Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
Logo
ஓம்
மீண்டும் அவதரிப்பாரா ராகவேந்திரர்?
 ................................................................
மங்களம் பெருக்கும் மணநாள்!
 ................................................................
அதிசயம் புரிந்த பரதேசி சித்தர்!
 ................................................................
இறந்தவர்களை உயிர்ப்பித்த பம்பலேஸ்வரி தேவி!
 ................................................................
ஏப்ரல் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பிதுர் சாபம் நீக்கி பிரம்ம ஞானம் அருளும்
 ................................................................
ராம தரிசனம் பெற்ற துளசிதாசர்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
ஏப்ரல் மாத ராசிபலன்கள்
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
ஜனக நந்தினி ஜானகி!
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
சர்வக்ஞ மூர்த்தி சங்கரர்!
 ................................................................
01-04-17


ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்


1, 10, 19, 28-ஆம் தேதிகளில்
பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் நீங்கள் எடுத்துக்கொள்ளும் காரியங்கள், இதற்குமுன் முயற்சிசெய்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். புதிய கடன்கள் ஏற்படாது. பழைய கடன்களை அடைக்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி கூடும். லாபம் சுமாராக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததைவிட விற்பனை அதிகரிக்கும். லாபமும் அதிகமாகக் கிடைக்கும். அரசு ஊழியர்கள் நல்லது செய்தாலும், உயரதிகாரிகளின் எச்சரிக்கைக்கு ஆளாக நேரிடும். எனவே பணியில் கவனமாக இருக்கவேண்டும். கையூட்டு பெறுபவர்கள் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் சென்ற மாத தரத்தை (ரேங்) அடைய முடியும். அரசியல்வாதிகள் நினைத்தபடி பதவி மாற்றம் வரும். தொலைபேசி செய்தியும், கடிதச் செய்தியும் மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களுக்கு சவாலான மாதம். எடுக்கும் காரியங்களில் தொய்வு, தடை வரலாம். எனவே யோசித்து செயல்பட வேண்டும். நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு தாமதமாகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எனினும் வருமானம் எதிர் பார்த்த அளவுக்கு வராது. கணவன்- மனைவி ஒற்றுமை குறையாது. பிரிந்துசென்ற தம்பதிகள் ஒன்றுகூடுவர். தொழிலதிபர்கள் திட்டமிட்டபடி உற்பத்தி கூடும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். வியாபாரிகள் லாபத்துடன் அதிக விற்பனையைச் செய்வார்கள். கடிதத் தொடர்புகள் நல்ல தகவல்களைக் கொண்டுவரும். இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வந்துசேரும். சோம்பல் நீங்கும். அரசுப் பணியாளர்கள் வேலைப்பளு காரணமாக சில பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். அதிகாரிகளின் பாராட்டுக்குக் குறைவிருக்காது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் ஓரளவு மதிப்பெண்களைப் பெற்று முன்னேறுவார்கள். வீண்வாக்குவாதங்களைத் தவிர்க்கவேண்டும். சிலருக்கு திடீர் திருமணம் நடக்கும்.

அரசியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

பெண்களால் உயர்வு பெறும் மாதம். மனைவி சொல்லைக் கேட்பவர்கள் நஷ்டத்திலிருந்து விடுபடுவார்கள். இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மாத நடுவில் கைகூடிவிடும். சிறுசிறு காரியத்துக்குக்கூட அதிகமாக டென்ஷன் வரும். பொறுமையைக் கடைப்பிடித்தால் வெற்றியை அடையலாம். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வராது. தொழிலதிபர்கள் திட்டமிட்டபடி வளர்ச்சி காண்பார்கள். பணவரவில் இருந்துவந்த சிரமம் குறையும். பழைய பாக்கி வசூலாகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சிலருக்கு இறைவன் அருளால் குழந்தை பாக்கியம் கிட்டும். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பகை வரலாம். சிலர் திட்டமிட்டபடி வீடு கட்டுவார்கள். கைமாற்றாகக் கொடுத்த பணம் வந்துசேரும். இளைஞர்கள் பயணத்தில் எச்சரிக்கை தேவை. சகோதரர்கள் ஒற்றுமை கூடும். இழுபறியாக இருந்த சொத்துப் பிரிவினை சுமுகமாக நடக்கும். வழக்குகள் சாதகமாகும். வயது முதிர்ந்த பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. அரசு ஊழியர்கள் கேட்ட இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள். மந்தபுத்தி மாறும். அரசியல் பிரமுகர்கள் நினைத்ததற்கு எதிர்மறையாக காரியம் வந்தாலும், சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இதுவரை உங்களுக்கு சங்கடத்தைக் கொடுத்துவந்த உறவினர்கள் விலகிச்செல்வார்கள். காரியத்தில் இருந்துவந்த தடை, தாமதங் கள் மாறிவிடும்.  காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். பிரிந்துசென்ற தம்பதியரும்,  விவாகரத்து கோரிய தம்பதியரும் திடீரென ஒன்றுகூடி இருவீட்டாருக்கும் மகிழ்ச்சி தருவார்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தாமதமின்றி வரும். தொழிலாளர்கள் ஒற்றுமையால் தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியைப் பெறுவார்கள். ஆனால் நிர்வாகத்திலுள்ள பணியாளர்களிடம் எச்சரிக்கை தேவை. வியாபாரிகள் கொள்முதலை அதிகரித்து லாபம் பெறுவார்கள். தொல்லை கொடுத்துவந்த வியாபாரிகள் விலகிச் செல்வார்கள். மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த மாதம் மருந்துகளைக் கையாளும்போது எச்சரிக்கை தேவை. பெண்களால் சகாயம் உண்டு. இழுபறியாக இருந்துவந்த வழக்குகள் சாதகமாக முடியும். சினிமா மற்றும் கிராமிய கலைத்துறையினர் வளர்ச்சி காண்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் உருவாகும். மாணவர்கள் ஆசிரியரின் பாராட்டைப் பெறுவார்கள். இளைஞர்களுக்கு நல்ல வேலை கிட்டும். வெளிநாடு போகும் திட்டம் நிறைவேறும். சிலர் துணிச்சலாக செயல்பட்டு அதிக லாபத்தைப் பெறுவார்கள். சிலருக்கு விரும்பியபடி புதிய வரன்கள் அமையும். உடல்நிலை சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நல்ல செய்திகளையும் காரிய வெற்றி களையும் கொண்டுவரும் மாதம். இழுபறியாக இருந்துவந்த பிள்ளைகளின் திருமணம் இனிதே நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உருவாகும். குலதெய்வத்தையும் மற்ற தெய்வங்களையும் தரிசிக்கும் திட்டம் நிறைவேறும். ஆலய தரிசனங்கள் நல்ல வாய்ப்புகளை உருவாக்கும். தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தொழிலை விருத்தி செய்வார்கள். அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் பாராட்டோடு, பதவி உயர்வும் பெறுவார்கள். காவல்துறையினர் மேலதிகாரி கள் கண்டனத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த தேதிகளில் பிறந்த இளம்விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளை வெளியிடுவார்கள். புகழ் கூடும். வியாபாரிகள் நினைத்தபடி வியாபாரம் பெருகும். வேலைக்கு நல்ல சிப்பந்திகள் கிடைப்பார்கள். மரம் சம்பந்தப்பட்ட வியாபாரிகள், தொழிலாளர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். இதுவரை வாட்டிவதைத்த பிணி, பீடைகள் விலகும். குடும்பத்தில் வருமானம் பெருகும். இளைஞர்கள் வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கால்நடை வளர்ப்போர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். விவசாயத் தொழில்புரிவோர் நல்ல மகசூலைப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய மாதம். பிரிந்த உறவுகள் வந்துசேரும். அரசியல்வாதிகள் பொதுமக்களால் பாராட்டப்படுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

"எங்களுக்கு கஷ்ட ஜீவனம் மாறாதா'

என்று ஏங்கியவர்களின் துன்பம் விலகும் மாதம். எதிர்பாராத பணவரவுகள் எல்லா வகையிலும் நிம்மதியைத் தரும். சேமிப்பு உயரும். பிள்ளைகள் உதவியாக செயல்படுவார்கள். சம்பாதித்த பணத்தை வீட்டிற்குக் கொடுக்காமல் ஊதாரித்தனமாக வாழ்ந்த பிள்ளைகள் நல்வழிக்கு வந்துவிடுவார்கள். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்; அன்யோன்யம் அதிகரிக்கும். வேலை கிடைக்காத கணவன்- மனைவி நிரந்தர வேலையைப் பெறுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறுவார்கள். தம்பதியர் சேர்ந்து வாகனங்களில் பயணிக்கும்போது நிதானமாகச் செல்லவேண்டும். தொழிலதிபர்கள் நஷ்டமின்றி லாபத்தைப் பெறுவார்கள். அதே நேரத்தில் தொழிற்சாலையில் மின்சாரப் பிரிவில் கவனம் தேவை. வியாபாரிகள் கொள்முதல் செய்து வைத்திருக்கும் அனைத்து ஸ்டாக்குகளும் லாபத்தோடு விற்பனையாகும். சில்லரை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் எல்லா வேலைகளையும் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். சோம்பல் நீங்கும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். நீண்டகாலமாக திட்டமிட்ட பயணம் நிறைவேறும். வரன் தேடுவோருக்கு நல்ல வரன்கள் அமையும். செங்கல் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்கள் உற்சாகத்தோடு கல்வி பயின்று முன்னணிக்கு வருவார்கள். அரசியல்வாதிகள் ஆதாயம் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில்
பிறந்தவர்களுக்கு:

இந்த மாதத் துவக்கத்தில் ஏழு நாட்களுக்கு காரியத் தடைகள் ஏற்படும். பின்பு அனைத்து காரியத்திலும் வெற்றி பெறுவீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். மனைவியின் சேமிப்பு கைகொடுக்கும். வரவுகள் அதிகம்; செலவும் அதிகம். ஆனால் சுபவிரயச் செலவுகளாக மாறும். புதிய வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். தொல்லை கொடுத்துவந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பிள்ளைகளின் வளர்ச்சியால் பாராட்டுகள் குவியும். சிலர் மத்திய அரசுப்பணிகளில் உயர்பதவிகளை அடைவார்கள். இதுவரை விற்பனையாகாமல் இருந்துவந்த சொத்து விற்பனையாகும். பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அரசாங்க ஊழியர்கள் வரவேண்டிய சலுகைகளை அடைவார்கள். பெண்களால் நன்மையுண்டு. சிலர் உடன்பணிபுரியும் பெண்ணை மணப்பார்கள். வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபம் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு விற்பனை பெருகும். மந்த நிலை மாறும். கப்பல் வர்த்தகம் செய்வோர், கான்ட்ராக்டர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். பழ வியாபாரிகளும் கூடுதல் நன்மை பெறுவார்கள். சரக்கு தேக்கம் வராது. விவசாயத் தொழிலாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். மாணவர்கள் தீவிர சிந்தனையோடு கல்வி பயில்வார்கள். அரசியல்வாதிகள் புதிய நட்புகளால் உயர்வடைவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கடந்த ஐந்து வருடமாக வராமலிருந்த பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். கனிவான பேச்சால் காரியத்தை சாதிப்பீர்கள். தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகிச்செல்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டு. வழக்குகள் சாதகமாக முடியும். உங்களை ஏமாற்றிவந்த உடன்பிறப்புகளை அடையாளம் கண்டு விலகுவீர்கள். வியாபாரிகள் தொழில் போட்டியால் அடைந்த துன்பங்கள் மாறும். சிறுவியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை அனைவருமே நல்ல லாபம் பெறுவார்கள். தொழிலதிபர்கள் நல்ல வளர்ச்சியை அடைவார்கள். தொழிலாளர்கள் ஒற்றுமையால் லாபம் பெருகும். இதுவரை வசூலாகாத பாக்கிகள் வசூலாகும். இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள். மாநில, மத்திய அரசில் பணிபுரியும்  பணியாளர்கள் அதிகாரிகளின் ஆதரவோடு, கேட்ட இடத்திற்கு மாறுதலை அடைவார்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். குலதெய்வ வழிபாடுகள் நல்ல திருப்பத்தைத் தரும். தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பிரிந்து சென்ற உறவுகள் வந்துசேர்வார்கள். உயர்படிப்பில் உள்ள சிலர் நிரந்தர வேலை கிடைத்து, படிப்பைக் கைவிடுவார்கள். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டு. அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளை அடைவார்கள். பெண்களால் நன்மையடையும் மாதம்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

"ஈன்ற பொழுதில் பெரிதுவக்கம் தன் மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்'

என்ற அய்யன் திருவள்ளுவர் கூற்றுப்படி, உங்கள் பிள்ளைகளின் ஆரம்பக் கல்வி முதல் உயர்படிப்பு வரை சிறப்பாக இருக்கும் மாதம். இந்த மாதம் பிள்ளைகள் சாதனை படைத்து பரிசுகளைப் பெறுவார்கள். உயர்பதவிகளையும் அடைவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவிருக்காது. காதல் திருமணம் செய்ய நினைத்த பிள்ளைகள் மனம்மாறி பெற்றோர் சொல்லைக் கேட்டு நடப்பார்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். தொழிலதிபர்கள் வெளித்தொடர்புகள் விரிவடைந்து வியாபாரம் பெருகும். புதிய ஒப்பந்தங்கள் லாபத்தைக் கொடுக்கும். வியாபாரிகளுக்கு நஷ்டம் மாறி லாபம் பெருகும். இதுவரை வசூலாகாமல் இருந்த பாக்கிகள் வசூலாகும். வாட்டிவதைத்த கடன் தொல்லை நீங்கும். சிலர் வெளிநாடு செல்ல போட்டிருந்த நீண்டநாள் திட்டம் நிறைவேறும். வழக்குகள் வெற்றியாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். அரசு ஊழியர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை கவனத் துடன் செய்து முடிப்பீர்கள்; அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத் தலைவிகள் பொருளாதார உயர்வால் மகிழ்ச்சி கொள்வார்கள். தாயார்வழி சொத்துகள் கிடைக்கும். பங்காளிகள் ஒற்றுமை வளரும். நல்ல செய்திகள் வந்துசேரும். சிலர் எதிர்பாராமல் அரசு உதவிகளை அடைவார்கள். சிலர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். அரசியல்வாதிகள் சிலரது பதவி தலைமையால் மாறும். அல்லது இல்லாமல் போகும்; கவனம் தேவை.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.

செல்: 94871 68174

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :