Add1
logo
நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் ||
Logo
இனிய உதயம்
வீழ்ந்த திராவிடம் விழித்தெழ...
 ................................................................
இன்குலாப் பயணித்த இலக்கியத் திசைவழி!
 ................................................................
அத்தாவின் பசுங்குடில் -இளைய இன்குலாப்
 ................................................................
காதலுக்குரிய கவிஞரின் மகள்...
 ................................................................
உலகை இயக்கும் பெண்கள்
 ................................................................
இமயமலையில் தலைகீழாய் ஏறிய தமிழ்ப்பெண்!
 ................................................................
மாமனிதர்களுக்காகத்தான் மழை பெய்கிறது
 ................................................................
சிற்றிதழ்களின் உலகம் - மு. முகமது பாட்சா
 ................................................................
அறத்துக்கு எதிராக அத்துமீறல்!
 ................................................................
01-04-2017""பூக்களை இரசிக்கும் உள்ளம், காம்புகளைக் கண்டு கொள்வதேயில்லை!'' இன்று வாசிப்பு உலகத்தில் எத்தனையோ ஜனரஞ்சக பத்திரிகைகள் வந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் அவைகளின் ஜனனபூமி "சிற்றிதழ்கள்'தான் என்பதை நாம் அறியாமல் கடந்து சென்றுவிடுகிறோம்.

எனக்கான முகநூல் நண்பர்களில் "கிறிஷ் இராமதாஸ்' அவர்களும் ஒருவர். அவர் சிற்றிதழ்களின் மேன்மைக்காகவும், அழிந்துபோன சிற்றிதழ்களின் ஆவணக் காப்பாளராகவும் திகழ்கிறாரென்றால் அது மிகை கிடையாது. நானும் அவரோடு தொடர்ந்து ஒரு பார்வையாளனாகவே பயணிக்கத் தொடங்கினேன். பிறகுதான் புரிந்தது, அவர் ஒரு கடலை சேமிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பது.

நானும் என் பள்ளிப்பருவத்தில் "பனிமலர்' என்ற கையெழுத்து சுற்றுப் பிரதி நடத்தியது நினைவிற்கு வந்தது. அதுதான் பின்னாளில் என்னையும் ஓர் எழுத்தாளனாக வழிநடத்தியது.

இதனைப் பற்றி மேலும் சில தரவுகளைத் தேடி பயணப்பட்டேன். அப்போதுதான் நூற்றுக்கணக்கான சிற்றிதழ்கள் பயணப்பட்டதை அறியமுடிந்தது. அவற்றின் பயணகாலங்கள் குறைவில் முடிந்து போயிருக்கலாம். ஆனால் எழுத்து உலகின் விதைகள்தாம் அவை என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

சிற்றிதழ்களின் நோக்கம், ஜெயமோகன் போன்றவர்களால் விமர்சிக்கப்பட்டிருந்தாலும், அவை சுதந்திர களத்தில் நின்று போராடிய போராளிகள் என்பதுதான் உண்மை.

அவை வியாபார நோக்கத்தை விட்டு விலகி, நஷ்டக் கணக்கில் உட்கார்ந்து கொண்டு, சுதந்திரமாகப் போராடியவை. விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிப் பேசும் ஊடகமாகச் செயல்பட்டன. இங்குதான் அதிகளவில் கதை சொல்லிகளும், கவிதை சொல்லிகளும் உருவானார்கள். விசித்திர பெயர்களைத் தாங்கிவந்து வாசிப்பை மேன்மைசெய்ததில் சிற்றிதழ்களுக்கும் முக்கியப் பங்குண்டு.

சிற்றிதழ்களை பற்றி எழுதும்போது சுகன் என்கின்ற க.சுந்தர சரவணனை பற்றி எழுதாமல் கடக்கமுடியாது. 1987 முதல் தனது மறைவு காலமான 2015 வரையிலான 28 ஆண்டுகளும் கடும் கஷ்டங்களுக்கிடையேயும் "சுகன்' என்ற சிற்றிதழை நடத்தியவர்.

சிற்றிதழ்களை ஆவணப்படுத்துவதில், கவிஞர் வெற்றிப் பேரொளியுடன் சேர்ந்து பயணப்பட்டதை சிற்றிதழ்கள் உலகம் மறக்காது. இவரது இதழில் பல மூத்த படைப்பாளிகள் எழுதிய அதே சமயத்தில் வா.மு.கோமு, ஜாகீர்ராஜா போன்ற புதிய படைப்பாளிகளும் அவருடைய "சுகன்' என்ற வீட்டிற்குள்ளிருந்துதான் வந்தார்கள்.

இன்றைய ஆனந்தவிகடன் அன்றைய ஆனந்த போதினி என்ற சிற்றிதழ்தான் என்பதை எப்படி மறக்க முடியும்? அதன் ஆயுள்காலம்கூட அதிலிருந்துதான் கணக்கிடப்படுகின்றது.

சி.சு செல்லப்பா அவர்களால் தொடங்கப்பட்ட "எழுத்து' (1958) என்ற சிற்றிதழை பலர் முன்னிலைப்படுத்தினாலும், 1907-ல் அயோத்திதாசர் அவர்களால் தொடங்கப்பட்ட "ஒரு பைசாத் தமிழன்' சிற்றிதழை பற்றி மறைத்துவிடுகிறார்கள். அந்த இதழ் பிராமண எதிர்ப்பை முழுமையாகத் தாங்கிவந்தது. சமூகச் சிந்தனைகளைப் பேசியது. அப்போதே சாதி எதிர்ப்பிற்கான கவிதைகளை, கட்டுரைகளை வெளியிட்டது.

இது மட்டுமல்லாமல் 1871-ல் பஞ்சமர், 1893-ல் பறையன் போன்ற பெயர்களைத் தாங்கிய சிற்றிதழ்களும் வெளிவந்துள்ளன. 1907-ல் சொப்பனேஸ்வரி அம்மாள் என்ற பெண்ணால் 'தமிழ் மாது' என்ற சிற்றிதழும் வெளிவந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. 1946-ல் ஒரு முஸ்லிம் பெண்மணியால் துவங்கப்பட்ட 'முஸ்லீம் முரசு' என்ற சிற்றிதழ் 70 ஆண்டுகளைக் கடந்தும் பல பொருளாதாரக் கஷ்டங்களுக்கிடையே இன்றும் நடந்துவருகின்றது.

1980-ல் இலங்கையில் தொடங்கப்பட்ட "வானம்பாடி' என்ற சிற்றிதழும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் நடத்தப்பட்ட அந்த இதழ் தமிழர்களின் அவலங்களையும், சுதந்திரத்திற்கான எழுத்துகளையும் தாங்கிவந்துள்ளதாக அறியமுடிகிறது.

இன்றும் கூடப் பாரவி என்பவரால் நடத்தப்படும் 'தளம்', சிபிச் செல்வனின் "மலைகள்', இராஜகோபால் மீனாட்சி சுந்தரத்தின் "நான்காவது கோணம்' வித்தியாசமான பார்வைகளைத் தாங்கிவருகிறது. காலச்சுவடு, உயிர்மை போன்ற சிற்றிதழ்கள் பெரும்பான்மை வாசகர்களைக் கொண்டு, இன்றும் இயங்கிவருகின்றன. இதில் மேலும் சில சிற்றிதழ்களைப் பற்றி இடமின்மை காரணமாகவே குறிப்பிடவில்லை இன்றும் அரையாண்டிதழாக வரும் "பெயல்' என்ற சிற்றிதழ் இலாப நோக்கமில்லாமல், ஆராய்ச்சி மாணவர்களுக்காகவே எம்.செந்தில்குமார் என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது, இணையவழி பரிமாற்றங்கள் தொடங்கிய பிறகு, சிற்றிதழ்களின் பார்வையும் மேலோங்கியுள்ளதை காணமுடிகிறது. அதே நேரம் சிற்றிதழ்களை நேசிப்பதும் வாசிப்பதும் நமது கடமையென்றே கருதுகிறேன்.

ஒருசில சிற்றிதழ்களைத் தவிர, சிற்றிதழ்களெல்லாமே தூக்கியெறியும் குப்பைகளாக இருந்துவிடுவதில்லை. அவை என்றென்றுமே புத்தக அலமாரிகளின் பொக்கிஷங்களாகவே இருக்கின்றன. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : KRISH RAMADAS Date & Time : 4/22/2017 3:53:01 PM
-----------------------------------------------------------------------------------------------------
நன்றி நண்பர். உங்களை போன்ற நண்பர்களின் ஆதரவின் மூலம் தான் சிற்றிதழ்கள் உலகம் வளர்சசி பெற்றுள்ளது. நக்கீரன் இணையத்தில் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் திரு.நக்கீரன் கோபால் அவர்கள் வெளியிட்டு பெருமைப்படுத்தினார். அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. வாழ்த்துக்கள். - கிருஷ்.ராமதாஸ், ஆசிரியர், சிற்றிதழ்கள் உலகம்.
-----------------------------------------------------------------------------------------------------