Add1
logo
வீரலட்சுமி மீதான வழக்கு ஒத்திவைப்பு || தேவை என்றால் இன்னொரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடக்கும் - ராணுவ தளபதி || திருச்சி விமான நிலையத்தில் 12 லட்சம் தங்கம் பறிமுதல் || ராஜபக்சேவின் உறவினரை தாக்கிய வழக்கில் 15பேர் விடுதலை || சென்ட்ரல் நிஜாமுதீன் சிறப்பு ரயில் || சென்னையில் ரூ.2 கோடி மோசடி: ஒருவர் கைது || பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணம், ஆவணங்கள் கொள்ளை || பியர்ள்ஸ் நிறுவனம் வசூலித்த பணத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும்: ஜி.கே.வாசன் || போக்குவரத்து போராட்டம் ஒத்திவைப்பு: தொ.மு.ச. || கல்வி சான்றிதழ் தொலைந்தால் எளிதில் பெறலாம்: அமைச்சர் அன்பழகன் || தனியார் பள்ளிகளில் இலவச - கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு || ஜெ., மருத்துவமனையில் இருந்தபோதே இசட் பிளஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது: தீபக் || மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு ||
Logo
பொது அறிவு உலகம்
மிரட்டும் நீட் கலக்கும் IAS - சவால் இளைஞர்கள்
 ................................................................
TET தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்!
 ................................................................
தேசிய சுகாதார இயக்கம்
 ................................................................
5 மாநில சட்டசபை தேர்தல் - 2017
 ................................................................
தமிழக பட்ஜெட் 2017-18
 ................................................................
01-04-17

மிரட்டும் நீட் கலக்கும்  IAS - சவால் இளைஞர்கள்

ந்திய அளவில் நடைபெற்ற ஐ‌ஏ‌எஸ் முதனிலை தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த தேர்வு முடிவில் தமிழகத்தில் மொத்தம் 210 பேர் நேர்முக தேர்வுக்கு தேர்வாகி இருக்கிறார்கள். அதில் 160 பேர் சங்கர் ஐ‌ஏ‌எஸ் அகாடமியில் இருந்து மட்டும் தேர்வாகி சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த வெற்றி குறித்து சங்கர் ஐ‌ஏ‌எஸ் அகாடமியின் இயக்குனர் சங்கரை நேரில் சந்தித்து பேசினோம்.

*    சமீபத்தில் வெளியான ஐ‌ஏ‌எஸ் முதனிலை தேர்வு முடிவில் சங்கர் ஐ‌ஏ‌எஸ் அகாடமியிலிருந்து 160 தேர்வாகி இருக்கிறார்கள் இது குறித்து?

சங்கர் ஐ‌ஏ‌எஸ் அகாடமி 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது 2005-ஆம் ஆண்டில் ஒருவர் மட்டுமே தேர்வானார். ஆனால் 2016-இல் 120 பேர் தேர்வுபெற்றார்கள் அதில் 101 பேர் சங்கர் ஐ‌ஏ‌எஸ் அகாடமியிலிருந்து தேர்வானார்கள். கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தின் 75-80% டாப்பர்களை நாங்கள் தான் கொடுத்து வந்திருக்கிறோம். மேலும் அண்டை மாநிலமான கேரளா,கர்நாடக ஆகிய மாநிலங்களின் டாப்பர்களும் சங்கர் ஐ‌ஏ‌எஸ் அகாடமியில் இருந்து தேர்வாகி இருக்கிறார்கள். அதே போல இந்த ஆண்டும் தமிழகத்தில் தேர்வான 210 பேரில் 160 பேர் தேர்வாகி அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வாகி இருக்கிறார்கள்.   

*    முதன்மை தேர்வை போன்று இறுதி தேர்விலும் தமிழகத்திலிருந்து எத்தனை பேர் தேர்வாகி வருகிறார்கள்?

தமிழகத்தில் இருந்து நேர்முக தேர்வுக்கு தேர்வாகுபவர்களில் மற்ற மாநிலத்தில் 40% பேர் மட்டும் தேர்வானால் தமிழகத்திலிருந்து மட்டும் 55-60% பேர் தேர்வாகிறார்கள். இந்த முறை இறுதி தேர்வில் 105-110 பேர் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்திய அளவில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் தான் அதிக அளவில் ஐ‌ஏ‌எஸ் அதிகாரிகளை கொடுக்கும் இரண்டாவது பெரிய மாநிலமாகும்.கடந்த 2016-இல் உத்திரபிரதேசத்தை தோற்கடித்து தமிழகம் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.



*  தமிழகத்தில் ஐ‌ஏ‌எஸ் குறித்தான விழிப்புணர்வு எப்படி இருக்கிறது குறிப்பாக பெண்கள் ஐ‌ஏ‌எஸ் ஆவது குறித்து?


தமிழகத்தில் கல்வி குறித்தான விழிப்புணர்வு அதிகரித்து வந்திருப்பதால் அனைத்து தரப்பிலிருந்து ஐ‌ஏ‌எஸ் படிக்கும் ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. பெண்கள் டெல்லிக்கு சென்று ஐ‌ஏ‌எஸ் படிக்க கூடிய சூழல் கிடையாது, ஆனால் தற்போது சென்னைக்கு அனுப்புவார்கள். தற்போது வெளியாகியிருக்கும் தேர்வு முடிவில் 160 பேரில் 72 பெண்கள் சங்கர் ஐ‌ஏ‌எஸ் அகாடமியிலிருந்து தேர்வாகிஇருக்கிறார்கள். இதில் பெண்கள் அதிக அளவில் போட்டிபோடுகிறார்கள்.இத்தகைய மாற்றங்கள் தமிழகத்தில் அதிக அளவில் ஏற்பட 2001-இல் ஐ‌டி துறை வளர்ச்சி அதிக அளவில்இருந்ததும் ஒரு காரணம்.  இதனால் மற்ற துறையில் இருந்தவர்கள் ஐ‌ஏ‌எஸ் நோக்கி வந்து கொண்டு இருந்தார்கள்.தற்போது ஐ‌டி துறையில் இருப்பவர்களும் ஐ‌ஏ‌எஸ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.

* ஐ‌ஏ‌எஸ் அதிகாரிகள் சமீபத்திய ஆண்டுகளில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்கள்? அதற்கு காரணம்?

முதலில் அரசின் மீதும் ஒரு தவறு சொல்ல வேண்டும். 2000-ஆம்  ஆண்டுக்கு முன்பு ஐ‌ஏ‌எஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகமாகவும்,பேராசிரியர்கள் போன்ற மற்ற அரசு அதிகாரிகளுக்கு குறைவாகவும் இருந்தது. தற்போது மீண்டும்  ஐ‌ஏ‌எஸ் ஆக இருப்பவர்களுக்கு அதிக அளவில் பொறுப்பு இருக்கிறது. இந்த ஊதிய குழுவின் அறிவிப்பில் சம்பள உயர்வு இருக்கும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் இல்லை.  அடிக்கடி அதிகாரிகளை இடம் மாற்றுவதை குறைத்து விட்டு இரண்டு மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்ற வைக்க வேண்டும் அப்போது தான் ஒரு திட்டத்தை தொடர்ச்சியாக செய்து முடிக்க முடியும்.ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்று வரும் போது நல்லவர்களாக வருவார்கள். ஆனால் இந்த அமைப்பு அவர்களை மாற்றி விடுகிறது.

ஐ‌ஏ‌எஸ் அதிகரிகளுக்கான பாதுகாப்பு அமைப்பு,சம்பள உயர் ஆகியவை கொண்டு வந்தாலே இவற்றை தடுக்க முடியும்.நேரடி ஐ‌ஏ‌எஸ் அதிகாரிகள் தேர்வு முறைகள் போன்றே தமிழகத்திலும் அறிவு சார்ந்த தேர்வு முறைகளை கொண்டு வர வேண்டும்.

* ஐ‌ஏ‌எஸ் நாடாளுமன்றம் என்ற இணையதளத்தை உருவாக்கி  இருக்கிறீர்கள்? அது குறித்து?


மாணவர்கள் 10 நாளிதழை படிப்பார்கள் என்றால் அதிக நேரம் எடுத்து கொள்ளும் இதனால் முக்கிய ஆங்கில நாளிதழில் வெளிவரும் செய்திகளை 10 பேர் கொண்ட குழு அமைத்து எளிமைப் படுத்தப்பட்ட படிக்கக்கூடிய முறையாக மாற்றி ஒரே இடத்தில் தொகுத்து கொடுக்கிறோம். இதன் மூலம் அதிக நேரம் செலவிடாமல் விரைந்து படித்து விட்டு அடுத்த வேலைக்கு சென்று விட முடியும். இதை இலவசமாகவும் படித்து கொள்ளலாம்.

*    இந்தியா முழுவதும் ஐ‌ஏ‌எஸ் தேர்வு முறைகள் சமமாக இருப்பதை போலவே மருத்துவத்திற்கு நீட்,பொறியியல் படிப்புகளுக்கு நுழைவு தேர்வு வருவது குறித்து?

நுழைவு தேர்வு  என்பது நல்ல முறை தான், இதற்கு தமிழ்நாடு கல்வி முறை இன்னும் தயாராக இல்லை.  இங்கு தமிழ், ஆங்கிலம் என்ற கல்வி முறை இருக்கிறது இந்த வேறுபாடுகளை மாற்ற வேண்டும்.தற்போது தமிழிலும் தேர்வு நடத்தப்படும் என்று சொல்லபட்டாலும் பல வகையான வேறுபாடுகள் இருக்கும் போது அதனை மாற்றி விட்டு நுழைவு தேர்வு முறைகளுக்கு செல்லலாம். மாணவர்களுக்கு திறனாய்வு திறனை மேம்படுத்தி பள்ளிகளின் தேர்வு முறையை மாற்றம் செய்ய வேண்டும். 10, 12-ஆம் வகுப்பு களுக்கான பொது தேர்வுகளை ரத்து செய்து விட்டு திறனாய்வு திறன் மூலம் அவர்களுக்கு மேற்படிப்புகளுக்கான இடங்களை ஒதுக்கலாம்.

*   அரசியல் ரீதியாக சங்கர் ஐ‌ஏ‌எஸ் அகாடமி சந்தித்த பிரச்சனை?

அரசியல் ரீதியாக சொல்வதை விட எங்களின் வெற்றியை நக்கீரன், அதன் வெளியீடான பொது அறிவு உலகம்   ஆனந்த விகடன் தவிர்த்து வேறு எந்த பத்திரிகையிலும் வெளியிடுவது இல்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எங்களின் வெற்றியை வேறு சிலர் உருவாக்கியது போல காட்டப் பட்டது. அதை நாங்கள் பொருட்படுத்த வில்லை. உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரியும் எந்த விதமான விளம்பரமும் இன்றி இந்த அளவிற்கு வளர்ச்சியடைந்ததற்கு முக்கிய காரணம் இங்கு படித்த மாணவர்கள் தான்.     


நன்றி : நக்கீரன்    
- சி. ஜீவா பாரதி
படம் - ஸ்டாலின்    

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :