Add1
logo
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல் || பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு || சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை || அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி || எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்! || கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம் || தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி || கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு || மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி ||
Logo
பொது அறிவு உலகம்
உலக சாதனை படைத்தது இஸ்ரோ!
 ................................................................
பொருளாதார ஆய்வறிக்கை - 2016
 ................................................................
மத்திய பட்ஜெட் 2017-18
 ................................................................
தமிழக முதல்வரும் ஆளுநரும் -கோவி. லெனின்
 ................................................................
01-03-17

உலக சாதனை படைத்தது இஸ்ரோ!*    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி.-சி37 ராக்கெட் மூலம் கார்டோசாட் 2 வரிசை வகை (Cartosat-2 series) வகை செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்வெளிப் பாதையில் நிலை நிறுத்தி புதிய  உலகச் சாதனை படைத்தது.

*   ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 15.2.2017 காலை 9.28 மணிக்கு 104 செயற்கைக்கோள்களுடன்  பிஎஸ்எல்வி சி-37 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

*   சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 28 நிமிடம் 42  விநாடிகளில் சுமந்துச் சென்ற செயற்கைக்கோள்களை சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தியது.

* இதில், முக்கியமாக இந்தியாவின் கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் 714  கிலோ எடை கொண்டதாகும். இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இயற்கை வளங்களை பல்வேறு  கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகளாகும்.

* நானோ செயற்கைக்கோள்கள்: ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ்-1பி என இரண்டு நானோ வகை செயற்கைக்கோளும் இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டன. இது தவிர,  அமெரிக்காவின் 96 துணைச் செயற்கைக்கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் என தலா ஒரு  செயற்கைக்கோள்கள் என மொத்தம் 101வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வர்த்தகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த நானோ செயற்கைக்கோள்களின் மொத்த  எடை 664 கிலோவாகும்.

*    பி.எஸ்.எல்.வி. சி37 ராக்கெட், 320 டன் எடை மற்றும் 44.4 மீட்டர் உயரம் கொண்டதாக இருந்தது.

*    கண்காணிப்பு செயற்கைக்கோள்: கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக கடந்த 2005-ஆம் ஆண்டு கார்ட்டோசாட் வகையான 5 செயற்கைக்கோள்களை விண்ணில்  செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) முடிவு செய்தது. அதன்படி கடந்த 2005-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி6 ராக்கெட்டில்  முதல் கார்ட்டோசாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

*    இதனைத்தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி7, பி.எஸ்.எல்.வி. சி9, பி.எஸ்.எல்.வி. சி15 மற்றும் பி.எஸ்.எல்.வி. சி34 உள்ளிட்ட ராக்கெட்டுகளில் கார்ட்டோ சாட் வகை  செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

*    இஸ்ரோ சார்பில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட கார்ட்டோசாட் செயற்கைக்கோள்கள் இஸ்ரேல்,
அமெரிக்கா நாடுகளுக்கே தொழில்நுட்பத்தில் சவால்விடும் வகையில்  செயல்பட்டு வருகிறது.

கார்ட்டோசாட் விவரங்கள்


* கார்ட்டோசாட்-1: 2005-ஆம் ஆண்டு மே மாதம் 5 -ஆம் தேதி ஏவப்பட்ட கார்ட்டோசாட் வரிசை யின் முதல் செயற்கைக்கோளாகும். இந்தச் செயற்கைக்கோள் ஒட்டுமொத்த  பூமியையும் 126 நாள் சுழற்சியில் 1867 சுற்றுப்பாதைகளில் படம்பிடித்து முடிக்கிறது.

* புவிப்பகுதியை இக்கருவிகள் கருப்பு வெள்ளையில் முப்பரிமாணப் படங்களாக எடுத்து வந்தன.

*    இந்தச் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்ட கேமராக்கள் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை எடுக்கும் திறன் கொண்டவை. இந்தச் செயற்கைக்கோளின் ஆயுள் காலம்  முடிந்துவிட்டது.

*    கார்ட்டோசாட் -2: 2007-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி இந்தச் செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோளில் உயர்தொழில்  நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்தக் கேமராக்கள் 9.6 கி.மீ அகலத்தில் படம் பிடிக்கும் தன்மை கொண்டதாக இருந்தன.

*    கார்ட்டோசாட்- 2 செயற்கைக்கோளை 45 டிகிரி அளவில் பூமியை நோக்கியும், அதே போல்
அதன் சுற்றுப்பாதையை நோக்கி திருப்பவும் முடியும்.

* ஒரு குறிப்பிட்ட காட்சிப்புள்ளியை ஒளிப்படத் தொகுதிகளாகத் தரும் அளவிற்கு கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் மேம்பட்ட தொலையுணர்வு செயற்கைக்கோளாகும்.  இந்த செயற்கைக்கோளின் புகைப்படங்களை, விவரமான வரைபடங்கள் தயாரித்தல், பிற நிலப்பட வரைவியல் பணிகளில் ஈடுபடுதல், கிராமப்புற மற்றும் நகர கட்டுமான  மேம்பாட்டுத் திட்டங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற செயல்களுக்கு புவியியல் மற்றும் நில விவர அமைப்புகள் பயன்படுத்துகின்றன.

*    கார்ட்டோசாட் 2ஏ: 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இது இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்காக பிரத்யேகமாக  அர்ப்பணிக்கப்பட்ட செயற்கைக்கோளாகும். இதையொட்டியே இந்திய விமானப்படை வான்பாதுகாப்புக்காக புதிய படையமைப்பை அமைத்துக் கொண்டிருந்தது என்பது  குறிப்பிடத்தக்கது.

*    கார்ட்டோசாட்-2பி : 2010-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் தேதி சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்டது. இச்செயற்கைக்கோளில் நவீன  புகைப்படக் கருவி பொருத்தப்பட்டிருந்தது. இக்கருவி கருப்பு வெள்ளையில் முப்பரிமாணப் படங்களை எடுக்க கூடியதாக இருந்தது.

* கார்ட்டோசாட்- 2பி செயற்கைக்கோள் பூமியின் அனைத்து திசையிலும் திரும்பி படமெடுக்க கூடிய வகையில் தயாரிக்கப்பட்டது.

*    கார்ட்டோசாட்- 2சி: 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-ஆம் தேதி விண்ணில் அனுப்பப்பட்டது. கார்ட்டோசாட்- 2சி செயற்கைக்கோள் உதவியால் நீர்வள மேம்பாடு, காடுகள்  பாதுகாப்பு மற்றும் பெருநகர குடியிருப்புகளை செம்மைப்படுத்துதல் போன்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும். கார்ட்டோசாட்-2சியின் செயல்பாடு அமெரிக்கா மற்றும்  இஸ்ரேல் தொழில்நுட்பத்தை விட மிகச் சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மின்காந்த நிறமாலையில் செயல்படும் வகையில் சிறப்பு கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.

* வினாடிகளில் பூமியின் எந்த பகுதியையும் மிகவும் தெளிவாக படம் பிடித்து தள்ளும் சிறப்புமிக்கது. முக்கியமான பகுதிகளை விடியோவாகவும், நீண்ட புகைப்படமாகவும் எடுக்கும் திறன்படைத்தது.

* இஸ்ரோ கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் 2016 -ஆம் ஆண்டுவரை 226 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. இதில் 179 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் அடங்கும்.

*    இஸ்ரோ கடந்தாண்டு ஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்களை செலுத்தியது சாதனையாக இருந்து வந்தது.

* இப்போது பிஎஸ்எல்வி-சி37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி உலக சாதனை படைத்துள்ளது.

* இதற்கு முன் ரஷ்யா ஒரே ராக்கெட் மூலம் 37 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதே உலக சாதனையாகும். இந்தச் சாதனையை இப்போது இஸ்ரோ முறியடித்துள்ளது.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :