Add1
logo
தமிழ் மொழியை காக்க 26–ந்தேதி கலந்தாய்வு - ராமதாஸ் || இலவச மின்சாரம் வந்தது எப்படி? - குமரிஅனந்தன் || தேர்தல் கமி‌ஷன் திறமையாக செயல்பட்டால் பண பட்டுவாடாவை முடக்கலாம் - சரத்குமார் || தொப்பி அணிந்து ஆர்.கே.நகரில் - தினகரன் பிரசாரம் தொடங்கினார் || தமிழகத்தில் 11 முக்கிய அணைகள் வறண்டன || சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிக்காக ரூபாய் 10 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தினார் ஐகோர்ட் நீதிபதி || டீசல் மீதான வரி உயர்வை கண்டித்து 30ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் 4 லட்சம் லாரிகள் ஓடாது || மணப்பாறையில், வீடு வீடாக சென்று கமிஷனர் வரி வசூலிக்கிறார் || பாய்மரப் படகு மூலம் உலகை சுற்றி வர இருக்கும் இந்திய கடற்படை பெண்கள் || 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவேன் - டோனி || ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சுவாரஸ்யமாகவும் சவாலானதாகவும் இருக்கும் - ஜி.கே.வாசன் பேச்சு || காணாமல் போன ஏரியைக் கண்டுபிடித்தார்! கலெக்டருக்கு குவியும் வாழ்த்து! || 25000 மெட்ரிக் டன் எடை தாதுமணல் பறிமுதல் (படங்கள்) ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
......................................
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
......................................
மாசி மக மகத்துவம்!
......................................
மார்ச் மாத ராசி பலன்கள்
......................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
......................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
......................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
......................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
......................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
......................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
......................................
யாதுமாகி நின்றாள்!
......................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
......................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
......................................
01-03-17

மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)


ன்புள்ள மீன ராசி நேயர்களே! கனிந்த பார்வையும், பிறரை எளிதாக வசப்படுத்தக்கூடிய கவர்ச்சியான முகத்தோற்றம் கொண்ட உங்களுக்கு, இந்த ஹேவிளம்பி வருடத்தில் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் குருபகவான் அமையப்பெற்று ஜென்ம ராசியைப் பார்வை செய்வதால் ஆண்டின் முற்பாதியில் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பணவரவுகள் தாராளமாக அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியா வதுடன் கடன் சுமைகளும் குறையும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுக்குப் பஞ்சம் இருக்காது. திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். புத்திரபாக்கியம் வேண்டுபவர்களுக்குத் தடையின்றி புத்திரபாக்கியம் அமையும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் யாவும் சேரும். அசையா சொத்துகளால் அனுகூலப்பலனைப் பெறுவீர். ஆவணி 27-ஆம் தேதி குரு மாற்றத்திற்குப்பிறகு குரு அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிக்க இருப்பதாலும், ஐப்பசி 9-ஆம் தேதி முதல் சனி முழுமையாக 10-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் ஆண்டின் பிற்பாதியில் தொழில், வியாபார ரீதியாக நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பெரிய தொகையை கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். ஆண்டின் தொடக்கத்தில் சர்ப்ப கிரகமான ராகு 6-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். ஆவணி 2-ஆம் தேதி ஏற்பட இருக்கும் ராகு- கேது மாற்றத்திற்குப்பிறகு கேது 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆண்டின் பிற்பாதியில் பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினை, பூர்வீக சொத்து வழக்குகளில் இழுபறியான நிலை, சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை, உற்றார்- உறவினர்களிடையே பகை போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும் என்பதால் எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை


குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார்- உறவினர்களின் ஆதரவைப் பெற அவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். பொருளா தாரத்தில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் செலவுகள் கட்டுக் குள் இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். வாகனம் வாங்கும் யோகம் அமையும். சுபகாரியங்கள் ஆண்டின் முற்பாதியில் கைகூடும்.

உடல் ஆரோக்கியம்


உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. ஆவணி மாதத்தில் ஏற்படும் குரு மாற்றத்திற்குப்பிறகு குரு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்பு, அஜீரணக்கோளாறு போன்றவை உண்டாகும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடாக இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் வீண்அலைச்சல் குறையும்.

உத்தியோகம்


உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் ஆண்டின் தொடக் கத்தில் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளும் அதிகாரிகளின் பாராட்டுதல்களும் மனநிறைவை உண்டாக்கும். எந்தப் பணிகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். ஆண்டின் பிற்பாதியில் சில நேரங்களில் பிறர் செய்கின்ற தவறுகளுக்கும் பொறுப்பேற்க நேரிடும் என்பதால் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.

தொழில், வியாபாரம்


தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியைப் பெருக்க உதவும் என்றாலும் மிகவும் அனுசரித்துச் செல்ல நேரிடும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவை ஏற்றம் தரும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அதன்மூலம் அனுகூலமும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகள் செய்கின்ற காரியங்களில் வீண்பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்சி, கான்டிராக்ட் போன்றவற்றில் லாபம் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருந்தாலும் ஆண்டின் பிற்பாதியில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலைகளும் ஏற்படலாம். கொடுத்த கடன்களை வசூலப்பதில் சிக்கல் ஏற்படும்.

அரசியல்


உங்கள் பெயர், புகழ் உயரும் காலம் என்றாலும் ஆண்டின் முற்பாதி மட்டுமே நற்பலன்களைத் தரும். ஆண்டின் பிற்பாதியில் தேவையற்ற பிரச்சினைகள் சங்கடங்களைக் கொடுக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதும் உத்தமம்.

விவசாயிகள்


உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்களும்  கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பூமி, மனை, வாங்கும் யோகம் உண்டு என்றாலும் சில தடைகளுக்குப்பின் வாங்குவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்களையும் நிறைவேற்ற முடியும். ஆண்டின் பிற்பாதியில் உழைப்பிற்கேற்ற பலன்களைப் பெறத் தடைகள் ஏற்படும்.

கலைஞர்கள்


கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை திருப்தி தருவதாக அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் உடல்நிலையிலும் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. பணவரவுகளில் தடை ஏற்படும்.

பெண்கள்


குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எந்த பிரச்சினைகளையும் சமாளித்துவிடலாம். உடல்நிலை சோர்வாக இருந்தாலும் எதையும் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் உதவி கிடைக்கும். ஆண்டின் முற்பாதியில் சுபகாரியங்கள் கைகூடும். புத்திர பாக்கியமும் அமையும்.

மாணவ- மாணவியர்


படிப்பில் கவனமுடன் செயல்பட்டால் நல்லது. நல்ல மதிப்பெண் களைப் பெற முடியும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைவீர்கள். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் வீண்பிரச்சினை களை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை. ஆண்டின் பிற்பாதியில் உடல்நிலை பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும்.

மாதப் பலன்

சித்திரை


ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் முயற்சிகளில் அனுகூலங்களைப் பெறமுடியும். சூரியன் 2-ல் இருப்பதால் கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், உத்தியோக ரீதியாக சாதகமான பலனை அடைவீர்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவர்களால் வீண்அலைச்சல் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத சுபச் செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

வைகாசி


முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய், 7-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நனவாகும். எதிர்பாராத தனவரவுகளால் வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு உண்டாகும். கடன்கள் குறையும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விநாயகரை வழிபடுவது நல்லது.

ஆனி


சுக ஸ்தானமான 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது அலைச்சலை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 7-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுக்குப் பஞ்சமிருக்காது. நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சுபகாரிய முயற்சிகள் தடையின்றி கைகூடும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகப்பலன் அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதால் லாபம் பெறுவீர்கள். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

ஆடி


பஞ்சம ஸ்தானமான 5-ல் சூரியன், செவ்வாய், 6-ல் ராகு, 7-ல் குரு சஞ்சரிப்பதால் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உடனிருப்பவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். எதிர்பாராத பணவரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். அதிநவீன பொருள் சேர்க்கைகள் உண்டாகும். தொழிலில் முன்னேற்றமான நிலை இருக்கும். ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

ஆவணி


ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் கைகூடும். 2-ஆம் தேதி முதல் கேது 11-ல் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். 27-ஆம் தேதி முதல் குரு 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத வீண்செலவுகள் அதிகரிக்கும். உடல் நிலையில் சோர்வு, அஜீரணக் கோளாறுகள் உண்டாகும். நெருங்கி யவர்களிடையே அனுசரித்து நடந்து கொள்வதும், பிரச்சினைகளில் தலையீடு செய்யாமலிருப்பதும் உத்தமம். பண வரவுகள் சுமாராக இருக்கும். அம்மனை வழிபடுவது நல்லது.
 

புரட்டாசி

செவ்வாய் 6-ல் இருப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள் என்றாலும் சூரியன் 7-லும், குரு 8-லும், சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கி யத்தில் பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண்வாக்கு வாதங்கள் உண்டாகும். உறவினர்களை அனுசரித்துச் சென்றால் தேவை யற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்யாமலிருப்பது உத்தமம். மற்றவர்களுக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறுவர். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். பண வரவு சுமாராக இருக்கும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

ஐப்பசி


உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், குரு, புதன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பொருளாதார நிலை யிலும் நெருக்கடிகள் நிலவும். கொடுக்கல்- வாங்கலில் வீண்பிரச்சினை களை சந்திக்க நேரிடும். 9-ஆம் தேதி முதல் சனி 10-ல் சஞ்சரிக்க இருப்ப தால் தொழில், வியாபாரத்தில் போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உத்தி யோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

கார்த்திகை


சூரியன், புதன் 9-லும், கேது 11-லும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். சின்னச்சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். பொருளாதார நிலை திருப்தி அளிக்கும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை நிலவினாலும் தேக்கம் ஏற்படாது. வெளிவட்டாரத் தொடர்புகளால் நற்பலன் உண்டாகும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் வீண் பிரச்சினைகள் குறையும். சனிபகவானை வழிபடுவது உத்தமம்.

மார்கழி


செவ்வாய், குரு 8-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடி கள் ஏற்படும் என்றாலும் 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளால் லாபம் குறையக்கூடும் என்பதால் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். நெருங்கியவர்களிடையே வீண்கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது.  முருகப் பெருமானை வழிபடவும்.

தை


உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், கேது சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் பலவகையில் பணவரவுகள் ஏற்பட்டு நெருக்கடிகள் குறையும். உடல்நிலையில் உஷ்ணம் சம்பந்தமான சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு களும், அதிகாரிகளின் பாராட்டுதல்களும் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அமையும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப் பெறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

மாசி


குரு 8-லும், சூரியன், சுக்கிரன் 12-லும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்று வதால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். சுபகாரிய முயற்சிகளுக்கு நெருங் கியவர்களே தடையாக இருப்பார்கள். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரம் மேன்மை தரும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை.  அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

பங்குனி


ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுபகாரி யங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி யிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை பாதிப் படையாது. புதிய ஆடை, ஆபரணம் சேர்க்கைகள் சேரும். உத்தியோக ரீதியாக உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்த நேரிடும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை


எண்:         1, 2, 3, 9, 10.
நிறம்:     மஞ்சள், சிவப்பு.
கிழமை:     வியாழன், ஞாயிறு.
கல்:         புஷ்பராகம்.
திசை:     வடகிழக்கு.
தெய்வம்:     தட்சிணாமூர்த்தி.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :