Add1
logo
இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர்களின் நடவடிக்கையை கண்டித்து பவானிசாகரில் நாளை கடையடைப்பு போராட்டம் || சென்னையில் ரூ.1கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்! || மீரா குமாருக்கு தமிழக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் || நீதிபதி கர்ணன் கைதை கண்டித்து விருத்தாசலம் அருகே கண்டன ஊர்வலம்! || சட்டப்பேரவை வளாகத்தில் கணினி பயிற்றுநர்கள் திடீர் தர்ணா || 54 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதி - சி.வி.சண்முகம் || டில்லியில் இ.பி.எஸ்: ஆனந்த குமார் இல்லத்தில் சந்திப்பு || தீவிபத்தில் இடிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்து லாக்கர் மீட்பு || சண்முகத்தை பாராட்டிய துரைமுருகன் || கீழ்ப்பாக்கத்தில் ரூ.1 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல் || மீரா குமார் வெற்றி பெற வாழ்த்துக்கள் - மு.க. ஸ்டாலின் || எந்த விசாரணையையும் சந்திக்க தயார்: கவர்னர்க்கு நாராயணசாமி பதில் || ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் பலி ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-17

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)


அன்புள்ள தனுசு ராசி நேயர்களே! எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசக்கூடிய கள்ளம் கபடமற்ற உள்ளம் கொண்ட உங்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடத்தில் ஆண்டின் முற்பாதியில் ராசியாதிபதி குரு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதும், ஏழரைச்சனி தொடருவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் கேது 3-ல் இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் முழு முயற்சியுடன் பாடுபட்டால் மட்டுமே நற்பலனைப் பெற முடியும். உற்றார்- உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள். ஆண்டின் முற்பாதியில் பல்வேறு நெருக்கடிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் ஆவணி மாதம் 27-ஆம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்திற்குப்பிறகு குரு லாபஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் குறைவாகவே இருக்கும். கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் ஆண்டின் பிற்பாதியில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன்- மனைவி ஒற்றுமை நிலவும். உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் போட்டிகள் நிலவினாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் நடந்து கொண்டால் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். உங்கள் ராசிக்கு 3, 9-ல் சஞ்சரிக்கும் சர்ப்ப கிரகங்கள் ஆவணி 2-ஆம் தேதி முதல் 2-ல் கேது, 8-ல் ராகு என சஞ்சரிக்க உள்ளதால் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதும் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது, இரவுப் பயணங்கள், தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை


ஆண்டின் தொடக்கத்தில் தேவையற்ற நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தாலும் பிற்பாதியில் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எல்லாத் தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள்கூட தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். சிலருக்கு பூமி, மனை, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும்.

உடல் ஆரோக்கியம்


உடல்நிலையில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட கோளாறுகள், சிறுசிறு பாதிப்புகள்  தோன்றினாலும் எதையும் சமாளிக்கக்கூடிய வலிமையும் வல்லமையும் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்களை கஷ்டப்பட்டாவது முடித்துவிடுவீர்கள். பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும் என்பதால் முடிந்த வரை தவிர்த்துவிடுவது நல்லது. உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

உத்தியோகம்


பணியில் சிறுபிரச்சினைகள், குழப்பங்களை சந்திக்க நேர்ந்தாலும் குரு மாற்றத்திற்குப்பிறகு ஏற்றமிகு பலன்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப்பின்பு கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளுவைக் குறைக்க முடியும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் ஆவணி மாதத்திற்குப்பிறகு நிறைவேறும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

தொழில், வியாபாரம்


தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் தேக்கம் ஏற்படாது. லாபமும் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். ஆவணி மாதத்திற்கு பிறகு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். போட்டி, பொறாமைகள் இருக்கும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்


கமிஷன், ஏஜென்சி, கான்டிராக்ட் போன்றவற்றால் லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருந்தாலும் பெரிய தொகையை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.  ஆவணி மாதத்திற்குப் பிறகு எல்லா வகையிலும் மேன்மையான பலன் கொடுக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும்.

அரசியல்


அரசியல்வாதிகள் ஆண்டின் முற்பாதியில் சில பிரச்சினைகளை சந்தித்தாலும் பிற்பாதியில் ஏற்றம் மிகுந்த நற்பலனை அடைவீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி மக்களின் ஆதரவைப் பெற முடியும். எடுக்கும் முயற்சிகளில் கடின போராட்டத்திற்குப்பின்பு நற்பலனை அடைவீர்கள்.

விவசாயிகள்


மகசூல் சிறப்பாக இருக்கும். நெல், காய்கனி வகைகளின் விளைச்சல் சிறப்பாக இருக்கும். சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையைப் பெற முடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு எதிர்பாராத தன சேர்க்கையால் கடன்களில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். புதிய பூமி, மனை வாங்கும் யோகம் உண்டு.

கலைஞர்கள்


புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஆவணி மாதத்திற்குப்பிறகு எதிர்பார்த்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியுடன் நடித்துக் கொடுப்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக அடையும்.  வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டும்.

பெண்கள்


உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் ஆவணி மாதத்திற்குப்பிறகு கைகூடும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் தடைக்குப்பின்பு நற்பலன் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும்.

மாணவ- மாணவியர்


கல்வியில் முன்னேற்ற நிலையை அடைய முடியும். உயர்கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டுத்துறைகளிலும் திறம்படச்செயல்படுவீர்கள். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் வீண்பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் தவிர்ப்பது நல்லது.

மாதப் பலன்

சித்திரை


ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 6-ல் செவ்வாய் இருப்பது நல்ல அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு சாதகமான பலன்களை அடைவீர்கள். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணம் சேரும். கடன்கள் குறைந்துவிடும். முயற்சிகள் வெற்றி தரும். கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதாரம் மேம்படும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

வைகாசி


சூரியன், செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்களால் சாதகப்பலன் உண்டாகும். உடல்நிலை சுறுசுறுப்பாக இருக்கும். பணம் பலவழிகளில் வந்துசேரும். எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றிக் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலை வாய்ப்பு அமையும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். சனிக்குப் பரிகாரம் செய்வது நல்லது.

ஆனி


உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாயும், 10-ல் குருவும் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் பிரச்சினை, பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படும். குடும்பத்திலும் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். முயற்சிகளிலும் சில தடைகள் நிலவும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சந்தித்தாலும் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பயணங்களைக் குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் அலைச்சல்களைத் தவிர்க்கலாம். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

ஆடி


அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கிய ரீதியாக பிரச்சினை, வீண்செலவுகள் ஏற்படும். நெருங்கியவர்களிடேயே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் நற்பெயரை எடுக்க முடியாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைக்கலாம். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். எந்தவொரு செயலிலும் கவனம் தேவை. முருக வழிபாடு சிறப்பைத் தரும்.

ஆவணி


இம்மாதம் 2-ஆம் தேதி முதல் சர்ப்ப கிரகமான கேது 2-லும், ராகு 8-லும் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறையும். செவ்வாயும் 8-ல் இருப்பதால் நிதானமாக இருப்பது நல்லது. அசையா சொத்துகளால் திடீர் செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் முன்னேற்றம் அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சினைகளை ஏற்படும். 27-ஆம் தேதி முதல் குரு 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உத்தியோகஸ்தர்கள் பணிகளை செய்து முடிக்க கடின உழைப்பை மேற்கொள்ள நேரிடும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். சர்ப்ப சாந்தி செய்வது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

புரட்டாசி


பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், 10-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்பட்டு பிரச்சினைகள் யாவும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். புதிய பொருள் சேர்க்கைகளும் ஆடை, ஆபரணமும் சேரும். வாகனம் வாங்கும் யோகம் அமையும். நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலனை உண்டாக்கும். தெய்வீக, ஆன்மிகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சரள நிலை இருக்கும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். விநாயகரை வழிபடுவது சிறப்பு.

ஐப்பசி


லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மேன்மைகளை அடைவீர்கள். உறவினர்களிடம் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளால் லாபம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் மறைந்து லாபம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். நீண்டகால கனவுகள் நிறைவேறும். ராகு காலங்களில் துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

கார்த்திகை


உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால்  முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில் ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். பணவரவுகள் சரளமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்தி அளிக்கும். உடல்நிலையிலிருந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். சிவ வழிபாடு செய்யவும்.

மார்கழி


குரு, செவ்வாய் 11-ல் இருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்குமென்றாலும் ஜென்ம ராசியில் சூரியன் இருப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்குத் தகுந்த பாராட்டுதல்கள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு களும் அமையும். பணவரவுகள் திருப்தி அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் அமையும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

தை


சுக்கிரன் 2-லும், குரு 11-லும் சஞ்சரிப்பது சுபிட்சத்தைத் தரும் அமைப்பென்றாலும் ஏழரைச்சனி நடப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது உத்தமம். சூரியன் 2-ல் உள்ளதால் முன்கோபத்தைக் குறைப்பதும், பிரச்சினைகளில் தலையிடாமலிருப்பதும் நல்லது. உடல்நிலையில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை நிலவும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் விலகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது சிறப்பு.

மாசி


முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பென்பதால் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நீண்டநாட்களாக உள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாகக் குறைந்துவிடும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொருளாதாரநிலை உயரும். கொடுக்கல்- வாங்கல் திருப்தி அளிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும். உற்றார்- உறவினர்களிடையே உள்ள பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றங்களால் வீண்அலைச்சலும் உண்டாகும்.  ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

பங்குனி


ஜென்ம ராசியில் செவ்வாய், சனி 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.  உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்க முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்தால் நற்பலனை அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால்  உடல் சோர்வு உண்டாகும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை


எண்:         1, 2, 3, 9.
நிறம்:     மஞ்சள், பச்சை.
கிழமை:     திங்கள், வியாழன்.
கல்:         புஷ்ப ராகம்.
திசை:     வடகிழக்கு.
தெய்வம்:     தட்சிணாமூர்த்தி.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :