Add1
logo
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் || இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி || கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் || சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம் || உங்களுக்காக காத்திருக்கிறேன்! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்! || நல்ல பஸ் எப்ப விடுவீங்க... ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர் || நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் ||
Logo
பொது அறிவு உலகம்
64-வது தேசிய திரைப்பட விருதுகள்
 ................................................................
சம்பாரன் சத்தியாகிரகம் நூற்றாண்டு
 ................................................................
வங்கி சேவையும் வரி விதிப்பும்
 ................................................................
அனைத்தும் ஆதார் மயம்
 ................................................................
01-05-17கவல் தொடர்புத் துறையில் சினிமா என்றால் பொழுதுபோக்கு; சமூக சிந்தனையுள்ள கல்வியாளருக்கு அது மக்களுக்குக் கற்பிக்கும் ஒரு வகுப்பறை; வல்லுநர்களுக்கு மனிதவளத் துறையின் குறிப்பிட்ட பிரிவுகளில் செய்தியைப் பகிரும், பயிற்சியளிக்கும் சிறந்த களம். தேசிய மற்றும் சர்வதேச அளவில் நல்லெண்ணம் மற்றும் நல்லுறவை மேம்படுத்துவதிலும் சினிமா மிக முக்கியப் பங்காற்றுகிறது.

    கலைநயமும் கலையுணர்வும் கொண்ட கருத்தாழ மிக்க படங்களைத் தயாரிப்பதை ஊக்கப்படுத்த திரைப்படக் கேட்புக் குழுவின் பரிந்துரையை ஏற்று 1954-இல் இந்திய அரசு, மாநில திரைப்பட விருதுகளை ஏற்படுத்தியது. அப்போது முதல் ஒவ்வோர் ஆண்டும் சிறந்த படங்களும் தனி முயற்சிகளும் விருதளித்துப் பாராட்டப்படுகின்றன. பின்னர் இது மிக உயர்வான தேசிய அளவில் கௌரவம் பெற்றது. நாட்டின் எல்லா மொழிகளிலும் தயாரிக்கப்படும் ஆழ்ந்த நோக்குடைய படங்கள், பொழுதுபோக்கு, சமூகப்படங்கள் அனைத்திலும் தேசிய திரைப்பட விருதுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மை.

    தொடக்கத்தில் சிறந்த திரைப்படம், சிறந்த செய்திப்படம் ஆகியவற்றுக்காக குடியரசுத் தலைவரின் இரண்டு தங்கப் பதக்கங்களும் சிறந்த குழந்தைகள் படத்துக்காக பிரதமரின் தங்கப்பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் மட்டுமே வழங்கப்பட்டன. ஓராண்டுக்குப் பின்னர், மாநில மொழிகளில் சிறந்த திரைப்படங்களுக்காக குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கங்களும் சேர்க்கப்பட்டன.

    குறிக்கோள் மற்றும் நோக்கத்தில் விருதுகள் பல்வேறு மாற்றங்களை அடைந்தன. 1966-இல் தேசிய திரைப்பட விருதுகள் என்று பெயர் மாற்றம் பெற்றன. 1968-இல் கலைஞர்கள், தொழில்நுட்பாளர்களுக்குத் தனித்தனி விருதுகள் ஏற்படுத்தப்பட்டன. நடிப்புக்கான இரு விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருது "ஊர்வசி' எனவும், சிறந்த நடிகருக்கான விருது "பாரத்' எனவும் அழைக்கப்பட்டன. பின்னாளில் இப்பெயர்கள் வழக்கொழிந்தன. சிறந்த நடிகைக்கான விருதை நர்கீஸ் தத்தும் சிறந்த நடிகருக்கான விருதை உத்தம்குமாரும் முதன்முறையாக பெற்றனர்.

 திரைப்படங்களை மதிப்பிடும் முறையும் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. சில ஆண்டுகள் பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் மாநிலக் குழுக்கள் செயல்பட்டு, அவை பரிந்துரைத்த படங்களை தில்லியிலுள்ள மத்தியக் குழு பரிசீலித்தது. பின்னர் இம்முறை நீக்கப்பட்டு, இப்போது தேசிய திரைப்பட விழா நடுவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங் களைப் பார்த்துப் பரிசீலித்து விவாதம் அல்லது அதிக வாக்குகள் மூலம் விருதுகளைத் தீர்மானிக்கிறார்கள். இதற்கிடையே விருதுகளின் எண்ணிக்கையும் பெருகியது.

    1975-க்குப் பிறகு விருதுகளுக்கான வாய்ப்புகள் பெருகின. குடியரசுத்தலைவரின் தங்கப் பதக்கம், தங்கத் தாமரை விருதாகவும், வெள்ளிப் பதக்கம், வெள்ளித்தாமரையாகவும் மாறின.

    1978-இல் பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளரான சேத்தன் ஆனந்த் திரைப்பட நடுவர் குழுத் தலைவராக இருந்தபோது ஒரே ஒருமுறை மட்டும் சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கப்படவில்லை.

 சேத்தன் ஆனந்த், விருதுபெறும் திரைப் படத்துக்கான தகுதிகளாக வரையறுத்திருந்தவை:

அ) அது நல்ல கதைக் கருவைக் கொண்டிருக்க வேண்டும்;     
              

ஆ) துடிப்பான திரைக்கதை மூலம் அக்கரு சிறந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்;

இ) திரைக்கதையின் தன்மை மாறாமல் அது படமாக்கப்பட்டிருக்க வேண்டும்.

தேசிய திரைப்பட விருதுகள்

    தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) இந்தியாவின் பழமையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும். 1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதினை இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்கம் 1973-ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு விருதுக்குரியவர்களை/படைப்புகளை தேர்ந் தெடுக்கிறது. விருதுகள் குடியரசுத் தலைவரால் தலைநகர் புதுதில்லிலியில் வழங்கப்படுகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன. நாட்டின் பலபகுதிகளில் கடந்த ஆண்டில் வெளியான திரைப் படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களும் திரைக் கலைஞர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதுதவிர, ஒவ்வொரு மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.

    64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லிலியில் அறிவிக்கப்பட்டன.

    இந்திய அளவில் சினிமா துறைக்கான தேசிய விருதை மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது.

    சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்கம், ஒளிப்பதிவு என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதுதவிர, ஒவ்வொரு மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.

    இது இந்தியாவின் ஆஸ்கர் விருதாகக் கருதப் படுகிறது.

    கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் டெல்லிலியில் அறிவிக்கப்பட்டன.  

தேசிய விருதுகள் பட்டியல் :


    சிறந்த படம் : மராட்டிய மொழிப் படம் - காசவ்

    சிறந்த இயக்குநர் : ராஜேஷ் மபுஸ்கா - மராட்டிய படம் - வென்டிலேட்டர்

    சிறந்த தமிழ்ப் படம் : ஜோக்கர்

    சிறந்த நடிகை : சி.எம்.சுரபி - மலையாளப் படம் மினாமினுகு படத்தில் நடித்தமைக்காக

    சிறந்த நடிகர் : அக்‌ஷய் குமார் - ரூஸ்டம்

    சிறந்த உறுதுணை நடிகை : ஜாய்ரா வாசிம் - தங்கல்

    சிறந்த பாப்புலர் திரைப்படம் - சதாமனம் பவதி (தெலுங்கு)

    சிறந்த குழந்தைகள் திரைப்படம் - தனக்

    சிறந்த அனிமேஷன் திரைப்படம் - மஹோயோத ரானா (இந்தி)

    சிறந்த சண்டை வடிவமைப்பு : பீட்டர் ஹெய்ன் (புலி லிமுருகன்)

    சிறந்த குழந்தை நட்சத்திரம் : அதீஷ் பிரவீன் (படம்: குஞ்சு தெய்வம்), சாஜ் (படம் : நூர் இஸ்லாம்), மனோகரா (படம்: ரயில்வே சில்ட்ரன்)

    சிறந்த பின்னணி பாடகி : இமான் சக்ரபர்த்தி

    சிறந்த பின்னணி பாடகர் : சுந்தரா ஐயர் (ஜோக்கர்)

    சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்) : ஷ்யாம் புஷ்கரன்

    சிறந்த திரைக்கதை (தழுவல் ): சஞ்சய் கிருஷ்ணஜி படேல்

    சிறந்த நடன அமைப்பு : ராஜூசுந்தரம் (ஜனதா கார்கே)

    சிறந்த இசையமைப்பு : பாபு பத்மநாபா (அலமா)

    சிறந்த ஒப்பனை : எம்.கே.ராமகிருஷ்ணா

    சிறந்த எடிட்டிங் : ராமேஷ்வர் - வென்டிலேட்டர்

    சிறந்த ஒப்பனை : சைக்கிள் திரைப்படத்துக்காக சச்சின் லவேல்கர்

    சிறந்த ஒலி வடிவமைப்பு : காடு பூக்கும் நேரம் - ஜெயதேவன் சக்கா தத்

    சிறந்த துணை நடிகர் : தசாகிரியா - மராத்தி

    சுற்றுச்சூழல் நலன் பேணும் சிறந்த திரைப்படம் - தி டைகர் வூ கிராஸ்ட் தி லேன் (பட்ங் பண்ஞ்ங்ழ் ஜ்ட்ர் ஸ்ரீழ்ர்ள்ள்ங்க் ற்ட்ங் ப்ஹய்ங்)

    சமூக பிரச்சனைகள் சார்ந்த சிறந்த திரைப்படம் - அமிதாப்பச்சனின் 'பிங்க்'

    தேசிய ஒறுமைப்பாட்டை பறைசாற்றியதற்காக நர்கீஸ் தத் விருது பெறும் திரைப்படம்: திக்சோவ் பனாத்

    அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெறும் சிறந்த திரைப்படம் : அலிபா (வங்கமொழி) இயக்குநர்- தீப் சவுத்ரி
    சினிமா துறைக்கு இணக்கமான மாநிலம்: உத்தரப்பிரதேசம்.
    சிறந்த திரைப்பட விமர்சகர் : தனஞ்சயன்
   சிறந்த பிராந்திய மொழி திரைப் படங்கள்
     மதிபூர் (துளு)
 ஜோக்கர் (தமிழ்)
    ராங்சைட் ராஜூ (குஜராத்தி)
    பெல்லி சூப்புலு (தெலுங்கு)
 தசகரியா (மராத்தி)
 பிஸார்ஜன் (வங்காளம்)
 மகேஷின்ட பிரதிகாரம் (மலையாளம்)
 கே சரா சரா (கொங்கனி)
    ரிசர்வேஷன் (கன்னடம்)
    நீர்ஜா (இந்தி)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :