Add1
logo
நீதிபதி தேர்வில் வெளி மாநிலத்தவருக்கு கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம் || தாறுமாறாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து: போதை ஒட்டுனரின் உரிமம் பறிமுதல் || நோயால் இறந்த கோழிகள் விற்பனை: இருவர் கைது || ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது || கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் ||
Logo
இனிய உதயம்
என் நினைவுகளில் இன்குலாப்!
 ................................................................
சொல்லமறக்காத கதை
 ................................................................
சித்தர்கள் பாட்டில்
 ................................................................
ஒரு மழை வந்து...
 ................................................................
புரட்சிக் கவிஞரின் தோட்டத்துப் பூ
 ................................................................
கைம்பெண் ஓர் அட்சதைச் சொல்!
 ................................................................
பரிதாப பாவனா! -அதிர வைக்கும் ஆபத்துக்கள்!
 ................................................................
உலகை அதிரவைத்த தற்கொலைப் பாடலும்
 ................................................................
கவிதைகள்
 ................................................................
குற்றத்தை அங்கீகரிப்பதும் குற்றம்!
 ................................................................
01-03-2017டிகையிடம் அத்துமீறினால் காவல்துறையிடம் புகார் தர மாட்டார். நடிகைக்கு மார்க்கெட் என்பது முக்கியம். வெளியே சொன்னால் அவமானம் அவருக்குத்தான். அடுத்து, பட வாய்ப்புக்களும் குறைந்துவிடும். நடக்கவிருக்கும் திருமணமும் நின்றுபோகும். அதனால், நடிகையைக் கடத்துவதும், பலாத்காரம் செய்வதும், அதை வீடியோ எடுப்பதும், பிறகு மிரட்டுவதும், குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்கு எளிதான வழிஎன்று நடிகை பாவனாவைக் கடத்துவதற்கு, அவரது முன்னாள் கார் டிரைவரான சுனில் பக்காவாக திட்டம் தீட்டினான். 

பாவனாவின் டிரைவர் மார்ட்டின், வடிவால் சலீம், கண்ணூரைச் சேர்ந்த பிரதீப், மணிகண்டன், விஜேஸ் ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்தனர்.

பாவனா கடத்தலும், பலாத்காரமும்..

கடந்த 17-ஆம் தேதி இரவு, "ஹனிபீ 2' என்ற மலையாள சினிமா ஷூட்டிங் முடித்துவிட்டு, திருச்சூருக்கு தனது ஆடி காரில் திரும்பிய பாவனாவை, டெம்போ டிராவலர் வேனை மோதவிட்டு மறித்தனர். சுனில் அனுப்பிய  கூலிப்படையினர். பாவனாவின் காரில் அத்துமீறி நுழைந்தனர். சிறிது தூரம் சென்றவுடன் சுனிலும் அந்தக் காரில் ஏறிக்கொண்டான்.  கார் டிரைவர் மார்ட்டினுடைய ஒத்துழைப்புடன், இந்தக் கடத்தல் நடந்தது. பிளாக்மெயில் திட்டத்தோடு, காருக்குள்ளேயே பாவனாவை பலாத்காரம் செய்து, தனது செல்போனில் வீடியோவும் எடுத்த சுனில், இந்தத் தகவலை ஒரு முக்கிய பிரமுகரிடம் தெரிவித்தான். யாருக்கோ குறுந்தகவலும் அனுப்பினான். பலாத்காரம், மிரட்டல் என இரண்டு மணி நேரம் கடந்துவிட்ட நிலையில்,  பாலாரிவட்டம் என்ற இடத்தில் பாவனாவை இறக்கிவிட்டான் சுனில்.  அங்கிருந்து, நடிகரும் சினிமா டைரக்டருமான லாலின் வீட்டுக்குச் சென்ற பாவனா, தனக்கு நேர்ந்ததைச் சொல்லிக் கதறினார். அதிர்ந்துபோன லால், கேரள டி.ஜி.பி.யை தொடர்புகொண்டு பேசினார். உடனே, காவல்துறை அதிகாரிகள், லாலின் வீட்டுக்குச் சென்று ‘ஸ்டேட்மெண்ட்’ வாங்கினார்கள்.சுனிலின் பார்வையில் மூன்று நடிகைகள்!

‘பல்சர் சுனில் எனப்படும் சுனில் குறித்து,  கேரள சினிமா வட்டாரத்தில் நமக்குக் கிடைத்த அதிர்ச்சிகரமான தகவல்கள் இதோ -  மலையாள சினிமா சார்ந்த பல சங்கங்களின் உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் சுனில், சினிமா புள்ளிகளின் தேவைகளுக்கு, கார்களையும் டிரைவரையும் அனுப்பிவைப்பது வழக்கம். சென்னையிலிருந்து தன் அம்மாவோடு கேரளாவுக்கு குடிபெயர்ந்த பாவனாவுக்கு ஆரம்பத்தில் டிரைவராக இருந்தான் சுனில். சினிமா துறையில், ஏற்றத்தாழ்வு பார்க்காமல், அனைவரிடமும் சகஜமாக, சிரித்துப் பழகும் இயல்புடையவர் பாவனா. அதனால், பாவனாவின் வீட்டில் எல்லா அறைகளுக்கும் சென்று வரக்கூடியவனாக இருந்தான் சுனில். பாவனா மூலமாக, மற்ற நடிகைகளுடனும் பழகும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது. கார் டிரைவரான சுனிலுக்கு பாவனா இத்தனை சுதந்திரம் அளிப்பது, அவரது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில், பாவனாவின் படுக்கையறையில், சுனில் ரகசிய கேமரா வைத்ததைக் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டார் பாவனாவின் அம்மா. இதனால், சுனில் வேலையை இழந்தான்.

இதன் பிறகு, பிரபல தமிழ் சினிமா நடிகையின் முன்னாள் கணவரும், மலையாள நடிகருமான ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தான் சுனில். அங்கும், நடிகரின் இந்நாள் மனைவியும், நடிகையும் டான்ஸருமான அந்தப் பிரபலத்திடம், நெருங்கிப் பழகினான்.  இது அந்த நடிகருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அந்த நடிகரின் வீட்டிலும் கேமரா வைத்து மாட்டிக் கொண்ட சுனில் விரட்டியடிக்கப்பட்டான்.

இன்னொரு சம்பவம். பிரபல தமிழ் நடிகையான கீர்த்தி சுரேஷை கடத்துவதற்கு திட்டம் தீட்டினான் சுனில். இப்போது பாவனாவிடம் நடந்துகொண்டதைப் போலவே, அப்போது கீர்த்தி சுரேஷிடம் கைவரிசை யைக் காட்ட வேண்டும் என்று நினைத்தான். சினிமா துறையின் டிரைவர்கள் பலரும் சுனிலின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் என்பதால், நடிகைகளைக் கடத்துவது அவனுக்கு எளிதாக இருந்தது. அன்று,  கீர்த்தி சுரேஷின் கார் டிரைவரின் சமிக்ஞைக்காக காத்திருந்தான்.

அதாவது, அந்த டிரைவர் எக்ஸ் என்று மெசேஜ் அனுப்பினால், இன்று நடிகையைக் கடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என்றும், ஒய் என்று மெசேஜ் அனுப்பினால்,  ‘எளிதில் கடத்தி விடலாம்’ என்றும் அர்த்தமாம். அவசரத்தில் அந்த டிரைவர் எக்ஸ் என்று அனுப்புவதற்குப் பதிலாக ஒய் என்று அனுப்பிவிட்டான். உடனே, சுனில் கும்பல் கீர்த்தி சுரேஷின்  காரை மறித்து ஏறிவிட்டனர். பிறகுதான் தெரிந்திருக்கிறது, காரில் இருப்பவர் 50 வயதைக் கடந்த கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா என்பது. அவரும் நடிகை என்றாலும், ‘கதைக்கு ஆகாது’ என,  40 கி.மீ. தூரத்தில் விட்டுவிட்டான் சுனில். பிரபல சினிமா தயாரிப்பாளரும் மேனகாவின் கணவருமான சுரேஷ் குமாரே, அந்தக் கடத்தல் குறித்து இப்போது வாய்திறந்திருக்கிறார்.

பிரபல மலையாள நடிகரான முகேஷும்கூட, “""இந்த சுனில் ஒரு வருடம் என்னிடம் டிரைவராக வேலை பார்த்தான். அப்போது நல்லபடியாக பழகினான். காரை வேகமாக ஓட்டுவான். அதனால், அவனை நிறுத்திவிட்டேன். இப்போது, பாவனா விவகாரத்தை முதலமைச்சர் வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறேன்.'' என்றார்.

கூலிப்படையை ஏவிய பிரபல நடிகர்?

ரூ.30 லட்சம் கொடுத்து ஏவப்பட்ட கூலிப்படைதான், பாவனாவைக் கடத்தியது என்றும், இதன் பின்னணியில் பிரபல நடிகர் ஒருவர் இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது. அந்த நடிகர் திலீப் எனச் சொல்லும் பா.ஜ.க. மாநில தலைவர் கும்மணம் ராஜசேகர் ""திலீப்பும் அவருடைய முதல் மனைவி மஞ்சுவாரியரும் விவகாரத்து செய்துகொண்டதற்குக் காரணம் பாவனாதான். அதனாலேயே பாவனாவை பழிவாங்கியிருக்கிறார்'' என்கிறார். 

பாவனா மீது திலீப்புக்கு என்ன கோபம்?

நடிகர் திலீப், தன்னுடன் பல படங்களில் இணைந்து நடித்த மஞ்சு வாரியரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உண்டு. இந்நிலையில், நடிகை காவ்யா மாதவனிடம் நெருக்கம் காட்டி வந்தார் திலீப். பாவனாவும் நடிகர் திலீப்புடன் பல படங்களில் நடித்தவர்தான். மஞ்சு வாரியரின் நெருங்கிய தோழியாக இருந்தார் பாவனா. அந்த நட்பின் அடிப்படையில், காவ்யாவுடனான திலீப்பின் தொடர்பினைக் காட்டிக் கொடுத்துவிட்டார். இதனால்
தான், திலீப்பும் மஞ்சு வாரியரும் பிரிந்தார்கள்.  விவகாரத்தும் செய்துகொண்டார்கள். பிறகு,  காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டார் திலீப். இதனால், பாவனா மீதான கோபத்தில், அவருக்கு மலையாளப் படங்களில் வாய்ப்புக்கள் கிடைக்காத வாறு செய்தார் திலீப். பாவனாவும் கூட, "எனக்கு புதுப்படங்கள் இல்லாமல் போனதற்கு திலீப்பே காரணம்' என்று வெளிப்படையாகப் பேசி வந்திருக்கிறார்.

"தோழிகளைக் குற்றம் சொல்லாதீர்!'
-மஞ்சு வாரியர்

""திலீப்பை பிரிந்தது என் தனிப்பட்ட முடிவு.

என்னை யாரும் நிர்ப்பந்திக்க வில்லை. திரையுலகிலும், குடும்ப வாழ்க்கையிலும் எனக்குப் பல நண்பர்கள் உண்டு. குறிப்பாக, கீத்து, சம்யுக்தா, பாவனா, பூர்ணிமா, ஸ்வேதா மேனன் ஆகியோர் எனது நெருங்கிய தோழிகள். அடிக்கடி தோழிகளி டம் நான் பேசிவந்ததே திலீப்பை பிரிந்து சென்றதற்கு காரணம் என்று செய்தி பரவி விட்டது. இதில் துளியும் உண்மை கிடை யாது. எனது பிரச்சனையில் தோழிகளைக் குற்றம் சொல்வதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.''’’ எனச் சொல்லும் மஞ்சு வாரியர் ""திலீப் எந்த நேரத்தில் எப்படி நடிப்பார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.''’ என்றும், பேட்டி ஒன்றில்  குறிப்பிட்டிருக்கிறார்.

“நான் கோபமாக இருக்கிறேன்..’’ - திலீப்

""தாய், மனைவி, மகளுடன் வசித்து வரும் நான் எப்படி ஒரு பெண்ணை அசிங்கப்படுத்துவேன்? பாவனாவுக்கு நடந்த கொடுமையை நினைத்து வேதனைப்படுகிறேன். நான் பணியாற்றும் திரையுலகைச் சார்ந்த ஒரு நடிகைக்கு இப்படி நடந்து விட்டதே என்று கோபம் வருகிறது. வேண்டுமென்றே சிலர், என் பெயரை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்திப் பேசுகிறார்கள்'' என்று மறுக்கிறார் திலீப்.

ஆபாச வீடியோ! பிளாக் மெயில்!

""பாவனாவைக் கடத்தச் சொன்னான் சுனில். அதற்காக, பணம் தருவதாகவும் கூறினான். சுனிலுக்காக இது போன்ற வேலைகளை அவ்வப்போது செய்து கொடுப்பேன்.'' என்று காவல்துறையிடம் ஒப்பித்திருக்கிறான் மணிகண்டன்.

சரண்டருக்கு முன் கைதான சுனில், “""பாவனா கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பில்லை. முக்கிய பிரமுகர்கள் யாருக்காகவும் இதை நான் செய்யவில்லை. என் காதலியுடன் ஜாலியாக வாழநினைத்தேன். அதற்கு பணம் தேவைப்பட்டது.

பாவனாவிடமிருந்து ரூ.50 லட்சத்தை மிரட்டி வாங்கிவிட முடியும் என்று திட்டமிட்டேன். பாவனாவின் டிரைவர் மார்ட்டினுக்கு என்னுடைய திட்டம் தெரியும். போலீஸின் கையில் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில், ஆபாசமாக பாவனாவை வீடியோ எடுக்கப் பயன்படுத்திய என் செல்போனை தூக்கி வீசி
விட்டேன்.'' என்று வாக்குமூலம் தந்திருக்கிறான்.

நடிகைகளிடம் தவறாக நடந்து கொண்டால்?

விரைவிலேயே தான் விரும்பிய ஒருவரைத் திருமணம் செய்யவிருக்கிறார் நடிகை பாவனா. திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்றும்,  தான் நடிக்கும் கடைசிப் படம் "ஹனிபீ 2' என்றும் சொல்லிவந்திருக்கிறார். இந்த நிலையில்தான், இப்படி ஒரு பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்.

பாவனா விவகாரத்தால் நடிகைகள் பலரும் கதிகலங்கிப் போய் இருக்கிறார்கள்.  நடிகை ராகுல் பிரீத், “""பாவனாவுக்கு நடந்தது போல என்னிடம் யாராவது தவறாக நடந்திருந்தால், அவர்களைக் கொலை செய்திருப்பேன். நான் வெளியே கிளம்பும் போது, ‘பார்த்துப் போ’ என்று அம்மா சொல்வார்கள்.  அப்போதெல்லாம்  ‘காரில்தான் டிரைவர் இருக்கிறாரே!

எனக்கென்ன பயம்?’ என்று நினைத்துக் கொள்வேன். பாவனா கடத்தலுக்குப் பிறகு யாரை நம்புவது? யாரை நம்பக் கூடாது? என்று தெரியாமல் தவிக்கிறேன்.''’ என்கிறார். 

முன்பு ஒரு முறை, இந்து மகாசபை தலைவர் நவீன் தியாகி பொதுக்கூட்டம் ஒன்றில்,  ""குத்தாட்டம் ஆடும் நடிகைகளை பாலியல் தொழிலாளர்கள் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.'' என்றார். இதற்குக் கண்டனம் தெரிவித்த குஷ்பு,“""இந்த அளவுக்குக் கேவலமாகப் பேசுபவர் பாலியல் தொழில் புரோக்கராகத் தான் இருப்பார். இதுபோன்ற தவறான கருத்தைப் பரப்புபவர்களை சும்மா விடக்கூடாது.'' என்று தன் குமுறலை வெளிப்படுத்தினார்.

நடிகைகள் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடப்பவர்கள் அல்ல. படப்பிடிப்புக்காகவோ, வேறு தனிப்பட்ட காரணங்களுக்காகவோ, வெளியிடங்களுக்குக் காரில் போயாக வேண்டும். எஜமான விசுவாசம், ரகசியம் காத்தல் என நம்பிக்கைக்கு உரியவர்களாக எத்தனையோ டிரைவர்கள் இருக்கிறார்கள். பாவனா கடத்தலில் ஈடுபட்ட டிரைவர்கள் வேறு ரகம். நடிகைகளின் அந்தரங்கத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்குக் கிடைக்கும் வருவாயை மலைப்போடு கணக்கிட்டு, அந்த அழகின் மீதான திருட்டுப் பார்வையோடு, உடன் செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள். சுனில், மார்ட்டின் போன்ற கார் டிரைவர்களை வேலைக்கு அமர்த்தினால்,  நடிகைகளின் பாடு அதோ கதிதான்! நடிகைகளும் மனிதர்களே!


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :