Add1
logo
நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் ||
Logo
பொது அறிவு உலகம்
மிரட்டும் நீட் கலக்கும் IAS - சவால் இளைஞர்கள்
 ................................................................
TET தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்!
 ................................................................
தேசிய சுகாதார இயக்கம்
 ................................................................
5 மாநில சட்டசபை தேர்தல் - 2017
 ................................................................
தமிழக பட்ஜெட் 2017-18
 ................................................................
01-04-17

TET தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்!

மிழகத்தில் இதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வு மூன்று முறை நடைபெற்றுள்ளது. கடந்த மூன்று முறையும் வாய்ப்புகளை தவறாவிட்டவர்களுக்கும் இந்தாண்டு புதிதாக தேர்வினை எழுத உள்ளவர்களுக்கும் வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு மிக முக்கியமானதாகும். ஏனெனில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆண்டுக்கு இரண்டுமுறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கொரு முறை இத்தேர்வை நடத்துவதே மிகவும் அரிதாகிவிட்டது. அதனால் இந்த தேர்வில் வெற்றிப் பெற்றாக வேண்டியது கட்டாயம். இத்தேர்வுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகள் கைடுகள் என இருந்தாலும் உங்களுடைய சுயமுயற்சிதான் வெற்றி வாய்ப்பை பெற்றுதரும்.

பொதுவாக போட்டித்தேர்வு எதுவாக இருப்பினும் அதற்காக தயார் செய்யும் வழிமுறைகளை பின்பற்றி அதற்கேற்ப படித்தால் நிச்சயம் தேர்வில் வெற்றி பெறமுடியும். அதற்கு முக்கியமாக தேவை படிப்பும், பயிற்சியும்.

ஒவ்வொரு போட்டித்தேர்வுக்கும் சில வழிமுறைகள் உண்டு. அந்த வழிமுறைகளை பின்பற்றினால் அந்த குறிப்பிட்ட தேர்வில் வெற்றிபெற முடியும். அந்த வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் சில வழிமுறை உள்ளது. இந்த வழிமுறைகளை, தேர்வுக்கான வழிமுறைகளாக பின்பற்றாமல் எப்படி படித்தாலும், எங்கு சென்று படித்தாலும் அது நிச்சயம் பெற்றிவாய்ப்பை தராது.

முந்தைய தேர்வு வினாத்தாள்

எந்தவொரு போட்டித் தேர்வுக்கும் முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற வினாத்தாள் என்பது அத்தேர்வின் முழு விவரங்களையும் தெரிவிக்கும். அந்த தகவல்கள் எப்படி எந்த விதத்தில் இத்தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக வெளிப்படுத்தும். முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை ஒருமுறைக்கு பலமுறை படித்துப்பார்த்தால் ஒவ்வொரு பாடத்திலும் எந்த வகையான வினாக்கள் கேட்கப்படுகின்றன, எந்த பாடப்பிரிவுகளில் அதிக வினாக்கள் கேட்கப்படுகின்றன என்பதை நன்கு புரிந்துக் கொள்ள முடியும். வினாக்கள் கேட்கப்படும் விதத்தை மனதில் கொண்டு அதற்கேற்ப படிக்கும்போது தேர்வின் போக்குக்கு ஏற்ப படிக்க முடியும். இவ்வாறு படித்தால் தேர்வில் சரியான விடைகள் அளிப்பது மிக எளிது.குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்  கற்றலில் தனியாள் வேறுபாடு என்பது தவிர்க்க முடியாதது போல் கல்வி உளவியல் பாடமும் சற்று வேறுபாடு உடையதுதான். எனவே, உளவியல் தத்துவங்கள், கோட்பாடுகள், சோதனைகள் ஆகியவற்றை ஆழ்ந்த புரிதலோடு பயின்று அதற்கான குறிப்புகளை நீங்களே தயார் செய்வது நலம். அவற்றுள் முதன்மைப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகள் என வகைப்படுத்தி பின்னர் அவற்றுள் அடங்கும் வரையறைகள், நுணுக்கங்கள், உளவியலாளர் பெயர்கள், அவர்கள் சார்ந்த கோட்பாடுகள் மற்றும் சோதனைகள் ஆகியவற்றை அட்டவணைப்படுத்துதல் அவசியம்.

உளவியல் நூல்கள் மற்றும் நூலாசிரியர் களின் பட்டியல் தயாரித்து அடிக்கடி அவற்றை மீள்பார்வை செய்தல் வேண்டும். உளவியல் கோட்பாடுகள் வெவ்வேறு படிநிலைகளாக தரப்படுத்தி வரிசைப் படுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளதால் அத்தகைய படிநிலைகளின் எண்ணிக்கை அவற்றின் வரிசை போன்றவற்றை தனித்தனியாகக் குறித்து வைத்து மனத்தில் இருத்தல் வேண்டும்.

  கோட்பாடுகள், சோதனைகள், இவற்றைப் பயிலும்போது ஒற்றுமை - வேற்றுமை அடிப்படையில் நீங்களே ஆராய்ந்து எளிதாக நினைவுகூர முயல வேண்டும். ஓர் உளவியல் அறிஞர் மற்றவர்களிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகிறார் என்றும் அவர்களின் கோட்பாட்டின் அடிப்படை வேறுபாடு மற்றும் அதற்கான எடுத்துக் காட்டுகளை குறித்து வைத்துப் படித்தல் வேண்டும்.

நினைவு சூத்திரங்கள், சுருக்கக் குறிப்புகள் மற்றும் அவற்றின் விரிவாக்கம் ((SQ3R,  ABL,  ZPD, LAD  போன்றவை), நுண்ணறிவு ஈவு, அடைவு ஈவு, மனத்திருத்தல்கெழு போன்ற வாய்ப்பாடுகள் அவை தொடர்பான கணக்கீடுகளை செய்து பார்க்கவேண்டும்.

தாள் ஒன்றைப் பொருத்தவரை D.T.Ed., , பாடத்திட்டத்திட்டத்தின் கருத்துக்களை அந்தந்த கற்பித்தல் முறைகளோடு இணைத்துக் கற்றல் நல்லது. கோத்தாரி குழு, யுனெஸ்கோவின் டெலார்ஸ் அறிக்கை, தேசிய கல்விக் கொள்கை, இந்திய அரசியலமைப்பின் கல்விசார் கொள்கைகள், திருத்தங்கள், தேசிய கலைத்திட்டம் 2005 ஆகியவற்றின் கல்விப் பிரகடனங்களை தனித்தனியாக குறிப்பிட்ட வேறுபாடுகளை உணர்ந்து கற்க வேண்டும்.

தாள் இரண்டைப் பொருத்தவரை தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங் களின் பி.எட்., பாடத்திட்டம் தொடர்பான பாடக்குறிப்புகள் கையேடுகள் இவற்றை ஒப்பிட்டு புதிய பெயர்கள் மற்றும் வேறுபட்ட சொற்றொடர்கள் போன்றவற்றைக் கண்டறிந்து கற்றல் நலம்.

உங்களது கடின உழைப்பை மூலதனமாக்கி ஆக்கத் திறனை முன்வைத்து நுண்ணறிவை கேடயமாக்கி மனஎழுச்சிகளைத் தவிர்த்து நினைவை மேம்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

தமிழ்

தமிழ் வினாத்தாளில் முப்பது மதிப்பெண் களுக்கு வினாக்கள் அமைந்திருக்கும். செய்யுள், உரைநடை, துணைப்பாடம் ஆகிய மூன்றிலிருந்தும் 15 மதிப்பெண்களுக்கு வினாக்கள் அமையலாம். இலக்கணத்திலிருந்து 15 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

English

English  பொருத்தவரை  Synonyms. Antonyms, Abbreviations, Homophones, Plural Form, Prefix and Suffix, Syllables, Sentence Pattern, Question Tags, Verb Forms, Tenses, Auxiliaries, Adjectives, The Conjunction, Pronouns, Comprehension, Passage Completion, Active & Passive Voice, Dialogue Writing, Vocabulary பற்றி படித்துக் கொள்ளவும்.

கணிதம்

கணிதத்தை பொருத்தவரை எண்ணியல், காலமும் வேலையும், சராசரி, சதவீதம், தனி வட்டி மற்றும் கூட்டு வட்டி, வயது மற்றும் புகைவண்டி கணக்குகள், திசைகள் பற்றிய கணக்குகள், அளவைகள், இலாப, நஷ்டம் கணக்குகள், புள்ளியியல், பின்னம் மற்றும் தசம எண்கள், இயற்கணிதம், வடிவியல், வர்க்கம், வர்க்க மூலம் ஆகியவை பற்றி படித்துக் கொள்ளவும்.

வரலாறு

வரலாறு பொருத்தவரை மதங்கள் - புத்த மதம், ஜைன மதம், ஜோராஸ்டிய மதம், கன்பூசியசிஸம் போன்ற மதங்கள், மதங்களைத் தோற்றுவித்தவர்கள், போதனைகள், வாழ்க்கை வரலாறு போன்றவற்றைப் படித்துக் கொள்ளவும். மகதப் பேரரசை ஆண்ட வம்சங்களைப் பற்றி படித்துக் கொள்ளவும். முக்கியமாக மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு பற்றி படித்துக் கொள்ள வேண்டும்.

இடைக்கால வரலாறு - எட்டாம் நூற்றாண்டிலிருந்து 18-ஆம் நூற்றாண்டு வரை, டெல்லியை ஆண்ட சுல்தான்களைப் பற்றி படித்துக்கொள்ளவும் (1206 - 1526)  முகலாயர்களின் வரலாற்றில் பாபர், அக்பர், ஷாஜஹான், ஷெர்ஷா, ஔரங்கசீப் - போர் முறைகள், ஆட்சி முறைகள், சாதனைகள், வரலாறு பற்றி படித்துக் கொள்ளவும். மராத்தியர்கள் - சிவாஜி மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சி முறைகளைப் பற்றி படித்துக் கொள்ளவும்.

மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர்களின் வரலாற்றைப் படித்துக் கொள்ளவும், ஐரோப்பியர்களின் வருகையைப் பற்றி படித்துக் கொள்ளவும். குறிப்பாக, ஆங்கிலேயர்களின் வருகையினால் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார சூழ்நிலைகளைப் பற்றி படித்துக் கொள்ளவும்.

நவீன கால வரலாறு - 18-ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள் மற்றும் விளைவுகளைப் பற்றி படித்துக் கொள்ளவும். முதல் மற்றும் இரண்டாம் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தம், நாசிசம், பாசிசம் பற்றி படித்துக் கொள்ளவும். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான காரணங்கள், முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை.

தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு, போராட்டத்தில் அவர்களின் பங்கு குறித்து படித்துக் கொள்ளவும்.

19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மாற்றங்களைப் பற்றி படித்துக் கொள்ளவும். பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, கிறிஸ்தவ சமய சீர்திருத்த இயக்கங்கள் பற்றியும், இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற் புரட்சியைப் பற்றியும் படித்துக் கொள்ளவும்.

குடிமையியல்

மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் பங்கு, ஒரு கட்சி, இரு கட்சி, பல கட்சி ஆட்சி முறைகள், நீதிமன்றம், நாடாளுமன்றம், சட்டமன்றம் அவை செயல்படும் விதங்கள் பற்றி படித்துக் கொள்ளவும்.

தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், அதனுடைய பணிகள் மற்றும் செயல்படும் விதங்களைப் பற்றி படித்துக் கொள்ளவும்.

தேசிய ஒருமைப்பாடு, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள், பெண்கள் மற்றும குழந்தைகளுக்கான சட்டங்கள், நுகர்வோரின் உரிமைகள் பற்றி படித்துக் கொள்ளவும்.

புவியியல்

சூரியக் குடும்பம் பற்றி படித்துக் கொள்ளவும், கடல்கள், ஆறுகள், மலைகள், காற்றின் வகைகள், பனியாறுகள் - இவற்றினால் ஏற்படக்கூடிய நிலத்தோற்றங்களைப் பற்றி படித்துக் கொள்ளவும். இந்தியா மற்றும் தமிழகத்தில் காலநிலை, விவசாயம், தொழில்கள் பயிர்கள் படித்து தெரிந்து கொள்ளவும். இந்தியாவிலுள்ள முதன்மை தொழில்களிலிருந்து ஐந்தாம் நிலை தொழில்களின் வகைகளைப் பற்றி படித்துக் கொள்ளவும்.

பொருளாதாரம்

தேசிய வருமானம், தேசிய வருமானத்தைக் கணக்கிடும் முறைகள், நுகர்வு, பொருளாதார உற்பத்திக் காரணகள் பற்றி படித்துக் கொள்ளவும். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்கள் பற்றி படித்துக் கொள்ளவும். பணவீக்கம் குறித்து படித்துக் கொள்ளவும்.

சூழ்நிலையியல்

அறிவியலைப் பொருத்தவரை எண்ணியல், அளவீட்டியல், ஒளியியல், காந்தவியல், நீர்நிலையியல், தனிமங்கள், சேர்மங்கள், கலவைகள், தூய பொருள்கள், தூய்மையற்ற பொருள்கள், நிலக்கரி, பெட்ரோலியம், அணுஅமைப்பு, தனிம ஆவர்த்தன அட்டவணை, கரிம வேதியியல், நீர், நிலம், காற்று மாசுபடுதல், சுற்றுப்புற சூழ்நிலை குறித்த சர்வதேச நாட்கள், ஆண்டுகள், உடலியல், ஒளிச்சேர்க்கை, செல்லியல் பற்றிப் படித்துக் கொள்ளவும். இந்தியாவின் காலநிலைகள், மண் வகைகள், காடுகளின் வகைகள், தாதுக்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு, வரலாற்று சான்றுகள், அயல்நாட்டவரின் குறிப்புகள், உலகைச் சுற்றி வந்த பயணிகள் (மெக்கலன், வாஸ்கோடகாமா, கொலம்பஸ்,) பற்றி படித்துக் கொள்ளவும்.

மக்கள் ஆட்சி - நாடாளுமன்றம், சட்டமன்றம், தலசுய ஆட்சி முறை, (கிராமப் பஞ்சாயத்து, ஊராட்சி, பேரூராட்சி) பற்றியும், தமிழக வரலாற்றில் மூவேந்தர்கள் மற்றும் குறுநில மன்னர்களின் வரலாறு பற்றியும் படித்துக் கொள்ளவும். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பங்கு, இந்திய அரசியல் அமைப்பு, தமிழகத்தில் நாயக்கர்கள் மற்றும் மராத்தியர்களின் ஆட்சிமுறை குறித்து படித்துக் கொள்ளவும்.

முக்கிய வினா-விடைகள் தொகுப்பு

  பெரும்பாலானவர்கள் தேர்வுக்கு முந்தைய நாள் வரை படித்துக்கொண்டே இருப்பார்கள். இவ்வாறு மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருப்பது தவறான அணுகுமுறையாகும். அனைத்தையும் பலமுறை படித்து முடித்த பின்னர் தேர்வுக்கு பத்து நாட்கள் படித்ததை அனைத்தும் மனதில் நிறுத்தி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். பயிற்சி செய்தால்தான் சிறப்பாக விடையளிக்க முடியும். இல்லையெனில் படித்தது மறந்துவிட கூடும்

சரி, எப்படி பயிற்சி செய்வது. அனைத்து பாடங்களையும் முழுமையாக பலமுறை படித்து முடித்தாகிவிட்டது. இப்போது வினாக்களுக்கு விடை அளித்து பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பயிற்சி செய்ய முக்கிய வினா-விடைகள் தொகுப்பு கைடுகளை வாங்கி பயிற்சி செய்ய வேண்டும். அந்த கைடுகளில் மிக முக்கிய வினா-விடைகள் தொகுப்பாக வெளியிடப் பட்டிருக்கும்.
பொது அறிவு உலகம் சார்பாக TET  தேர்வு தாள் - ஒ (ரூபாய் 70) மற்றும் TET  தேர்வு தாள் -  II    (ரூபாய் 70) என இரண்டு தேர்வுக்கும் மிக முக்கிய வினா-விடைகள் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. (இதன் விளம்பரம் 25-ஆம் பக்கத்தில் உள்ளதை பார்க்கவும்). அவற்றை வாங்கி பயிற்சி செய்து பார்க்கலாம். இந்த கைடு அனைத்து பாடங்களின் அனைத்து பாடப்பிரிவுகளின் மிக முக்கிய வினா-விடைகளை உள்ளடக்கியிருப்பதால் படித்து பயிற்சி செய்தால் நிச்சம் வெற்றி பெற முடியும். வெற்றி பெற வாழ்த்துக்கள்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :