Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
Logo
ஓம்
மீண்டும் அவதரிப்பாரா ராகவேந்திரர்?
 ................................................................
மங்களம் பெருக்கும் மணநாள்!
 ................................................................
அதிசயம் புரிந்த பரதேசி சித்தர்!
 ................................................................
இறந்தவர்களை உயிர்ப்பித்த பம்பலேஸ்வரி தேவி!
 ................................................................
ஏப்ரல் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பிதுர் சாபம் நீக்கி பிரம்ம ஞானம் அருளும்
 ................................................................
ராம தரிசனம் பெற்ற துளசிதாசர்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
ஏப்ரல் மாத ராசிபலன்கள்
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
ஜனக நந்தினி ஜானகி!
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
சர்வக்ஞ மூர்த்தி சங்கரர்!
 ................................................................
01-04-17திருமாலின் பூவுலக அவதாரங்களுள் மிக உன்னதமானது ராமாவதாரம். தசரதன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் பயனாக, தாயின் வயிற்றில் 12 மாதம் கருவாயிருந்து, நவமி திதி புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தார் ஸ்ரீராமன். பூசத்தில் பரதனும், ஆயில்யத்தில் லட்சுமணன், சத்ருக்னனும் பிறந்தனர்.

ராமர் கதையை அறியாதவர்கள் இல்லை. வால்மீகி முனிவரால் வடமொழியில் பாடப்பெற்ற இராமாயணம் அதன்பின்னர் பல மொழிகளிலும் இயற்றப்பட்டது. தமிழில் கம்பராமாயணம் இணையற்றது. பத்ராசலம் ராமதாசர் தெலுங்கில் ராமனைப் பற்றி பல பாடல்கள் பாடினார். காளிதாசர் "ரகுவம்சம்' எழுதினார்.

அனுமனின் மறுபிறப்பாகத் தோன்றிய சமர்த்த ராமதாசர் மராட்டிய மொழியில் பல துதிகளை இயற்றினார். நாரதரின் அவதாரமாக திருவாரூரில் தோன்றிய தியாகராஜர் ராமர்மீது தெலுங்கில் நாதமழை பொழிந்தார்.

அதுபோல ஹிந்தி மொழியில் ராமகாதை எழுதியவர் துளசிதாசர். இவரை வால்மீகி அவதாரம் என்பர்.

துளசிதாசரின் காலம் கி.பி. 1532 முதல் 1623 வரை என்பர். ராமர் வனவாசம் மேற்கொண்ட சித்ரகூடம் அருகேயுள்ள ராஜாப்பூரில், ஆத்மராம் துபே- ஹுசீமாய் தம்பதிக்குப் பிறந்தவர் துளசிதாசர். இவர் பிறப்பும் வினோதமே. தாயின் வயிற்றில் 12 மாதங்கள் இருந்து பிறந்தார். பிறக்கும்போது அழவில்லை. ஐந்து வயது குழந்தைக்குரிய திடகாத்திரம். வாயில் 32 பற்களும் இருந்தனவாம்.

ஆத்மராம் ஜோதிடம் அறிந்தவர். பிள்ளையின் ஜாதகத்தை தானும் ஆராய்ந்து, மற்றவர்களிடமும் ஆலோசித்தபோது, தாய்- தந்தையருக்கு கெடுதல் என தெரியவந்தது. விவரம் தாய் ஹுசீமாய்க்குத் தெரிவிக்கப்பட்டது. அவள் வேலைக்காரியிடம் குழந்தையைக் கொடுத்து, வேண்டிய பொருளையும் கொடுத்து, ஹரிப்பூரிலுள்ள தனது மாமியார் வீட்டுக்கு கொண்டு செல்லுமாறு கூறினாள். மறுநாள் ஹுசிமாய் இறந்தாள்.

ஆக, துளசிதாசர் ஆதரவற்றவராக வளர்ந் தார். அவர் தன் பாடல்களில், "அன்னபூரணியால் உணவளிக்கப்பட்டு வளர்ந்தேன். அனுமனே எனக்குத் தோழன், குரு, தெய்வம் எல்லாம்' என்று குறிப்பிடுகிறார். சிவ தரிசனமும் பெற்றார்."பாபா நரஹரிதாஸ் என்பவரின் ஆதரவு கிடைத்தது. அவரே எனக்கு ராமபோலா என்று பெயர் சூட்டினார். அவரே எனக்கு குரு' என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். அவர் ராம மந்திரத்தை இவருக்கு உபதேசித்தார். பின்னர் ராமானந்தர் பரம்பரையினரால் "துளசிதாசர்' என்னும் பெயர் பெற்றார்.

நரஹரிதாசர் ராமகாதையை இவருக்கு போதித்தார். பின்னர் குருவுடன் காசி சென்ற துளசிதாசர், அங்கு சேஷசனாதன பண்டிதரிடம் சமஸ்கிருதம் பயின்றார். அங்கேயே 15 ஆண்டுகள் தங்கி வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களையும் சங்கீதத்தையும் பயின்றார்.

பின்னர் தான் பிறந்த ஊரான ராஜாப்பூர் வந்து, ஆன்மிகர்களுக்கு ராமகாதை கூறினார். அதனால் கிடைத்த பொருளைக் கொண்டு தான் பிறந்த வீட்டைப் புதுப்பித்தார். (தந்தை முன்னரே இறந்துவிட்டார்).

துளசிதாசரின் கலை மேன்மை, இசை மேன்மை, யௌவனம் ஆகியவற்றைக் கண்ட ஒருவர், தனது மகள் ரத்னாவளியை அவருக்கு மணம் செய்துகொடுத்தார். மனைவியை மிகவும் நேசித்தார். ஆனால் காமம் அளவுக்கு மீறி இருந்தது.

ஒரு சமயம் ரத்னாவளி துளசிதாசரிடம் சொல்லாமல் தன் தாய்வீடு சென்றுவிட்டார். வெளியில் சென்றிருந்த துளசிதாசர் இரவு வீடு திரும்பியபோது மனைவி வீட்டில் இல்லாததுகண்டு அதிர்ச்சியடைந்தார். தாய்வீடு சென்றிருக்கும் விவரம் அறிந்தார். மனைவி இல்லாமல் நெடுநேரம் அவரால் இருக்கமுடியவில்லை. அந்த நள்ளிரவிலேயே புறப்பட்டுவிட்டார். நதியைக் கடந்தார். மரத்தில் தொங்கிய கயிற்றைப் பிடித்தேறி மாடியிலிருந்த மனைவியின் அறைக்குச் சென்று கதவைத் தட்டினார்.

தூக்கக் கலக்கத்துடன் மனைவி கதவைத் திறக்க, அவளை அங்கேயே கட்டியணைத்தார். கோபத்துடன் அவரை விலக்கிய ரத்னாவளி, ""இந்த நள்ளிரவில் அப்படி என்ன அவசரம்? உடையெல்லாம் ஈரம். எப்படி வந்தீர்கள்?'' என்றாள்.

தான் எப்படி வந்தோம் என்பது அப்போதுதான் அவருக்குப் புரிந்தது. அவர் படகில் வரவில்லை. மிதந்து வந்த பிணத்தைப் பற்றிக்கொண்டே ஆற்றைக் கடந்திருக்கிறார்.

மரத்தில் தொங்கியது கயிறல்ல; பாம்பு! காமம் அவரை மதிமயங்கச் செய்துவிட்டது.""சதையும் எலும்பும் கொண்ட இந்தப் பெண் உடலின்மீது கொண்ட வெறியை ராமநாமத்தின்மீது வைத்தால் கடைத்தேறலாமே... இதை அறிந்தவர்தானே நீங்கள்!'' என்று கேட்டாள்.

அந்த சொற்கள் அவரது அஞ்ஞான இருளைப் போக்கியது. ராமபாணமாக அவரது இதயத்தில் புகுந்து ஞான ஒளியைப் பெருகச் செய்தது. வீட்டைவிட்டு வெளியே வந்தார். ஞானம் மேலும் பிரகாசமடைய அயோத்தி, துவாரகை, பத்ரிநாத், மானசரோவர், ராமேஸ்வரம் என 15 ஆண்டுகள் பல தலங்களுக்கும் சென்றார்;

போதித்தார். பின்னர் காசி வந்து இராமாயணம் போதித்தார். இப்போது அவர் ஆழ்ந்த, ஆனந்த, அனுபூதி நிலையிலிருந்தார்.

ஒருநாள் அவர் மரத்தின்கீழ் தியானத்தில் இருந்தபோது, ஒரு பேய் அவரிடம் வந்து, ""உங்கள் தூய பாதநீரால் நான் புனிதமானேன். தங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். என்ன வேண்டும்?'' என்று கேட்டது. அவர் ""ராம தரிசனமே நான் வேண்டுவது'' என்றார். அதற்கு அந்தப் பேய், நீங்கள் நாளை இராமாயண பிரவசனம் செய்யும்போது, கூட்டத்தின் ஒரு மூலையில் பார்க்க சகிக்காத குஷ்டரோகி ஒருவர் அமர்ந்திருப்பார். பிரவசனம் தொடங்கும் முன்பே வந்துவிடுவார். முடிந்து அனைவரும் போனபின் கடைசியாகத்தான் போவார்.

அவர் வேறு யாருமல்ல; அந்த ராமபக்தன் அனுமனே. அவரிடம் வேண்டினால் ராமதரிசனம் கிட்டும்'' என்று சொல்லி பேய் மறைந்துவிட்டது.
அவ்வாறே, மறுநாள் ராமகதை முடிந்ததும், துளசிதாசர் ஓடிச்சென்று குஷ்டரோகியின் பாதங்களை இறுகக் கட்டிக்கொண்டார்.

அனுமனும் துளசிதாசரின் நிலையுணர்ந்து தன் சுய வடிவம் காட்டி, ""சித்ரகூடம் சென்றால் ராமதரிசனம் கிட்டும்'' என்றார். அதன்படியே சித்ரகூடம் சென்ற துளசிதாசர், பரத்வாஜர் ஆசிரமத்தில் துதிக்க, வினோதமான முறையில் அவருக்கு ராமதரிசனம் கிடைத்தது. (அது பெரிய கதை).

பின்னர் காசிக்குத் திரும்பி, பிரகலாத காட்டில் ஒரு வீட்டில் தங்கியிருந்து சமஸ்கிருத மொழியில் சுலோகங்களை எழுதினார். விடிந்ததும் பார்த்தால் எழுதியது மறைந்துவிட்டிருக்கும். இது ஏனென்று புரியாத துளசிதாசர் காசி ஈசனான விஸ்வநாதரிடம் சென்று வேண்டினார். அப்போது ஈசன் அசரீரியாக, "உன் தாய் மொழியில் எழுது; சாமவேதம் போல கற்பகாலம் நீடித்து நிற்கும்' என்றருளினார்.துளசிதாசர் அங்கிருந்து அயோத்தி வந்து சரயு நதியில் நீராடினார். அப்போது அங்கு ஒரு குரு வந்து அவரைத் தன் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்தவாறே ராமாயணத்தை "ராமசரித மானசம்' என்ற பெயரில் அவதி (ஹிந்தி) மொழியில் எழுதத் தொடங்கினார். இரண்டு வருடம், ஏழு மாதம், 26 நாட்களில் எழுதி முடித்தார். அவர் அதைப் பூர்த்தி செய்தது 1576-ஆம் ஆண்டு, மார்கழி ஐந்தாம் நாள், வளர்பிறை.

அவை இரண்டு வரி (கோஹி), நான்கு வரி (சௌபாயி) என்று அமைந்தவை. வடமொழி பண்டிதர்கள் அதனை அங்கீகரிக்கவில்லை. இறுதியில் மதுசூதன சரஸ்வதி என்னும் சமஸ்கிருத பண்டிதர், ""இது சிவ- ராம ஆனந்த லஹரி. ஞான பக்தி அமுதம். ஏற்புடையதே'' என்றார். (வடநாட்டில் வால்மீகி ராமாயணம் கேட்பது அரிது. வீடுவீடாக "ராம சரித மானச' துதி நடைபெறுவதை இன்றும் காணலாம். காசி ஈசன் வாக்கு பொய்க்குமா?)

ராம சரித மானசம்- பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், லங்கா காண்டம், உத்தர காண்டம் என ஏழு காண்டங்கள் கொண்டது. ஒவ்வொரு காண்டமும் சமஸ்கிருத துதிகளுடன் ஆரம்பிக்கும். நவரசங்களும் நிரம்பிய இந்த காவியத்தில் ஞான- பக்தி ரசமே ஆழ்ந்திருக்கும்.

ஒரு காவியம் சிறப்புடன் அமைய கலைமகள் அருள் தேவை. அது தடைப்படாமல் நிறைவேற கணபதியின் அருள்தேவை. எனவே, இருவரையும் வணங்கி காவியத்தை ஆரம்பிக்கிறார் துளசிதாசர்.

"வர்ணானாம் அர்த்த ஸங்கானாம்
ரஸானாம் சந்தசாமபி
மங்களானாம் சகர்த்தாரம்
வந்தே வாணீ விநாயகௌ.'
எவ்வாறு முடிக்கிறார்?
"முனி துர்லப ஹரிபகதி நர
பாவஸ்ரீ பினஹிம் ப்ரயாஸ்/
யே யக்ஷகதா நிரந்தர்
ஸுனஹி மானி விஸ்வாஸ்.'

சிரமமில்லாமல் இந்த மானச துதியை சிரத்தையுடன் கேட்டால், முனிவர்களாலும் அடையமுடியாத ஹரிபக்தியை சுலபமாக அடையலாம்.
ஆக, ராமபக்தி மகரந்த கிரந்தம்- ராமசரித மானசம்!

அவரது ராம பக்தியால் நிகழ்ந்த அற்புதங்கள் பல. அவற்றிலொரு நிகழ்ச்சி...

இவர் காலத்தில் ஆட்சி செய்தவர் மொகலாய மன்னர் அக்பர். அவர் துளசிதாசரிடம், ""தாசரே, உனது புகழ், ராமன் புகழ் பிரபலமாக உள்ளதே... அது உண்மையானால் எனக்கு நீர் ராமதரிசனம் செய்விக்க வேண்டும்'' என்றார்.

தாசர் அனுமனைத் துதிக்க, திடீரென்று நூற்றுக்கணக்கான குரங்குகள் அக்பரைச் சூழ்ந்தன. அக்பர் திகைத்தார். அப்போது தாசர், ""இவை ராமரின் முன் படைகள். பின்னால் படைகளுடன் ராமர் வருகிறார்'' என்றார். அஞ்சிய அக்பர், ""இந்த தரிசனமே போதும்; நாம மகிமை உணர்ந்தேன்'' என்றார்.

தாசர் அனுமனைத் துதிக்க, குரங்குகள் மறைந்தன.

அவரது கடைசி துதி...
"ராம நாம ஜனபரனிகை
பயோ கஹத அப்மௌன
துளஸி கே முக் தீஜியே
அபஹும துளசி ஸௌ ன.'

"ராம நாமத்தை துதித்த துளசி இப்போது மௌனம். துளசியின் வாயில் துளசி சமர்ப்பி. அவன் லீனமாகட்டும்' என்று வேண்டுகிறார்.

1623-ஆம் ஆண்டு, புரட்டாசி மாத தேய்பிறை திரிதியை திதியில் ராமனடி சேர்ந்தார்.

துளசிதாசர் கட்டிய "சங்கட்மோசன்'

அனுமன் கோவிலும், அவர் வசித்த வீடும் (அசீதாம் காட் அருகே) காசியில் உள்ளன. தரிசிக்க வேண்டிய இடங்கள்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :