Add1
logo
நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி || மக்களை தூண்டி விடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை: கமல் விவகாரத்தில் ஜே.கே.ரித்தீஷ் || நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை: கமல் ரசிகர்கள் கண்டன சுவரொட்டி || மனித சங்கிலி போராட்டத்தில் ம.நே.ம.க. பங்கேற்பு: ஜவாஹிருல்லா அறிவிப்பு || ஆசிரியர்களுக்கும் பயிற்சி –செங்கோட்டையன் || கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் அறிவிப்பு || சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைப் போக்க கிருஷ்ணா நதி நீரை பெற நடவடிக்கை வேண்டும்: ஸ்டாலின் || சேதுக்கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு || உலகின் அச்சானி உழவர்கள்: இயற்கை வேளாண் கருத்தரங்கில் விவசாயிகள் பெருமிதம் || சமவேலைக்கு சம ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை || 5, 8ஆம் வகுப்புகளில் கட்டாயத்தேர்ச்சி ரத்து குலக்கல்விக்கே வழி வகுக்கும்! ராமதாஸ் || இடிக்கிற மாதிரி போனாரு... கண்ணீருடன் புகார் கூறி வெளியேறிய நமீதா... || தந்தையின் இறுதிச்சடங்கு: கதிராமங்கலத்தில் கைதான ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் அளித்த ஐகோர்ட் கிளை ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-17

கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)


அன்புள்ள கடக ராசி நேயர்களே! உயர்ந்த லட்சியங்களும், நல்ல அறிவாற்றலும், மிகுந்த கற்பனை சக்தியும் கொண்டவராக விளங்கும் உங்களுக்கு ஹேவிளம்பி வருடத்தில் சனி ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபார ரீதியாக லாபகரமான பலனை அடைவீர்கள். பிரச்சினைகள், சங்கடங்கள் எல்லாம் முழுமையாகக் குறைந்து முன்னேற்றத்தை அடைவீர்கள் 6-ல் அதிசாரமாக சஞ்சரிக்கும் சனி ஆனி 6-ஆம் தேதிமுதல் ஜப்பசி 9-ஆம் தேதி வரை பின்னோக்கி 5-ஆம் வீட்டில் சஞ்சரித்துவிட்டு பின்பு முழுமையாக ஐப்பசி 9-ஆம் தேதிமுதல் 6-ல் சஞ்சரிக்கவுள்ளார். இது சிறப்பான அமைப்பு என்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கப்பெறும். வம்பு வழக்குகளும் ஓர் முடிவுக்கு வரும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.  ஆண்டுக்கோளான குரு பகவான் இந்தாண்டு 3, 4 ஆகிய பாவங்களில் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சிறப்பான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் பொருளாதாரநிலையில் நெருக்கடிகள் நிலவும். உற்றார்- உறவினர்கள் உதவிகள் சில கிடைப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கடன் பிரச்சினைகளும் ஓரளவுக்கு குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். சனிபகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் எந்தவித சிக்கலையும் சமாளித்து அனுகூலமான பலன்கள் அடைவீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை, தாமதங்களுக்குப்பின் வெற்றி கிட்டும். உங்கள் ராசிக்கு 2, 8-ல் சஞ்சரிக்கும் ராகு- கேது ஆவணி மாதம் 2-ஆம் தேதி முதல்  1, 7-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை


குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். அடிக்கடி வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிடமுடியும். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் தாமதப்படும். உற்றார்- உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சுபகாரியங்கள் தடைக்குப் பின்பு கைகூடும். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்


உடல்நிலையில் முன்னேற்றமான பலன்களே இருக்கும். சிறுசிறு பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் வீண்அலைச் சலைக் குறைக்கலாம். எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். எதிரிகளின் பலம் குறையும். தெய்வ வழிபாடுகளால் மனநிம்மதி உண்டாகும்.

உத்தியோகம்


எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சல், டென்ஷனை உண்டாக்கும். எந்தக் காரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க நேரிடும். அதிகாரிகளின் ஆதரவைப்பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள நேரிடும். ஐப்பசி மாதத்திற்குப் பின்பு எதிர்பார்க்கும் உயர்வுகளையும் தடைப்பட்ட நிலுவைத் தொகைகளையும் பெறமுடியும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளு சற்று குறையும். 

தொழில், வியாபாரம் 


தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை வென்று லாபம் அடைவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் கவனம் தேவை. சனியின் சாதகமான சஞ்சாரத்தால் தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றத்தைப் பெறமுடியும். கூட்டாளிகளிடம் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் சில தடை, தாமதங்கள் நிலவினாலும் முடிவில் சாதகப்பலன் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்


கமிஷன், ஏஜென்சி, கான்டிராக்ட் போன்றவற்றில் சில சோதனைகளைச் சந்தித்தாலும் தடைக்குப் பின்பு அனுகூலமான பலன்கள் அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் நெருக்கடி இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளைத் தவிர்த்து விடுவது நல்லது. பழைய கடன்கள் கடின முயற்சிக்குப்பின் வசூலாகி பிரச்சினைகளைக் குறைக்கும்.

அரசியல்


எதிலும் கவனமுடன் செயல்பட்டால் பெயர், புகழைத் தக்க வைத்துக் கொள்ளலாம். மூத்த தலைவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் சில தடைகள் உண்டாவதால் நிம்மதியின்றி இருப்பீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உடனிருப்பவரை அனுசரித்து நடப்பதும் நல்லது.

விவசாயிகள்


விளைச்சல் சிறப்பாக இருக்கும். நீர் பற்றாக்குறை, வரப்புத் தகராறு என சில பிரச்சினைகளை சந்தித்தாலும் உழைப்புக்கான பலனை அடைந்துவிட முடியும். அரசு உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியை அடைவீர்கள். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்குவது, பூமி, மனை வாங்குவது போன்றவற்றில் கவனமுடன் செயல்படுவது உத்தமம்.

கலைஞர்கள்


கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது உத்தமம். எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் அமைய சில தடைகள் இருக்கும். நண்பர்கள் உதவியால் நெருக்கடிகள் குறையும். பொருளாதார நிலை திருப்தி தரும். வெளிநாட்டுப் பயணங்களால் சற்றே அலைச்சல் அதிகரிக்கும்.

பெண்கள்


உடல்நிலை சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் சில தடை, தாமதங்களை சந்தித்தாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை அமையும் என்றாலும் வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் கடன்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் நிலவும். புதிய வேலை தேடுபவர்களுக்கு ஐப்பசி மாதத்திற்குமேல் சிறப்பான வேலை வாய்ப்பு அமையும்.

மாணவ- மாணவியர்


கல்வியில் மந்தநிலை நிலவினாலும் விடாமுயற்சியுடன் செயல் பட்டால் எதையும் சாதிக்க முடியும். தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பதும், நண்பர்களின் சகவாசங்களைக் குறைத்துக்கொள்வதும் நன்மை தரும். பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது உத்தமம்.

மாதப் பலன்

சித்திரை


சூரியன் 10-லும், செவ்வாய் 11-லும் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நற்பலன்கள் ஏற்படும். சனி 6-ல் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் ஏற்றம் மிகுந்த பலன்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்திலிருக்கும் கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ப பாராட்டுதல்கள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகள் செல்லும் வாய்ப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

வைகாசி


பாக்கியஸ்தானமான 9-ஆம் வீட்டில் சுக்கிரன், 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். செல்வம், செல்வாக்கு சேரும். விநாயகரை வழிபடவும்.

ஆனி


ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எல்லாவகையிலும் அனுகூலம் மிகுந்த பலன்களைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நினைவாகும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பண வரவுகள் சரளமாக அமையும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். தொழில், வியாபாரத்திலிருக்கும் மறைமுக எதிர்ப்புகள் விலகும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

ஆடி


ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. சுக்கிரன் 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று நெருக்கடிகள் சற்று குறையும். உடல்நிலையில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பொருளாதாரநிலை திருப்தியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் கூடுதல் நேரம் உழைக்க நேரிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஓரளவுக்கு லாபத்தை அடைவார்கள். கொடுக்கல்- வாங்கலில் முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். முருகப் பெருமானை வழிபடவும்.

ஆவணி


சூரியன் 2-லும், சுக்கிரன் 12-லும் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். 2-ஆம் தேதிமுதல் ராகு ஜென்ம ராசியிலும் கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பிறர்விஷயங்களில் தலையீடு செய்வதையும் தேவையற்ற பயணங்களையும் தவிர்த்துவிடுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துசெய்ய வேண்டி வரும். 27-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப்பிறகு குரு 4-ஆம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளதால் குடும்பத்தில் வீண்செலவுகள் உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக அமையும். நெருங்கியவர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

புரட்டாசி


முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். புதிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கூட்டாளிகளிடையே கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நெருங்கியவர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபம் அடையலாம். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவார்கள். முருகப் பெருமானை வழிபடவும்.

ஐப்பசி


உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 9-ஆம் தேதி முதல் 6-ல் சனி சஞ்சாரம் செய்ய இருப்பதும் பல்வேறுவகையில் நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய பொருள் சேர்க்கைகளும், ஆடை, ஆபரணமும் சேரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்துவிடும். பெரிய முதலீடுகளில் தொழிலை விரிவுசெய்யும் நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவப் பதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

கார்த்திகை


ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் 6-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நிலவிய தேக்கங்கள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். எந்தவித எதிர்ப்பையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பொருளாதாரநிலையில் இருக்கும் தடைகள் விலகும். நினைத்த காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணம் சேரும். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளைப் பெறுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. ராகு காலங்களில் துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.

மார்கழி


ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் உங்கள் பலம் அதிகரித்து மறைமுக எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபார ரீதியாக ஏற்றங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் அனுகூலப் பலனைத் தரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை மேன்மை அடையும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சிக்கனமாக செயல்படுவது நல்லது. சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். எடுக்கும் பணிகளை சிறப்பாகச் செய்து முடித்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

தை

சுக்கிரன் 7-லும், சனி 6-லும் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களுடைய உதவியால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறிய தாமதத்திற்குப்பிறகு நல்ல பலன் உண்டாகும். உற்றார்- உறவினர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் மறையும். பணவரவுகள் சரளமாக இருக்கும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளில் செய்யும் செயல்கள் வீண்விரயங்களை உண்டாக்கக்கூடும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறமுடியும். எதிரிகளின் பலம் குறைந்து விடும். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

மாசி


சனி 6-ல் இருப்பது நன்மை தரும் அமைப்பு என்றாலும் 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பொருளாதாரநிலை சிறப்பாக அமையும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். சுபச்செய்திகள் கிடைக்கப்பெறும். நெருங்கியவர்களால் சாதகப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களின் திறமைக்கு அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமாகச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் சுமாரான லாபம் தரும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

பங்குனி


ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய், சனி, 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் பரிபூரணமான அனுகூலப்பலனை அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்தியளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு செய்ய ஆலயங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். விநாயகரை வழிபடவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை


எண்:         1, 2, 3, 9.
நிறம்:     வெள்ளை, சிவப்பு.
கிழமை:     திங்கள் வியாழன்.
கல்:         முத்து.
திசை:     வடகிழக்கு.
தெய்வம்:     வேங்கடாசலபதி.



matrimony
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :