Add1
logo
சகாயத்துக்கு மதுரை ஐகோர்ட் நோட்டீஸ் || வைகோ மதம் மாறிவிட்டதாக கூறும் கிறிஸ்தவ போதகர் மீது நடவடிக்கை கோரும் அர்ஜூன் சம்பத் || கார்த்தி சிதம்பரம் இங்கிலாந்து செல்ல நிபந்தனையுடன் அனுமதி || இன்றைய(20.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || லதா ரஜினிகாந்தின் மனு தள்ளுபடி || பாத்ரூமில் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல், பணம் பறிப்பு: இளம்பெண் தீக்குளிக்க முயற்சி || இலங்கை கடற்படை அட்டூழியம்; ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல்! || கூடுதல் பேருந்து இயக்ககோரி மாணவர்கள் ஆலங்குடியில் போராட்டம் || உங்களது சொத்து விவரங்களை வெளியிட முடியுமா? ஜெயக்குமாருக்கு வெற்றிவேல் கேள்வி || கோவையில் நடந்த ஆய்வு அரசியல் தலையீடா? ஆளுநர் விளக்கம் || சினிமா துறையில் ஆண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்! - ராதிகா ஆப்தே || 4 காலில் தவிழ்ந்து போனதை பார்த்திருப்பீர்கள்... முதல் அமைச்சரை கொச்சைப்படுத்த விரும்பவில்லை: வெற்றி || தகுதி நீக்க வழக்கு நவ.24க்கு ஒத்திவைப்பு ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-17

கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)


ன்புள்ள கன்னி ராசி நேயர்களே! நல்ல ஞாபக சக்தியும், எதிலும் நிதானமாகவும், நேர்மையாகவும் செயல்படும்  உங்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடத்தில் ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் கேது ஆவணி 2-ஆம் தேதி வரை சாதமாக சஞ்சாரம் செய்வதும், முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சனி ஆனி 6-ஆம் தேதிமுதல் ஐப்பசி 9-ஆம் தேதிவரை பலமாக சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எல்லாவகையிலும் முன்னேற்றம் மிகுந்த பலன்களை அடைய முடியும். என்றாலும் ஆண்டின் முற்பாதி வரை குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலையில் நெருக்கடிகள் நிலவும். எதிலும் கவனமாக செயல்பட்டால் மட்டுமே லாபகரமான பலன்களை அடைய முடியும். நெருங்கியவர்களால் சில மனக் கசப்பான சம்பவங்களும் நடைபெறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகப்படியாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆவணி 2-ஆம் தேதி ஏற்படும் ராகு- கேது மாற்றத்துக்குப் பிறகு ராகு 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதும், ஆவணி 27-ஆம் தேதி ஏற்படும் குரு மாற்றத்துக்குப் பிறகு குரு ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான வீட்டிற்கு மாறுதலாக இருப்பதும் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவில் இருக்கும் நெருக்கடிகள் குறையும். சுபகாரிங்கள் கைகூடி தடபுடலாக நடைபெறும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்களும் நட்புக்கரம் நீட்டுவார்கள். பணிபுரிபவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் தேடிவரும். வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். ஐப்பசி மாதம் 9-ஆம் தேதி ஏற்படவிருக்கும் சனி மாற்றத் திக்குப் பிறகு சனி 4-ஆம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி தொடங்க உள்ளது. இதனால் தேவையற்ற அலைச்சல், சுகவாழ்வு பாதிப்படையும். உடல் ஆரோக்கியம் பாதிக்கும் என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் அதிக கெடுதிகளைச் செய்யமாட்டார்.

குடும்பம், பொருளாதார நிலை


குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சில தடைக்குப் பின்பு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். எந்த காரியத்திலும்  நிதானமாக செயல்பட்டால் அனுகூலமான பலனைப் பெறமுடியும். ஆண்டின் முற்பாதியில் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதும், மற்றவரை அனுசரித்து நடப்பதும் நல்லது. வீடு, மனை, வாகனம் வாங்கும் முயற்சிகள் ஆண்டின் பிற்பாதியில் நிறைவேறும்.

உடல் ஆரோக்கியம்


உடல்நிலையில் புதுத்தெம்பும், உற்சாகமும் உண்டாகும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவதால் மனதில் உற்சாகம் உண்டாகும். பயணங்களால் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெற்று மகிழ்ச்சி அளிக்கும். ஆண்டின் பிற்பாதி உங்களுக்கு அனுகூலம் மிகுந்ததாக இருக்கும். 

உத்தியோகம்


உத்தியோகஸ்தர்களுக்கு கனவுகள் நனவாகும். எதிர்பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கப்பெறும். எடுக்கும் பணிகளை சிறப்பாகச் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவர்களின் நோக்கம் நிறைவேறும். தகுதிக்கேற்ற புதிய வேலை வாய்ப்பு அமைந்துவிடும். தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.

தொழில், வியாபாரம்


தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கப் பெறுவார்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை தொழிலை அபிவிருத்தி செய்ய உதவும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடை யவர்களாலும், அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றிக் கிட்டும். ஆண்டின் முற்பாதியில் பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் கவனம் தேவை.

கொடுக்கல்- வாங்கல்


கான்டிராக்ட் போன்றவற்றில் கவனத்துடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் திருப்தியான நிலையும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் ஆதரவும் கிடைக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது.

அரசியல்


அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாகும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். தலைவர்களின் ஆதரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் மக்களின் ஆதரவையும் பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

விவசாயிகள்


விளைச்சலை இரட்டிப்பாகப் பெறுவார்கள். சந்தையில் உங்களின் விளைபொருளுக்கேற்ற விலை சிறப்பாகக் கிடைக்கும். அரசாங்க உதவிகளால் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் புதிய பூமி, மனை வாங்கும் யோகம், புதிய பம்ப் செட்டுகள் அமைக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும்.

கலைஞர்கள்


புதிய வாய்ப்புகள் தேடிவரும். சில நேரங்களில் போட்டிகள் அதிகரித்தாலும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீகள். வெளியூர், வெளிநாடுகள் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார நிலை உயரும். வரவேண்டிய பாக்கி தொகைகளும் வந்து சேரும். பெயர், புகழ் மேன்மையடையும். 

பெண்கள்


நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பொருளாதார உயர்வு களால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். ஆண்டின் பிற்பாதியில் அனுகூலமான பலன்கள் அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்துச் செயல்பட்டால் அனுகூலப்பலன் உண்டாகும். உடல்நிலையில் சோர்வும், மந்தநிலையும்  இருக்கும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். 

மாணவ மாணவியர்


கல்வியில் உயர்வுகளும் மேன்மைகளும் உண்டாகும். உயர்கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் நிலவும். நல்ல நண்பர்களின் சேர்க்கை சாதகமான பலனை உண்டாக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும். விளையாட்டுத் துறைகளிலும் அனுகூலப் பலன் உண்டாகும்.

மாதப் பலன்

சித்திரை


ஜென்ம ராசியில் குரு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். எதிர்பாராத வீண் விரயங்களையும் எதிர்கொள்ள நேரிடும். பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். எந்த காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களிடையே வீண்கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழில், வியாபாரம் லாபகரமாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

வைகாசி


சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன், 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் உங்களது சங்கடங்கள் குறையும். பொருளாதாரநிலை ஏற்றத்தாழ்வுகளுடன் அமையும். உடல்நிலையில் கவனம் செலுத்த நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு அனுகூலமான பலன்கள் அமையும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் வீண்அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

ஆனி


உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். 4-ஆம் தேதி முதல் புதன் 10-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பொருளாதாரநிலை சிறப்பாக அமையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவும், திறமைக்குத் தகுந்த பாராட்டுதல்களும் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

ஆடி


பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பெரிய முதலீடுகளில் தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கமும் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உறவினர்களால் அனுகூலம் கிட்டும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களை சந்திக்க நேரிடும். துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

ஆவணி


சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 2-ஆம் தேதிமுதல் ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் இடையூறுகள் விலகும். 27-ஆம் தேதிமுதல் குரு 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உடல்நிலையில் உஷ்ணம் சம்பந்தப்படட்ட பாதிப்புகள் ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் கௌரவப் பதவி உயர்வுகளைப் பெறமுடியும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

புரட்டாசி


தன ஸ்தானத்தில் குரு, 3-ல் சனி, 11-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சூரியன் ஜென்ம ராசியில் இருப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. நீண்டநாட்களாக தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்களுக்கிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். பொருளாதாரநிலை மேம்படும். புதிய பொருள் சேர்க்கைகள் அமையும். புத்திரர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் இருக்கும் தடைகள் விலகும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் மகிழ்ச்சி அளிக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

ஐப்பசி


குரு 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் கைகூடும். ஜென்ம ராசியில் செவ்வாய், சூரியன் 2-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. 9-ஆம் தேதிமுதல் சனி 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி தொடங்கவுள்ளது. இதனால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். தொழில், வியாபார ரீதியாக எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம். 

கார்த்திகை


சுக்கிரன், குரு 2-ல், சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்வது சிறப்பான அமைப்பு என்பதால் நினைத்ததெல்லாம் நடக்கும். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்குகளில் இருக்கும் தடைகள் விலகி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். உடல்நிலையில் இருக்கும் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பயணங்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உற்றார்- உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியும், அனுகூலமும் உண்டாகும். முருகனை வழிபடவும்.

மார்கழி


குரு 2-ல் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல், குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவு ஏற்படும். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாகக் குறையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலை வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கமும் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் சுமாராக இருக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

தை


பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 11-ல் ராகு, 4-ஆம் தேதிமுதல் 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். தொழில், வியாபாரத்தில் நிலவும் போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். குடும்பத்தில் மகிழச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்து வழக்குகளிலிருக்கும் தடைகள் விலகும். நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

மாசி


செவ்வாய் 3-ல், சூரியன் 6-ல் அமைந்திருப்பது சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்துமுடிக்கும் ஆற்றல் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதார உயர்வுகளால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். விலகியிருந்த சொந்தங்கள் தேடிவந்து ஒற்றுமை பாராட்டும். வீடு, மனை வாங்கும் யோகமும் அமையும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழில், வியாபாரத்தில் ஏற்றமிகு பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நனவாகும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

பங்குனி


ஜென்ம ராசிக்கு 4-ல் செவ்வாய், சனி,  7-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுப் பிரிவுகள் உண்டாகும். குடும்பத்திலும் வீண் வாக்குவாதங்கள், ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும். உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளை கஷ்டப்பட்டே முடிக்க நேரிடும். எதிர்பாராத வீண் செலவுகளும் ஏற்படும். தொழில், வியாபாரம் சம்பந்தமான காரியங்களில் கவனமாகவும், நிதானமாகவும் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை


எண்:          4, 5, 6, 7, 8.
நிறம்:     பச்சை, நீலம்.
கிழமை:     புதன், சனி.
கல்:         மரகதப் பச்சை.
திசை:     வடக்கு.
தெய்வம்:     ஸ்ரீ விஷ்ணு.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :