Add1
logo
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் || இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி || கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் || சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம் || உங்களுக்காக காத்திருக்கிறேன்! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்! || நல்ல பஸ் எப்ப விடுவீங்க... ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர் || நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-17

விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)


ன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே! கேட்பவர்களை தன் வசமாக்கிக் கொள்ளக்கூடிய அளவிற்கு பேச்சாற்றல் கொண்ட உங்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடத்தில் ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் ஆண்டின் முற்பாதியில் பொருளாதார ரீதியாக ஏற்றம் மிகுந்த பலன்களை தடையின்றி அடைவீர்கள். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப்பெறும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமைக் கரம் நீட்டுவார்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் நற்பலனை ஏற்படுத்துவார் என்றாலும் ஆவணி 27-ஆம் தேதி குரு மாற்றத்திற்குப் பிறகு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால், ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் உண்டாகும். செலவுகளைக் குறைப்பது நல்லது. தொழில், வியாபாரத்திலும் மந்தமான நிலை நிலவும். போட்டி, பொறாமைகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் எதிலும் கவனமாக செயல்படுவது உத்தமம். ஆண்டின் தொடக்கத்தில் அதிசாரமாக 2-ல் சஞ்சரிக்கும் சனி ஆனி 6-ஆம் தேதி முதல் ஐப்பசி 9-ஆம் தேதி வரை பின்னோக்கி மீண்டும் ஜென்ம ராசியில் சஞ்சரித்து, அதன் பின்பு ஐப்பசி 9-ஆம் தேதி முதல் 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். இவ்வாண்டு முழுவதும் உங்களுக்கு ஏழரைச்சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் 4, 10-ல் சஞ்சரிக்கும் கேது- ராகுவால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்றாலும், ஆவணி 2-ஆம் தேதி ராகு- கேது மாற்றத்திற்குப்பிறகு கேது 3-ஆம் வீட்டிலும், ராகு 9-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளதால் பிரச்சினைகள் ஓரளவுக்குக் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். அசையா சொத்து வழியில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும்.

குடும்பம், பொருளாதார நிலை


கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார்- உறவினர்களின் ஆதரவு சிறப்பாக அமையும். ஆண்டின் முற்பாதியில் பொருளாதார உயர்வுகளால் புதிய பொருள்சேர்க்கைகள் அமையும். சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். வீடு கட்டும் யோகம் அமையும். சிலர் பழைய வீட்டைப் புதுப்பிப்பார்கள். புத்திரர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாகக் குறையும்.

உடல் ஆரோக்கியம்


உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் சில தடைகளுக்குப் பின்புதான் செய்துமுடிக்கமுடியும்.  உற்றார்- உறவினர்களின் உதவி மனநிம்மதியைத் தரும். தொலைதூரப் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். ஆண்டின் முற்பாதியில் சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். சில நேரங்களில் மனக்குழப்பங்கள் தோன்றி மறையும்.

உத்தியோகம்


உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலைப்பளு குறையும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். பொருளாதார நிலை சுமாராக அமையும். பணிகளை சிறப்பாகச் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டு தல்களைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

தொழில், வியாபாரம்


தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபம் அடை வார்கள். பெரிய முதலீடுகளில் தொழிலை விரிவுபடுத்தும் செயல்களில் கவனம் தேவை. எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெற்று புதிய நவீன கருவிகளை வாங்குவீர்கள். கூட்டாளிகளிடையே விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு உடையவற்றாலும் அனுகூலப்பலன் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்


கமிஷன், ஏஜென்சி, கான்டிராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும்.

அரசியல்


பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக அமையும். காரியங்களை திட்டமிட்டு செயல்படுத்தி அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைத் தவறாமல் காப்பாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கட்சிப் பணிக்காக வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிட்டும்.  அமைச்சர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். ஆண்டின் முற்பாதியில் பல சிறப்பான வாய்ப்புகள் தேடிவரும். நீண்டநாள் எதிர்பார்த்த மக்களைக் கவரக்கூடிய கதாபாத்திரங்களும் அமையும். ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.

விவசாயிகள்


விளைச்சல் சிறப்பாக இருக்கும். நீர் பற்றாக்குறை, வரப்புத் தகராறு என சில பிரச்சினைகளை சந்தித்தாலும் உழைப்புக்கான பலன்கள் தடையின்றிக் கிடைத்துவிடும். அரசு உதவிகள் கிடைக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்குவது, பூமி, மனை வாங்குவது போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது.

பெண்கள்


நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆண்டின் முற்பாதியில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. சிலருக்கு புத்திரபாக்கியம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆண்டின் பிற்பாதியில் நிம்மதி குறையும்.

மாணவ-  மாணவியர்


கல்வியில் கடின முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே முன்னேற்றமான பலன்களை அடைய முடியும். உயர்கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கல்விக்காக எதிர்பார்க்கும் கடனுதவிகளும் கிடைக்கப் பெறும். சில பெரிய மனிதர்களின் ஆதரவும் கிடைக்கும். பொழுதுபோக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

மாதப் பலன்

சித்திரை

பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்படும். தொழில் ரீதியாக அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெறும். பணம் பல வழிகளில் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். கடன்கள் படிப்படியாகக் குறையும். புதிய பொருள்களை வாங்குவீர்கள். முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளநிலை இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

வைகாசி


உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு ஏற்படும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குரு 11-ல் இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்த நேரிடும். நெருங்கியவர்களிடம் வீண்வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. எதிலும் விடாமுயற்சியுடன் பாடுபட்டால் மட்டுமே வெற்றி பெறமுடியும். தொழில், வியாபாரம் லாபம் தரும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. சிவபெருமானை வழிபடுவது நல்லது.

ஆனி


குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்குமென்றாலும் 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. உஷ்ணம் சம்பந்தப்பட்ட உடல் பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் வீண்பிரச்சினைகளையும், சங்கடங்களையும் எதிர்கொள்ள நேரிடும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் பணியை முடிக்க முடியாத நிலை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு நன்மை தரும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

ஆடி


பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், செவ்வாய், புதன், 11-ல் குரு சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் கடந்தகால சோதனைகள் விலகி நற்பலன்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருள் சேர்க்கைகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. விநாயகரை வழிபடுவது உத்தமம்.

ஆவணி


ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும் 2-ஆம் தேதி முதல் 3-ல் கேது சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். சிறுசிறு அலைச்சல்கள் நிலவினாலும் எல்லா வகையிலும் ஏற்றம் மிகுந்த பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அமையும். போட்டிகளும், மறைமுக எதிர்ப்புகளும் விலகும். 27-ஆம் தேதி முதல் குரு 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தயோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடவும்.

புரட்டாசி


உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 10-லும், சூரியன் 11-லும் சஞ்சரிப்பதால் முயற்சிகளில் அனுகூலங்கள், தொழில் ரீதியாக லாபங்கள் ஏற்படும். பணவரவு மிகச்சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்துச் சென்றால் அனுகூலங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் இருக்கும் தடைகள் விலகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள், போட்டிகள் விலகி லாபம் பெருகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

ஐப்பசி


சூரியன், குரு 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்றாலும் சுக்கிரன், செவ்வாய் 11-ல் இருப்பதால் உறவினர்களின் உதவியால் எந்த சிக்கல்களையும் சமாளிப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்படுவது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பதும் நல்லது. பொருளாதார நிலை திருப்தி அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு முயற்சிகளில் சில தடைகள் நிலவும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. சிவபெருமானை வழிபடுவது நல்லது.

கார்த்திகை


ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் கவனமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். பெரிய மனிதர்களின் நட்பு நம்பிக்கையை உண்டாக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை குறையக்கூடும் என்பதால் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் அலைச்சலை சந்தித்தாலும் அனுகூலப்பலனை அடைவீர்கள்.  குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்து உத்தமம்.

மார்கழி


ஜென்ம ராசிக்கு 2-ல் சூரியன், சனி, 12-ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உங்கள் அமைதி குறையும். தொழில் ரீதியாக லாபம் அடைய இடையூறுகள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் வீண்விரயங்கள் உண்டாகும். உடல்நிலையில் கவனம் செலுத்த நேரிடும். செலவுகளைக் குறைத்து சிக்கனமாக செயல்பட்டால் கடன்களைத் தவிர்க்கலாம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதன் மூலம் நற்பலனை அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை.  நவகிரக வழிபாடுகளை மேற்கொள்வது சிறப்பு.

தை


முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், சுக்கிரன், கேது சஞ்சரிப்பது உங்களுக்கு சகலவிதத்திலும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதாரம் திருப்தி தரும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் சிறப்பாக கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முருகப்பெருமானை வழிபடவும்.

மாசி


ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. குரு 12-ல் இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிக்கல் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். நெருங்கியவர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்படும். வீண்செலவுகளால் கடன் பிரச்சினைகள் உண்டாகும். உடல்நிலையில் கவனம் தேவை. சுபகாரியங்கள் தடைப்படும். சிவ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

பங்குனி


செவ்வாய், சனி 2-ல் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறையும் என்றாலும் 5-ல் புதன், சுக்கிரன் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கும் போட்டிகள் விலகி லாபம் அளிக்கும். பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களுக்கிடையே  சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். சுப காரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் நல்ல பலன்கள் கிடைக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை


எண்:         1, 2, 3, 9.
நிறம்:     அடர்சிவப்பு, மஞ்சள்.
கிழமை:     செவ்வாய், வியாழன்.
திசை:     தெற்கு.
கல்:         பவளம்.
தெய்வம்:     முருகன்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :