Add1
logo
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு || தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ ||
Logo
ஓம்
சித்ரா பௌர்ணமி சிறப்பு!
 ................................................................
பூரண கும்பத்தில் பரமன்!
 ................................................................
மே மாத ராசிபலன்கள்
 ................................................................
ராகவேந்திர விஜயம்!
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
ராஜா ராமானுஜர்!
 ................................................................
அரசியலில் வெற்றி தரும் சாகம்பரி!
 ................................................................
மே மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
ரங்கன் கொடுத்த ரத்தினமாலை!
 ................................................................
உய்ய ஒரு வழி- உடையவர் திருவடி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
வானுயர நிற்கும் காளி!
 ................................................................
பேரருளாளன்! -மும்பை ராமகிருஷ்ணன்
 ................................................................
01-05-171-5-2017
இராமானுஜர் 1000-மாவது ஆண்டு பூர்த்தி


முக்தி தரும் நகரங்கள் ஏழில் முக்கியமாம் கச்சி என்று போற்றப்படும் காஞ்சியில் சுமார் 18 திவ்ய தேசங்கள் அமைந்திருப்பதாக, குரு பரம்பரையின் கடைக்கோடி ஆச்சார்யரான மணவாள மாமுனிகளின் "காஞ்சி திவ்ய தேச ஸங்க்ரஹ ச்லோகமாலிகை' என்ற சுலோகத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது. அவையாவன:

1. தேவப் பெருமாள், 2. திருவேளுக்கை அழகிய சிங்கர், 3. பாண்டவதூதர், 4. பவள வண்ணர், 5. வைகுண்டப் பெருமாள், 6. உலகளந்த பெருமாள், 7. நீரகத்தான், 8. காரகத்தான், 9. கார்வானத்துள்ளான், 10. ஊரகத்தான், 11. நிலாத்திங்கள் துண்டத்தான், 12. கள்வர், 13. உள்ளுவாருள்ளத்தான், 14. முகுந்தப் பெருமாள், 15. அழகிய சிங்கர் (வரதராஜர் எழுந்தருளியுள்ள அத்திகிரி மலைக்குள்), 16. விளக்கொளிப் பெருமாள், 17. அட்ட புயகரத்தான், 18. சொன்ன வண்ணம் செய்த பெருமாள்.

மேலும், காஞ்சியிலிருந்து சுமார் 15 மைல் தொலைவுக்குள் அமைந்துள்ள திருப்புட்குழி திவ்ய தேசமும், திவ்ய தேசமான பவளவண்ணர் கோவிலருகே அமைந்துள்ள பச்சை வண்ணப் பெருமாளும் அபிமானத் தல எம்பெருமானாக அடியார்களால் வணங்கப்பட்டு வருகின்ற தலங்களாக விளங்குகின்றன. மேலும் "வரம் தரும் மாமணி வண்ணன்' என்று திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற பெருமாளை வைகுண்டப் பெருமாள் சந்நிதியில் தரிசிக்கலாம்.


இப்படிப்பட்ட புகழ்பெற்ற காஞ்சிக்கு இளையாழ்வார் (பின்புதான் அவருக்குப் பல திருநாமங்கள் ஏற்பட்டன) தமது பத்தினி தஞ்சமாம்பாளுடன் வந்தார். அங்கு காஞ்சி பேரருளாளனுக்கு ஆலவட்டம் வீசும் கைங்கர்யம் செய்து வந்தவரும், பெருமாளுடன் பேசும் பாக்கியம் பெற்றவருமான திருக்கச்சி நம்பிகளைச் சரணடைந்து அவருடனே வசித்து வந்தார்.

அதுசமயம் திருப்புட்குழியில் அமைந் திருந்த அத்வைதியான யாதவப் பிரகாசரின் குருகுலத்தில் வேதாந்த அர்த்தங்களைக் கற்றறிந்தார்.

காஞ்சியில் வசித்தபோதுதான், திருக்கச்சி நம்பிகள்மூலம் பேரருளாளன் ஆறு கட்டளைகளை அளித்து, இராமானுஜரின் எதிர் காலத்தைப் பற்றி உணர்த்தினார். எனவே, காஞ்சிபுரத்தையே தமது இருப்பிடமாக அமைத்துக்கொள்ள முடிவு செய்தார் இராமானுஜர்.

காஞ்சிபுரத்திற்கு விஜயம் செய்த ஆள வந்தார் என்ற மஹனீயர்மூலம் "ஆம்முதல்வன்' என்று வாழ்த்துப் பெற்று, காஞ்சிப் பேரரு ளாளன் ஆணைப்படி ஸ்ரீரங்கம் சென்று பெரிய நம்பிகளை ஆச்சார்யனாகக் கொள்ள பயணித்தபோது, இவரை சீடனாக ஏற்க பெரிய நம்பிகள் காஞ்சிநோக்கிப் பயணப்பட, தற்செயலாக மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமன் சந்நிதியில் இருவரும் சந்தித்தனர்.

இராமானுஜருக்கு பெரிய நம்பிகள் பஞ்ச சம்ஸ்கார சடங்கினைச் செய்து வைத்தார். இருவரும் காஞ்சி திரும்பி அடுத்தடுத்த இல்லங்களில் வசித்து வந்தபோது, திருக்கச்சி நம்பிகளிடமும் பெரிய நம்பிகளிடமும் தஞ்சமாம்பாள் இராமானுஜருடைய மனம் நோகும்படியாக நடந்துகொண்டதால், மனைவியைத் துறந்து அனந்தரசஸ் புஷ்கரணிக் கரை யில் பேரருளாளனிடம் துறவறம் பெற்றார்.

இதனால் இராமானுஜருக்கு காஞ்சிப் பேரருளாளன் சந்நிதியில் கிழக்கு கோபுரவாசல் அருகே அமைந்திருந்த திருக்கச்சி நம்பிகள் திருமாளிகையில் ஒரு சந்நிதி அமைந்துள்ளது. மேலும், இராமானுஜர் மனைவிக்கும் பெரிய நம்பிகள் மனைவிக்கும் தகராறுக்கு வித்திட்ட கிணற்றையும் இன்றும் காணலாம்.

காஞ்சி அருகே செவிலிமேடு கிராமத்தில் அமைந்துள்ள சாலைக்கிணறு அனுஷ்டானக் குளம் அருகேயுள்ள இராமானுஜர் சந்நிதி யையும் இன்றும் காணலாம்.

இவ்வளவு ஈடுபாடுடன் காஞ்சியில் வாழ்ந்திருந்த இராமானுஜரை, ஆளவந்தார் பரமபதம் எய்தியவுடன் ஸ்ரீரங்கம் வாசியாக மாற்றிவிட்டது. ஆளவந்தாரின் ஸ்தானத்தை இராமானுஜர் ஏற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதால், காஞ்சிப் பேரருளாளன் இராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு அனுப்ப நேரிட்டது. அதனால், காஞ்சிப் பேரருளாளனுக்கு தியாகராஜர் என்ற திருநாமமும், காஞ்சிக்கு தியாக மண்டலம் என்ற பெயரும் ஏற்பட்டது.

ஆரம்ப காலம் முதலே இராமானுஜரின் ஆராதனைப் பெருமாளாக காஞ்சிப் பேரருளாளனே விளங்கினார் என்பதை, ஸ்ரீரங்கத்திலுள்ள இராமானுஜரின் சந்நிதியில் வரதராஜப் பெருமாள் சந்நிதியும் அமைந்தி ருப்பதைக் கொண்டே உணரலாம்.

இராமானுஜரின் மனதிற்குகந்த சீடரான கூரத்தாழ்வான் அவதரித்த கூரம், பாதுகை களாக விளங்கிய முதலியாண்டான் அவதாரத் தலமான மேட்டை (வரதராஜபுரம்- பூவிருந்தவல்லி அருகில்) மற்றும் திருக்கச்சி நம்பிகளின் அவதாரத் தலமான பூவிருந்தவல்லி, இராமானுஜரின் நிழலாகப் போற்றப் பட்டுவரும், யாதவப் பிரகாசரின் சதியிலிருந்து மீட்டு நமக்கு இராமானுஜரைத் தந்தருளியவருமான எம்பார் ஸ்வாமி அவதரித்த மதுரமங்கலம், இராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தலங்களெல்லாம், சென்னையிலிருந்து காஞ்சி செல்லும் வழித்தடத்திலேயே- அதுவும் ஒரே நாளில் சென்று தரிசிக்கக்கூடிய கால அவகாசத்தி லேயே அமையப்பெற்றுள்ளது நாம் பெற்ற பேறு.

காஞ்சியிலுள்ள அனைத்து பெருமாள் திருக்கோவில்களிலும் இராமானுஜர் சந்நிதிகள் அமைந்துள்ளன.

அனைத்து திவ்ய தேசங்கள், அபிமானத்தலங்கள், ஆழ்வார், ஆச்சார்யார்களின் அவதாரத்தலங்கள், இதர திருமால் திருத்தலங்களுக்கும் சென்று தரிசித்து குருவருளும் திருவருளும் பெறுவோமாக.

உய்ய ஒருவழி- உடையவர் திருவடி!

அருளாளப் பெருமான் எம்பெருமானார்யக்ஞ மூர்த்தி எனப்பட்ட எம்பெருமானார் பகவத் இராமானுஜரை ஆச்சார்யராக ஏற்றுக்கொள்ளும் முன்பாக, மாயாவாதியான ஏகதண்ட சன்னியாசியாய் இருந்தவர். இவர் யாத்திரையாக தென்தேசம் வந்தபோது ஸ்ரீரங்கத்தில் வசித்துவந்த இராமானுஜருடன் வாதிட முன்வந்தார். இராமானுஜரும் இவருடன் 17 நாட்கள் வாதிட்டார். வெற்றி யாருக்கென்று முடிவாகவில்லை. இந்நிலையில் இராமானுஜருக்கு, "நம்மால் வைணவத்தின் மேன்மை அழிந்துவிடுமோ' என்ற கவலை வர, மனதில் காஞ்சிப் பேரருளாளனிடம் பிரார்த்தனை செய்துகொண்டு துயிலச் சென்றார். கனவில் காஞ்சிப் பேரருளாளன் தோன்றி, ஆளவந்தாரின் மாயாவாத கண்டனத்தைச் சொல்லி, அருள்பாலித்தார்.

இராமானுஜரும் பேரருளாளனின் திருவருளை மனதிலிருத்தி, 18-ஆம் நாள் காலை யக்ஞ மூர்த்தியிடம் வாதிடச் சென்றார்.

இவரின் தேஜசைக் கண்டு மனம் கலங்கிய யக்ஞமூர்த்தி, இராமானுஜரின் திருவடிகளில் வீழ்ந்து, ""தேவரீரிடம் நான் தோற்றேன்; அடியேனை சீடனாக ஏற்றருள் புரிய வேண்டும்'' என்று விண்ணப்பம் செய்தார். இராமானுஜரும் மனமுவந்து அவரைத் திருத்திப் பணிகொண்டு தகுந்த பிராயச்சித்தங்களைச் செய்வித்து சீடனாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு காஞ்சிப் பேரருளாளன் திருநாமத்துடன் தன் திருநாமத்தையும் இணைத்து, அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற தாஸ்ய நாமம் சூட்டி, தாமே அவருக்கு ஆழ்வாராதிகளின் திவ்யப் பிரபந்தங்களையும் மற்றும் சம்பிரதாய கிரந்தங்களையும் உபதேசித்தார். அவருக்கென்று தனி மடம் நிறுவி, தமது சீடர்களான அனந்தாழ்வான், எச்சான் தொண்டனூர் நம்பி, மருதூர் நம்பி போன்றவர்களை அவருக்கு சீடர் களாக நியமித்தார்.

அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் இராமானுஜரின் அருட்கடாட்சத்திற்கு மிகவும் மகிழ்ந்து வைணவம் வளர பாடுபட்டு வந்தார். அவரின் குரு பக்தியிலும் செய்கை களிலும் மகிழ்ந்த அரங்க நகர்வாசிகள், "இரண்டாவது இராமானுஜரோ' என்று புகழ்ந்தார்கள். இதனைக் கேள்விப்பட்ட பலர் வெளியூர்களிலிருந்தும் வந்து இவரை ஆச்சார்யராக ஏற்றுக் கொண்டார்கள்.

ஒருசமயம் வெளியூர்வாசிகள் சிலர் வந்து இராமானுஜர் மடத்திற்கு வழிகேட்டார்கள். ஊர்வாசிகள் இங்கு இரண்டு இராமானுஜர் மடங்கள் உள்ளன என்று தெரிவித்து, அதற்குரிய வழியைக் காட்டினார்கள். வெளியூர்வாசிகள்அருளாளப் பெருமாள் எம்பெருமானார் மடத்திற்குச் சென்றனர்.

இவ்விவரமறிந்த அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திகைத்து, ""இராமானுஜர் என்றால் ஆச்சார்யனுக்கே அப்பெருமை தகும். இனி எமக்குத் தனிமடம் தேவையில்லை'' என்று கூறி, தனது மடத்தை இடித்துத் தள்ளினார். தன் சீடர்களுடன் பகவத் இராமானுஜரை சரணடைந்து, ""அடியேன் உம் நிழலிலேயே ஒதுங்கியிருக்க விரும்புகிறேன்'' என்று சொல்லி அவருடனே இணைந்து செயல்பட்டார். இவர் அருளிய கிரந்தங்களான ஞானசாரம், பிரமேயசாரம் ஆகியவை இன்றும் வைணவத்தில் புகழ்பெற்ற கிரந்தங்களாக விளங்குகின்றன.

அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் அவதாரத் தலமாக காஞ்சி திருப்பாடகம் என்ற பாண்டவதூதர் சந்நிதி விளங்குகிறது. இங்கே இவரின் அர்ச்சாமூர்த்தியை தரிசிக்கலாம். பிரதி கார்த்திகை- பரணியை முன்னிட்டு இவரது அவதார வைபவங்கள் இத்திருக் கோவிலில் விமரிசையாய் கொண்டாடப்படுகின்றன.

மேலும், இவ்வாச்சார்யனுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஒரு திருமாளிகை அமைந்துள்ளது.

அங்கும் இவரது அர்ச்சா மூர்த்திக்கு கார்த்திகை- பரணி வைபவம் விசேஷமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவரின் வம்சாவழியினர் விஞ்சிமூரார் என்று அழைக்கப்படுகின்றனர்.

யாதவப் பிராகாசரும் இராமானுஜரும்

பகவத் இராமானுஜர் காஞ்சியில் இருந்த சமயம், அருகிலுள்ள திருப்புட்குழியில் வாழ்ந்துவந்த யாதவப் பிரகாசரிடம் தன் குருகுல வாழ்க்கையைத் தொடங்கினார். அவருடன் கோவிந்த பட்டர் என்பாரும் இருந்தார். இவர் இராமானுஜருக்கு தம்பிமுறை உள்ளவர். (சித்தியின் மகன்). குருகுல வாசத்தில் வேதாந்தப் பாடங்களில் இராமானுஜருக்கும் யாதவப் பிரகாசருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. அதனால் இராமானுஜரின்மேல் யாதவப் பிரகாசருக்கு கசப்பு மனப்பான்மை உண்டாயிற்று. அந்த சமயத்தில் அந்நாட்டு மன்னன் மகளுக்குப் பேய் பிடித்திருந்தது.

யாதவப் பிரகாசர் தான் அந்தப் பேயை விரட்டி மன்னன் மகளுக்கு நன்மை செய்வதாகக்கூறி தன் சீடர்களுடன் அரண்மனை சென்றார். உடன் இராமானுஜரும் சென்றார். யாதவப் பிரகாசரைக் கண்ட அரசனின் மகள் அவரை அவமானப்படுத்தினாள். யாதவப் பிரகாசரால் அவளிடமிருந்து பேயை விரட்ட முடியவில்லை. அப்போது இராமானுஜர், "அப்பெண்ணை பிடித்திருக்கும் பேயிலிருந்து காப்பாற்றி நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறேன்' என்று கூறி, சில மந்திரங்களைக் கூற, அந்தப் பேய் அவளை விட்டுப் பிரிந்துசென்றது.

தன் மகளுக்கு நல்ல நிலைமை ஏற்பட்டதைக் கண்ட மன்னன் இராமானுஜரை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தான்.

இதனால் ஏற்பட்ட அவமானம் யாதவப் பிரகாசருக்கு மேலும் மனக்கசப்பைத் தந்தது. இராமானுஜரை எப்படியாவது கொன்றுவிட முடிவுசெய்து, தன் சீடர்களுடன் (கோவிந்தபட்டரைத் தவிர்த்து) ஆலோசனைசெய்து ஒரு திட்டம் வகுத்தார். சீடர்களுடன் காசி யாத்திரை செல்வதென்றும், அங்கு இராமானுஜரை கங்கையில் தள்ளி கொன்றுவிடவும் முடிவு செய்தனர். அதன்படி யாதவப் பிரகாசர் தன் சீடர்களுடன் காசி யாத்திரையை மேற்கொண்டார். குழுவில் நடந்த விஷயங்கள் எப்படியோ கோவிந்தபட்டருக்குத் தெரிந்துவிட்டது.

இந்த விஷயத்தை இராமானுஜரிடம் சொன்ன கோவிந்தபட்டர், யாத்திரையின் நடுவில் எப்படியாவது தப்பிச்சென்றுவிடுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படியே இராமானுஜரும் ஒருவாறாக யாத்திரையிலிருந்து தப்பித்து காஞ்சியை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தார். காட்டு வழிகளில் இராமானுஜர் நடந்து செல்லும்போது இரவாகிவிட்டது. மிகவும் களைத்துப்போன அவர், அங்கு ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்க நினைத்தார். அப்போது அவ்வழி வந்த ஒரு வேடனும் வேடுவச்சியும் இராமானுஜரைக் கண்டு விவரமறிந்து, அவரின் துணைக்காக அவருடனேயே தங்கினர்.

விடியற்காலை வேடுவச்சி தனக்கு தாகம் எடுப்பதாகக்கூறி, அருகிலுள்ள நீர்நிலையிலிருந்து நீர் எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டாள். இராமானுஜரும் நீர்கொண்டு வரச்சென்று திரும்பியபோது, வேடனையும் வேடுவச்சியையும் காணாமல் திகைத்தார். "தான் காஞ்சி செல்ல வழிகாட்டு வதாகக் கூறினார்களே. அவர்களைக் காணவில்லையே... என்ன செய்வது' என்று காஞ்சி வரதனை மனதில் நினைத்தபடியே நடக்கலானார்.

அப்போது சூரிய உதயமும் ஆகிவிட்டது. ஜன நடமாட்டமும் ஆரம்பித்தது. ஆனாலும் தான் எங்கிருக்கிறோம் என்பது தெரியாமல் அங்கு சென்றவர்களிடம் விசாரித்தார். அவர் களும் தூரத்தில் காஞ்சி வரதர் கோவில் இராஜகோபுரம் தெரிவதைக் காட்டி, ""தாங்கள் காஞ்சியில்தான் இருக்கிறீர்கள்'' என்று தெரிவித்தனர்.

வரதராஜப் பெருமானின் ராஜகோபுரத்தைக் கண்டவுடன், பெருந்தேவித் தாயாரும் பேரருளாளனுமே வேடன், வேடுவச்சியாய் வந்து தன்னை காஞ்சியில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள் என்று இராமானுஜருக்குப் புரிந்துவிட்டது. வரம் தரும் மாமணி வண்ணனான வரதராஜனின் கருணையைக் கண்டுமகிழ்ந்து, வரதராஜப் பெருமாள் கோவிலை நோக்கிச் சென்றார்.

இராமானுஜர் வாழ்வில் நடந்த இந்த சம்பவத்தை நினைவுகூரும் விதமாக, இன்றும் ஒவ்வொரு வருடமும் வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் அனுஷ்டானக் குள வைபவம் நடந்து வருகிறது.

பக்தியில் புரட்சியை ஏற்படுத்திய இராமானுஜர் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெறும் இத்தருணத்தில், குருவடி தொழுது திருவருள் பெறுவோம்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :