Add1
logo
நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி || மக்களை தூண்டி விடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை: கமல் விவகாரத்தில் ஜே.கே.ரித்தீஷ் || நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை: கமல் ரசிகர்கள் கண்டன சுவரொட்டி || மனித சங்கிலி போராட்டத்தில் ம.நே.ம.க. பங்கேற்பு: ஜவாஹிருல்லா அறிவிப்பு || ஆசிரியர்களுக்கும் பயிற்சி –செங்கோட்டையன் || கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் அறிவிப்பு || சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைப் போக்க கிருஷ்ணா நதி நீரை பெற நடவடிக்கை வேண்டும்: ஸ்டாலின் || சேதுக்கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு || உலகின் அச்சானி உழவர்கள்: இயற்கை வேளாண் கருத்தரங்கில் விவசாயிகள் பெருமிதம் || சமவேலைக்கு சம ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை || 5, 8ஆம் வகுப்புகளில் கட்டாயத்தேர்ச்சி ரத்து குலக்கல்விக்கே வழி வகுக்கும்! ராமதாஸ் || இடிக்கிற மாதிரி போனாரு... கண்ணீருடன் புகார் கூறி வெளியேறிய நமீதா... || தந்தையின் இறுதிச்சடங்கு: கதிராமங்கலத்தில் கைதான ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் அளித்த ஐகோர்ட் கிளை ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-17

துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)


அன்புள்ள துலா ராசி நேயர்களே! நீதி நேர்மைக்குக் கட்டுப்பட்டவராகவும், எந்த காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிகளைப் பெறக்கூடிய ஆற்றல் உடையவராகவும் விளங்கும் உங்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடத்தில் ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் விரயஸ்தானமான 12-ஆம் வீட்டில் ஆவணி 27-ஆம் தேதி வரையும், அதன் பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பாகும். பொருளாதாரநிலையில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். பணவிஷத்தில் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் மனஅமைதி குறையும்.  சர்ப்ப கிரகமான ராகு 11-ஆம் வீட்டில் ஆவணி 2-ஆம் தேதி வரை சஞ்சரிப்பது ஆறுதலைத் தரும் அமைப்பு என்றாலும், ஆவணி 2-ஆம் தேதி முதல் 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிக்க இருப்பதால் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு, உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நெருக்கடிகள் உண்டாகும்.  உங்கள் ராசிக்கு ஆண்டின் தொடக்கத்தில் அதிசாரமாக 3-ல் சஞ்சரிக்கும் சனி, ஆனி மாதம் 6-ஆம் தேதி முதல் ஐப்பசி மாதம் 9-ஆம் தேதி வரை மீண்டும் பின்னோக்கி 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் சில நெருக்கடிகளை நீங்கள் எதிர்கொண்டாலும், ஐப்பசி 9-ஆம் தேதி ஏற்படவிருக்கும் சனி மாற்றத்தால் உங்களுக்கு ஏழரைச்சனி முழுமையாக முடிவடைந்து முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சனி சஞ்சரிக்க இருப்பது சிறப்பான அமைப்பாகும். குரு சாதகமற்று சஞ்சரித்தாலும் சனியின் சாதகமான சஞ்சாரத்தால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் நல்ல லாபத்தையும் அனுகூலத்தையும் அடைய முடியும். உத்தியோகஸ்தர் களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும். பொருளாதார மேம்பாடுகளால் சேமிப்பும் பெருகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப் பாக ஈடுபட்டு வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீகள்.

குடும்பம், பொருளாதார நிலை


குடும்பத்தில் உள்ளவர்களை மிகவும் அனுசரித்துச்செல்ல நேரிடும். தேவையற்ற பிரச்சினைகளாலும் வாக்குவாதங்களாலும் நெருங்கியவர் களிடையே ஒற்றுமைக்குறையும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்றாலும் எதிர் பாராத உதவிகள் மூலம் தேவைகள் பூர்த்தி ஆகும். வண்டி வாகனங் களாலும் செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம் 


உடல்நிலையில் அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எந்த முயற்சிகளையும் கடின உழைப்பிற்குப் பிறகுதான் முடிக்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்கு உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும்

உத்தியோகம்


உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைக்குப் பின்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். உடல்நிலை பாதிப்புகள் இருக்கும் என்றாலும் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பீர்கள். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

தொழில், வியாபாரம்


போட்டி, பொறாமைகளால் லாபம் குறைந்து போகும். வியாபாரநிலை மந்தமாக இருந்தாலும் பொருள்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளிடையே நம்பிக்கைக் குறைவுகளும், நாணயமின்மையும் உண்டாகும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. ஆண்டின் பிற்பாதியில் கமிஷன், ஏஜென்சி, கான்டிராக்ட் துறைகளில் லாபம் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் கடினமான வேலையைக்கூட எளிதில் செய்து முடிக்க முடியும்.

கொடுக்கல்- வாங்கல்


கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருந்தால் நற்பலனை அடையலாம். பணவிஷயத்திலும், பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களின் உதவியால் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். கடினமாக உழைக்க வேண்டி இருந்தாலும் அதற்கான நற்பலனைப் பெறமுடியும்.

அரசியல்


பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் அதனை பாதுகாத்துக் கொள்ள அதிகம் பாடுபட வேண்டிவரும். எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் நிறைய தடைகளை சந்திக்க நேரிடும். உடனிருப்பவர்கள் அனுகூலமாக செயல்படுவதால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும்.

விவசாயிகள்


மகசூல் சுமாராக இருந்தாலும் சந்தையில் நல்ல விலைபோகும். ஆண்டின் தொடக்கத்தில் தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது மிகவும் நல்லது. ஆண்டின் பிற்பாதியில் தாராள தனவரவுகள் கிடைக்கப் பெறுவதால் ஆழ்கிணறு போடுவது, புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவை நிறைவேறும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தைப் பெறுவீர்கள்.

கலைஞர்கள்


தொழிலில் நிறைய போட்டிகள் நிலவும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் நற்பலனை அடைவீர்கள். வரவேண்டிய சம்பளத் தொகையை வசூலிப்பதில் தாமதம் ஏற்படும். ஆண்டின் பிற்பாதியில் புதிய வாய்ப்புகள் கிடைத்து மனநிம்மதி ஏற்படும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும்.

பெண்கள்


உடல்நிலையில் இருக்கும் சோர்வு, மந்தமான நிலை போன்றவை படிப்படியாக விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகள் ஆண்டின் பிற்பாதியில் கைகூடும். கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் குறையும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவியால் குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். பேச்சைக் குறைத்துக் கொள்வதும், பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் உத்தமம்.

மாணவ- மாணவியர்


கல்வியில் மந்தமானமான நிலையும், எவ்வளவுதான் முயன்று படித்தாலும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாத சூழலும் உண்டாகும் என்றாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட முடியாத அளவிற்கு உடல்நிலையில் சோர்வு உண்டாகும். தேவையற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்வது  நல்லது.

மாதப் பலன்

சித்திரை


ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமாக செயல்படுவது உத்தமம். உடனிருப்பவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகஸ் தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

வைகாசி


ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குரு வக்ரகதியில் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில்  பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். பெரிய முதலீடுகள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகள் தடை, தாமதம் உண்டாகும். தொழில், வியாபார நிலை திருப்தி அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வீண்செலவுகளும் உண்டாகும். பயணங்களில் கவனம் தேவை. முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம். 

ஆனி


உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகளும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகளால் திருப்திகரமாக இருக்கும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களின் திறமைக்கு பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

ஆடி


உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பிரச்சினைகள் படிப்படியாக மறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில், வியாபார ரீதியாக போட்டி, பொறாமைகள் குறைந்து லாபம் கிட்டும். நண்பர்களின் ஆதரவுகள் மிகுந்த நன்மை அளிக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு டையவற்றாலும் ஏற்றமிகு பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது சிறப்பு.

ஆவணி


மாதக் கோளான சூரியன், புதனுடன் 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குரு சாதகமற்று இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. 4-ஆம் தேதி முதல் கேது 4-ல், ராகு 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் தேவையில்லாத அலைச்சல், வீண்செலவுகள் ஏற்படும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பொருளாதார நிலை திருப்தி அளிக்கும். 27-ஆம் தேதி முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

புரட்டாசி


சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று நெருக்கடிகள் குறையும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், வாக்குவாதங்களில் ஈடுபடாமலிருப்பதும் உத்தமம். பொருளாதார நிலை திருப்தி அளிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சந்தித்தாலும் தேக்கமடையாமல் லாபம் தரும். கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

ஐப்பசி


ஜென்ம ராசியில் சூரியன், குரு, 12-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் உண்டாகும். பண விஷயத்தில் நிதானமாக செயல்படுவது நல்லது. பெரிய தொகையில் செய்ய நினைக்கும் காரியங்களில் விரயங்கள் உண்டாகும். உடல்நிலையில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். ஐப்பசி- 9 முதல் சனி 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்ப ஒற்றுமை திருப்தி தரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

கார்த்திகை


சனி 3-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். என்றாலும் 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பொருளாதாரநிலை திருப்தியளிக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொண்டால் சேமிக்க முடியும். கொடுக்கல்- வாங்கல் திருப்திதரும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது நன்மையை தரும்.

மார்கழி


சூரியன், சனி 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் பலம் அதிகரித்து எதிரிகளின் பலம் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழில், வியாபார ரீதியாக நிலவும் போட்டிகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவர்களாலும் அனுகூலமான பலன்கள் அமையும். குடும்பத்திலும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். உடல்நிலை சுறுசுறுப்பாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணம் பலவழிகளில் வந்துசேரும். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

தை


முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சனி, புதன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளைப் பெறுவர். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

மாசி


ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடனிருப் பவர்கள் மூலமாக எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். உறவினர்களால் சாதகப்பலன் கிடைக்கும். பணவரவு சுமாராக இருக்கும். தொழில், வியாபாரம் மந்தமாக நடைபெற்றாலும் தேக்கம் அடையாது. போட்டி, பொறாமைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். முருகனை வழிபடவும். 

பங்குனி


உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், சனி, 6-ல் சூரியன் சஞ்சரிப்பது வெற்றிகளை குவிக்கும் அமைப்பாகும். சிலருக்கு வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். பொருளாதார உயர்வுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். தொழில், வியாபார ரீதியாக வெளியூர், வெளிநாடுகள் செல்லக்கூடிய யோகம் உண்டாகும். குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை:

எண்:         4, 5, 6, 7, 8.
நிறம்:     வெள்ளை, பச்சை.
கிழமை:     வெள்ளி, புதன்.
திசை:     தென்கிழக்கு.
கல்:         வைரம்.
தெய்வம்:     லட்சுமி.

matrimony
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :