து அவர்களுக்கு முக்கியத்துவமும் பொறுப்புகளும் தரலாம். சில புதிய தொழில் திட்டங்களையும் செயல்படுத்தலாம். அதற்கேற்ற வங்கிக்கடன் வசதிகளும் பெறலாம். திருவாரூர்- மன்னார்குடி சாலையில் ஐயர் சமாதி எனப்படும் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமியின் ஜீவசமாதி சென்று வழிபடலாம்.

மிதுனம்


எடுத்த காரியங்களைத் தொடுத்து முடிக்கவும், வெற்றியை அனுபவிக்கவும் நல்ல சந்தர்ப்பம் அமையும். ஆகாத போகாத சொத்துகளை விற்று புதிய தொழில்துறையில் முதலீடு செய்யலாம். பழைய கடன்களை அடைக்கலாம். குடும்பத்தில் மங்கள சுபகாரியங்களுக்காக செலவு செய்யலாம். சிலர் வெளிநாட்டு வர்த்தகத் தொடர்புகொண்டு தொழில் விரிவாக்கம் செய்யலாம். பூமி, கட்டடம், வாகனம் சம்பந்தமான வகையில் சுபமுதலீடு செய்யலாம். வெளிநாட்டுப் பயணவாய்ப்பும் திருப்தியளிக்கும். குடும்பத்தில் நிலவிய பூசல்களும் விவகாரங்களும் முற்றுப்பெறும். அமைதியும் ஆனந்தமும் சுற்றி வரும். ஒளிமயமான எதிர்காலம் கண்ணுக்குத் தெரியும். மதுரை திருப்பரங்குன்றத்தில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதியையும், சோமப்பா சுவாமிகளின் ஜீவசமாதியையும் வழிபடவும்.

கடகம்


இந்த மாதம் அதிக பயணங்களும் அலைச்சல்களும் ஏற்பட்டாலும், அதில் மனநிறைவும் திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாகும். மேலிடத்தாரின் பாராட்டுக்கும் சன்மானத்துக்கும் ஆளாகலாம். உங்கள் ஆலோசனைகளுக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்கிறவர்கள் சில களையெடுப்பு நடத்தி நல்ல விசுவாசமான வேலையாட்களை நியமிக்கலாம். நல்ல நேரம் வரும்போது கெட்டவர்கள் விலகுவதும், நல்லவர்கள் வருவதும் காலத்தின் கட்டாயம்- அதிர்ஷ்டத் தின் மறுபக்கம் ஆகும். அதனால்தான் பெரியவர்கள் "ஆகும் காலம் மெய் வருந்த வேண்டாம்- போகும் காலம் கதவை அடைக்க வேண்டாம்' என்றார்கள். திண்டுக்கல் வழி கசவனம்பட்டி சென்று ஜோதி நிர்வாண மௌனகுரு சாமி ஜீவசமாதியை வழிபடவும்.

சிம்மம்


ஜென்ம ராகு உங்களுக்கு சோதனைகளையும் வேதனைகளையும் தந்தாலும் 2-ஆம் இடத்து குரு அதைச் சமாளித்து சாதனை புரியும் ஆற்றலைத் தருவார். மறைமுகப் போட்டியும் பொறாமையும் ஒருபுறம் இருந்தாலும் தனியாளாக நின்று அதை எதிர்கொண்டு வெற்றிபெறலாம். சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரி "பன்றிதான் கூட்டமாக வரும்- சிங்கம் தனியாகத்தான் வரும்' என்பதுபோல தனி ஒருவனாக வெற்றிப் பாதையில் வீறுநடை போடலாம். அதேசமயம் "நல்லா சுமக்கிற மாட்டின் முதுகில் மேலும் இரண்டு மூட்டையை ஏற்று' என்றமாதிரி வேலைப்பளு கூடினாலும், வடிவேலு சொன்னமாதிரி "ரொம்ப நல்லவன்டா- எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா' என்ற பாராட்டும் கிடைக்கும். திருவாரூரில் மடப்புரம் என்ற பகுதியில் தட்சிணாமூர்த்தி சுவாமியின் ஜீவசமாதியை வழிபடவும்.

கன்னி


ஏழரைச்சனி விலகியும் இதுவரை நல்லதை சந்திக்காத கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஒரு திருப்புமுனையாக அமையும். அடுத்த மாதம் ஜூலை கடைசியில் ராகு- கேது பெயர்ச்சியின் நற்பலன் இப்போதே தெரியத் தொடங்கும். "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்பது மாதிரி வைகறை வெளிச்சம் தெரியும். இதுவரை நீங்கள் செய்த வழிபாடு, பூஜைகளுக்கு இனிமேல் நல்ல பலன் கிடைக்கப்போகிறது. அநாவசியமான- ஆடம்பரச் செலவுகளையெல்லாம் வழியனுப்பிவிடலாம். அவசியமான- முக்கியமான தேவைகள் நிறைவேறும். அதற்கான சுபச்செலவுகள் ஏற்படலாம். சிலருக்கு சமூக- ஜாதி சங்கப் பொறுப்புகளில் முக்கியமான பதவி கிடைக்கும். தைரியமாக அதை ஏற்று பொதுப்பணி புரியலாம். அரசியல் கட்சிகளைத் தவிர்க்கவும். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று (சாமியார் கரடு) ஸ்வயம்பிரகாச அவதூத  சுவாமிகளின் ஜீவசமாதியை வழிபடவும்.

துலாம்


ஏழரைச்சனியின்  கடைக்கூறில் (ஆறு மாதம் கழித்து சனிப்பெயர்ச்சி) இருக்கும் துலா ராசிக்காரர்களுக்கு விலகிப்போன சொந்தபந்தம் எல்லாம் விரும்பிவந்து ஒன்றுசேரும் காலம். வெட்டிப்போனவர்கள் வலியவந்து ஒட்டிக்கொள்வார்கள். "மறப்போம் மன்னிப்போம்' என்று நீங்கள் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை', "நீரடித்து நீர் விலகாது' போன்ற பழமொழிகளை நினைவுகூர்ந்து, "இந்த ஜென்மாவில் ரத்தபந்த சொந்தமாகப் பிறந்துவிட்டோம்; அடுத்த ஜென்மாவில் யார் யாரோ' என்று பகைமை விட்டுத் தகைமையோடு இணையப் பாருங்கள். பொருளாதாரத்தில் நிலவிய தட்டுப்பாடு விலகும். தாராளமான பணப்புழக்கம் காணப்படும். கொடுக்கல்- வாங்கலில் நாணயம் காப்பாற்றப்படும். திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் ஓதசுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

விருச்சிகம்


ஜென்மச்சனி விலக இன்னும் ஆறு மாதம் இருக்கிறது. அதைவிட 4-ஆம் இடத்து கும்ப கேதுவும் பத்தாமிடத்து சிம்ம ராகுவும் கடந்த ஒன்றரை வருடகாலமாக, "எடுத்துவச்சாலும் கொடுத்து வைக்கவில்லை' என்றமாதிரி ஏமாற்றத்தைத் தந்த காலம். அடுத்த மாதம் ஜூலை கடைசியில் ராகு- கேது பெயர்ச்சி. அதற்கு முன்னதாக (ஒன்றரை மாதத்துக்கு முன்பிருந்தே) ராகு- கேதுக்கள் உங்களுக்கு அனுதாபம் காட்டி ஆறுதல் காட்டி நல்ல பலன்களைத் தருவார்கள். ஞானசம்பந்தப் பெருமான் பாடியமாதிரி நவகோள்களும் "ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே!'. இழந்த பொருள், இழந்த செல்வம், இழந்த பதவி, இழந்த செல்வாக்கு எல்லாம் மீண்டும் வந்துசேரும் காலம். கும்பகோணம் அருகில் குடவாசல்வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரையும், அங்கு ஜீவசமாதியாக விளங்கும் ராமானந்த பிரம்மேந்திர சுவாமிகளின் ஜீவசமாதியையும் வழிபடவும்.

தனுசு


10-ல் உள்ள குருவும் 12-ல் உள்ள சனியும் வாழ்க்கையிலும் தொழில்துறையிலும் நிம்மதியும் சந்தோஷமும் இல்லாத நிலையை உருவாக்குகிறது. அதேபோல 9-ல் உள்ள ராகுவும் நடக்கக்கூடிய சம்பவங்களை நினைத்து தெய்வங்களின்மீதும் வெறுப்பை ஏற்படுத்துகிறது. அதற்காக நீங்கள் தெய்வ நம்பிக்கை இல்லாத நாத்திகர் அல்ல! பக்தி, விரதம், வழிபாடு, பூஜை என்று எல்லா வகையிலும் அனுஷ்டானம், ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்தான். இருந்தாலும் கிரகங்களின் தாக்கத்தால் எதிர்மறைப் பலன்களாக நடக்கும்போது விரக்தியும் வேதனையும் உண்டாகிறது. என்ன ஜாதகம், என்ன ஜோசியம், என்ன தெய்வம், என்ன பூஜை, என்ன பரிகாரம் என்று வெறுப்பு ஏற்படுகிறது. எல்லாத் துன்பமும் நிரந்தரமல்ல. மாறக்கூடியதுதான். 24 மணி நேரமும் இரவு என்பதில்லையே. பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம்தான். மதுரை மேலூர் வழி- கொட்டாம்பட்டி அருகில் சிங்கம்புணரி சென்று வாத்தியார் அய்யா என்னும் முத்துவடுகநாத சித்தரின் ஜீவசமாதியை வழிபடவும்.

மகரம்


மகர ராசிக்கு 9-ல் உள்ள குரு உங்கள் ராசியைப் பார்ப்பது சிறப்பு என்றாலும், 2-ல் உள்ள கேதுவும் 8-ல் உள்ள ராகுவும் மகிழ்ச்சியைக் கெடுக்கிறது. அமைதி, ஆனந்தத்தை அனுபவிக்க முடியாமல் தடுக்கிறது. குடும்பத்தில் தர்க்கவாதம் ஏற்படுகிறது. பொருளாதாரச் சிக்கல் உண்டாகிறது. சிலருடைய அனுபவத்தில் ஆயிரம் ரூபாய் கடன் வாங்க ஐந்நூறு ரூபாய் செலவுசெய்ய வேண்டியிருக்கிறது. மணம்புரியும் பருவ வயதினருக்குத் திருமணம் தள்ளித் தள்ளிப் போகிறது. திருமணமான தம்பதிகளுக்கு வாரிசு யோகம் தடையாகிறது. படித்துப்பட்டம் பெற்றும் சரியான வேலையும் திருப்தியான சம்பளமும் இல்லாமல் சங்கடம் ஏற்படுகிறது. ஆனால் உணவு, உடை, இருப்பிட வகையில் பஞ்சமில்லை. ஆக்கிவைத்த சாப்பாட்டைக்கூட நேரம் தாழ்ந்துதான் சாப்பிட வேண்டியுள்ளது. எல்லாம் காலத்தின் கோலம். பொன்னமராவதி அருகில் (குழிபிறை பாதையில்) சாதுபுல்லான் சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு குரு 8-ல் மறைவதும், ஜென்மத்தில் கேதுவும் 7-ல் ராகுவும் அமைவதும், "சோதனைமேல் சோதனை- போதுமடா சாமி' என்று பாடவைக்கிறது. "தந்தையோடு கல்விபோகும்; தாயோடு அறுசுவை போகும்; தாரத்தோடு எல்லா செல்வமும் சுகமும் போகும்' என்பார்கள். இவற்றையெல்லாம் குரு, ராகு- கேது செய்கிறார்கள் என்பதோடு, 10-ஆம் இடத்து சனியும் பதிகுலையச் செய்கிறது. தொழில் இருந்தும், வருமானம் இருந்தும் எதுவும் இல்லாத நிலை. பலருடைய அனுபவம் துடுப்பு இல்லாத படகு காற்றடித்த பக்கமெல்லாம் போவதுபோல நிலையில்லா வாழ்க்கை, நிம்மதியில்லாத நாட்கள். அதேசமயம் ஊருக்கு மணக்கும் தாழம்பூவாகத்தான் இருக்கிறீர்கள். ஊதுபத்தியும் சந்தனமும் மெழுகுவர்த்தியும் தன்னை அழித்துக்கொண்டு மற்றவர்களுக்குப் பயன்படுவதுபோல வாழ்கிறீர்கள். பொன்னமராவதி அருகில் செம்பூதியில் தம்பதி சகிதமாக ஜீவசமாதியாக உள்ள செம்பூதி சித்தரை வழிபடவும்.

மீனம்


மீன ராசிக்கு 7-ல் ராசிநாதன் குரு நின்று ராசியைப் பார்க்கிறார். குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அமைகிறது. குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் இடம்பெறும். சிலருக்கு குடியிருப்பு மாற்றம், சிலருக்கு வேலை, உத்தியோகம், தொழில்துறையில் மாற்றம் ஏற்படலாம். 12-ல் கேது, 6-ல் ராகு. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கடன் வாங்கும் கட்டாயம் ஏற்படுத்தும். சில காரியங்களில் மனதில் அற்புதமான திட்டங்கள் உருவாகும். ஆனால் அதை நிறைவேற்றுவதில் குழப்பம், தயக்கம், தடை, தாமதம் ஏற்படும். உங்களுக்கு சரியெனப்படுவது மற்றவர்களுக்குத் தவறாகப்படலாம். அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாக இருக்கலாம். நீங்கள் எதிர்காலத்தை நினைத்து சிந்திப்பீர்கள். மற்றவர்கள் நிகழ்காலத்தை நினைத்து தடைப்படுத்துவார்கள். பொள்ளாச்சி அருகில் புரவிபரளையம் சென்று கோடிச்சாமி ஜீவசமாதியை வழிபடவும்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :