Add1
logo
“கூலிப் பேச்சாளர் வைகைச்செல்வன்..” -போட்டுத் தாக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி! || நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் கொள்கைகளை கேட்ட பின்னர் தான் கருத்து சொல்ல முடியும்:கவுதமி || ஜூலை 17- ல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடக்கம் || மூக்கம்பட்டி ஜல்லிகட்டு ( படங்கள் || ஏரியில் குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணி || கல்வி மந்திரி அறிவிப்பு கண் துடைப்பா? கொந்தளிப்பில் பகுதி நேர ஆசிரியர்கள்! || கடல்நீர் உட்புகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனை கட்டவேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல் || கடலூர் மணல் குவாரிக்கு எதிர்ப்பு- கொள்ளிடம் ஆற்றுக்குள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் || ராமேஸ்வரம் - கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் காணவில்லை || தொடர்ந்து 7 அரைசதங்கள் விலாசி மிதாலி ராஜ் சாதனை! || சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம்: இயக்குநர் வ.கௌதமன் பேட்டி || 50 ஆயிரம் விவசாயிகளை திரட்டி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட திட்டம் || ஜெ. துணிவு எங்களுக்கு கிடையாது: வேறுவழியின்றி பாஜகவை ஆதரிக்கிறோம் -திண்டுக்கல் சீனிவாசன் ||
Logo
இனிய உதயம்
வீழ்ந்த திராவிடம் விழித்தெழ...
 ................................................................
இன்குலாப் பயணித்த இலக்கியத் திசைவழி!
 ................................................................
அத்தாவின் பசுங்குடில் -இளைய இன்குலாப்
 ................................................................
காதலுக்குரிய கவிஞரின் மகள்...
 ................................................................
உலகை இயக்கும் பெண்கள்
 ................................................................
இமயமலையில் தலைகீழாய் ஏறிய தமிழ்ப்பெண்!
 ................................................................
மாமனிதர்களுக்காகத்தான் மழை பெய்கிறது
 ................................................................
சிற்றிதழ்களின் உலகம் - மு. முகமது பாட்சா
 ................................................................
அறத்துக்கு எதிராக அத்துமீறல்!
 ................................................................
01-04-2017


ரைச்சல்மிக்க நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்ட நிலையில் நாங்கள் ஊரப்பாக்கத்தில் குடியேறினோம். அந்த வீட்டைச்சுற்றிலும் மரங்கள் வளர்க்கவேண்டுமென்று அத்தா விரும்பினார்கள். 

வீட்டின் முன்புறத்தில் ஒரு மாமரத்தையும் வீட்டின் இரண்டு பக்கங்களிலும் நெல்லிமரம் ஒருபக்கவாட்டிலும் மற்றொருபக்கம் வாழை, தேக்கு மரங்களையும்  நட்டு வைத்தார்கள். வீட்டின் பின்புறத்தில் தாராளமாக இடமிருந்ததால் மூன்று தென்னை மரங்களையும் ஒரு சப்போட்டா, மூன்று தேக்கு மரங்கள் மற்றும் செடி கொடிகள் என வீடே பசுமை சூழ்ந்து காணப்பட்டது. அதனால்தான் அவ்வீட்டிற்கு பசுங்குடில் என்று பெயர்சூட்டினார்கள்.

வளர்ந்த மரங்களின் நிழல் குளுமைசேர்த்தது. பறவைகளின் ஓசை அத்தாவின் கவிதைகளுக்கு வலிமை சேர்த்தது.

அத்தாவிற்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு அவர்களைச் செயல்படவிடாமல்  சோர்வை ஏற்படுத்தியது.  மருந்துகளின் உதவியோடும் எங்களின் அன்போடும் தோழர்களின் கனிவோடும் இயங்கிக் கொண்டிருந்தார்கள் அத்தா வீட்டிலிருக்கும் நேரங்களில் பெரும்பாலும் புத்தகங்களோடு லயித்துப்போவார். மற்ற நேரங்களில் பேரப்பிள்ளைகளோடு விளையாடுவதில் விருப்பம் காட்டுவார்கள். இறகுப்பந்து, கால்பந்து விளையாடுவார்கள் . சிலம்பம் சுழற்றிக் காண்பிப்பார்கள். அவர்கள் மிகவும் விரும்பிய விளையாட்டுகளில் சிலம்பமும் ஒன்று.

பேரப்பிள்ளைகளுக்கு கதைகளும் நிறைய சொல்வார்கள். நாங்களும் சிறுபிள்ளைகளாக இருக்கையில் கதைகள் கேட்டு உறங்கியதுண்டு.

அம்மா மூட்டுவலியின் காரணமாக நடப்பதற்கு சிரமப்பட்ட வேளையில் அத்தா உறுதுணையாக இருந்தார்கள். எங்கேயாவது பொதுக்கூட்டங்களுக்குச் செல்வதாக இருந்தாலும் மாலைக்குள் திரும்பிவர வேண்டும் என்ற நிலையில்தான் வெளியே செல்வார்கள்.

அத்தாவின் மறைவு அனைவருக்கும் பேரிழப்பாக ஆனது. ""என்னைக் குழந்தை போல பார்த்துக்கொண்டார்களே'' என்று அம்மா சொல்லி அழுதபோது ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. இழப்பின்வலியை ஆற்றும் சக்தி காலத்திடம்தான் உள்ளது.

அத்தாவின் மறைவுக்குப்பின்னர் சென்னையைத் தாக்கிய வர்தா புயல் பசுங்குடிலையும் பதம்பார்த்தது. வீட்டிலுள்ள மரங்கள் சிதைந்துபோயின.  வீட்டின் பின்புறமாக வளர்ந்திருந்த வேம்பும் தேக்கும் சாய்ந்தது.

முன்பக்கத்தில் இருந்த மாமரம் முறிந்து போனது.

மரங்கள் சிதைந்த வீட்டைப்பார்த்து அம்மா சொன்னார்கள், ""அத்தாவோடு சேர்ந்து மரங்களும் போய்விட்டன''.





தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :