Add1
logo
முழுஅடைப்புப் போராட்டம்; இராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் தலைமையில் சாலை மறியல் (படம்) || பேச்சுவார்த்தைக்கான சுமூக சூழல் உருவாகியிருக்கிறது : ஓபிஎஸ் || உழைப்பாளர் சிலை போல அஜித்-ன் போஸ்டர்; அஜித் ரசிகர்கள் அட்ராசிட்டிஸ் (படம்) || முழுஅடைப்புப் போராட்டம்; கடலூரில் நூற்றுக்கணக்கானோர் கைது! (படம்) || ஈரோட்டில் முழு அடைப்புப் போராட்டம்; அரசியல் கட்சியினர் கைது! (படம்) || சுகேஷூக்கு 5 நாள் காவல் நீட்டிப்பு || டெல்லி கோர்ட்டில் சுகேஷ் ஆஜர் || வெறிச்சோடிய சென்னை: திரையரங்கம், வணிகவளாகங்கள் அடைப்பு (படங்கள்) || முழுஅடைப்புப் போராட்டம்; கலையிழந்த திரையரங்குகள் (படங்கள்) || உத்திர பிரதேசத்திற்கு ஒரு நீதி தமிழ் பிரதேசமான தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா? கம்யூனிஸ்ட் போராட்டம் || டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை! || சென்னை சைதையில் மறியல் போராட்டம்; திமுக மா.செ. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கைது! || கொத்தமங்கலத்தில் விவசாயிகள் போராட்டம் டாஸ்மாக் கடை முற்றுகை! (படம்) ||
Logo
ஓம்
மீண்டும் அவதரிப்பாரா ராகவேந்திரர்?
......................................
மங்களம் பெருக்கும் மணநாள்!
......................................
அதிசயம் புரிந்த பரதேசி சித்தர்!
......................................
இறந்தவர்களை உயிர்ப்பித்த பம்பலேஸ்வரி தேவி!
......................................
ஏப்ரல் மாத எண்ணியல் பலன்கள்
......................................
பிதுர் சாபம் நீக்கி பிரம்ம ஞானம் அருளும்
......................................
ராம தரிசனம் பெற்ற துளசிதாசர்!
......................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
......................................
ஏப்ரல் மாத ராசிபலன்கள்
......................................
கடவுளைத் தேடி...
......................................
ஜனக நந்தினி ஜானகி!
......................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
......................................
சர்வக்ஞ மூர்த்தி சங்கரர்!
......................................
01-04-17ளுந்தூர்பேட்டை சாலையை ஒட்டியுள்ள பெரிய செவலை கிராமத்தில் கல் பரதேசி என்ற சித்தர் சுமார் 300 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்து வந்தார். அப்போது காடுகளாக இருந்த இப்பகுதியில் ஆலமரத்தடியில் அமர்ந்து தவத்தில் ஈடுபட்டுள்ளார். பசித்தபோது சிறுகற்களைத் தூளாக்கி சாப்பிடுவாராம். அதனால் அவரை கல் பரதேசி சித்தர் என்று அப்பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.

அவர் தவம்புரிந்த காட்டிற்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்செல்வார்கள் துலங்கம்பட்டு, பெரிய செவலை உள்ளிட்ட கிராம மக்கள். அப்போது அவர்களிடம் கல்தூளை வழங்கி, ""நீங்கள் விரும்பும் உணவை மனதில் நினைத்து கையை மூடித்திறந்து பாருங்கள்'' என்பாராம்.அவ்வாறு அவர்கள் திறந்து பார்க்கும்போது கல்தூள் அவர்கள் விரும்பிய உணவுப் பண்டமாக மாறியிருக்குமாம்.

இவ்வாறு சித்து வேலைகள் புரிந்து அப்பகுதி மக்களுக்கு சேவை புரிந்து வந்திருக்கிறார் கல் பரதேசி சித்தர்.

ஒருசமயம் அவருக்கு நீருக்குள் அமர்ந்து தவம் புரிய வேண்டுமென்ற எண்ணம் உதித்தது.

அதற்காக குளம் ஒன்றை வெட்ட எண்ணிய அவர், அந்தப் பணிக்கு வருமாறு மக்களை அழைத்தார். பரதேசியாக இருப்பவர் எப்படி கூலி தருவார் என்று யோசித்த பலர் முன்வரவில்லை. ஒருசிலர் மட்டும் ஆர்வமாகச் சென்றனர். அவர்களுக்கு சித்தர் கூலியாக வழங்கிய கல் உழைப்புக்கேற்ற ஊதியமாக மாறியது. இதைக்கண்டு பலரும் முன்வர, குளம் வெட்டி முடிக்கப்பட்டது. குளத்து நீரில் மிதந்தும், நீருக்குள் மூழ்கியும் தவத்தில் ஈடுபட்டார் பரதேசி சித்தர்.

அவ்வாறு ஒருமுறை நீருக்குள் தவம்புரிந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாகச் சென்ற பெண்கள் சிலர் அங்கு காய்த்துக் கிடந்த பூசணிக்காய்களைப் பறித்து சேலையால் மறைத்துக்கொண்டு துலங்கம்பட்டுக்குக் கிளம்புபோது, "எதையும் திருடக்கூடாது; கேட்டுப் பெற வேண்டும்' என்று சித்தரின் குரல் குளத்துக்குள்ளிருந்து ஒலித்தது. பெண்கள் சுற்றும்முற்றும் பார்த்தபோது யாரும் தென்படவில்லை. அவர்கள் புறப்பட முயல மறுபடியும், "காய்பறித்த கைகள் அழுகிவிடும்; சாப்பிடுபவர்கள் மரணமடைவார்கள்' என்று குரல் கேட்டது. அதைப் பொருட்படுத்தாமல் பூசணிக்காய்களுடன் ஊர் போய்ச் சேர்ந்தனர்.

அவர்களுள் ஒரு பெண் மட்டும் பூசணிக்காயை அரிந்து சமைத்தாள். அதை உண்டவுடனேயே மரணமடைந்துவிட்டாள். காயரிந்த கைகள் அழுகிப்போயின. இதனால் பதறிப்போன மற்ற பெண்கள் சித்தரிடம் சென்று மன்னிப்புக் கேட்டனர். அவர்களை மன்னித்து விபூதி கொடுத்தனுப்பினார்.அதனை இறந்த பெண்மீது பூச, அப்பெண் தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல் உயிர் பெற்றெழுந்தாள். அழுகிய கைகள் குணமாகியது.

இந்த குளத்துள் மூழ்கி, அருகிலுள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்குச் சென்று அரவான்சாமியிடம் உரையாடுவது பரதேசி சித்தரின் வழக்கம். அவ்வாறு ஒருமுறை இரவில் அவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போது, இயற்கை உபாதையைக் கழிக்க அப்பகுதிக்கு வந்த பெண்ணொருத்தி, ஆளரவமற்ற இடத்தில் ஆண்களின் குரல் கேட்பதையறிந்து கோவில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள்.

அதனை கவனித்துவிட்ட சித்தர் வெளியே வந்து அப்பெண்ணிடம், "நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை எவரிடமும் கூறாதே. மீறிச்சொன்னால் ஊமையாகிவிடுவாய்' என்று எச்சரித்துவிட்டுச் சென்றார். காலையில் தண்ணீரெடுக்க குளத்துக்குச் சென்ற அப்பெண், ஆர்வமிகுதியால் இரவில் தான் கண்டதையும் கேட்டதையும் அங்கிருந்த பெண்களிடம் சொன்னாள். மறுகணமே அப்பெண் ஊமையாகிவிட்டாள்.

பரதேசி சித்தரின் சித்து வேலைகள் தொடர்ந்தன. பெரிய பள்ளம் வெட்டி அதனுள் அமர்ந்துகொண்டு சிறுவர்களிடம் மண்ணைப் போட்டு மூடச்சொல்வார். சிறுவர்கள் மூடியதும் சில மணி நேரம் கழித்து வெளியே வந்து ஆச்சரியப்படுத்துவார். தம் இறுதிக்காலத்தை உணர்ந்த சித்தர் ஜீவசமாதி அடைய விரும்பினார். எப்போதும்போல் சிறுவர்களிடம் சொல்லி குழிவெட்டி அதனுள் இறங்கி மூடச்சொன்னார். வழக்கம் போல் வெளியே வந்துவிடுவார் என்று நம்பியிருந்தனர் சிறுவர்கள். ஆனால் கல் பரதேசி சித்தர் வெளியே வரவில்லை. ஜீவசமாதி அடைந்துவிட்டார்.

உயிரோடிருந்தபோது பல சித்துகள் புரிந்து மக்களுக்கு சேவை செய்துவந்த பரதேசி சித்தர் ஜீவசமாதியான பின்பும் மக்களின் குறைகளைப் போக்கி அருளாசி வழங்கினார். இதனைத் தொடர்ந்து அன்பர்கள் ஒன்றுகூடி கோவில் அமைத்தனர். முருகேசன் என்ற அன்பர் விநாயகர், சிவன், கிருஷ்ணர், மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதி களை ஏற்படுத்தினார்.

கல் பரதேசி சித்தருக்குப் பணி விடை செய்த ஏனாதிப்பட்டி சாமிகள், மாணிக்க சாமிகள், பால் காவடி சாமிகள், சாது என்ற முருகேசன் சாமிகள் ஆகியோரும் இங்கே ஜீவசமாதி அடைந்துள்ளனர்.

குளத்தில் வளரும் மீன்களின் வாயிலிருந்து வெளியேறும் நீரைக்கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்தவர் கல் பரதேசி சித்தர். தன்னுடைய சீடர்கள் திருவண்ணாமலை தீபதரிசனம் காண விரும்பியபோது அவர்களைத் தூக்க நிலையில் ஆழ்த்தி, ஆகாய மார்க்கமாக திருவண்ணாமலைக்கு அழைத்துச்சென்று தரிசனம் பெற வைத்துள்ளார்.

கல் பரதேசி சித்தர் ஜீவசமாதி அமைந் துள்ள இடம் தற்போது சோலைவனமாக மாறி, மக்கள் செழிப்போடு, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இவ்வூரில் திருட்டு நடப்பதில்லை என்பது சித்தரின் மகிமைக்குச் சான்று!குழந்தை பாக்கியம் கிட்டவும் வறுமை நீங்கவும் வழக்கு தீரவும் இங்கு வரம் வேண்டி பலன் பெறுகிறார்கள். ""இங்கு வந்து முறையிட்டதும் எங்களின் குறைகள் எல்லாம் நீங்கிவிட்டன'' என்கிறார்கள் துலங்கப் பட்டு ஆறுமுகம், சேமகோட்டை பச்சையம் மாள்.

""வேண்டுதல்கள் வேண்டியபடியே விரைந்து நிறைவேறுகிறது'' என்று பரதேசி சித்தரின் பெருமை பேசுகிறார் இங்கு முழுநேரப் பணி செய்து வரும் அய்யனார்.

மார்கழி மாத ஏகாதசி அன்று சிறப்புப் பூஜை, அன்னதானம் நடக்கும்.

பென்னை- கெடிலம் நதிகளுக்கு இடையே பெரியசெவலை சர்க்கரை ஆலை உள்ளது. இதையொட்டி கல் பரதேசி சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. உளுந்தூர்பேட்டையிலிருந்து 20 கிலோ மீட்டர், திருவெண்ணெய்நல்லூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர், திருச்சி- சென்னை சாலையிலுள்ள மடப்பட்டு என்னும் ஊரிலிருந்து மேற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :