Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
Logo
ஓம்
ஜூன் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
யாதுமாகி நின்றாள்...
 ................................................................
எமனுக்கு உயிர் தந்த எமதண்டீஸ்வரர்!
 ................................................................
காக்கும் கருப்பர்!
 ................................................................
ஜூன் மாத ராசிபலன்கள்
 ................................................................
கந்தன் அருள் பெற்ற காதர் பாய்!
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
பலியிட்ட ஆடுகளை திவ்ய ரூபத்தில் காட்டிய அப்பய்ய தீட்சிதர்
 ................................................................
தேய்நிலவை வளர்நிலவாக்கிய முசிறி ஈசன்!
 ................................................................
தெய்வங்களுக்கு பலி தருவது ஏன்?
 ................................................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
 ................................................................
கருணை வள்ளல் கந்தவேள்!
 ................................................................
01-06-17


வைகாசி விசாகம் 7-6-2017

முருகப் பெருமானின் திருஅவதாரம் நிகழ்ந்த நாள் வைகாசி விசாகம். அழகானவன் என்பதால் முருகன். ஆறு உருவங்கள் ஓருருவானதால் அவன் கந்தன். கந்தன் என்னும் சொல்லுக்கு ஆதாரமானவன்; பற்றுக்கோடாக உள்ளவன் என்னும் பொருளும் உண்டு.

முருகனின் அருளைப்போலவே, அவனது அடியார்கள் பாடிய பாடல்களும் சக்திவாய்ந்தவை. அவற்றுள் காவடிச் சிந்தும் ஒன்று. அதைப் பாடி முருகனை வேண்டி ஒரு முஸ்லிம் அருள்பெற்ற நிகழ்வும் உண்டு. கந்த பக்தர்கள் அநேகம். பக்தி ஈடுபாட்டுக்கு இனம், மதம், ஆண், பெண் என்று எந்த பாகுபாடும் இல்லை. எனவேதான் பாரதியார்,

"அல்லா என்பார் சில பேர்கள்
அரன் அரி என்பார் சில பேர்கள்
வல்லான் அவன் பரமண்டலத்தில்
வாழும் தந்தை என்பார்கள்
எல்லாரும் இப்படிப் பேச
ஏதோ ஒரு பொருள் உளதே
வந்திப்போம் அதை வணங்கிடுவோம்'

என்று பாடியுள்ளார்.

கபீர்தாசர்- முகம்மதியரால் வளர்க்கப் பட்டவர்; ராமரைப் பாடினார். ராம், ரஹீம் இருவரும் ஒன்றே என்றார்.

மொகலாயப் பேரரசர் அக்பர் குமரகுருபர ஸ்வாமிகளுக்கு காசியில் மடம், கோவில் கட்ட நிலம் வழங்கினார்.

இரண்டு ஆங்கிலேய கலெக்டர்கள்- மதுரை மீனாட்சி, பவானி யம்மன் தரிசனம் பெற்றனர்.

சீரடி சாயி, பாபாவை "சாயிராம்' என்போம். அவர் மசூதியில் வசித்தவர்.

சமாதியான ராகவேந்திர ருடன் ஆங்கில கலெக்டர் பேசியுள்ளார்.

திருத்தணிகை மலை படிவிழா நாள் இரவு முகம் மதிய குழாம் திருப்புகழ் பாடுகிறார்கள். தினமும்
பூஜா காலங்களில் முஸ்லிம் மக்கள் வாத்தியம் இசைக் கும் வாத்திய மண்டபம் உள்ளது. காதர் என்ற நவாப் தனது பெயரால் இந்த மண்டபத்தையும், காதரீஸ் வரர் என்கிற சிவாலயமும் அமைத்துள்ளார்.

முருகனுக்கு காவடி எடுப்பது ஒரு பிரார்த்தனைக் கடன். தைப்பூசம், ஆடிக் கிருத்திகை, கந்தர் சஷ்டி, வைகாசி விசாகம் என்றால் முருகனுக்கு நேர்த்திக்கடனாக பலரும் காவடி எடுப்பார்கள். அலகு குத்தியும் எடுப்பார்கள். அச்சமயம் மேளதாளத்துடன் "காவடிச்சிந்து' என்ற பாடல்களையும் பாடுவார்கள்.

காவடிச்சிந்து பாடல்களை இயற்றியவர் அண்ணாமலை. (1860-91). அவரது தந்தை ஒரு மிராசுதார். தன் மகன் நிலபுலன்களில் பணம் ஈட்டுவதில் ஆர்வமின்றி பாடல்கள் பாடிக்கொண்டிருக்கிறானே என்று வருந்தி, அடிக்கடி அண்ணாமலையை திட்டவும் செய்வார்.

அண்ணாமலை சிறுவயதில் படிப்பில் சுட்டி என்றாலும், வயது ஏற ஏற கழகுமலை முருகன் அருளால் காவடிச்சிந்து பாடல்களைப் புனைந்து பாடினார். சுந்தர அடிகளிடம் இலக்கிய நூல்கள் படித்தார்.

அவர் அண்ணாமலையாரிடம், ""உன்னை அரசனிடம் அழைத்துப்போகிறேன். அவர் பெரிய கவிஞர். கம்பராமாயணம், வில்லி பாரதம் எல்லாம் ஆழ்ந்து படித்தவர். அவர்மீது ஒரு பாடல் எழுது'' என்றார். அண்ணாமலையாரும் எழுதினார்.

அந்தப் பாடலைக் கண்டு வியந்த எட்டுக்குடி அரசர், இந்த இளைஞனா இதை எழுதியிருப்பான் என்று ஐயம் கொண்டார். எனவே, "காரிகை' என்னும் ஒரு சொல்லே ஏழு இடங்களில் வெவ்வேறு பொருள் தருமாறு அகப்பொருள் அமைத்துக் கட்டளைக் கலிப்பா ஒன்றை இயற்றச் சொன்னார்.

மிக விரைவிலேயே அற்புதமான கவிதை எழுந்தது. அரசர் வியந்தார். அவையில் இருந்தவர்களும் வியந்தனர். அடுத்து "கத்தரிக்காய்' என்று தொடங்கும் யமகச் செய்யுள் ஒன்று, கழுகுமலைக் கந்தன்மீது கட்டளைக் கலித்துறையில் பாடச்சொன்னார். கழுகுமலை யானைத் துதிக்க, கவிதை மழை பெய்தது. ஆக, ஒன்றுக்கும் உதவாதவன் என்று தகப்பனாரால் ஏசப்பட்டவன் இப்போது "கவிராஜ அண்ணாமலையான்' ஆனார். மருதப்ப தேவர் அரசில் ஆஸ்தான கவிஞரானார்.

அரசர் உதவியால் இலக்கண நூல்கள் பல கற்று, கல்லாடச் சாமியாரிடம் "கல்லாடப் பாடம்' கற்றார். "கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே' என்பது பழமொழி. திருவாவடுதுறை ஆதீனத்தில் இசை பயின்றார்.

மருதப்ப தேவர் வேண்ட, கழுகுமலை முருகன்மீது காவடிச் சிந்துகள் பாடினார். பாடலுக்கேற்ப மருதப்பரே காவடி எடுத்து ஆடிப்பாடி, மேன்மேலும் காவடிச்சிந்துகள் பாடுக என்று ஊக்குவித்தார். அண்ணாமலையாரின் பாடல்கள் காவடியெடுக்கும் பக்தர்களுக்கு பக்தியைப் பெருக்கி,

மெய்சிலிர்த்து ஆவேசத்துடன் ஆடவைத்தது.

"கழுகுமலை வாழ்ந்து வரும் வேலா
            -கதிர் வேலோ
காக்கக் கடவிய நீ வா வா
            -இங்கு வா வா
ஊற்றுமலை அரசர் உன்னைக்காண
ஓடோடி வந்து உன் சன்னிதிசேர-
அருள்வாயே- நீ அருள்வாயே'
வள்ளிக் கிசைந்த முருகேசன்- அண்ணா
மலைக் கவிராஜன் மகிழ்நேசன்- என்றும்
வாழும் கழுகுமலை வாவிவளம்-
சொல்லுவேன் மாதே
கேள்- இப்போதே.'

இத்தகைய பாடல்கள் பக்தர்கள் யாவரையும் ஈர்த்தன.

காதர் என்கிற முகம்மதியரையும் மிக ஈர்த்தது. அந்த வரலாற்றைக் காணும்முன் கழுகுமலைக் கந்தனை தரிசித்துவிடுவோம்.

கழுகுமலை முருகன் ஆலயம் ஒரு குடைவரைக் கோவில். அதாவது மலைப்பாறையைக் குடைந்து வடிவமைக்கப் பட்டது. இங்கு முருகப் பெருமான் ஒருமுகம், ஆறு திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்துள்ளார். வேறெங்கும் காணக் கிடைக்காத அற்புதக் கோலம். வள்ளி, தெய்வானையும் அருள்புரிகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில் அருகே உள்ள இத்தலத்துக்கு கழுகாசலம், குருகுமலை, க்ருத்ரகிரி எனும் பெயர்களும் உண்டு.

நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னன் இங்கே சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றதாகவும், அதனால் இது கழுகுமலை என்று பெயர் பெற்றதாகவும் சிலர் கூறுகின்றனர்.

உவன வனம், உவனகிரி என்றும் கூறுவர். உவனம் என்றால் கழுகு. இவ்வாலயத்தை வலம்வர வேண்டுமென்றால் மலையையே சுற்றவேண்டும். சமணர்கள் தவம் செய்த குடைவரைகளையும் காணலாம்.

பின்புறம் "வெட்டுவான் கோவில்' குடைவரைக் கோவில் உள்ளது. ஆனால் அது முற்றுப்பெறவில்லை. இதற்கு ஒரு விநோத வரலாறும் உண்டு. அதாவது கழுகுமலை முருகன் ஆலயத்தைச் செதுக்கிய வர் கைதேர்ந்த சிற்பி. அவரது மகனும் சிற்பி. அவன் தந்தைக்குத் தெரியாமல் அருகே ஒரு கோவிலை செதுக்கிவந்தான். ஒருநாள் எதேச்சையாக இதைப் பார்த்துவிட்ட சிற்பி, தன் மகனின் கலைத்திறன் கண்டு பெருமைகொள்ளாமல், தனக்கு மிஞ்சியவனா என்னும் ஆத்திரத்தில் மகனைக் கொன்றுவிட்டான். பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டான் என்று சொல்லப் படுகிறது.

கழுகுமலை தலத்தில் சிவ- பார்வதி அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது அற்புதம்.

தட்சிணாமூர்த்தி மிருதங்கம் வாசிக்கும் கோலமும் அபூர்வம்! மேற்கே நரசிம்மர், வடக்கே பிரம்மா காட்சிதருகின்றனர். அர்த்த மண்டபத்தில் வீரபாகுவும், வீரமகேந்திரரும் துவார பாலகர்களாக கம்பீரமாக நிற்கிறார்கள்.

ஆம்பல் ஊருணியும் ஸ்கந்த புஷ்கரணியும் தல தீர்த்தங்கள்.

இத்தலத்தைப் பற்றி அருணகிரியார் மூன்று திருப்புகழ் பாடியுள்ளார். சில அடிகள் ரசிப்போமா...

"கழுகுமலை மாநகர்க்குள் மேவிய பெருமாளே.'

"வெற்றித்திருக்கை வேலவ கழுகுமலைக்கும் சிறக்க மேவிய பெருமாளே.'

"வேண்டும் அடியார் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவியுதவும் பெருமாளே.'

முத்துஸ்வாமி தீட்சிதர் இந்தத் தலம் வந்து முருகனை தரிசித்து "ஸுப்ரமண்யேன ரக்ஷிதோஹம்' என்று சுத்த தன்யாசி ராகத்தில் பாடியுள்ளார்.

இப்போது காதர் பாட்சா கதைக்கு வருவோம். காதர் ஆர்மோனியம் வாசிப்பவர். பாடிக்கொண்டே வாசிப்பார். அண்ணாமலையாரின் காவடிச்சிந்துப் பாடல்கள் என்றால் மெய்ம்மறந்து உரத்த குரலில் பாடுவார். தெருக்கூத்துகள், திருவிழாக்கள் சமயம் மகிழ்ந்து நெகிழ்ந்து பாடுவார். மக்கள் ஆர்வத்துடன் ரசிப்பார்கள்.

ஒருசமயம் துரதிர்ஷ்டவசமாக ஒரு கொலைக் குற்றத்தில் சிக்கிக்கொண்டார் அவர் குற்றம் செய்யவில்லை என்றாலும் சந்தர்ப்ப சூழ்நிலை அவருக்கு எதிராக இருந்தது. நீதிபதி அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துவிட்டார். காதர் முருகனை எண்ணி கண்ணீர் மல்கவேண்டினார். நெஞ்சுருகப் பாடினார். வள்ளி, தேவசேனையிடம், "எனக்கு கருணை காட்டுமாறு நீங்களாவது அய்யனிடம் சொல்லக்கூடாதா' என்று உருகினார். (அதன்படியே வள்ளி, தெய்வானை முருகனிடம் கேட்க, "அவனது வினை இரவு ஏழு மணிவரை உள்ளதே... நான் என்ன செய்ய?' என்றாராம்.)

இரவு ஏழு மணிக்கு தூக்கிலிட வேண்டும் என்பது தீர்ப்பு. முன்னதாக அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. சட்டத்தின்படி,

""உனக்கு ஏதாவது கடைசி விருப்பம் உண்டா?'' என்று கேட்டனர். ""ஐயா, நான் முருக பக்தன். ஆர்மோனியம் வாசித்து காவடிச் சிந்து பாடுபவன். அதைச் செய்வதே என் கடைசி ஆசை'' என்றார் காதர். அவரது உறவினர் கள் அங்கு வந்திருந்தனர். ஆர்மோனியமும் கொண்டு வந்திருந்தனர். காதரின் கடைசி விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆர்மோனியம் வாசித்துக்கொண்டே முருகனைத் துதித்து உருகிப் பாடிக்கொண்டே இருந்தார்.

சிறை அதிகாரிகள், வந்தவர்கள், வழக்கறி ஞர் என அனைவரும் அந்த நாத வெள்ளத்தில் தங்களை மறந்து சிலையானார்கள்.

கடைசியாக-

"உள்ளம் மெல்ல மெல்ல முருகனென்று
நினைந்து உருகுதே
முத்தங்கருகுதே கண்ணீர் பெருகுதே'

என்று உருகிப்பாடி, ஆர்மோனியம்மீது கண்ணீருடன் மயக்கமுற்று சாய்ந்தார்.

அப்போதுதான் அனைவரும் சுயஉணர்வு பெற்றனர். அடுத்த காரியங்களை செயல்படுத்த நினைத்து நேரம் பார்த்தால் இரவு எட்டு மணி! பாடலில் மூழ்கி நேரம் போனதையே அனைவரும் மறந்துவிட்டனர்.

தூக்கு போடுவதற்கு குறிக்கப்பட்ட நேரம் கடந்துவிட்டது. எட்டு மணிக்குப் போடுவது சட்ட விரோதம். எனவே தண்டனை நிறுத்தப்பட்டது. பின்னர் விசாரித்து நிரபராதி என்று விடுதலையும் செய்தனர்.

ஆழ்ந்த பக்தனை அருள்புரியாமல் கைவிடுவானா கந்தன்!

கழுகுமலைக் கந்தன்மீது அழுது உருகிப் பாடிய காவடிச்சிந்து பாடல்கள் காதரைக் காத்ததில் அதிசயமில்லையே!

கந்தன் கருணைக்கு எல்லை உண்டோ!தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :