Add1
logo
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் || இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி || கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் || சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம் || உங்களுக்காக காத்திருக்கிறேன்! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்! || நல்ல பஸ் எப்ப விடுவீங்க... ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர் || நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் ||
Logo
ஓம்
சித்ரா பௌர்ணமி சிறப்பு!
 ................................................................
பூரண கும்பத்தில் பரமன்!
 ................................................................
மே மாத ராசிபலன்கள்
 ................................................................
ராகவேந்திர விஜயம்!
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
ராஜா ராமானுஜர்!
 ................................................................
அரசியலில் வெற்றி தரும் சாகம்பரி!
 ................................................................
மே மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
ரங்கன் கொடுத்த ரத்தினமாலை!
 ................................................................
உய்ய ஒரு வழி- உடையவர் திருவடி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
வானுயர நிற்கும் காளி!
 ................................................................
பேரருளாளன்! -மும்பை ராமகிருஷ்ணன்
 ................................................................
01-05-17"எட்டு நாகந்தனைக் கையால் எடுத்தே யாட்டுவோம்
இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்
கட்டுக்கடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்
கழுவிடந் தனைநீக்கி யாடு பாம்பே.'
(சித்தர் வல்லபம்)

(பாம்பாட்டிச் சித்தர் கூறும் "பாம்பு' என்பது, வளைந்து வளைந்து ஓடும்  காற்றைக் குறிக்கும்.)

வாசியோகம், மூச்சுப் பயிற்சி, சரீரம் வலிவடைய யோகாசனம் போன்றவற்றை நாம் அறிந்து கொள்ளும்போதே, அவற்றை உணர்ந்து அனுபவித்து நமக்குக் கூறிய சித்தர்களையும், அவர்கள் நமது அறியாமையை நீக்கிக் கொள்ளக் கூறிய ஞானத்தெளிவையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.

காற்றினைத் தன்னுள் கட்டி அடக்கி, அதனை ஒரு மனிதன் முறையாகத் தன் வாழ்வில் பயன்படுத்தி வந்தால், கர்மவினைகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து, அளவற்ற நன்மைகளை அடையலாம் என்று உலக மக்களுக்குக் கூறியவர் தென்பாண்டி நாட்டில் பிறந்து வாழ்ந்து வருகின்ற- தமிழர்களின் ஒரே குருவான அகத்தியர்தான்.

அவர் கூறிய சைவ சித்தாந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்து, மரணத்தை வென்று இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பதினேழு சித்தர்கள். அகத்தியர் முதலான 18 சித்தர்களும், தமிழ்மொழி பேசும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் கூறிய ஞானக் கருத்துகளும், வாழ்வியல் முறைகளும், "சைவத் தமிழ்ச் சித்தாந்தம்' எனக் கூறப்படுகின்றது.

சைவத் தமிழ்ச் சித்தர்கள் தங்கள் அறிவால், அனுபவத்தால் அறிந்து கூறியவை அனைத்தும் சாதி, மதம், இனம், கடவுள் என ஒரு மதத்தவர் சம்பந்தப்பட்டதல்ல. மத பேதமின்றி உலக மக்கள் அனைவரும் நன்மை பெறும் விதமாக பொதுவாகவே கூறியுள்ளனர்.

வாசியோகம், மூச்சுப்பயிற்சிகளை நாம் செய்யத் தொடங்கும்முன்பு அதனைப் பற்றிய விவரங்களை விளக்கமாக நாம் அறிந்துகொண்டு, அதன்பின் செயல்பட வேண்டும் என்பது மிகமிக முக்கியம். முதன்முதலில் சித்தர்கள் அறிந்து கூறிய இந்த வாசியோக மூச்சுப் பயிற்சி முறையை வடமொழியினர் "பிராணாயாமம்' என்று கூறுவர். வாசகர்கள் முக்கியமாக ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும். இந்த முமூசுப்பயிற்சி முறை அவரவர் செய்யவேண்டிய தனிப்பட்ட பயிற்சி முறையாகும். அடுத்தவர் மணி அடித்து பூஜை செய்ய, நாம் கடவுளை வணங்குவதுபோல் அல்ல. நமக்கு நாமே பூஜைசெய்து, நம்முள் கடவுளை, கடவுள் சக்தியைக் கொண்டுவரும் முறையாகும். நம்முள் கடவுள் சக்தியை தக்கவைத்துக்கொள்ளும் வழிமுறையாகும்.

ஒரு மனிதன் தன் வாழ்வு உயர்வானதாக அமைய, இந்த சமுதாயத்தில் செல்வமும் புகழும் அடைய, நம் உடல் நோயின்றி திடமானதாக இருக்க எவையெல்லாம் காரணமாக உள்ளதோ, அவற்றை தேடி அடைய வேண்டும்; அதற்காக ஒவ்வொரு மனிதனும் தன்னிடமுள்ள ஏழு அறிவுகளைப் பயன்படுத்தி வாழ வேண்டும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

ஒரு மனிதன் தன் வாழ்வின் இறுதிவரை சிரமமில்லாமல், நோய்த் தொல்லை இல்லாமல் வாழ்வதற்கு வழி என்ன? நல்ல வாழ்க்கைக்குத் தேவையானது எது என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இது தெரிதல் அறிவு.நமது வாழ்வின் உயர்வுக்குத் தேவையானவை எவையென்பது தெரிந்தவுடன், பிற சக்திகளை நம்பாமல் தன் சுயஉழைப்பால் அதனைத் தேடத் தொடங்கிவிட வேண்டும். இது தேடுதல் அறிவு.

நாம் தேடியது எங்குள்ளது என்று தெரிந்தவுடன், அதனைத் தன் யுக்தியால், புத்தியால் எதனைச் செய்தாவது அடைந்து விட வேண்டும். இது அடைதல் அறிவு.

நமக்குத் தேவையானதை அடைந்தவுடன், அதனை சரியான வழி முறைகளில் பயன்படுத்தி, அதனால் நமக்குக் கிடைக்கும் நன்மை- தீமை, லாபம்- நட்டம் ஆகியவற்றை அறிவால், அனுபவத்தால் உணரவேண்டும். இது உணர்தல் அறிவு.

அவ்வாறு உணர்ந்து, நன்மை தருபவை இவைதான் என்று புத்தியால் புரிந்துகொள்ள வேண்டும். இது புரிதல் அறிவு.

நமக்குக் கிடைத்ததைக் கொண்டு செயல்பட்டதில் நன்மைதான் ஏற்பட்டது; தீமைகள் இல்லை. லாபம்தான் கிடைத்தது என்று கண்டபின், அதனைப் பயன்படுத்தி வாழ்ந் தால் வெற்றி பெறலாம் என தெளிவு பெறவேண்டும். இது தெளிதல் அறிவு.

நம் ஒவ்வொரு செயலையும் சுயஅறிவாலும், அனுபவத்தாலும், சுயபுத்தி யாலும், தெளிவடைந்து, பின் இந்த வழிகளில் இருந்து மனதை ஒரு நிலையில் வைத்து, எக்காரணம் கொண்டும் மாறாமல் வாழ்தல் வேண்டும். இது வாழ்தல் நிலையறிவு.

நம்மிடம் உள்ள இந்த ஏழு அறிவுகளைப் பயன்படுத்தி வாழாமல், மற்றவர்கள் செய்வதைப் பார்த்து வாழ்ந்தால் எதிலும் வெற்றியடைய முடியாது. தனக்கு நன்மையானது எது? தீமையானது எது என்று எல்லா வற்றிலும் பகுத்தறிந்து வாழ்பவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் வெற்றியை மட்டுமே அடைவார்கள்.

இந்த பூமியில் மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவராசிகளும், தனக்கு நிர்ணயிக்கப்பட்ட விதிப்படியே வாழ்ந்து மரணம் அடைகின்றன. மனிதர்கள் வாழ்வில் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய மூன்று மட்டுமே இயற்கை நிர்ணயித்த, நமது முன்வினை பாவ- சாப- தோஷப்படி நடக்கும். இதனைத் தடுக்க முடியாது. ஆனால், வாழ்வின் மற்ற எல்லா நிகழ்வுகளையும் இந்த ஏழு அறிவுகளின் துணையால், தனக்கு விதிக்கப்பட்ட தன் விதித் தன்மையைத் தடுத்து, நல்ல வாழ்வை அடைய முடியும். இந்த விதியைத் தடுக்கும் வித்தை முறைகளை சித்தர்கள் மட்டுமே அறிந்து கூறியுள்ளனர்.

மனிதனின் "அறிவு' என்பது இந்த பூமியிலுள்ள எல்லா பொருட்களையும், பஞ்சபூதங்களையும், கிரகங்களையும், இந்த சமுதாயத்தையும், மற்ற மனிதர்களையும் அறிந்துகொள்ளச் செய்வது. அறிவு எல்லாருக்கும் பொதுவானது.

புத்தி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியே வித்தியாசமாக உள்ளது. ஒருவர் தனக்கு உணவில் எது நல்லது? உடையில் எது நல்லது? உறவில்- நட்பில் யார் நல்லவர்? தொழிலில் நமக்கு நன்மை தரும் தொழில் எது என அவரவர்க்கு உண்டான நன்மை, தீமைகளைப் புரிந்து வாழச்செய்வது அவரவரின் சுயபுத்தி சக்தியாகும்.

ஒரு மனிதன் தன் புத்தியால்தான் தன்னை அறிந்துகொள்ள முடியும். இதனால்தான் "புத்தியுள்ளவன் பலவான்' என்று கூறுகிறார்கள். தெய்வமாக வணங்கப்படும் கிருஷ்ணர், தன் புத்தியால்தான் அனைத்தையும் செய்து வெற்றியடைந்தார். பொதுவான அறிவால் மற்றவற்றை அறிந்து, சுயபுத்தியால் செயல்படவேண்டும். ஒரு மனிதன் தன் வாழ்வில் உயர்வதும் தாழ்வதும் தன் சொந்த புத்தியைப் பயன்படுத்தி வாழ்வதைப் பொருத்தே அமையும்.

காற்றே கடவுள்

சித்தர்கள் பஞ்சபூதங்களுள் ஒன்றான காற்றுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, பல அற்புதங்களைச் செய்துள் ளார்கள். மேலும் காற்றினைப் பற்றிய விவரங்களையும், முக்கியத்துவத்தையும், மக்களுக் குத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். அவற்றை நாம் தவறவிட்டோம். எதை எதையோ நம்பி, அனைத்தையும் இழந்து வாழ்ந்துகொண்டி ருக்கிறோம்.

பூமியில் மனிதன் மற்றும் ஜீவராசிகளின் சரீரத்தின் உள்ளிருந்து இயக்குவது பஞ்சபூதங்கள் எனப்படும் மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து சக்திகள் தான். இந்த ஐந்து சக்திகளும் நமது கண், காது, மூக்கு, வாய் என்ற நான்கு உறுப்புகளின் உதவியால் "மனம்' என்ற ஆகாயத்துடன் தொடர்புகொண்டு இயங்கச் செய்கிறது. மனம் இயங்கத் தொடங்கியவுடன் நமது சரீர உறுப்புகள் இயக்கம் பெற்று செயல்படுகின்றன. இதன்மூலம் நமது வாழ்வில் நன்மை- தீமைகளை உருவாக்கி நம்மை அனுபவிக்கச் செய்கிறது.

இந்த பூமியில் மனிதனும், அனைத்து ஜீவராசிகளும் வாழ உயிர்தான் முக்கியம். நமது உயிரை வெளியில் கொண்டு சென்று, பின் நம் உடம்பின் உள்ளே கொண்டு வந்து சேர்த்து, நம்மை வாழ வைத்துக்கொண்டிருப்பது காற்றுதான். இந்த காற்றின் செயல் நமது மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாக நடைபெறுகின்றது. இதனால்தான் சித்தர்கள் "காற்றே உயிர் மூச்சு' என்று கூறியுள்ளார்கள்.

ஆகாயத்தில் எல்லா இடங்களிலும் காற்று உள்ளது. காற்று இல்லாத இடமே இல்லை. காற்று ஆகாய அண்டவெளியை, பூமியை, பூமியில் உள்ள உயிர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. காற்றைக் கண்களால் பார்க்க முடியாது. இதற்கு உருவம் கிடையாது. அரூபமானது; நிறமற்றது; வாசனையற்றது; எங்கும் நிறைந்திருப்பது. உயிர்களை வாழ வைப்பது காற்றுதான். கடவுளைப் பற்றிக் கூறும்போது, "கடவுள் நிறமற்றவர்; உருவமில்லாதவர்; அரூபமானவர்; கண்களால் காணமுடியாதவர். ஆனால் உயிர்களை காப்பாற்றுபவர். எங்கும் நிறைந்திருப்பவர்' என்று கூறுகிறோம். அதுபோன்ற தன்மையுடைய காற்றும் கடவுள் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

காற்றுதான் கடவுள் என்று பட்டினத்தார் கூறுகிறார்.

"வாசிதனைப் பார்த்து மகிழ்ந்துணைத்தான்
                               போற்றாமல்
காசிவரைப் போய் காலலுத்தேன் பூரணமே.'
"இடைகலை, பிங்கலையின் இயல்பறிய
                                  மாட்டாமல்
தடையுடனே நானும் தயங்கினேன் பூரணமே.'
"உடலுக்குள் நீநின்று உலாவினதைக் காணாமல்
கடல்மலை தோறும் திரிந்து காலலுத்தேன்         
                                 பூரணமே.'
பட்டினத்தார் போன்று பலரும் ஞானம்,

அஷ்டமாசித்திகளை அடையவேண்டு மென்று கடவுளைத் தேடியலைந்து, எங்கும், எதுவும் அடைய முடியாமல் இறுதியில், "காற்றுதான் கடவுள்' என்று தெரிந்து, வாசியோகம் செய்து அஷ்டமாசக்திகள் முதல் அனைத்து சக்திகளையும் அடைந்தார்கள்.

சித்தர்கள் கூறிய "வாசி' என்ற சொல்லே "சிவா' எனப்பட்டது. சிவனது ஓவியங்களைப் பார்த்தோமேயானால், அவர் எப்போதும் வாசியோக நிலையில் இருப்பதைக் காணலாம்.

சூரிய நாடி

சென்ற இதழில் நாம் சக்தி கலையாகிய சந்திர நாடியில் சுவாசம் நடைபெறும்போது எந்த காரியங்களைச் செய்யலாம் என்று அறிந்தோம். இப்போது சூரிய கலை, சிவ கலை எனப்படும் நமது வலப்புற மூக்கு துவாரத்தில் மட்டும் சுவாசம் நடைபெறும் போது என்ன விதமான காரியங்களைச் செய்யலாம் என அறிவோம்.

கஷ்டமான வேலைகளைச் செய்யலாம். உணவுண்ணலாம். இயற்கை உபாதையைப் போக்கலாம். கணவன்- மனைவி உறவு கொள்ளலாம். கடல் தாண்டி அந்நிய நாடுகளுக்குப் பயணம் செல்லலாம். எதிரிகளுடன் போர் செய்யலாம். மறைபொருள், மந்திர வித்தை கற்கலாம். மாடு, ஆடு, குதிரை போன்ற நாற்கால் பிராணிகளை வாங்கலாம்; விற்கலாம். மலை ஏறலாம்; மலைப்பகுதி, வனங்களுக்கு வேட்டைக்குச் செல்லலாம். மல்யுத்தம் பழகலாம்; செய்யலாம். போட்டிகளில் கலந்துகொள்ளலாம். தேர்வுகள், நேர்காணலில் கலந்துகொள்ளலாம். பரீட்சைக்குப் படிக்கலாம். ஆறு, குளம், கடல்களில் நீந்தலாம். நீச்சல் கற்கலாம். பணம் கொடுக்கல், வாங்கல் செய்யலாம். தேர்தலில் ஈடபடுலாம்; பதவி ஏற்கலாம். உயர்நிலை அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், அந்தஸ்தில் உள்ள பெரிய மனிதர் களைக் காணலாம். அறுவை சிகிச்சை செய்யலாம்; செய்துகொள்ளலாம். பிரசவம் பார்த்துக்கொள்ளலாம்.

குருவிடம் உபதேசம் பெறலாம்; பிறருக்கு உபதேசம் செய்யலாம். வித்தைகளைப் படிக்கலாம்; பயிற்சி எடுக்கலாம்; பிறருக்கு கற்றுக்கொடுக்கலாம். மரங்களை நடலாம். வியாபாரம் தொடங்குதல், செய்தல், தீர்க்க முடியாத வழக்குகளில் பஞ்சாயத்துப் பேசுதல், வழக்காடுதல், வாகனங்களில் பயணம் செய்தல், பிறர் விளங்கிக்கொள்ளும் வண்ணம் எழுதுதல், பேசுதல் போன்றவற்றைச் செய்யலாம். சங்கீதம் கற்றல், பாடல், கதைகள், மந்திரம் ஜெபித்தல், மந்திர செயல்களைச் செய்தல், மருந்து சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், கொடிய தீராத வியாதிகளுக்கு வைத்தியம் பார்த்தல், தம்பன யோகம் சாதகம் செய்தல்- இவை போன்று இன்னும் பல செயல்களை, நமது மூக்கின் வலப்புறம் உள்ள துவாரத்தில் மட்டும் மூச்சுக்காற்று உள்ளே சென்று வெளியே விடும் சமயங்களில் செய்தால் வெற்றி கிடைக்கும் என்பது சித்தர்கள் நமக்குக் கூறியது.
(இந்த சமயத்தில் சில தவறான செயல் களைச் செய்தாலும் வெற்றிகிட்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதை இங்கு தவிர்த்துள்ளோம்.)

வலது நாசி, இடது நாசிகளில் மட்டும் காற்று உள்ளே சென்று வரும் காலங்களில் எதையெதைச் செய்யலாமென்று சுருக்க மாக அறிந்துகொண்டோம். இவை ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களைப் பின்னர் அறிவோம்.

இந்த உலகில் குறையில்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் துன்பத்தை அனுபவித்துதான் வாழ்கிறார்கள்.

இதற்கு அவரவர் முற்பிறவியில், தங்கள் வம்ச முன்னோர்கள் காலத்தில் தன் குடும்பத்து உறவுகளுக்கும் பிற மக்களுக்கும் செய்த பாவங்கள், தீமையான செயல்கள்தான் காரணம். இந்த முன்வினை, ஊழ்வினைப் பாவப்பதிவுகளை நாம் எதைச் செய்தும் தீர்க்க முடியாது. தென்மேற்குப் பருவக்காற்றும், வடகிழக்குப் பருவக்காற்றும் சுற்றி வருவதைப் போன்று நமது ஆயுள்வரை இந்த பாவ- சாபம் நம்மைச் சுற்றிவந்து கஷ்டங்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். நாம் இறந்தாலும் நமது விந்தின்மூலம் பிறந்த நமது வம்ச சந்ததியினரையும் ஆட்டி வைக்கும்.

இந்த பாவ- சாபப் பதிவுகளை எவ்வளவு பணம் செலவு செய்தாலும் தீர்க்க முடியாது என்பது சித்தர்கள் வாக்காகும். பரிகாரம் என்ற பெயரால் லட்சக்கணக்கில் செலவு செய்து அலைந்தவர்களுக்குத் தெரியும் இந்த உண்மை.

ஆனால், ஒரு மனிதன் தன் வினை தரும் சிரமங்களைத் தானே தடுத்துக்கொள்ள முடியும். நல்ல வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்.

"பொய் யென்று சொல்லாதே
  போக்குவரத்து தானே
மெய் யென்று சொன்னவர்கள்
  வீடு பெறலாமே'

என்பது சித்தர் வாக்கு. போக்குவரத்து என்பது மனிதனின் மூச்சுக்காற்று வெளியில் சென்று பின் நம்முள்ளே வருவது. வீடு என்பது முழுமை, முக்தி, மோட்சம் ஆகும்.

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வெற்றி நிச்சயம்.

(மேலும் சித்தம் தெளிவோம்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :