Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
Logo
ஓம்
ஜூன் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
யாதுமாகி நின்றாள்...
 ................................................................
எமனுக்கு உயிர் தந்த எமதண்டீஸ்வரர்!
 ................................................................
காக்கும் கருப்பர்!
 ................................................................
ஜூன் மாத ராசிபலன்கள்
 ................................................................
கந்தன் அருள் பெற்ற காதர் பாய்!
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
பலியிட்ட ஆடுகளை திவ்ய ரூபத்தில் காட்டிய அப்பய்ய தீட்சிதர்
 ................................................................
தேய்நிலவை வளர்நிலவாக்கிய முசிறி ஈசன்!
 ................................................................
தெய்வங்களுக்கு பலி தருவது ஏன்?
 ................................................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
 ................................................................
கருணை வள்ளல் கந்தவேள்!
 ................................................................
01-06-17
பாமரர்களை வழிப்படுத்த கதைகள் சொல்லி, கடவுளுக்கு உருவம் கொடுத்து இந்து மதம் மிகக் கரிசனமாக வளர்த்திருக்கிறது. உன்னையே நீ அறிவாய் என்பதும், தத்வமஸி என்பதும் ஒரே விஷயம். அகம் பிரம்மாஸ்மி என்பது மிக கனமான விஷயம். இவற்றைப் புரிந்துகொள்ள நிச்சயம் முடியாது. இவை வெறும் வார்த்தைகளாக நிற்கும்.

எனவேதான் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். நல்ல ஒழுக்கத்தைத் தர, அமைதியைத் தர, மற்றவர்களோடு நல்ல உறவு ஏற்படுத்திக்கொள்ள இந்த கதைகள், நீண்ட காவியங்கள் நமக்கு உதவி செய்கின்றன. விதம்விதமான மனிதர்களை, விதம்விதமான பிரச்சினைகளை இந்த காவியங்கள், மகாபாரதம் போன்றவை நமக்குக் காட்டுகின்றன. திரும்பத் திரும்ப மகாபாரதத்தில் வரும் பிரச்சினைகளே நமக்கும் வருகின்றன.

எத்தனை வலிவுள்ளவராக இருந்தாலும், எவ்வளவு உயரிய இடத்தில் பிறந்தாலும், எத்தனை செல்வச் செழிப்பில் வாழ்ந்தாலும் அனுபவிக்க வேண்டிய துக்கத்தை அனுபவித்துதான் கழிக்கவேண்டும் என்கிற கட்டளையைத் தெளிவாக இந்தக் காப்பியங்கள் சொல்லித் தருகின்றன.

தன்னை அறிந்தபிறகு, கடவுள் என்பது எங்கே என்ற கேள்வி அழிந்த பிறகு எல்லா சடங்குகளும் வெறும் விளையாட்டுகள்தான். வாழ்க்கை எந்த அர்த்தமும் இல்லாமல் வெறுமே வாழவேண்டிய ஒரு விஷயம்தான் என்பது புரிந்துவிடும். பற்று அறுந்துவிடும். எவரோடும் ஈடுபாடு கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்படும். அப்பொழுது எல்லாரோடும் ஈடுபாடு ஒரேவிதமாகக் கொள்ள முடியும்.

ஆசைகள் என்பது துறப்பதான விஷயமல்ல. ஆசைகள் இறக்க வேண்டும். ஆமாம். ஆசைகள் உச்சி நிலையில் தானாக மரணம் அடைந்துவிடும். அந்த வாழ்க்கையே மரணமடைந்த வாழ்க்கையாகத்தான் இருக்கும். செத்தாரைப்போல திரி என்று சொல்லப்பட்டிருக்கிறது. செத்தாரைப்போல திரி என்பதுதான் கடைசி விஷயம். அதற்கு முன்னால் வாழ்கின்ற வாழ்க்கையை, மனைவியோடு இணக்கமாக இருப்பதை, மகனைப் பிரியமாக நேசிப்பதை, மகளைக் கண்ணுக்குள் வைத்துக் காப்பதை, பேரக்குழந்தைகளோடு எந்தக் கோபமும் இன்றி இனிமையாக, பொறுமையாக, மிகுந்த சகிப்புத்தன்மையோடு இருப்பதை என்று வாழ்ந்துவிட முடியும். இதுதான் வாழ்க்கை என்பது புரியும். இது மெல்ல மெல்ல செத்தாரைப் போலத் திரி என்ற இடத்திற்கு அழைத்துப்போகும். வாழ்க, ஓழிக, இவன் உயர்வு, அவனோ தாழ்வு என்கிற அபத்தங்கள் எல்லாம் இல்லாது போகும். எல்லா எல்லைக்கோடுகளும் உடைபடும்.

"என் சமயமே சமயம். சேர வாரீர் ஜகத்தீரே' என்பது காணாமல் போகும். "உலகம் முழுவதும் இஸ்லாமாக மாற்றப் படவேண்டும். அதுவே உங்கள் வேலை' என்ற குரூரம் முற்றிலும் ஒழிந்து போகும். எந்த மதமும், எந்தக் கொள்கையும் முழுமையானது அல்ல. தனி ஒரு மனிதரால் தோற்றுவிக்கப்பட்டு பல்வேறு கோணல்களுக்கு ஆளாகி ஏதோ ஒரு ரூபம் வந்து சேர்ந்திருக் கிறது. இதுதான் பிள்ளையார் பிடிக்க குரங் காய் இருப்பது.

நல்ல பிள்ளையாரை, யானை வாகனத்தைச் செய்ய முற்பட்டு அது பல்வேறு கைகள் பட்டு அந்த பொம்மை குரங்காக இருக்கிறது. இதுதான் இன்றைய உலக வாழ்க்கை. குரங்கு வாழ்க்கை.

அந்த குரங்கு வாழ்க்கையிலிருந்து உலகத்தை சீர்செய்ய இம்மாதிரி உயர்ந்த ஞானிகளால்தான் முடியும். அந்த ஞானிகள் நாடிசுத்தி செய்திருப்பர். அந்த ஞானிகள் குண்டலினி சக்கரம் விழிப்படைந்திருப்பர். அந்த ஞானிகள் செத்தாரைப்போல திரிந்திருப்பர்.

அவர்களுடைய பேச்சும், அவர் களுடைய சொல்லும், அவர்களுடைய செய்கையும், அவர்களுடைய விஷயங்களும் மிகச்சரியாக மனிதர்களிடம் போய்ச் சேர்ந்தால் இந்த உலகம் அமைதியடையும். அமைதியற்ற இந்த உலகத்திற்கு அவ்வப்போது ஞானிகள் தோன்றி அமைதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையை அறிந்தோர் உரக்க அதைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

உண்மை அறியாத அவருடைய வம்சாவளியினர் அல்லது சீடர்கள் இந்த விஷயத்தை சொந்த உபயோகத்திற்காக எடுத்து, அதை குறுக்கு நெடுக்காக, கிழித்துப் போட்டிருக்கிறார்கள். இது தொடர்ந்து நடக்கும். ஞானிகள் தோன்றுவதும், அந்த ஞானிகள் சொன்ன வாக்கியங்களைக் குப்பையில் புதைப்பதும் மிகமிக வேகமாகவும், தொடர்ச்சியாகவும் நடைபெறும். இதுதான் உலகம்.

இந்த உலகத்தைப் புரிந்துகொள்ள, இந்த உலகத்தின் வேதனையிலிருந்து தப்பிக்க உங்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை. ஆடல் பாடல் பஜனைகளும், மந்திர உபதேசங்களும், ஹோமங்களும், யாகங்களும், கோவில்களும், கும்பலாக ஓடிப்போய் தொழுவதும் வெகு நிச்சயம் உங்களைக் காப்பாற்றாது. இதே வேதனையில்தான் மறுபடி மறுபடி ஆழ்ந்திருக்கும்.

உங்களை உணர நாடிசுத்தி மட்டுமே மிகச்சரியான விஷயம். நாடிசுத்தியில் கால்வைத்து வெகுதூரம் பயணப்பட முடியும். அந்த வழி மிகக்கடினமான வழி. அந்த வழி சறுக்கல் பாதை. அந்த வழியில் உள்ளே புகுந்துவிட்டு சறுக்கி குப்புற விழுந்தவர்கள் பலபேர் உண்டு. மிகமிக நிதானமாக, எந்த எதிர்பார்ப்பும் இன்றி, எந்தவித ஆத்திர அவசரமும் இன்றி, எந்தவித குறிக்கோளும் இன்றி, அந்த நிலையில் இருப்பதை மட்டுமே மனதிற்கொண்டு அவ்வழி நடக்கவேண்டும்.

இப்படி குண்டலினி எழுப்பினால் மற்ற வாழ்க்கை தெரியும் என்பதால், அதை வைத்துக்கொண்டு காசு பணம் சம்பாதிப்பவன் அடி வாங்கித்தான் செத்திருக்கிறான்.

சிறிதளவு பேச்சு சாமர்த்தியம் இருப்பதால் ஒருவர் ஞானியாகி விடமுடியாது. குருஜி ஆகிவிட முடியாது. அது காசு சம்பாதிக்கிற கணக்காயர் வழிதான். "அவன்கிட்ட காசு வாங்கி இதுல போட்டு', இதுலேர்ந்து இருக்கிற காசை அதில் போட்டு, என்று மிகப்பெரிய வியாபாரியாக- ரத்தக் கொதிப்பு உடையவராக இருக்கத்தான் முடியும்.

நாடிசுத்தி மிகப்பெரிய சந்துஷ்டி. நாடிசுத்தி ஒரு சமாதானம். நாடிசுத்தி ஒரு அடக்கம். நாடிசுத்தி ஒரு பிரமிப்பான சூட்சுமம். நாடிசுத்தி வேறு உலகம். இந்த உலகத்தை அந்த உலகத்திற்குப் போனால் தான் ஆட்சி செய்யமுடியும். இடையறாது இடையறாது நாடிசுத்தி செய்யுங்கள். என்ன பலன். தானாக வரும். நீங்களாக எதையும் தேடாதீர்கள். வெற்றி உங்களுக்கே. வாழ்க. வாழ்க. வாழ்க.

"எல்லாராலும் நாடிசுத்தி பண்ண முடியாதுங்கறதாலதான் பஜனையும், பாட்டும், லட்சார்ச்சனையும், ஹோமமும் வச்சுருக்கா' என்று சிலர் உடனே வியாக்யானம் செய்யலாம். பசித்தழும் குழந்தைக்கு கிலுகிலுப்பைக்  காட்டினால் பசி போகுமா, அழுகை நிற்குமா. சிறிது நேரம் வியக்கும். மறுபடி பசித்தழும். மனிதருக்கு நாடிசுத்தியே நல்ல உணவு.

அதுவே போஷாக்கு. கிலுகிலுப்பைகள் அல்ல.

ஹடயோகம் சொல்லிக் கொடுப்பவரால் ஆரம்ப பயிற்சிக்காக நாடிசுத்தி சொல்லித் தரப்படும். மற்ற நிமிர்த்தி நீட்டல்களில், வளைதல்களில் முக்கியத்துவம் காட்டப்படும். ஹடயோகம் கற்கலாம்.

ஆனால் மூச்சுக் காற்றே முக்கியம். மூச்சின்மீது சிந்தனை வைத்தலே முக்கியம். மூச்சின் உள்ளிழுத்தலும், வெளியேற்றுதலும் கவனிக்க, அருகே இருக்க மனம் விழிப்படை யும். அதன் இருப்பு புரியும். மனதின் இருப்பு புரிந்தால்தான் அதைக் கையாள முடியும்.

அமைதியாக்க இயலும். குடலை கவனித்தலும், குறுக்கெலும்பை கவனித்தலும், கழுத்தில் மனம் நிற்றலும் உச்சம் தொடாது. மனம் அடக்காது.

ஒரு நேரத்தில் நாடிசுத்தி செய்கிறோம் என்பது மறந்து மனம் மனதில் லயிக்கத் துவங்கிவிடும். மனம் மனதை கவனிக்கத் துவங்கிவிடும். மனதை கவனித்தலே மனம் அடங்கச் செய்யும் வித்தை.
கவனிக்கப்படுகிறோம் என்பதாலேயே மனம் சுருங்கத் துவங்கும். உள்மனம் வெளியேறி நிற்கும். மனம், உள்மனம் இரண்டும் ஒன்றே. அதென்ன மனம், உள்மனம்?

இவன் தம்பி, அவள் அக்காள் என்று மனம் இனம் கண்டு கொள்கிறது.

அதே நேரம் எந்த உறவும், அனுபவமும் பார்த்ததாக இல்லாமலும் சில விஷயங்கள் மனதில் தோன்றும். கலைடாஸ்கோப்போல ஏதோதோ சித்திரம் வரும். யோசிக்க ஒன்றுமில்லாதபோது மனம் அமைதியடைய விரும்பாமல் செய்யும் கூத்து இது. இதையும் உற்று கவனிக்க மனம், உள்மனம் சுருங்கும்.

மனமற்ற இடம், சிந்தனையற்ற நிலை, இல்லாதுபோன தன்மை ஏற்படும். இந்த இடம் புரிந்துபோனால், இந்த வெறுமையிலிருந்து, பற்றற்ற ஒரு இடத்திலிருந்து, காரண காரியமில்லாத இந்தத் தன்மையிலிருந்து ஒரு எண்ணம் உண்டாகும். அது எண்ணங்கள் கூட அல்ல. ஒரு ஸ்திதி. தம்பூரா மீட்டல்போல அலையலையாக வாழ்வு பற்றி விவரம் வெளியாகும். எண்ணப்படுவது எண்ணம். அதற்கு நோக்கமுண்டு. நோக்கமின்றி ஏதும் வந்தால்...

இது தோன்றுதல், உதித்தல், வெளிச்சம். இதற்குமேல் இதை வார்த்தையாக்க முடியாது.

முன் பின்- மேல் கீழ் எல்லாம் ஒரு வீச்சில் புரியும். படிப்படியாக அல்ல. ஒரு வீச்சில். இருட்டான அறையில் குபீரென்று வெளிச்சம் பரவுவதுபோல சகலமும் தெரியும்.

தெரிந்து என்ன செய்ய.

அப்போது வேறு வாழ்வு. வேறு நிலை. உண்ணலும், உடுத்தலும் நோக்கமின்றி நடக்கும். உயிர் வாழ உணவு, உலகை வெட்கப்படுத்தாத உடை. சுத்தமும் சுத்தமில்லாததும் ஒன்றே ஆகும்.

இது சும்மா இருத்தல். செத்தாரைப்போல திரிதல்.

இது ஆரம்பம். இதற்கப்பாலும் போக இடமுண்டு.

முதலில் ஆரம்பிப்போம்.

(முற்றும்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : karthik Date & Time : 6/30/2017 3:14:48 PM
-----------------------------------------------------------------------------------------------------
முற்றும் என முடிந்தாலும் , என் வாழ்க்கை புதிய பாதையில் பயணத்தை ஆரம்பிப்பதை உணர்கிறேன் . தங்களுக்கு இந்த தமிழ்வாசிப்பு உலகம் நன்றி கடன் பட்டிருக்கிறது . கண்டவன் சொன்னதில்லை - சொன்னவன் கண்டதில்லை - என்ற மொழிக்கு மாறாக நீங்கள் கண்டதை .....மிக மிக மிக தெளிவாக , எளிமையாக எங்களுக்கு அனைத்தையும் புரிய வைத்தமைக்கு கோடானு கோடி நன்றிகள் . மிகுந்த நன்றிகளுடன் , கார்த்திகேயன் சிங்கப்பூர்
-----------------------------------------------------------------------------------------------------