Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
Logo
ஓம்
ஜூன் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
யாதுமாகி நின்றாள்...
 ................................................................
எமனுக்கு உயிர் தந்த எமதண்டீஸ்வரர்!
 ................................................................
காக்கும் கருப்பர்!
 ................................................................
ஜூன் மாத ராசிபலன்கள்
 ................................................................
கந்தன் அருள் பெற்ற காதர் பாய்!
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
பலியிட்ட ஆடுகளை திவ்ய ரூபத்தில் காட்டிய அப்பய்ய தீட்சிதர்
 ................................................................
தேய்நிலவை வளர்நிலவாக்கிய முசிறி ஈசன்!
 ................................................................
தெய்வங்களுக்கு பலி தருவது ஏன்?
 ................................................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
 ................................................................
கருணை வள்ளல் கந்தவேள்!
 ................................................................
01-06-17
ங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகள் பாடிய பாடல்களுள் மிகவும் புகழ்பெற்ற பஞ்சரத்ன கீர்த்தனைகள் ஒன்றில்-

"எந்த ரோ மஹானுபா வுலு
அந்தரிகி வந்த னமுலு'-

"உலகில் எத்தனையோ மகான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்' என்கிற பொருளில் பாடியுள்ளார்.

அறியாமை எனும் இருளை அகற்றி, அகத்தில் அருள் நெறியான ஞானத்தை சுடர் விட்டுப் பிரகாசிக்க பரமசிவனின் அவ தாரமாக இப்பூவுலகில் உதித்த பிரம்ம ஞானிதான் ஆதிசங்கரர். அவருக்குப் பின்பு அவர் காட்டிய அத்வைத வேதாந்த சித்தாந்தத்தைத் தழுவி பல ஞானிகள், மகான்கள் உலக நன்மைக்காக திருப்பணிகளைச் செய்தனர். அவர்களுள் ஒருவர்தான் அப்பைய தீட்சிதர். வேதாந்தம், தர்க்கம், மீமாம்சை முதலிய சாஸ்திரங்களில் பண்டிதரான இவர் பல நுல்களை எழுதியது மட்டுமின்றி, தமது தவ வலிமையால் பல அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்டியவர்.

இவரது காலத்தை நிர்ணயம் செய்வதில் வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், கி.பி. 1520-1598 என்பதே பொதுவாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. தொண்டை மண்டலப் பகுதியில் 16-ஆம் நூற்றாண்டில், தற்போதுள்ள ஆரணி (வடஆற்காடு) அருகேயுள்ள சிறிய கிராம மான அடையப்பலம் எனும் ஊரில், வேத பண்டிதரான வச்சஸ்தலாச்சாரியார் என்பவர் வாழ்ந்துவந்தார். இவர் சிறந்த கணபதி உபாசகர். சைவ நெறியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பக்திமான்.

விஜய நகரப் பேரரசில் அன்றைய மன்னரான கிருஷ்ணதேவ ராயர் (1509-1530) அரசவையில் ஆஸ் தான வித்வானாக இவர் இருந்தார். கிருஷ்ணதேவராயர் வைணவராயினும், சைவர்களிடம் அதிகப்பற்றும் மதிப்பும் வைத்திருந்தார். பண்டிதர் வச்சஸ் தலாச்சாரியாருக்கும் சைவம் (ஸ்மார்த்தா), வைணவம் (வைஷ்ணவம்) என்னும் பாகுபாடில்லாத காரணத் தால், சந்ததி வேண்டி வைணவப் பெண்ணை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொண்டார். வைணவப் பெண்ணின் மூலம் பிறந்த தனது மகனுக்கு ரங்கராஜாத்வரி என்று பெயர் சூட்டினார். இவரும் அத்வைத சித்தாந்தத்தில் சிறந்த பண்டிதராவார். இவர் "அத்வைத வித்யா முகுர விவரணப்ராகசம்' என்கிற அற்புதமான நூலை எழுதியுள்ளார்.

விஜயநகரப் பேரரசில் தலைக்கோட்டை போருக்குப் பின்பு ஆங்காங்கு சிற்றரசர்கள் பலர் தோன்றினார்கள். செஞ்சியில் தோன்றிய நாயக்க அரசர்கள் காலத்தில், வேலூரிலிருந்த சின்ன பொம்ம நாயக்க அரசர் செஞ்சி நாயக்க அரசருக்குக் கட்டுப்பட்டவராக இருந்தார். இவர் வீர வைணவராவார். ரங்கராஜாத்வரி சிறந்த பண்டிதர் என்பதால், சின்ன பொம்ம நாயக்க அரசர் இவரை ஆதரித்து தனது அரசவையில் முக்கியப் பொறுப்பைக் கொடுத்து கௌரவித்தார்.

ரங்கராஜாத்வரிக்கு திருமணமாகியும் நீண்ட நாட்களாகப் பிள்ளைப்பேறில்லை. அந்த ஏக்கம் அவருக்குள் இருந்துவந்தது. பிள்ளை வரம் வேண்டி வேலூருக்கு அருகேயுள்ள விரிஞ்சிபுரத்தில் (சென்னையிலிருந்து சுமார் 145 கிலோமீட்டர் தூரம்) இருக்கும் தனது குலதெய்வமான மரகதாம்பிகை சமேத மார்க்க பந்தீஸ்வரரைத் தொடர்ந்து வழிபட்டார். இந்த ஆலயம் பாடல்பெற்ற பழமையான தலமாகும்.

அவர் மனமுருகி வேண்டிய சமயத்தில் ஒருநாள் ஆகாயத்தில் அசரீரியாக, "பிள்ளைப்பேறு கிட்ட சிதம்பரத்திற்கு வரவும்' என்று ஆசி செய்தி கிடைத்தது. உடனே தம் மனைவியுடன் ரங்கராஜாத்வரி சிதம்பரத்திற்குச் சென்றார். அங்கு குடிகொண்ட தில்லை நடராஜனை பல நாட்கள் தங்கியிருந்து முறைப்படி சிவ பூஜைகளைச் செய்து திரும்பினார்.

இதன் பயனாக ரங்கராஜாத்வரி தம்பதி புரட்டாசி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில், நல்ல ஜாதக
அமைப்புடன்கூடிய நல்ல நேரத்தில் ஓர் ஆண் குழந்தை விரிஞ்சிபுரம் கிராமத்தில் பரத்வாஜர் கோத்திரத்தில் பிறந்தது. தெய்வீக அம்சம் நிறைந்த இந்த குழந்தைக்கு விநாயக சுப்பிரமணியன் எனப் பெயரிட்டு ஆசையுடன் வளர்த்தனர். தவமிருந்து குழந்தை பிறந்ததால் பெற்றோர்கள் குழந்தையைக் கொஞ்சும்போது, "அப்பா! ஐயா!' என செல்லமாக அழைத்தனர். பின்னாளில் விநாயக சுப்பிரமணி என்கிற பெயர் மருவி அப்பா, ஐயா என்பதே "அப்பையா' என்று மாறியது. பிற்காலத்தில் இவர் மிகப்பெரிய பண்டிதராகவும், மகாகவியாகவும் திகழ்ந்ததால் "அப்பைய தீட்சிதர்' என்று அழைக்கப்பட்டார். இவருக்கு சாஸ்திரங்களில் அபாரமான பாண்டித்யம் இருந்தது. குறிப்பாக அத்வைத வேதாந்தத்தில் ஸ்ரீஆதிசங்கரருக்குப் பின்பு பல நூல்களை எழுதியுள்ளார். இளம்வயதிலேயே ஞான ஜோதியாகத் திகழ்ந்ததால் இவருடைய புகழ் ஊரெங்கும் பரவியது.

ரங்கராஜாத்வரி மறைந்த பின்னர், தனது அரசவையில் சிறந்த பண்டிதர் இல்லையென சின்ன பொம்ம ராஜா கலங்கி யிருந்த சமயத்தில், அப்பைய தீட்சிதரின் பெருமையை சிலர் அரசரிடம் தெரிவிக்கவே, அவரை கௌரவித்து தனது அரசவையை அலங்கரிக்குமாறு கேட்டுக்கொண் டார். அதன்படி அரசவையில் வித்வானாக இருந்து, பல புகழ்பெற்ற வேதாந்தக் கருத்துகள் அடங்கிய நூல்களை எழுதினார்.

அதேசமயத்தில் அரசருக்குக் சிவபக்தியின் பெருமைகளை உபதேசித்து, முறைப்படி சிவபூஜைகளையும் இறைவழிபாட்டையும் ஆலயத் திருப்பணிகளையும் செய்ய வலியுறுத்தினார்.
அம்பிகையின் தீவிர பக்தரான ரத்னகேட தீட்சிதர் என்னும் பண்டிதரின் மகளான மங்கள நாயகி என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, அடையப்பலத்தில் வசித்துவந்தார் அப்பைய தீட்சிதர். தினமும் முறைப்படி நித்திய அனுஷ்டானங்களைச் செய்துகொண்டு சிவ பக்தியில் தன்னையே மறந்த நிலையில் தவ வாழ்க்கையை மேற்கொண்டுவந்தார்.

காஞ்சிபுரத்தில் வாஜபேயம் என்னும் மிகப்பெரிய யாகத்தைச் செய்ய சிலர் கேட்டுக்கொண்டதால், அதன்பேரில் அங்கு தங்கியிருந்து யாகத்தைச் செய்தார். வாஜபேய யாகத்தின் மரபுப்படி பதினேழு ஆடுகளை பலிகொடுக்க வேண்டியதாயிற்று. இந்த உயிர்ப்பலியை சிலர் ஏற்க மறுத்து, யாகம் நடைபெற்ற இடத்தில் சில பண்டிதர்கள் வாதம் செய்தனர். பிராணிகளை இம்சை செய்வதில் அப்பைய தீட்சிதருக்கும் உடன்பாடு இல்லாவிடினும், யாகத்தின் மரபுப்படி செய்யவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். மேலும், "இதுபோன்று யாகத்தில் உயிர்ப்பலி கொடுக்கும்போது பிராணிகள் உயிரிழந்தாலும், அவை புனித யாகத்தால் நற்கதியை அடைகின்றன என வேதத்தில் கூறப்பட்டதை நம்பியேதான் இதற்கு உட்பட்டேன்' என்று அப்பைய தீட்சிதர் கூறினார்.

தர்க்க சாஸ்திரத்தில் பண்டிதரான இவர் தனது அபார வாக்கு வல்லமையாலும், சாஸ்திர அறிவாலும் அங்கிருந்த பண்டிதர்களிடம் எதிர்வாதம் செய்தார். அங்கிருந்த பண்டிதர்களால் அப்பைய தீட்சிதரை வெல்ல முடியவில்லை. இருப்பினும் வேதத்தில் கூறப்பட்ட கர்மாவைப் பற்றி உலகுக்கு உணர்த்தவேண்டும் என்பதற்காக இறைவனை வேண்டினார். இவரது வேண்டுதலின் பயனாக உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட 17 ஆடுகளின் ஜீவன்களும் தேவசரீரம் எடுத்து யாக குண்டம் வழியாகத் தோன்றி விண்ணுலகத்திற்குச் சென்றன. செல்லும்போது தங்களுக்கு நற்கதியை அடைய வழிசெய்த அப்பைய தீட்சிதரை வாழ்த்தின. இந்த அதிசயக் காட்சியை வாதம் செய்தவர்களும், யாகத்தைக் காணவந்தர்களும் பார்த்துத் திகைத்தனர்.

அப்பைய தீட்சிதரின் தவ வலிமையை அறியாது வீண்வாதம் செய்தமைக்கு வருந்தி அவரை வணங்கினார்கள். இந்த நிகழ்ச்சியால் அப்பைய தீட்சிதரின் புகழ் எங்கும் பரவியது.

சின்ன பொம்ம நாயக்கரின் அரசவையில் ஸ்ரீநிவாச தாதாசாரியார் என்ற பண்டிதர் ஏற்கெனவே இருந்தார். இவர் தீவிர வைணவர். அரசர் அப்பைய தீட்சிதருக்கு அதிக முக்கியத்துவம் தருவதும், சைவ சமயத்தை நாடுவதும் தாதாச்சாரியாருக்குப் பிடிக்கவில்லை. இதனால் இவர் அப்பைய தீட்சிதர்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, ஏதாவது வகையில் அரசவையிலிருந்து அவரை வெளியேற்ற பலவகையில் திட்டம் தீட்டி தோல்வியடைந்தார்.

அப்பைய தீட்சிதர் அரசவைக்கு வரும்போது, அரசரைப் பார்த்து வாழ்த்தும்போது, பொதுவாக இடதுகையால்தான் ஆசிர்வாதம் செய்வார். இதையே ஒரு காரணமாகக்கொண்டு தாதாச்சாரியார் அரசரிடம், ""வலதுகையால் ஆசிர்வாதம் செய்யாமல், ஆணவத்தால் அப்பையதீட்சிதர் இடதுகையால் ஆசிர்வாதம் செய்துவருகிறார்'' என்று குற்றம் சாட்டினார்.

மறுநாள் அரசவைக்கு அப்பைய தீட்சிதர் வந்தபோது அரசரே இதற்கு நேரில் விளக்கம் கேட்டார். அனுஷ்டானங்களை சரிவரச் செய்யும் உண்மையான ஒரு பிராமணனின் வலக்கையில் அக்னி தேவன் குடிகொண்டுள்ளதால், வலக்கையால் வாழ்த்துவது ஆகாது என்றும், இடக்கையால் ஆசிர்வாதம் செய்யலாம் என்று சாஸ்திரங்களில் சொல்லி இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த விளக்கத்தை அரசவையில் இருப்பவர்கள் ஏற்கத் தயங்கியதை அப்பைய தீட்சிதர் உணர்ந்தார். மற்றவர்களின் ஐயத்தைப் போக்க, ஒரு வெள்ளைத் துணியில் அரசரின் படத்தை வரைந்து எடுத்துவருமாறு கூறினார்.

அதன்படி வரையப்பட்ட துணியை தனது வலக்கையால் ஆசிர்வாதம் செய்தார். உடனே துணி தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. நெருப்பின் வேகம் குறையவே இல்லை.

அரசர் உடனே சிம்மாசனத்திலிருந்து பதறியபடி இறங்கிவந்து தீயை அணைக்குமாறு அப்பைய தீட்சிதரை வேண்டினார். இதுபோன்று பல அற்புதங்களை அப்பைய தீட்சிதர் நிகழ்த்திக் காட்டியதால் அனைவருக்கும் அவர்மீது மதிப்பும் மரியாதையும் இருந்தது.

ஸ்ரீஆதிசங்கரரால் அருளப்பட்ட அத்வைத சித்தாந்தத்தைப் பரப்பவும், அவருக்குப் பின்பு சைவ சமயத்தை மேலும் நிலைநாட்டவும் இறைவன் பரமசிவன் சாமவேதியான அப்பைய தீட்சிதர் உருவில் வந்ததாகக் கூறுவார்கள். ஸ்ரீஆதிசங்கரர்மீது அளவற்ற பக்தி வைத்திருந்த அப்பைய தீட்சிதர் தனது "சித்தாந்த லேசங்க்ரஹம்' என்னும் நூலில், "ஸ்ரீசங்கர பகவத் பாதாளின் முகாரவிந்தத்திலிருந்து உதித்த அத்வைதோபதேசம், கங்கா பிரவாஹம்போல் அவருடைய பரம்பரையில் வந்த ஆசார்யாளாகிற பல வாய்க்கால்கள் வழி யோடி, பல சிஷ்ய கோடிகளின் இதயமான நிலங்களில் பாய்ந்து பயனளித்தது' என்று கூறியுள்ளார்.

சிருங்கேரி மடத்தின் நான்காவது பீடாதிபதியான ஸ்ரீஞானகன ஸ்வாமிகள் (கி.பி. 848-910)எழுதிய "தத்துவசத்தி' என்னும் வேதாந்த தத்துவ நூலுக்கு அப்பைய தீட்சிதர் பெரும் மதிப்பு கொடுத்திருந்தார். பகவான் வேத வியாசர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீஆதிசங்கரர் விளக்கவுரை எழுதியிருந்தார். அதன்பின்பு சிலர் எழுதினார்கள். ஆதிசங்கரரின் பாஷ்யத்தை சற்று எளிதாக்கி "பரிமளம்' என்னும் நூலை எழுதினார். சிவநெறியை தழைக்கச் செய்யும் வகையில் "சிவார்க்கமணி தீபிகா' என்னும் அற்புதமான நூலை எழுதியதற்காக சின்ன பொம்ம நாயக்க அரசர், அப்பைய தீட்சிதருக்கு கனகாபிஷேகம் (தங்கத் காசு) செய்து கௌரவித்தார். இப்படியாக இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களையும், இறைவனைத் துதிக்கும் சுலோகங்களையும் எழுதினார்.

மேலும் இவர் சிறந்த கவிஞருமாவார்.

பல்வேறு திருத்தலங்களுக்கு தம்முடைய சீடர்களுடன் சென்று இறைவனை வழிபட்டார். தம்முடைய இறுதிக்காலத்தை சிதம்பரத்தில் கழிக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் சிதம்பரத்தில் தங்கியிருந்து தில்லை நடராஜப் பெருமாளை தினமும் தரிசனம் செய்துகொண்டு, அவருடைய தம்பியின் பேரரான நீலகண்ட தீட்சிதர் என்கிற இளம்பாலகனுக்கு சமஸ்கிருதம், வேதாந்தம் போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தார். தில்லை நடராஜப் பெருமாளுக்குப் பூஜை முடிந்து கற்பூர தீபம் காட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில் கனக சபையில் இருக்கும் பஞ்சாட்சர படிகளில் ஏறி சந்நிதிக்குள் சென்ற அப்பைய தீட்சிதர் பின்னர் வெளியே வரவில்லை. தில்லை நடராஜப் பெருமாளுடன் தன்னுடைய 72-ஆம் வயதில் இரண்டறக் கலந்தார். அப்பைய தீட்சிதர் தன்னுடைய காலத்தில் பயன்படுத்திய சிவலிங்கம், சாளக்கிராமம் முதலியவை இன்றும் சிருங்கேரி மடத்தில் நித்திய பூஜையில் பூஜிக்கப்படுகின்றன.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :