Add1
logo
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் || இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி || கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் || சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம் || உங்களுக்காக காத்திருக்கிறேன்! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்! || நல்ல பஸ் எப்ப விடுவீங்க... ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர் || நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் ||
Logo
இனிய உதயம்
நான் இயல்பிலேயே நாடோடி மனம் கொண்டவன்!
 ................................................................
ஒரு கிராமத்தின் ஈரக்குரல்
 ................................................................
சிற்பியே! உனக்கு அம்மி கொத்தத் தெரியாதா?
 ................................................................
உழவன் தோற்றல் உலகம் தோற்கும்!
 ................................................................
01-05-2017உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து (1032).

என்கிறார் வள்ளுவர்.

உலகத்தின் பசிப்பிணியைப் போக்கி, உலகத்தையே நகர்த்துகிற அச்சாணியே உழவர்கள் என்பது இதன் பொருள். இப்படி உலகின் அச்சாணி போன்ற விவசாயிகளின் முதுகெலும்பை கொஞ்சமும் இரக்கமில்லாமல் உடைத்துக் கொண்டிருக்கிறது அதிகார வர்க்கம்.

தமிழ்க்கொடியை வெற்றிக்கொடியாய் இமயத்தில் பறக்கவிட்ட சேரன் செங்குட்டுவனைப் போல், கடாரம்வரை சென்று வென்று, வெற்றிக்கொடி நாட்டிய ராஜேந்திரசோழனைப் போல், டெல்லிவரை சென்று, தங்கள் வாழ்வுரிமைக் குரலை விண்ணதிர எழுப்பி, திக்குகள் எட்டையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார்கள் தமிழக விவசாயிகள்.

மழை வெய்யில் பாராமல், பசி பட்டினி கருதாமல், உடல்நலம், குடும்ப நலம் எண்ணாமல், 41 நாட்கள் விவசாயிகள் நடத்தியிருக்கும் உன்னதமான போராட்டம் வாழ்த்துக்குரியது; வணக்கத்திற்குரியது.

நதிகளை இணைக்கவேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும். தமிழகத்துக்கான வறட்சி நிவாரண நிதியை உயர்த்திக்கொடுக்க வேண்டும் என்பதுபோன்ற ஒட்டுமொத்த விவசாயிகளுக்குமான கோரிக்கையை வைத்துதான் அவர்கள் போராட்டத்தைக் கையிலெடுத்தார்கள். 

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாய் நடத்திய மெரினா அறப்போர், உலக நாடுகளின் கவனத்தைத் திருப்பியதுபோல், விவசாயிகளின் இந்த டெல்லிப் போராட்டமும் இன்று உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை முசிறியைச் சேர்ந்த வழக்கறிஞரான விவசாயி  அய்யாக்கண்ணு, திறம் பட வியூகம் வகுத்து வழிநடத்தியிருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டவேண்டும்.

சின்ன அசம்பாவிதம் இல்லை. சலசலப்பு இல்லை.

ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது என்று அவரோடு  இருப்பவர்களிடமிருந்து  முணுமுணுப்புகள்கூட இல்லை. தங்களைத் தற்கொலைப் படைகளைப்போல் ஆக்கிக்கொண்டு, இந்த வாழ்வுரிமைப் போராட்டத்தில் உயிரே போனாலும் சரி, எங்கள் உரிமைக் குரலை ஒட்டுமொத்த இந்தியாவும் கேட்கும்படி செய்வோம் என்று தீர்க்கமாக முடிவெடுத்து விட்டுத்தான் அவர்கள் டெல்லிக்குக் கிளம்பினார்கள்.

அங்கு விதவிதமாகத் தங்களை வருத்திக்கொண்டு போராடினார்கள். நிலைமை இப்படியே போனால் இதுதான் நிலை... என்று, எலிக்கறியையும் பாம்புக் கறியையும் சாப்பிட்டார்கள். இனியும் அரசாங்கம் உதவிக்கரம் நீட்டாவிட்டால், இனி நாங்கள் செத்துதான் போகவேண்டும் என்று, பாடையில் பிணமாகப் படுத்தும் போராடினார்கள். மண்டை ஓட்டோடும், தூக்குக் கயிறோ டும் கதறிக் கண்ணீர் வடித்தார்கள்.

தங்களின் பிரார்த்தனைகளுக்குக் கடவுளாவது கண்திறக்கமாட்டாரா என்று மண்சோறும் சாப்பிட்டுப் பார்த்தார்கள். தலையில் பாதி முடியையும் மீசையையும் மழித்துக்கொண்டு, இதைவிட  எங்கள் வாழ்க்கை  அவ லட்சணமாக இருக்கிறது என்று கண்ணீரோடு  பிரகடனப்படுத்தினார்கள். எதற்கும் மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை.

போராட்டக் களத்தில் இருந்த விவசாயிகளோ,  பிரதமர் மோடி எங்களை நேரில் அழைத்து, எங்கள் கோரிக்கைகளைக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும் என்று கோரினார்கள்.  பலநாட்கள் இழுத்தடித்துவிட்டு...

"சரி, வாருங்கள்' என்று அழைத்த பிரதமர் அலுவலகம்,  "மோடியிடம் சேர்த்துவிடுகிறோம். மனுக்களை மட்டும் எங்கள் கையில் கொடுங்கள்' என்று அவர்களை வெளியே நிறுத்தியது.

பிரதமர் அலுவலக அழைப்பை ஏற்று ஆர்வமாகச் சென்ற விவசாயிகள், அங்கே தங்கள் தன்மானமும் பறிக்கப்பட்டதாக  உணர்ந்தார்கள்.  தங்கள்  ஆடைகளைக் களைந்துவிட்டு நிர்வாண மாகத் தெருவில் ஓடினார்கள்.  உலகமே பார்க்கும்படி ஓடினார்கள். இதை அவர்கள் குடும்பமும் தொலைக்காட்சிகளில் பார்த்துவிட்டு கண்ணீர்விட்டு அழுதது. அப்படி ஓடும்போது அவர்களின் மனம் என்னபாடு பட்டிருக்கும்? நினைத்துப்பார்க்க முடியவில்லை.

விவசாயிகளின் இந்த ஆடை நீக்கத்தால், இந்த தேசம்தான் நிர்வாணமானது. அதுதான் அவமானத்தில் கூனிக்குறுகிக் கூசியது. விவசாயி களுக்கு இதனால் அவமானம் ஏற்படவில்லை. அரசாங்கம்தான் அசிங்கப் பட்டது. அவமானப்பட்டது.

மோடி என்ற மக்களின் பிரதிநிதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட்ட பிரதிநிதி, மக்களின் குரலைக் கருணையோடு கேட்கமாட்டார் என்பதை இதன்மூலம் அவர்கள் உலகிற்கு  உணர்த்திவிட்டார்கள். இந்த அசிங்கத்தைதான், தங்கள் நிர்வாணத்தின் மூலம் உலகிற்குப் பறைசாற்றியிருக்கிறார்கள் விவசாயிகள்.

அவர்கள்  திட்டமிட்டபடி, அவர்களின் குரல் இந்தியாவையே உலுக்கி எடுத்துவிட்டது. வடமாநில விவசாயிகள் அவர்களுக்காக அணிதிரளத் தொடங்கினர். மாணவர்களும் இளைஞர்களும் அவர்களின் தோளோடு தோள் நின்றனர். காரணம் இவர்கள் மேற்கொண்டது தியாகத்தின் அடிப்படையிலான போர். எல்லோர் மனதையும் கரைத்த விவசாயிகளின் இந்த அறவழிப்போர், மோடியின் மனதை மட்டும் தொடவில்லை. 

காட்டை  அழித்து, வனவிலங்குகளை நிலைகுலையவைத்து, நிலங்களை எல்லாம் ஆக்கிரமித்து, அங்கே அனுமதியில்லாத கட்டடங்களை எல்லாம் கட்டிக்கொண்டு, காட்டுக்குள்ளேயே ஆன்மிகத் திருவிழாவை நடத்தும் கிரிமினல் சாமியார்களை எல்லாம் தேடித் தேடிப் போய் சந்தித்து, அவர்களோடு பக்தி மயக்கத்தில் ஆடிப்பாடுகிற பிரதமர் மோடி, நாட்டின் இதயம்போன்ற விவசாயிகளைச் சந்திக்கவே  மறுத்துவிட்டார்.

சுரண்டல் சாமியார்களை தரிசித்து மகிழும் அவரது காவிக் கண்களுக்கு, நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளைப் பார்ப்பதும் சந்திப்பதும் பாவகாரியமாகத் தெரிகிறது. இது இந்துத்துவாவைவிடவும் மோசமான மோடித்துவா.

விவசாயிகளின் உறுதியான போராட்டம் தமிழக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறது. உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று இப்போது ஒட்டுமொத்த தமிழகமும் விவசாயி களுக்காகக் குரல்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

தமிழக விவசாயிகளின் துயர்மிகுந்த 41 நாள் போராட்டத்தை, அலட்சியப் படுத்தியதன் மூலம் ஒட்டுமொத்த விவசாய சமூகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பதில் சொல்லவேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.

தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி  அரசை, ஒரு பக்கம் உலகத் தமிழர்கள் சபித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், சரியான மதவாதக் கும்பலிடம் சிக்கிக் கொண்டோமே என்று ஒட்டுமொத்த இந்திய மக்களும் துயரப் பெருமூச்சு விடுகின்றனர். தமிழக மக்களோ, விவசாயிகளை நிர்கதியில் நிறுத்திய மோடி அரசைத் தீராக் கோபத்தோடு  வறுத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  இதனால் தேசத்தின் மீதான நம் இளைஞர்களின் நம்பிக்கை  பொய்த்துப் போய்க்கொண்டிருக்கிறது.

ஆதங்கத்தோடு...

நக்கீரன்கோபால்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : RAJAKUMAR. R Date & Time : 5/12/2017 5:21:09 PM
-----------------------------------------------------------------------------------------------------
THIS CENTERAL GOVERNMENT WORKING NOT PEOPLE. THEY WORKING ONLY FOR BUSINESS MAN. MODI PM NOT GOOD LEADER, HE GOOD MEDIATER FOR BUSINEESS MAN.
-----------------------------------------------------------------------------------------------------