Add1
logo
மே நாள் உறுதிமொழி: உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் காப்போம்! - தொல்.திருமாவளவன் || எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? இளங்கோவன் கேள்வி || எச். ராஜா நடமாட முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை || 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தலைமறைவு || முரண்பாடாக பேசி வருகிறார்கள்: ஓ.பி.எஸ். அணி மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு || உழைக்கும் தொழிலாளர்களுக்கு மேதின வாழ்த்துக்கள்: - கு.செல்வப்பெருந்தகை வாழ்த்துச் செய்தி || கொடநாடு கொலை-கொள்ளை: ஏ.டி.ஜி.பி. அதிகாரி விசாரிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் || கிராமசபை கூட்டங்களில் மதுக்கடைகளை மூட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! - அன்புமணி இராமதாஸ் || இந்தி திணிப்புக்கு எதிராக மே 9ல் ஆர்ப்பாட்டம் || மதுக்கடையை அகற்றகோரி பாமக போராட்டம் || உழைப்பாளர்களுக்கு மே தின வாழ்த்துக்கள்: எஸ்.டி.பி.ஐ தெகலான் பாகவி || புதுவை: ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி, முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார் || திருமண கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண் ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
......................................
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
......................................
மாசி மக மகத்துவம்!
......................................
மார்ச் மாத ராசி பலன்கள்
......................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
......................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
......................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
......................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
......................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
......................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
......................................
யாதுமாகி நின்றாள்!
......................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
......................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
......................................
01-03-17

மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)


அன்புள்ள மகர ராசி நேயர்களே! செய்வன திருந்தச் செய் என்பதற்கேற்ப எந்த காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதைத் திறம்படச் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடத்தில் ஆண்டின் முற்பாதியில் ஆண்டுக் கோளான குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்வதால் தொழில், உத்தியோக ரீதியாக சாதகமான பலன்கள் தொடர்ந்திருக்கும். நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும்  அனுகூலப்பலன் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடும். சிலருக்கு சிறப்பான புத்திரபாக்கியமும் அமையும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். என்றாலும் குரு ஆவணி 27-ஆம் தேதி முதல் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆண்டின் பிற்பாதியில் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது, எந்தவொரு முடிவு எடுப்பதென்றாலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மந்தமான நிலையே தொடரும் என்றாலும் பொருள் தேக்கமின்றி சமாளிக்க முடியும். தற்போது 2, 8-ல் சஞ்சரிக்கும் கேது- ராகு ஆவணி 2-ஆம் தேதி முதல் ராகு 7-லும், கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் குடும்பத்தில் வீண்வாக்குவாதங்கள் ஏற்படும். பேச்சைக் குறைத்துக் கொண்டு மற்றவர்களை அனுசரித்து நடந்து கொள்வது மிகவும் நல்லது. உங்கள் ராசியாதிபதி சனிபகவான் ஆண்டின் தொடக்கத்தில் அதிசாரமாக 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். சனி ஆனி 6-ஆம் தேதி முதல் ஐப்பசி 9-ஆம் தேதி வரை பின்னோக்கி மீண்டும் 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் அனுகூலமான பலன்களை ஏற்படுத்தும். எனவே, தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நற்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். ஐப்பசி 9-ல் ஏற்படவிருக்கும் சனி மாற்றத்திற்குப்பிறகு உங்களுக்கு ஏழரைச்சனி தொடங்க உள்ளது. இதனால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும்.   நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல் பட்டால் மட்டுமே நற்பலன்களை அடைய முடியும். பண விஷயத்தில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது உத்தமம்.

    குடும்பம், பொருளாதார நிலை


குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் ஆண்டின் முற்பாதியில் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும்.  செலவுகளைக் குறைத்து சிக்கனமாக செயல்பட்டால் மட்டுமே சேமிக்க முடியும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்


உடல்நிலையில் அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். முயற்சிகளை சற்று கஷ்டப்பட்டே முடிக்க நேரிடும். உடல்நிலை சோர்வாக அமைவதால் எந்த காரியத்திலும் முழுஈடுபாட்டுடன் செயல்பட முடியாமல் போகும். பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள்.

உத்தியோகம்


ஆண்டின் முற்பாதியில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். தடைப்பட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். வேலைப்பளு அதிகரித்தாலும் சிரமம் பாராது அனைத்துப் பணிகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கௌரவப் பதவிகளால் பொறுப்புகள் அதிகரித்து அதிக நேரம் உழைக்க நேரிடும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம்.

தொழில், வியாபாரம்


எதிர்பார்த்த லாபம் அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதப்பலன் கிட்டும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் அதிகரித்தாலும், அதன்மூலம் அலைச்சலும் உண்டாகும். ஆண்டின் முற்பாதி ஓரளவுக்கு ஏற்றமிகுப் பலன்களை ஏற்படுத்தும். ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பதும் மிகவும் உத்தமம்.

கொடுக்கல்- வாங்கல்


கமிஷன், ஏஜென்சி போன்றவற்றில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் அடைய முடியாது. பண விஷயத்தில் மிகவும் கவனமாகவே செயல் படவேண்டும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பெரிய தொகையை ஈடுபடுத்தினால் விரயம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாது.

அரசியல்


அரசியல்வாதிகள் தங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. செயல்களில் தடை தாமதங்கள் நிலவினாலும் முழுமூச்சுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்தால் வீண் குழப்பங்கள் குறையும். மக்களின் தேவை அறிந்து செயல்பட்டால் அவர்களின் ஆதரவைகளைப் பெறலாம்.

விவசாயிகள்


மகசூல் திருப்தியளிப்பதாக அமையும். விளைபொருளுக்கேற்ற விலையை சந்தையில் பெறமுடியாமல் போகும் என்றாலும் நஷ்டம் ஏற்படாது. வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளால் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகக் கூடும். வங்கிக் கடன்களை குறித்த நேரத்தில் செலுத்த முடியாமல் போகும். கால்நடைகளால் லாபம் அடைவீர்கள்.

கலைஞர்கள்


புதிய வாய்ப்புகள் தேடிவந்தாலும் பணவரவுகளில் சில தடைகள் நிலவும். உடன்பணிபுரியும் கலைஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அலைச்சலும் அதிகரிக்கும்.

பெண்கள்


குடும்ப ஒற்றுமை சுமாராக அமையும். வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து நல்லது. உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். பிறரிடம் எந்தப் பொருளையும் இரவல் வாங்குவதைத் தவிர்க்கவேண்டும். சுபகாரியங்கள் ஆண்டின் முற்பாதியில் கைகூடும்.

மாணவ- மாணவியர்


கல்வியில் அதிக அக்கறை எடுத்துப் படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெற வழிவகுக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாகவே இருக்கும். பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும், நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பதும் கல்வியில் முன்னேற்ற நிலையை ஏற்படுத்தும். விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனம் தேவை.

மாதப் பலன்

சித்திரை


சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் 3-ல் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதும், 9-ல் குரு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுக்குப் பஞ்சமிருக்காது. நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் நிலவினாலும் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

வைகாசி


ஜென்ம ராசிக்கு 4-ல் புதன் சஞ்சரிப்பதும், 13-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றம் கிட்டும். பூர்வீகச் சொத்துகளால் லாபம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது சிறப்பு. சுபகாரிய முயற்சிகளில் இருக்கும் தடைகள் விலகும். அம்மன் வழிபாடு நல்லது

ஆனி


சுக்கிரன் 4-லும், சூரியன், செவ்வாய், 6-லும் சஞ்சரிப்பது தொழில், வியாபார ரீதியாக இருந்த எதிர்ப்புகள் குறைந்து லாபத்தைத் தரும் அமைப்பாகும். எதிர்பாராத தனவரவு உண்டாகி உங்களது பிரச்சினைகள் குறைந்துவிடும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகி சுபிட்சமான சூழ்நிலைகள் உண்டாகும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். வாகனம் வாங்கும் யோகம் அமையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கப்பெறும். விநாயகரை வழிபடுவது நல்லது.

ஆடி


சம சப்தம ஸ்தானமான 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும் என்றாலும் 5-ல் சுக்கிரன், 9-ல் குரு சஞ்சரிப்பதால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். செயல்களில் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப்பலனும் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் படிப்படியாகக் குறைந்துவிடும். சிவபெருமானை வழிபாடு செய்யவும்.

ஆவணி


உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமலிருப்பதும், முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் உத்தமம். 2-ஆம் தேதி முதல் ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் உறவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்குப் பணவரவுகள் இருக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். 27-ஆம் தேதி முதல் குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

புரட்டாசி


ஜென்ம ராசிக்கு 8-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில், உத்தியோக ரீதியாக சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றத்தை அடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் சில தடைகளைச் சந்தித்தாலும் விடாமுயற்சியுடன் பாடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

ஐப்பசி


பாக்கிய ஸ்தானமான 9-ல் செவ்வாய், சுக்கிரன், 10-ல் சூரியன் அமைந்திருப்பது பல்வேறு வகையில் நற்பலனை தரும் அமைப்பாகும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். நினைத்ததெல்லாம் நினைத்தபடி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். உறவினர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மறைந்து போகும். 9-ஆம் தேதி முதல் சனி 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டிவரும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

கார்த்திகை


ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை உள்ள பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பிரிந்த உறவினர்களும் ஒன்றுகூடி மகிழ்வார்கள். வீடு, மனை வாங்கும் முயற்சியில் சாதகமான பலன்கள் ஏற்படும். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் கிடைக்கப்பெறும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உடல்நிலை சிறப்பாக அமையும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவார்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும், பயணங்களால் அனுகூலமும் உண்டாகும். விநாயகரை வழிபடவும்.

மார்கழி


சூரியன், சனி 12-ல் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் 10-ல் செவ்வாய், 11-ல் புதன் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த நேரிடும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக அமையும். பொருளாதார நிலை திருப்தி அளிக்கும். புதிய பொருள் சேர்க்கைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில், வியாபாரம் முன்னேற்ற நிலையில் நடைபெற்று லாபம் தரும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சிவபெருமானை வழிபடுவது நல்லது.

தை


ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் சனி, புதன் சஞ்சரிப்பது பிரச்சினைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல்நிலை பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். நெருங்கியவர்களை மிகவும் அனுசரித்துச் செல்வது உத்தமம். தொழில், வியாபாரம் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல், டென்ஷன், வீண்விரயங்கள் ஏற்படும். எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மையளிக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் மிகவும் கவனம் தேவை. திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் தடைகள் நிலவும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

மாசி


தன ஸ்தானத்தில் சுக்கிரனும், 11-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் விலகி நீங்கள் நினைத்தது நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அனுகூலப்பலன்களை உண்டாக்கும். பொருளாதாரநிலை சுமாராக அமையும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப்பெற அதிகம் பாடுபட நேரிடும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய வலிமையும், வல்லமையும் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சுமாரான லாபம் உண்டாகும்.  சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

பங்குனி


சூரியன், சுக்கிரன் 3-ல் இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் இருக்குமென்றாலும், குரு சாதகமற்று இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகக்கூடும். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முருகப் பெருமானை வழிபடுவது சிறப்பு.

அதிர்ஷ்டம் அளிப்பவை


எண்:         5, 6, 7, 8.
நிறம்:     நீலம், பச்சை.
கிழமை:     புதன், வெள்ளி.
கல்:         நீலக்கல்.
திசை:     மேற்கு.
தெய்வம்:     விநாயகர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :