Add1
logo
நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி || மக்களை தூண்டி விடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை: கமல் விவகாரத்தில் ஜே.கே.ரித்தீஷ் || நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை: கமல் ரசிகர்கள் கண்டன சுவரொட்டி || மனித சங்கிலி போராட்டத்தில் ம.நே.ம.க. பங்கேற்பு: ஜவாஹிருல்லா அறிவிப்பு || ஆசிரியர்களுக்கும் பயிற்சி –செங்கோட்டையன் || கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் அறிவிப்பு || சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைப் போக்க கிருஷ்ணா நதி நீரை பெற நடவடிக்கை வேண்டும்: ஸ்டாலின் || சேதுக்கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு || உலகின் அச்சானி உழவர்கள்: இயற்கை வேளாண் கருத்தரங்கில் விவசாயிகள் பெருமிதம் || சமவேலைக்கு சம ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை || 5, 8ஆம் வகுப்புகளில் கட்டாயத்தேர்ச்சி ரத்து குலக்கல்விக்கே வழி வகுக்கும்! ராமதாஸ் || இடிக்கிற மாதிரி போனாரு... கண்ணீருடன் புகார் கூறி வெளியேறிய நமீதா... || தந்தையின் இறுதிச்சடங்கு: கதிராமங்கலத்தில் கைதான ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் அளித்த ஐகோர்ட் கிளை ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-17

கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)


அன்புள்ள கும்ப ராசி நேயர்களே! புரட்சிகரமான கொள்கைகளை உடையவர்களாகவும், எந்த காரியத்திலும் அதன் சாதகப் பலனையும் ஆராய்ந்து செயல்படுவராகவும் விளங்கும் உங்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடத்தில் உங்கள் ராசியாதிபதி சனி ஆண்டின் தொடக்கத்தில் அதிசாரமாக 11-ல் சஞ்சரிப்பது நல்ல பலன்களை ஏற்படுத்தும் அமைப்பு. என்றாலும் ஆனி மாதம் 6-ஆம் தேதி முதல் ஐப்பசி மாதம் 9-ஆம் தேதி வரை பின்னோக்கி மீண்டும் 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் சிறிது நெருக்கடிகளை எதிர் கொள்ள நேரிடும். ஐப்பசி 9-ஆம் தேதி சனி மாற்றத்திற்குப்பிறகு லாப ஸ்தானமான 11-ல் சனி சஞ்சரிக்க இருப்பது உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் போட்டிகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.  பயணங்களால் அனுகூலப்பலன்கள் உண்டாகும். முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். எந்தவிதமான எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். பொன்னவன் எனப் போற்றப்படும் குரு பகவான் இந்த ஆண்டு தொடக்கத்தில் 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் சுபகாரியங்கள் நடைபெற இடையூறுகள் ஏற்படும். என்றாலும் ஆவணி 27-ஆம் தேதி குரு மாற்றத்திற்குப்பிறகு 9-ஆம் வீட்டிற்கு செல்வதால் சுபகாரியங்கள் நடைபெறும். பொருளாதாரநிலை மேன்மை அடையும். சோதனைகள் யாவும் ஆண்டின் பிற்பாதியில் ஓரளவுக்குக் குறையும். பெரிய முதலீடுகள் கொண்டு செய்ய நினைக்கும் காரியங்களில் அதிக கவனம் தேவை. ஆண்டில் தொடக்கத்தில் சில ஆரோக்கிய பாதிப்புகள் இருந்தாலும் பிற்பாதியில் உடல்நிலையில் முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஆண்டின் பிற்பாதியில் ஓரளவுக்கு அனுகூலப்பலன்களை அடைய முடியும். தற்போது 1, 7-ல் சஞ்சரிக்கும் கேது- ராகு, ஆவணி 2-ஆம் தேதிக்குப் பிறகு ராகு 6-ஆலும், கேது 12-லும் சஞ்சரிக்க இருப்பதால் நெருங்கியவர்களிடம் இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் ஆண்டின் பிற்பாதியில் முழுமையாகக் குறையும். மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும் பகைமை பாராட்டியவர்களும் நட்புக் கரம் நீட்டுவார்கள்.

குடும்பம், பொருளாதார நிலை


குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு நற்பலன்கள் அமையும். பொருளாதார நிலை திருப்தி தரும். ஆவணி மாதத்திற்குப் பிறகு சுபகாரியங்கள் கைகூடும். உற்றர்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் வீண்செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் நிலவினாலும் முடிவில் வெற்றி பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்


உடல்நிலை சோர்வாக அமைந்தாலும், எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதிர்பாராத சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும்.  

உத்தியோகம்


உத்தியோகஸ்தர்கள் பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க நேரிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் ஆவணி மாதத்திற்குப் பிறகு கிட்டும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

தொழில், வியாபாரம்


தொழில், வியாபாரத்தில் நிலவும் மந்த நிலை விலகி படிப்படியாக முன்னேற்றத்தை அடைவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் சுமாரான லாபம் அமையும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் ஏற்றம் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் தொழிலை மேலும் அபிவிருத்தி செய்ய முடியும்.

கொடுக்கல்- வாங்கல்


கமிஷன், ஏஜென்சி, கான்டிராக்ட் போன்றவற்றில் நிலவும் பல்வேறு தடைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையையும், வாக்குறுதிகளையும் ஆண்டின் முற்பாதியில் தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். வம்பு, வழக்குகளில் ஆண்டின் பிற்பாதியில் சாதகப்பலன் கிடைக்கும்.

அரசியல்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் சில தடைகளை சந்திக்க நேர்ந்தாலும் முழுமுயற்சியுடன் பாடுபட்டு நிறைவேற்றிவிடுவீர்கள். அமைச்சர்களின் ஆதரவைப் பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். உடன் இருப்பவர்கள் உதவியால் பிரச்சினைகள் குறையும்.

விவசாயிகள்


எதிர்பார்த்த அளவிற்கு மகசூல் இருக்கும். புழு, பூச்சி போன்றவற்றின் தொல்லைகளால் வீண்விரயங்கள் ஏற்பட்டாலும் காய், கனி, பூ வகைகள் மூலம் லாபங்களைப் பெறமுடியும். கால்நடைகளாலும், பால், வெண்ணெய், நெய் போன்றவற்றாலும் லாபம் கிட்டும். ஆண்டின் பிற்பாதியில் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

கலைஞர்கள்

தொழிலில் நிறைய போட்டிகள் நிலவினாலும் உங்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் கண்டிப்பாக வந்தடையும். பணவரவுகளால் சில தடைகளை சந்தித்தாலும் சிலரின் ஆதரவுகளால் அனைத்தும் சுமுகமாக முடிவடையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

பெண்கள்

உடல்நிலை சோர்வாகவே அமையும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பொருளாதாரம் திருப்தி அளிக்கும். ஆண்டின் முற்பாதியில் சில பிரச்சினைகளைச் சந்தித்தாலும் பிற்பாதியில் ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். சுபகாரிய முயற்சிகள் ஆவணி மாதத்திற்குப் பிறகு கைகூடும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் நிலவும் மந்த நிலை விலகி சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்த்த மதிப்பெண்களை அடைந்துவிடுவீர்கள். உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு பள்ளிக்கு விடுமுறை எடுக்க நேரிடலாம். எதிலும் கவனமுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட்டால் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும்.

மாதப் பலன்


சித்திரை

ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் தொழில், பொருளாதார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கப்பெறும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

வைகாசி

சூரியன், செவ்வாய் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும், இருப்பதை அனுபவிப்பதற்கு தடைகள் ஏற்படும் என்றாலும் சனி 11-ல் இருப்பதால் தேவைகள் பூர்த்தியாகும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். பொருளாதார நிலை திருப்தியளிக்கும். பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த பணத்தை வசூலிப்பதில் தடைகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளால் லாபம் சுமாராக இருக்கும். துர்க்கை அம்மனை வழிபடவும்.

ஆனி

புதன் 4-லும், சூரியன், செவ்வாய் 5-லும் சஞ்சரிப்பதால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குரு 8-ல் இருப்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடையமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க தாமதமானாலும் அதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். குடும்ப ஒற்றுமை சுமாராக அமையும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே காணப்படும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறைந்துவிடும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

ஆடி

சுக்கிரன் 4-லும், சூரியன், செவ்வாய் 6-லும் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறக்கூடிய மாதமாக இம்மாதம் இருக்கும். தொழில், பொருளாதார ரீதியாக ஏற்றமிகு பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்களில் வெற்றிகிட்டும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல்நிலையில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைக்கும். புத்திர வழியில் வீண் செலவுகள் உண்டாகும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். விநாயகரை வழிபடுவது நல்லது.

ஆவணி

சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு இருக்குமென்றாலும் 2-ஆம் தேதி முதல் ராகு 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். இம்மாதம் 27-ஆம் தேதி முதல் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிற்கு மாற இருப்பது சிறப்பான அமைப்பாகும். முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் குறையும். உற்றார்- உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். குடும்பத்தில் சுபிட்சமானநிலை இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

புரட்டாசி

பாக்கிய ஸ்தானத்தில் குரு அமைந்திருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்குமென்றாலும் 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். தேவையில்லாத அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல்நிலையில் சோர்வு, உறக்கமின்மை போன்றவை ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். எதிர்பாராத வீண்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் செய்யும் காரியங்களில் கவனம் தேவை. நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நன்மை தரும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

ஐப்பசி

குரு 9-லும், இம்மாதம் 9-ஆம் தேதி முதல் ராசியாதிபதி சனி லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பொருளாதார நிலை திருப்தி அளிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உற்றார்- உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள். சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலமான பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

கார்த்திகை

சூரியன், புதன் 10-லும், சனி 11-லும் சஞ்சரிப்பதால் புதிய தொழில் தொடங்கும் அமைப்பு, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்துவிடும். உடல்நிலை சுறுசுறுப்பாக அமைவதால் எல்லா காரியங்களையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்கிக் காணப்படும். பூர்வீக சொத்துகளால் வீண்அலைச்சல்கள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.

மார்கழி

சுக்கிரன், புதன் 10-லும், சூரியன், சனி 11-ஆம் வீட்டிலும் அமைந்திருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப்பெறும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபார ரீதியாக எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகும். உடல் நிலையில் சுறுசுறுப்பும் தெம்பும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் கிட்டும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். விநாயகர் வழிபடுவது உத்தமம்.

தை

பாக்கிய ஸ்தானத்தில் குருவும், 11-ல் புதன், சனியும் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவுகள், கடன்கள் குறையும் நிலை ஏற்படும். தொழில், உத்தியோக ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியும், ஒற்றுமையும் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பொருளாதாரநிலை உயரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நிறைவவேறும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். லட்சுமியை வழிபடுவது சிறப்பு.

மாசி

ஜென்ம ராசியில் சுக்கிரன், 10-ல் செவ்வாய், 11-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் ஏற்படும். உடல்நிலையில் தெம்பும், உற்சாகமும் இருக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நிறைவேறும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவரின் விருப்பம் நிறைவேறும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

பங்குனி

ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், புதன், 11-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் தொழிலில் இருக்கும் தேக்கங்கள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். எந்த காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பொருளாதாரம் மேம்படும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கு பாராட்டுதல்களும் மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்:          5, 6, 8.
நிறம்:     நீலம், பச்சை.
கிழமை:     புதன், சனி.
கல்:         நீலக்கல்.
திசை:     மேற்கு.
தெய்வம்:     ஐயப்பன்.

matrimony
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :