Add1
logo
கோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் என்று திசை திருப்புகிறது நடுவண் அரசு! பெ. மணியரசன் || ஐநூறு பேர் கூட கூடாத கூட்டத்திற்கு ஏன் இந்த அலப்பரை? || கிணற்றில் குதித்து 4 பள்ளி மாணவிகள் தற்கொலை; 3 மாணவிகள் பலி || ஓட்டுக்கு பணம் .. தேர்தல் ஆணையத்திடம் என்ன திட்டம் உள்ளது ...? கொ.ம.தே.க.ஈஸ்வரன் கேள்வி || அன்புச்செழியன் என்னை தொந்தரவு செய்ததாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை : தேவயானி || தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - ஐகோர்ட் உத்தரவு || ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்! || டெல்லியில் இருந்து திரும்பிய விவசாயிகள் சென்ட்ரலில் தர்ணா போராட்டம்! || காணாமல் போன 500 குழந்தைகள் ஆதார் உதவியால் மீட்பு! || துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன் || டிச. 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு || EXCLUSIVE - டிடிவி அணியில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்..! || இந்திய பந்துவீச்சில் சுருண்டது இலங்கை அணி! ||
Logo
ஓம்
மீண்டும் அவதரிப்பாரா ராகவேந்திரர்?
 ................................................................
மங்களம் பெருக்கும் மணநாள்!
 ................................................................
அதிசயம் புரிந்த பரதேசி சித்தர்!
 ................................................................
இறந்தவர்களை உயிர்ப்பித்த பம்பலேஸ்வரி தேவி!
 ................................................................
ஏப்ரல் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பிதுர் சாபம் நீக்கி பிரம்ம ஞானம் அருளும்
 ................................................................
ராம தரிசனம் பெற்ற துளசிதாசர்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
ஏப்ரல் மாத ராசிபலன்கள்
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
ஜனக நந்தினி ஜானகி!
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
சர்வக்ஞ மூர்த்தி சங்கரர்!
 ................................................................
01-04-17



மகேஷ் வர்மா

த்தீஸ்கர் மாநிலம், டோங்கர் கட் என்னும் இடத்திலுள்ள 2,000 அடி உயரமுள்ள மலைமீது அமைந்துள்ளது மா பம்பலேஸ்வரி தேவி ஆலயம். செந்தூர நிறத்தில் தேவி அருள்புரிகிறாள்.

இந்த மலையடிவாரத்தில் கிழக்கே பெரிய ஏரி ஒன்றுள்ளது. மலையின் மேற்குப் பகுதியில் பின்னியா ஜோபு என்ற ஏரியும், வடக்கில் தாரா என்ற ஏரியும், தெற்கில் மடியான் என்ற ஏரியும் உள்ளன. மலைமீதிருந்து பார்க்கும்போது நாற்புறமும் நீர் சூழ்ந்த காட்சி மிக அற்புதமான அனுபவத்தைத் தருகிறது.

இந்த தேவியின் மகிமையை உணர்த்த பழமையான கதை ஒன்று சொல்லப்படுகிறது. முற்காலத்தில் இப்பகுதி காமாக்யா என்னும் பெயரில் பெரிய நகரமாக இருந்தது. அதை தலைநகராகக்கொண்டு காமசேனன் என்ற மன்னன் ஆட்சி செய்துவந்தான். கலைகளில் ஆர்வம் மிக்க அம்மன்னனின் அவையில் மாதவா நல் என்னும் சிறந்த இசைக்கலைஞன் இருந்தான். காமகந்தளா என்ற நடனப்பெண்ணும் இருந்தாள். இருவரும் ஒருவரையொருவர் நேசித்தனர். இது மன்னனுக்குத் தெரியாது.

ஒருமுறை அரண்மனையில் மாதவா நல்லின் இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் பெரிதும் மகிழ்ந்த மன்னன் தன் கழுத்திலிருந்த நவரத்தின மாலையை எடுத்து அவனுக்கு அளித்தான். அவனோ அதை காமகந்தளாவுக்குக் கொடுத்துவிட்டான். இதையறிந்து கோபமுற்ற மன்னன் மாதவா நல்லை நாடு கடத்தினான்.

பல இடங்களில் அலைந்த மாதவா நல் இறுதியாக உஜ்ஜயினி வந்து சேர்ந்தான். அங்கே மன்னன் விக்ரமாதித்தனின் ஆதரவு கிடைத்தது. அவனது இசையில் பெரிதும் வசப்பட்ட விக்ரமாதித்தன், ""நீ விரும்புவதைக் கேள்; எதுவாயினும் தருகிறேன்'' என்றான்.

அதற்கு மாதவா நல் தன் கதையைக் கூறி, ""என் காதலியான காமகந்தளாவே எனக்குத் தேவை'' என்றான்.

அதை ஏற்றுக்கொண்ட விக்ரமாதித்தன், காமகந்தளாவை அனுப்பி வைக்குமாறு காமசேனனுக்கு கடிதம் அனுப்பினான்.

ஆனால் காமசேனனோ அதற்கு சம்மதிக்கவில்லை. பேரரசனான தனது கடிதத்தையே மதிக்காததால் கோபமடைந்த விக்ரமாதித்தன் காமாக்யாவை நோக்கி படையெடுத்துச் சென்றான்.
விக்ரமாதித்தன் மகா காளேஸ்வரரின் பக்தன்; காமசேனன் பகளாமுகி தேவியின் பக்தன். இருவரும் தங்கள் இஷ்ட தெய்வங்களை வணங்கி போரிடத் தொடங்கினர். அந்த போரைக் காண அவ்விரு தெய்வங்களுமே வந்துவிட்டனராம். காளியிடம் வரம்பெற்ற விக்ரமாதித்தனை சமாளிக்க காமசேனனால் இயலவில்லை. போரில் காமாக்யா நகர் பெரும் சேதத்தை சந்தித்தது. (இந்த மலையுள்ள பகுதியே எஞ்சியது. அதுதான் தற்போதைய டோங்கர் கட்).

வெற்றிபெற்ற மன்னன், இந்தப் போருக்குக் காரணமான அவ்விருவரின் காதலும் உண்மைதானா என்று அறிய விரும்பினான். அதற்காக மாதவா நல் போரில் இறந்துவிட்டான் என்னும் செய்தியைப் பரவச் செய்தான்.

அதைக் கேட்ட காமகந்தளா, இனி நான் எதற்காக உயிர்வாழ வேண்டுமென்று குளத்தில் விழுந்து உயிர்துறந் தாள். (அந்தக் குளம் அவள் பெயரிலேயே தற்போதும் உள்ளது.) இந்த செய்தியைக் கேள்விப்பட்ட மாதவா நல்லும் உயிரை விட்டுவிட்டான்.

இருவர் மரணத்தைக் கண்டு பெரிதும் மனம் வருந்திய விக்ரமாதித்தன் பம்பலேஸ்வரி சந்நிதிக்குச் சென்றான். ""தாயே, ஒரு நகரமே அழியுமளவுக்கு மிகப்பெரிய போர் இங்கு நிகழ்ந்துள்ளது. அதற்குக் காரணம் இவர்களுடைய காதல்தான். அது உண்மையானதா என பரிசோதிக்கச் செய்த முயற்சி விபரீதமாகிவிட்டது. அவர்கள் இறந்தால் இதற்கெல்லாம் என்ன பொருள்? மனமிரங்கி அவர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும்'' என்று வேண்டினான். தேவி மனம் கனிந்தாள். காதலர்கள் உயிர் பெற்றெழுந்தனர்.

இத்தகைய சிறப்புவாய்ந்த இவ்வாலயத்துக்கு திருமணம், பிள்ளைப்பேறு வேண்டி பல்லாயிரம் பக்தர்கள் வருகிறார்கள். எதிரிகளின் தொல்லை விலக இங்கு நடைபெறும் யாகத்தில் சிவப்பு மிளகாயைக் கொட்டுகிறார்கள். இந்த மாநில மக்கள் தங்கள் குலதெய்வமாக இந்த அன்னையை வழிபடுகிறார்கள். விளக்குப் பூஜை இங்கு விசேஷம்.

மலையேறிச் செல்ல படிகள் உள்ளன. ரோப் கார் வசதியும் உண்டு. சத்தீஷ்கர் மாநிலத்திலேயே இந்த வசதியுள்ள ஆலயம் இதுமட்டும்தான்.

சென்னையிலிருந்து ராய்ப்பூர் சென்று, அங்கிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள டோங்கர் கட்டை அடையலாம். நாக்பூர் சென்று, அங்கிருந்து இருநூறு கிலோமீட்டர் பயணித்தும் அடையலாம்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :