Add1
logo
மே நாள் உறுதிமொழி: உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் காப்போம்! - தொல்.திருமாவளவன் || எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? இளங்கோவன் கேள்வி || எச். ராஜா நடமாட முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை || 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தலைமறைவு || முரண்பாடாக பேசி வருகிறார்கள்: ஓ.பி.எஸ். அணி மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு || உழைக்கும் தொழிலாளர்களுக்கு மேதின வாழ்த்துக்கள்: - கு.செல்வப்பெருந்தகை வாழ்த்துச் செய்தி || கொடநாடு கொலை-கொள்ளை: ஏ.டி.ஜி.பி. அதிகாரி விசாரிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் || கிராமசபை கூட்டங்களில் மதுக்கடைகளை மூட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! - அன்புமணி இராமதாஸ் || இந்தி திணிப்புக்கு எதிராக மே 9ல் ஆர்ப்பாட்டம் || மதுக்கடையை அகற்றகோரி பாமக போராட்டம் || உழைப்பாளர்களுக்கு மே தின வாழ்த்துக்கள்: எஸ்.டி.பி.ஐ தெகலான் பாகவி || புதுவை: ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி, முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார் || திருமண கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண் ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
......................................
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
......................................
மாசி மக மகத்துவம்!
......................................
மார்ச் மாத ராசி பலன்கள்
......................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
......................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
......................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
......................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
......................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
......................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
......................................
யாதுமாகி நின்றாள்!
......................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
......................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
......................................
01-03-17

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)


ன்புள்ள சிம்ம ராசி நேயர்களே! அஞ்சா நெஞ்சமும், சிங்கம்போல தைரியமும், தெய்வ பக்தியும், இரக்க குணமும் கொண்ட உங்களுக்கு ஹேவிளம்பி வருடத்தில் ஆண்டுக் கோளான குருபகவான் தன ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சாரம் செய்வதால் சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். புத்திரவழியில் மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாகக் குறையும். வீடு, மனை, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். புதிய நவீன பொருள் சேர்க்கைகளும், பொன், பொருள் சேரும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். ஆண்டின் தொடக்கத்தில் 5-ல் அதிசாரமாக சஞ்சரிக்கும் சனி ஆனி 6-ஆம் தேதி முதல் ஐப்பசி 9-ஆம் தேதி வரை பின்னோக்கி 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அர்த்தாஷ்டமச்சனி என்பதால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பாதிப்புகள், வீண் செலவு ஏற்படும் என்றாலும் ஐப்பசி 9-ஆம் தேதிமுதல் சனி முழுமையாக 5-ஆம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளதால் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு ஆவணி- 27 முதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் ஆண்டின் பிற்பாதியில் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தொழில், உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வீண்போட்டிகள், மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகக்கூடும். ஆண்டின் தொடக்கத்தில் சர்ப்பகிரகங்களான ராகு- கேது 1, 7-ல் அனுகூலமற்று சஞ்சாரம் செய்வதால் குடும்ப வாழ்வில் பிரச்சினை, கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் மட்டுமே எந்தவித குடும்பப் பிரச்சினைகளையும் சமாளிக்கமுடியும். ஆவணி 2-ஆம் தேதி ஏற்படும் சர்ப்ப கிரகப் பெயர்ச்சியால் ராகு 12-ஆம் வீட்டிலும், கேது 6-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். குடும்ப ஒற்றுமை பலப்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். 

குடும்பம், பொருளாதார நிலை


குடும்பத்திலுள்ளவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பொருளாதாரரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்து சிக்கனமாக செயல்பட்டால் அனைத்து நற்பலன்களையும் அடைய முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஆண்டின் முற்பாதியில் சாதகப்பலன் கிட்டும்.  பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்


உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் வலிமையும், வல்லமையும் உண்டாகும். அடிக்கடி பயணங்கள் செல்ல வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதால் உடல்நிலை சோர்வடைந்தாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலமும் அடைவீர்கள். சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையப் பெறுவதால் பூரிப்பு உண்டாகும்.

உத்தியோகம்


எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலர் சொந்த ஊருக்கே இடமாற்றம் கிடைத்து குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். பொருளாதார நிலை உயர்வடைவதால் வாகனம் வாங்கும் யோகமும் அமைந்துவிடும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். 

தொழில், வியாபாரம்


தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் சிறப்பாக அமையும். எதிரிகளின் பலம் குறைவதால் போட்டி, பொறாமைகளும் விலகும். தொழிலை விரிவு செய்ய எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை மகிழ்ச்சி அளிக்கும். ஐப்பசியில் ஏற்படும் சனி மாற்றத்தால் அலைச்சல் குறையும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் கவனம் தேவை.

கொடுக்கல்- வாங்கல்


கமிஷன், ஏஜென்சி, கான்டிராக்ட் போன்றவற்றால் நல்ல லாபம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமைந்துவிடும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்த முடியும். ஆண்டின் பிற்பாதியில் எதிலும் கவனமுடன் செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம்.

அரசியல்


எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்கப்பெறும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

விவசாயிகள்


மகசூல் சிறப்பாக இருக்கும். நெல் முதல் தானியங்கள் வரை- காய் முதல் பழ வகைகள் வரை சிறப்பான விளைச்சல்களால் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையைப் பெறமுடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். எதிர்பாராத தனச் சேர்க்கையால் கடன்களில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். புதிய பூமி, மனை வாங்கும் யோகம், குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம் யாவும் சிறப்படையும்.

கலைஞர்கள்


தங்களின் திறமைக்குத் தீனி போடுவதுபோல் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். பொருளாதாரநிலை மேம்படும். பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகளால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் அனுகூலமும் உண்டாகும். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும்.

பெண்கள்

சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். ஆடை ஆபரணங்கள் சேரும். நினைத்த காரியங்களை சாதிக்க முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறைந்து போகும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களும், ஆசிர்வாதமும் கிடைக்கப் பெறும். உயர்கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். விளையாட்டுத் துறைகளில் பரிசுகள் பெற்று சாதனைகள் படைக்க முடியும். நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். 

மாதப் பலன்

சித்திரை


தன ஸ்தானத்தில் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் புதிய வாய்ப்புகள் தேடிவரும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும், அதிகரிக்கும். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

வைகாசி


சூரியன், செவ்வாய் 10-ல் இருப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட ஊதிய உயர்வு மற்றும் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலையிலிருக்கும் தடைகள் விலகும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடைபெறும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பாராத திடீர் தனவரவுகளால் கடன்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. குருபகவானை வழிபடவும்.

ஆனி


ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார நிலை திருப்தியளிக்கும். கடன்கள் படிப்படியாகக் குறையும். உடன்பிறந்தவர்களிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில்ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். பயணங்களால் எதிர்பாராத லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

ஆடி


குரு 2-ல், சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும் என்றாலும் 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல்நிலையில் சோர்வு ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் தாமதம் உண்டாகும். நெருங்கியவர்களின் ஆதரவு ஓரளவுக்கு இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை அனுகூலமளித்தாலும், கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு உடன்பணிபுரிபவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

ஆவணி


ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன்மூலம் எதையும் சமாளிக்க முடியும். 1, 7-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்கள் 2-ஆம் தேதிமுதல் 6-ல் கேது, 12-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிலவும் ஒற்றுமைக் குறைவுகள் விலகும். 27-ஆம் தேதிமுதல் குரு 3-ல் சஞ்சரிக்கவுள்ளதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுபாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரி பவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பொருளாதாரநிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்

புரட்டாசி


ராசிக்கு 2-ல் சூரியன், 3-ல் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும் என்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்க இடையூறுகள் ஏற்படும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிவரும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் ஒற்றுமை குறையும் எற்படும் என்பதால் நெருங்கிய வர்களை மிகவும் அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனங்களால் வீண்செலவுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சுமாராக இருக்கும். எந்த காரியத்தையும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சனிபகவானை வழிபடவும்.

ஐப்பசி


சுக்கிரன் 2-ல், சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவு சிறப்பாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் மேன்மைகள் உண்டாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். உடல்நிலையில் தெம்பும், உற்சாகமும் உண்டாகும். 9-ஆம் தேதிமுதல் சனி 5-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்திலிருக்கும் மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் பெருகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் மேலும் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

கார்த்திகை


ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவு உண்டாகும். வீண்அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிவரும். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எந்தக் காரியத்தையும் சிரமப்பட்டே முடிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நிலவும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் முன்னேற்றத்தை அடையலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

மார்கழி


முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 4-ல் புதன், 6-ல் கேது சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களுடைய உதவியால் எதையும் சமாளித்து சாதகப் பலன்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் கைகூடும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு சிறப்பாக அமையும். சுபகாரியங்கள் நடைபெறும். பொருளாதாரநிலை மேம்படும். கடன்கள் படிப்படியாகக் குறையும். உடல்நிலை சோர்வாக இருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் அமையும். பெரிய முதலீடுகளில் அபிவிருத்தி செய்யும் நோக்கம் நிறைவேறும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

தை


ராசியாதிபதி சூரியன், கேது சேர்க்கைப் பெற்று 6-ல் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் இருக்கும் தேக்கங்கள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். பொருளாதாரரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலப்பலன் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். எதிர்பாராத தனவரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.  துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

மாசி


ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், உடனிருப்பவர்களால் நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையைத் தவிர்ப்பது நல்லது. வாகனம் வாங்கும் முயற்சிகளில் கடன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளால் எதிர்பார்க்கும் லாபம் தடைப்படும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகக்கூடும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஓரளவுக்கு அனுகூலப்பலனும் உண்டாகும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

பங்குனி


ராசிக்கு 3-ல் குரு, 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுத் தடை, ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி, உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பணவிஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் பிறர்செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க நேரிடும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சுமாரான லாபத்தைத் தரும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை


எண்     :     1, 2, 3, 9.
நிறம்:     வெள்ளை, சிவப்பு.
கிழமை:     ஞாயிறு, திங்கள்.
கல்:         மாணிக்கம்.
திசை:     கிழக்கு.
தெய்வம்:     சிவன்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :